Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க என்னிடம் ஆதரவு வழங்கும் படி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்தார் இந்த நிலையில் நடைபெற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம்.மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமைஅவருக்கில்லை. ஓர் வேலை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை என்றால் அது எமது கட்சியை பாதிக்கும். கட்சி வலுவாக கட்டமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா 08/10/2014 இன்று தெரிவித்தார். http://www.pathi…

    • 0 replies
    • 1.8k views
  2. பயங்கரவாதத் தடை சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்காவின் அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஆய்வின் போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தொடர்ச்சியாக காணாமல் போதல் சமப்வங்கள் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பு தரப்பினரும், அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற துணை ஆயுதக் குழுக்களும் வெள்ளை வான் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர். சர்வதேச விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பதில்லை. மேலும் தனி மனித சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்குவதாக சிறிலங்காவினால் வழங்கப்பட்டிருந்தஉறுதி மொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எ…

    • 0 replies
    • 359 views
  3. மகிந்த இராஜபட்சே தான் செய்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காக ஒவ்வொரு நாடாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறது. இந்தவேளையில் மகிந்தா தான் தப்புவதற்கு வழியில்லாமல் கடந்த 3 ஆம் தேதி வத்திகானில் புனித பாப்பரசரை சந்தித்துள்ளார். தான் செய்த இனவழிப்பை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச மக்களை ஏமாற்றுவதற்காகவும், இரத்தக்கறை படிந்த கையோடு புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்திருக்கிறார் இந்த இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபட்சே. இதே மகிந்த இராஜபட்சே இலங்கையில் பல கிறுஸ்துவ தேவாலயங்களை குண்டுகள் போட்டு அழித்தவர்.பல கிறுஸ்துவ மக்களை கொன்று குவித்தவர். 2009 ஆம் ஆண்டு இறுது கட்ட போர் நடந்த வேளை…

    • 0 replies
    • 477 views
  4. 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாக அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றன. ஐக்கியத் தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர் ரணில் என்றும் பிறகு சோபித தேரர் என்றும் மாறி மாறி ஜனாதி…

    • 0 replies
    • 312 views
  5. வடக்கு மாகாணத்தில் காணி சுவீகரிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டும் அரிய பணியை மட்டும் தற்போதைக்கு செய்யப்போவதாக வடக்கு மாகாணசபையினின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவல்கள் சாதாரணமாக பிரதேச செயலகங்கள் தோறும் பெறக்கூடிய தொன்றெனவும் அதற்கு வடமாகாணசபை விசேட கூட்டத்தை கூட்டுவது கண்துடைப்பு என் சமூக நலன் விரும்பிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு வடக்கு மாகாண சபையில் நாளை விசேட அமர்வு நடைபெறவுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மாதாந்த அமர்வில் காணி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து முழுநாள் விவாதம் ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் கோரிக்கை விடுத்தார். அதற்கமைய க…

  6. துருக்கிய அரசின் ஆசீர்வாதத்துடன், இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுவான ஐ. எஸ் அமைப்பு வடக்குச் சிரியாவிலுள்ள குர்திஸ் இனமக்களின் சுயாட்சிப் பிராந்தியமான கோபேனின் மீதான தனது மூர்க்கத்தனமான மும்முனைத் தாக்குதல்களை கடந்த மாதம் 15 ஆம் திகதியிலிருந்து அதிகப்படுத்தியிருக்கிறது. கோபேனைக் கைப்பற்ற ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களினால் சுமார் இரண்டு லட்சம் குர்திஸ் மக்கள் அகதிகளாக துருக்கிய நாட்டு எல்லையை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். குர்திஸ்கள் மீதான இஸ்லாமிய அடிப்படைவாத ஐ. எஸ்ஸின் தாக்குதல்களை ஊக்குவித்து தனது எல்லைகளை அந்த அமைப்பிற்காகத் திறந்துவிட்ட துருக்கிய அரசு, துருக்கியில் வசிக்கும் குர்திஸ்கள் கோபேனைத் தக்கவைக்கும் யுத்தத்தில் பங்குகொள்வதைத் த…

    • 4 replies
    • 803 views
  7. இஸ்லாமிய தீவிரவாதம் பிராந்தியத்தில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் இந்து தேசியவாத அமைப்புகளுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் இது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்றும் இதில் அந்த அமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர் என்றும் பொதுபலசேனாவின் வண. ஞானசார தேரர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் இந்தியாவின் பௌத்த அமைப்புகளுடனும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் உலகின் இந்தப் பிராந்தியத்தில் பௌத்த - இந்து சமாதான வலயத்தை உருவாக்க முடியும் என அவர் கூறினார் - http://malarum.com/article/tam/2…

  8. வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் தடுப்புச் சுவர்கள் (மதில்) கட்டும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக உள்ளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் என்ற வகையில் இராணுவத்தினரினால் சுமார் ஆறாயிரத்தி எழுநூறு ஏக்கர் தனியார் காணிகளுக்கு மேல் பிடிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காணிகளின் உரிமையாளர்களான பொது மக்கள் உயர் நீதிமன்றத்தில் தமது காணிகளை இராணுவத்தினர் மீள வழங்க வேண்டும் எனக்கோரி வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தமாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்த வழங்கில் உயர் நீதிமன்றம் பொது மக்களுக்குச் சாதகமான முறையில் தீர்ப்பளித்த போதிலும் அதனை மீறி தொடர்ந்தும் இராணுவத்த…

  9. இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் கோத்தாபய ராஜபக்சவே - பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ்: இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச என நீதிமன்றத்தில் புகழாராம் சூட்டியுள்ள பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ் இதன் மூலம் அரசாங்கத்துடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் விவசாய துறை விஞ்ஞானிகள் சிலர் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல்வழக்கு தொடர்பான விசாரணையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகளின் எதிர்ப்பையும் மீறி தனது மேதாவித்தனத்தை பல இடங்களில் வெளிப்படுத்திய மொகான் பீரிஸ் அனைத்தையும் அறிந்த ஒருவர் கோத்தாவே என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அண்…

  10. வடமாகாணசபையில் தமிழரசுக்கட்சி சாராத 13 உறுப்பினர்கள் உள்ளனர். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறுவது போன்று அவர்கள் அனைவரும் முன்னாள் போராட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒன்று கூடி முதலமைச்சர் விடயத்தில் தேவையற்ற முடிவுகள் எடுப்பதை தவிர்க்க பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை முன்வைப்பதை அவர் கைவிட வேண்டுமென எச்சரித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையினில்: வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் பிரபாகரனை மாவீரனென்றும் அவரது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையில் வைத்து அதனை கூறுவதில் பெருமைப்படுவதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இணைத்து கோரினால் மட்டுமே அரசிய…

  11. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பயணித்து திறந்து வைக்கும் சில கட்டடங்கள் சிங்கள மயமாகின்றன. குறிப்பாக சிங்களப் பெயர்கள், சிங்கள மரபுகள் திணிக்கப்பட்டு அவைமீது சிங்கள அடையாளம் பூசப்படுவது மிகவும் திட்டமிட்ட செயல் என்று புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு வழங்கும் உரிமை என்ற பெயரிலும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத்தை ஏமாற்றுகின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டு ஜனாதிபதி மகிந்தவினால் திறக்கப்படவுள்ள கிளிநொச்சி கச்சேரி பௌத்த சிங்களக் கட்டட கலை மரபுகள் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் ஒருவர் குறிப்பி…

  12. பயங்கரவாத தடைச் சட்டம் நீடிப்பது அவசியமாம்! "பயங்கரவாதம் என்பது தொடர்ந்தும் இலங்கையின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது எனவே பயங்கரவாத தடைச் சட்டம் நீடிப்பது அவசியம்" - இவ்வாறு ஜெனீவாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கிறதா என்பதை ஆராயும் ஐ.நா மனித உரிமை குழுவின் கூட்டத்தொடர் தங்போது இடம்பெற்று வருகின்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் இந்த உரையில்:- இந்தியா மற்றும் அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பது தங்கள் கரிசனைகள் சரியானவை என்பதை உறுதி செய்வதாகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் பு…

  13. சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் தலைவர்களாக மாற, பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது. நாட்டின் தலைவர்களை, பொது பல சேனாவே உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக தற்போதுள்ள காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=239873522907774200#sthash.4a7MKb1w.dpuf

  14. -பேரின்பராஜா திபான் ஒலக்கை ஓரக்குழிய நக்குதாம்.. லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுச்சாம்... என்பது கிராமங்களில் சொல்லப்படுகின்ற பழமொழியாகும். கோயிலில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காக ஓர் உரலில் பழங்களை இட்டு உலக்கையால் இடித்து பஞ்சாமிர்தம் தயார் செய்வார்கள். முதலில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிப்பது உரல் மற்றும் உலக்கை தான். அதன் பிறகே சிவலிங்கத்துக்;கு அபிஷேகம் செய்யப்படும். ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது அந்த திட்டமிடலில் பங்குகொண்டவர்கள்தான் முதலில் பலன் அனுபவிப்பார்கள். அதன் பிறகே மற்றவர்களுக்கு... அப்படி திட்டமிடலோ- உருவாக்கமோ இல்லாத காலத்தில் பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும். நமது நாட்டை பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அர்த்தத்தை உறுதிப்படுத்துவ…

  15. வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், தங்களின் இழுவை படகு தொழிலுக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று தொழில் நடவடிக்கையை ஏற்படுத்தி தருமாறு கோரியும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை திங்கட்கிழமை (06) முன்னெடுத்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களின் இழுவை படகு தொழிலிற்கு அனுமதியளிக்க வேண்டும் அல்லது தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற விதமான நடவடிக்கையை எட…

  16. வடக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையின் சாதரணமான இயங்க்கத்துக்குக்கூட அரசு முட்டுக்கட்டையாக இருக்கினறது. - இவ்வாறு அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சர்வதேச பங்களிப்புடன் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்…

  17. இலங்கை இராஜதந்திரிகளின் ரவுடித்தனம், 2009இல் இருந்து தொடர்கிறது! – முன்னாள் இராஜதந்திரி தமரா குற்றச்சாட்டு. [Tuesday 2014-10-07 07:00] 2009ம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பமான துன்பியல் சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்வதாகவும், அதே வில்லன்கள் அதனை முன்னெடுப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கான தூதுவர் கிறிஸ் நோனிஸை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தாக்கிய சம்பவம் குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர், 2011 மற்றும் 2012ம் ஆண்டிலும் ஜெனீவாவில் இவை இடம்பெற்றன. பாரிசிலும், ரோமிலும் கூட இவை இடம்பெற்றன. இலங்கை இராஜதந்திரிகளின் ரவுடித்தனமான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை குணாதிசயங்கள் குறித்து கேள்விகளை…

  18. பொருத்தமற்ற நபரொருவரை வடக்கு முதல்வராக தெரிவு செய்துள்ளதாக மன்னார் ஆயர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடையே கவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்த போதும் மக்களது பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்துள்ளார். மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள் காணியற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களின் நிலை குறித்து தாம் விரிவாக முதலமைச்சருடன் பேசியதாக ஆயர் கூறினார். அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் கூ…

    • 0 replies
    • 403 views
  19. சிறிலங்காவின் சிவில் மற்றும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர். இன்றும் நாளையும் இது தொடர்பான கூட்டம் ஜெனீவாவில் நடைபெறுகிறது. இதில் சர்வதேசமன்னிப்பு சபை உள்ளிட்ட 18க்கும் அதிகமான அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் முன்வைத்துள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இறுதியாக கடந்த 2003ம் ஆண்டு இவ்வாறான கூட்டம் ஒன்றில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டிருந்தன. 10 வருடங்களின் பின்னர் மீண்டும் இந்த ஆய்வு நடத்தப்படுகின்றமையானது, சிறிலங்காவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள மன…

    • 0 replies
    • 515 views
  20. புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார காரியாலயத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ{கோ ஸ்வைர் தலைமையி;ல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் இற்றைய நிலைமை மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றம் தனி நபர்கள் குறித்து சிறிலங்கா விதித்திருந்த தடை போன்றவை தொடர்பில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/34387/57//d,article_full.aspx

    • 0 replies
    • 1.4k views
  21. தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் தலைவர்களாக மாற, பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்த நாட்டின் தலைவர்களை, பொது பல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த தேரர், இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும்…

    • 0 replies
    • 517 views
  22. ஜனாதிபதியாக பதவி வகிக்க தகுதி உண்டு – மேர்வின் சில்வா:- 07 அக்டோபர் 2014 நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியுண்டு என பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடாவிட்டால் அந்தப் பதவிக்காக போட்டியிடக் கூடிய தகுதி தமக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தொலைக்காட்சி ஊடகமொன்றின் செய்தி சேவைக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் தமக்கு இருந்த பலம் குறைந்து விட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சில புதியவர்கள் தம்மை வெட்டப் பார்ப்பதாகவும், தம்மை ஓரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ள…

    • 1 reply
    • 362 views
  23. தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி 160க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறையில் திங்கட்கிழமை காலை முதல் மாலை 05 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து, அம்மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது தாயகப் பிரதேசத்திலுள்ள ஆழ்கடற்பிரதேசங்கள் யாவும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் அனுசரணையுடன் தென்னிலங்கையின் சிங்கள மீனவர்களாலும், இந்திய மீனவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு எமது கடல்வளங்கள் சுர்ண்டப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்ற இந்நேரத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் …

    • 0 replies
    • 400 views
  24. சிங்கள இனத்தை மிதித்து புலியின் தோளில் ஏறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என ஆளும் கட்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கில் வசந்தத்தையும் கிழக்கில் உதயத்தையும் ஏற்படுத்திய அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் சிங்கள மக்களை இருட்டில் வைத்து விட்டது. சிங்கள இனத்தை மிதித்து புலியின் தோளில் ஏறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். வடக்கு கிழக்கில் முதலில் குடியிருப்புக்களை சிங்கள மக்களே உருவாக்கினார்கள். அவர்கள் விரட்டியக்கப்பட்டனர். அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கங்கள் சிங்கள மக்களை உதாசீனம் செய்து வருகின்றனர். சிங்கள இராணுவத்தினர் வென்றெடுத்து பெற்றுக்கொடுத்த…

    • 0 replies
    • 286 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.