Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு உறுப்பு நாடுகளுக்கு கூட்டமைப்பு கடிதம் எழுதியதையிட்டு சிறிலங்கா கடும் சீற்றம்!' ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் பங்குகொள்ளும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றொரு நாட்டின் விருப்பங்களுக்கு அமைவாகச் செயற்படுகின்றதா எனவும் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியிருக்கின்றது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அமைச்சரான டலஸ் அழகப்பெரும, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இல்லாத பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமை…

  2. [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 06:38 ஈழம்] [க.திருக்குமார்] "ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அலன் றொக்கின் அறிக்கைக்கு அவருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களே காரணம். எனவே அது தொடர்பாக தன்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீள பொற்றுக்கொள்வதாக" சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "கிழக்கில் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரும், உறவினர்களும் தவறான தகவல்களை வழங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அலன் றொக்கிற்கு மட்டுமல்லாது காவல்துறையினர், ஏனைய அரச அதிகாரிகளுக்கும் தவறான தகவல்களே வழங்கப்பட்டுள்ளன. எனவே என்னால் தற்போது எப்படி அலன் றொக் தவ…

  3. 'ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைக்கு அமைய சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை' இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவது தொடர்பிலோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்தோ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழு எந்தவித வழிகாட்டுதல்களையும் முன்வைக்க தவறியுள்ளது. இதனால், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் தேவை உணரப்பட்டுள்ளது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32803-q-q.h…

    • 6 replies
    • 5.4k views
  4. 17 அக்டோபர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:43 ஜிஎம்டி புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களை தடை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் 2001 ஆம் ஆண்டின் தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள உலக தமிழர் பேரவை அது குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோரியுள்ளது. இந்த விடயம் குறித்து உலக தமிழர் பேரவையின் தலைவர் வண. டாக்டர் எஸ்.ஜே. இமானுவல் அவர்கள், பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து ஐநாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட 1373 ஆம் இலக்க தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் அமைப்புக்களையும்,…

  5. இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அரசாங்க தரப்பினர் முடக்கி வருகின்ற சூழ்நிலையில், ஐநா பிரதிநிதியும் தம்மை புறக்கணித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழாவையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். வடமாகாண சபைக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறித்துக்காட்டுவதாக அவருடைய இந்த உரை அமைந்த…

  6. இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கூறுகின்றது. அந்த விசாரணை தற்போது முடிவடைந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகின்றார். இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அறிக்கையை அடுத்த மாத இறுதியில் வெளியிடாமல் சிறிது காலம் பிற்போடுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. வெ…

  7. [ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007, 09:45 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ அமைச்சர்களின் கடமைகளில் தலையிடுவதுடன் கொள்முதல்களுக்கும் திட்டங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளிலும் மிக அதிகளவில் குறுக்கீடு செய்கிறார் என சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கின்றார

  8. 'ஐயா உங்களை காணும் போது எனக்கு சந்தோசமாக உள்ளது' ஐயா உங்களை காணும் போது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. இந்த நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று உங்கள் சேவையை செய்து வருகின்றீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்,கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளார். ஒரு தமிழ் அமைச்சர் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று சேவை செய்வதை முதன் முதலில் உங்களின் ஊடாக காணுகின்றேன். உங்கள் சேவையை கை விடாது தொடர்ந்து முன்னெடுங்கள். உங்களுக்கு இந்த நாடு பூராகவும் ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்றார்.. http://www.virakesari.lk/article/11407

  9.  'ஒட்டுண்ணிக் குழுவின் தலைவர் கஜேந்திரன்குமார்' மனித அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு, கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று நாம் போராடியபோது, தமிழ் மக்கள் அழிவதை விரும்பி யுத்தம் எனும் தீயிக்கு இந்த ஒட்டுண்ணிக்குழுவின் தலைவர் கஜேந்திரன்குமார, எரிபொருளை ஊற்றியவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்களுக்கு ஈ.பி.டிபியும், அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியிருக்கின்றார் இது அரசியல் காழ்ப்புணர்வோடு ஆதாரமற்ற ஒரு பொய்யாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  10.  'ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தக்கூடாது' -சொர்ணகுமார் சொரூபன் ஒரு சில ஆசிரியர்கள் விடும் தவறால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு நமது சமூகம் இடமளிக்கக்கூடாது என மேல் நீதிமன்ற முன்னாள் நீதவான் இ.த.விக்னராஜா தெரிவித்தார். சர்வதேச சித்திரவதைகள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வு, இன்று வியாழக்கிழமை (30) யாழில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்;றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  11. 'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம் Published By: Vishnu 16 Dec, 2025 | 08:47 PM (எம்.மனோசித்ரா) வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலு…

  12. 'ஒன்றுதான் உள்ளது என்றால் அது இலங்கை அல்ல' 'இருபது இனங்களையும் நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை மறந்தால், ஒரே இலங்கை என்பதை மறந்து விட வேண்டியதுதான்' என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற, சிங்கள அரச ஊழியர்களுக்கான, தமிழ் பேச்சு மொழி பயிற்சி வகுப்பு நிறைவு சான்றிதல் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒரே மொழி, மதம், இனம் என்று தெற்கில் கூறினால், அந்த…

  13. 'ஒன்றுபடாவிட்டால் துரோகிகளாக பார்க்கப்படுவோம்' எஸ்.நிதர்ஸன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கருத்து முரண்பாடுகள் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் நலனுக்கான ஒன்றிணைந்து செயற்படுவது போன்று, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்படத் தவறுவோமாக இருந்தால் துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாகவே பார்க்கப்படுவோம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 8ஆவது சர்வதேச வர்த்தக் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள், யாழ். பொது நூலக கேட்போர் க…

  14. தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே பயணிக்கின்றோம்: சம்பந்தன் 'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே, மிகவும் கடினமான ஒரு பாதை வழியாக - தமிழ் பேசும் மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் பயணித்து வருகின்றார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் …

    • 0 replies
    • 283 views
  15. ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை தாம் சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டில் மட்டக்களப்பில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகம், அப்போது இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு தற்போது அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ள சம…

    • 1 reply
    • 788 views
  16. 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகள் கிடைக்காது என்பதை உலக சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும்' ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை தாம் சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டில் மட்டக்களப்பில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகம், அப்போது இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கிய …

    • 0 replies
    • 631 views
  17. இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் திங்கட்கிழமை (24) தெரிவித்துள்ளது இது தொடர்பாக துணைத்தூதரகத்தினால் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'ஒன்லைன் மூல இந்திய விசா விண்ணப்பப் படிவம்' என்னும் தலைப்புடனான https://india-visa.co/index.php என்னும் முகவரியை உடைய இணையத்தளம் ஒன்று இயங்குவது பற்றி தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தளமானது இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதில் சிறப்புத் தேர்…

  18. அமெரிக்காவிலுள்ள தமிழர்ளை உள்ளடக்கிய 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' என்ற அரசில் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களை உள்ளடக்கியதே இந்தக் குழுவாகும் அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒபாமாவே தேர்ந்தெடுக்கப்படுவாரென இந்தத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்துவாரென அவர்கள் கருதுவதாக இணையத்தளமொன்றில் நேற்று புதன் கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபாமா ஜனாதிபதியானால் இலங்கை விடயம் த…

    • 2 replies
    • 1.8k views
  19. பழ. நெடுமாறன் அவர்கள் அவரது பத்திரிகையான மாதம் இரு முறை வெளிவரும் தென் செய்தி பத்திரிகையில் ஈழத்தமிழருக்கு பொருள் அனுப்ப முடியாது போனதனால் ஆதங்கப்பட்டு அவர் எழுதிய கட்டுரையின் கடைசிப் பக்கம் நெருப்பில் போட்டு வாட்டியது போல் ஒரு கவிதை வெளியாகியிருக்கின்றது. சாங்கியன் என்ற பெயரில் வந்த அந்தக் கவிதை கீழே : 'ஒரு இரங்கலின் மரணம்' என் எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இரங்கல் கவிதை எழுத என் சொந்தங்கள் உயிர் காக்க உணவு வழங்கவும் உதவாத எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன தமிழ்ச சொந்தங்களை கொல்ல தில்லி கூட்டாளி ஆயுதங்கள் அனுப்பியபோதும் அதைத்தடுக்க முனையாத என் எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன…

  20. சம்பந்தனால் மேற்கொள்ளப்பட்ட 'சதுரங்க காய்நகர்த்தலானது', கூட்டமைப்பின் தலைவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் மிகச் சிறந்தவர் என்பதை மட்டுமல்லாது, அரசியல் அரங்கில் 'ஒரு கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்தக் கூடிய' 'குறிதவறாத சூட்டாளன்' என்பதையும் நிரூபணமாக்கியுள்ளது. இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட Ceylon Today ஊடகத்தில் Manekshaw எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளையும் ஒன்றினைத்து ஏகமனதாக உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், தமிழ்த் தேசிய…

  21. [செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007, 04:40 ஈழம்] [அ.அருணாசலம்] "ஒரு தரப்பால் எட்டப்படும் இராணுவ வெற்றிகள் இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை கொண்டுவர மாட்டாது" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் அண்மைக்கலமாக பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்கும் மற்றும் அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு செல்வது தொடர்பில் மேற்படி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் முழு வ…

  22. 'ஒரு புள்ளியில் சந்திக்கும் இந்திய - சிறிலங்கா நலன்கள்" -தாரகா- கோயபல்ஸ் வாதம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு பொய்யை ஒன்பது தடவை சொன்னால் பத்தாவது தரம் அது உண்மையாகி விடும். மேலாதிக்க அரசியல் செயற்பாடுகளின் போதெல்லாம் கோயபல்ஸ்; வாதத்திற்கு முக்கிய இடமுண்டு. இலங்கை அரசியல் மீதான இந்திய தலையீட்டிற்காக சொல்லப்பட்டு வரும் வாதங்களும் அத்தகைய ஒன்றுதான். இலங்கை அரசியல் மீதான இந்தியத் தலையீடு என்பது எப்போதுமே இலங்கையில் தனது பிராந்திய நலன்களுக்கு எதிரான சக்திகள் அதிகளவில் தலையீடு செய்து வருகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு குற்றச்சாட்டுத்தான் இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் பின்னணியாக…

    • 1 reply
    • 740 views
  23. (எம்.ஆர்.எம்.வஸீம்) எனக்கு கிடைத்த நீதி அமைச்சுப்பதவி சமுதாயத்துக்கு கிடைத்த கெளரவம். இதனை எனக்கு வழங்கக்கூடாது என எம்மில் இருக்கும் தீய சக்திகள் செயற்பட்டனர். அதனை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்து எமது சமூகத்தை கெளரவப்படுத்தி இருக்கின்றனர். நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வேன் அத்துடன் அடுத்துவரும் 20வருடங்களுக்கு இந்த அரசாங்கமே பதவியில் இருக்கப்போகின்றது. அதனால் முஸ்லிகள் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத…

  24. மாகாண அதிகாரங்களை விரிவு படுத்த மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். புதியதொரு அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை கைவிடப்படவேண்டும் என முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன தெரிவித்துள்ளார்.. 'ஒரே தேசம் ஒரே மக்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை கூக்குரல் எழுப்புவதில் பயனில்லை' எஸ.; ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழப்பாணம் அர்பணிப்பு வழா.. 2014மஆம் ஆண்டு ஜனவரி மாதம ; 5ம ; திகிகிகதி பி.p.ப 3.30 மணிக்கு கௌரவ அதிதிதிதி உரை.. தலைவரவர்களே! பிரதம அதிதி அவர்களே, கௌரவ அதிதிகளே, சகோதர சகோதரிகளே, எனதருமைச் சிறுவர் சிறுமியர்களே! இவ்வருடத்தைய எனது முதல்ப் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசின் அமைச்சர்களுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மத்திய- மாகா…

  25. 'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய... இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda is the same Gnanasara Thera) தலைமையில் 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி உருவாக்கம் தொடர்பில் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார(Professor Dayananda Bandara), பேர…

    • 12 replies
    • 937 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.