Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததில் யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் விசாரணையில்:- 23 ஆகஸ்ட் 2014 வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த விவகாரத்தில் யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் விசாரணைகளிற்கு உள்ளாகியுள்ளார். நல்லூரில் தனது பங்களாவிற்கு முன்னதாகவுள்ள பல மில்லியன் பெறுமதியான காணியொன்றை அண்மையில் கொள்வனவு செய்துள்ள நிலையில் அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில் இலங்கை வருமான வரி திணைக்களத்தின் விசாரணைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். குறித்த காணியினை கொள்வனவு செய்வதற்கான வருமான வருகையினை தெளிவுபடுத்த கோரியே அவர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். சாதாரண பாடசாலை ஆசிரியையாக இருந்திருந்த அவரிடம் குறித்த ஒரு சில ஆண்டுகளில் எவ்வாறு வரு…

    • 2 replies
    • 602 views
  2. தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை புனரமைப்பு! [sunday 2014-08-24 09:00] தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை புனரமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த கூட்டத்தில், புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியேர் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய கிளையின் தலைவராக கோபாலபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=115527&category…

  3. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் காணி அபகரிப்பை அம்பலப்படுத்தியுள்ள அமெரிக்க செய்மதிப் படங்கள்! [sunday 2014-08-24 09:00] யாழ்ப்பாணத்தில் காணிகளை அபகரிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் கூறி வந்த பொய் காரணங்களை, அமெரிக்காவின் செய்மதிப்படங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. பொதுத் தேவைகளுக்காக என்று கூறி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரால், சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் பெரும்பாலானவை அவர்கள் கூறிய காரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று இதில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப இயக்கத்தின் மனித உரிமைகள் வேலைத்திட்டம், பல்வேறு செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் சமாதானத்துக்கும், நீதிக்குமான இயக்கம்…

  4. "சம்பந்தனும் TNAயும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே தீர்வு குறித்து பேச வரவேண்டும்" 24 ஆகஸ்ட் 2014 மகிந்த ராஜா கடும் கோபம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இந்தியாவிற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்து ஜனாதிபதி கடும் சீற்றமடைந்தார். அவர்களது விஜயத்திற்கு முன்பாக இது குறித்த தனது கடும் அதிருப்தியை அவர் தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தார் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது: இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் ஏமாற்றத்தை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊ;டாக வெளிப்படுத்தியுள்ளார். 'தமிழ்தேசி…

  5. இலங்கை யுத்தக்குற்றச் செயல் விசாரணைகளை வலுப்படுத்த ஐ.நா நடவடிக்கை: 24 ஆகஸ்ட் 2014 - இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை காத்திரமான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு சில ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. விசாரணைகளுக:கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் விசாரணை நிபந்தனைகளை மாற்றி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டிக் கொள்வது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. நம்பகமான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதென ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது. பல்வேறு நாடுகள…

  6. புலிகளின் 50 ஆயிரம் கோடி பணத்தில் சர்வதேசமெங்கும் பரவும் கோத்தாவின் வர்த்தகம்! லங்கா நியூஸ் வெப் இணையம் தகவல்! [saturday 2014-08-23 18:00] விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகை பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன. உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் மட்டுமே ஆயிரக்கணக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதியைக் கொண்டிருந்தன. இதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யின் கைது மூலம் சர்வதேச ரீதியாகவும் பெருந்தொகைப் …

    • 4 replies
    • 572 views
  7. புலிகளிடம் பணம் பெற்ற தமிழக அரசியல்வாதிகள்! - அம்பலப்படுத்தப் போகிறாராம் சுவாமி. [saturday 2014-08-23 18:00] விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகம் மூலம் கொடுப்பனவுகளை பெற்ற தமிழக அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழீழ வைப்பகத்தின் மூலம் பணம் பெற்ற தமிழக அரசியல்வாதிகள் பற்றிய உறுதியான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுவாமி கூறியுள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்ட சுப்ரமணியம் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார் முல்லைத்தீவில் இருந்த விடுதலைப் புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்து, புலிகளின் ஆதரவாளர்க…

    • 2 replies
    • 402 views
  8. அடுத்தமுறை இந்தியா வரும்போது ஜெயலலிதாவுடன் சந்திப்பு! - மாவை எம்.பி நம்பிக்கை. [saturday 2014-08-23 07:00] இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று புதுடில்லியில் நிருபரிடம் அவர்கள் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னையில் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கைக்கு நெ…

  9. சென்னையில் ராஜபக்சேவின் பினாமி வாங்கிய ரூ 150 கோடி நட்சத்திர ஓட்டல்!! : சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலை வாங்கியுள்ளது பிரபலமான சிங்கள நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாத ராஜபக்சே, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என சகல வகையிலும் இப்போது தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இதெல்லாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. ஆனால் இன்று அதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் …

    • 0 replies
    • 466 views
  10. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இனவழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பணியாற்றுவோம். சாட்சியாளரின் விபரங்கள் யாவிலும் இரகசியம் பேணப்பட்டு அத்தோடு தாயகம், இந்தியாவிலுள்ள உறவினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தி சாட்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் அனைத்து வேலைத்திட்டங்களும் நம்பிக்கையோடும் ரகசியமாகவும் முன்னெடுக்கப்படும்.அத்தோடு சாட்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளும் வழங்கப்படும் . அத்தோடு சர்வதேச மனிதவுரிமை அமைப்பான ECCHR (European Center for Constitutional and Human Rights e.V. ) நிறுவனத்தின் மனிதவுரிமை சார்ந்த நிபுணர்களின் மற்றும் சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளும் வழங்கப்ப…

  11. தமிழகத்தின் ஆதரவுக் குரல் நம்பிக்கை தருகிறது! - சம்பந்தன் தெரிவிப்பு [saturday 2014-08-23 18:00] இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும் அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்து குரல் கொடுத்தால் அது தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின்னர் கருத்து தெரிவித்த அவர், தமிழக அரசும், அரசியல் தலைவர்களும், மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகின்றனர். அவர்களது செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம். …

  12. சித்தப்புவுக்கும் பெறா மகனுக்கும் இடையில் முறுகலா? கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் அபாயம்? 23 ஆகஸ்ட் 2014 பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவின் நொருங்கிய சகபாடி மேயராக பதவி வகுக்கும் காலி மாநகர சபைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலி கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும்; குப்பை கூழங்களை அகற்ற காலி மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குப்பைகளை அகற்றுவது வைத்தியசாலையின் வேலை அல்ல என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் வைத்தியசாலை முன்பாகவுள்ள க…

  13. ஈபிடிபியிலிருந்து பிரிந்து ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் நல்லூரினில் வைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவர் கொண்ட இனந்தெரியாத குழுவினரே அவர் மீது இன்றிரவு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவியுடன் நல்லூர் ஆலய உற்சவத்தினில் கலந்து கொண்டு விட்டு நல்லூர் செட்டித்தெரு வீதியினுடாக மோட்டார் சைக்கிளினில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை வழிமறித்த இவர்கள் உரையாட வேண்டுமென அழைத்து சென்று தலைக்கவசத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். கைது செய்யபட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து…

  14. இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 08ஆம் ஆண்டை நினைவுகூரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/news/33383/57//d,article_full.aspx

    • 0 replies
    • 301 views
  15. இலங்கை அரசாங்கத்துடன் பேசினால் மட்டுமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அமைச்சரும், ஈ.பி..டி.பி. கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து INTER TAM செய்திகளுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார். முழுமையான செவ்வி

  16. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக காத்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது, அரசியல் தீர்வு காண வேண்டிய விவகாரங்கள் குறித்து இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நலத்திட்டப் பணிகள் என்ற பெயரில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய அரசாங்கம் தொடர்ந்து இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அனைத்து நலப்பணிகளையும் மேற்கொள்ளும் என்றும், தேவையான அனைத்து விவகாரங்களிலும் தவறாமல் அக்கறை காட்ட…

  17. இலங்கையின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச ஆலோசகர் குழுவிடம் சாட்சி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆணைக்குழுவுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தலைவர் டெஸ்மன் டி சில்வா தற்போது இலங்கையில் தங்கியுள்ளார். அவரிடம் கடந்த வாரம் இராணுவத்தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் சாட்சி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இறுதி யுத்தம் தொடர்பிலும், குறிப்பாக 2009ம் அண்டு மே மாதக் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் தங்களின் சாட்சியில் முக்கிய அவதானம் செலுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த நிபுணர்கள் குழு யுத்தம் தொடர்பில்…

    • 0 replies
    • 245 views
  18. காணாமல்போனோர் குறித்தும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை முன்னெடுக்கவென இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது அடுத்தகட்ட அமர்வை செப்டெம்பர் முற்பகுதியில் கிளிநொச்சியில் நடத்தவுள்ளதாம். இதன் படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை குறித்த அமர்வு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்திலேயே திகதி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. அத்துடன், காணாமல்போனோர் சம்பந்தமான விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவுக்கும், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குமிடையில் இம்மாத இறுதிக்குள் முக்கிய சந்திப்பொன்று இடம் பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல்போனோர் சம்பந்தமா…

    • 0 replies
    • 356 views
  19. சுப்ரமணியம் சுவாமியால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் இந்தியா அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டின் அரசியலுக்கும் முழுமையாக எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் சுப்ரமணியம் சுவாமி, இந்தியாவில் ராஜதந்திர ரீதியான குழப்பங்கள் ஏற்பட காரணமாக அமைவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தொடர்பிலும், சீனா தொடர்பிலும் இலங்கையில் வைத்து வெளியிட்ட கருத்துக்கள் பாரதூரமானவை. இந்தியாவின் அடிப்படை கொள்கைக்கு முரணான கருத்துக்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில், இந்த அதிகாரத்தை அவருக்கு யார் வழங்கியது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் …

  20. மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்துள்ளார். மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஐஸ் வாளி குளியல் காட்சியை தன்னுடைய பேஸ் புக் (முகப்புத்தகம்) பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளார். இந்த ‘ஐஸ் வாளி சவால்’ உலகளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டுவந்துள்ளது. ஐஸ் தண்ணீரை தலையுடன் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இதன் விதிமுறைகளில் ஒன்றாகும். அவ்வாறு ஊற்றிக்கொண்டவர் ஐஸ் வாளி சவாலுக்கு மூவரை அழைக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அ…

  21. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு: ஈழத் தமிழ் எம்.பி.க்களிடம் மோடி வலியுறுத்தல்! டெல்லி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடி…

  22. 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இந்தியா உதவும்! - கூட்டமைப்புக்கு மோடி வாக்குறுதி. [saturday 2014-08-23 18:00] 13ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க இந்திய அரசு உதவும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இந்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரிடம் நாம் இலங்கைப் பிரச்சினை குறித்த பல்வேறு விடயங்களை விரிவாகப் பேசினோம். இந்தச் சந்திப்பு எமக்கு திருப்திகரமாக அமைந்தது. எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த அவர், "எனது பதவியேற்பு நிகழ்வுக்கு வந்திருந…

  23. இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் புதுடில்லியில் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை இன்று சனிக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தங்களின் மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்…

  24. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்ஷ, அண்மையில் இலங்கை வந்திருந்ததுடன் அவருடன் சிறிய மருத்துவ பரிசோதனைக்காக ஜனாதிபதி இன்று காலை இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இம்முறை அமெரிக்க பயணம் தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் அமைதியாக இருந்தமை பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.