ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு, சாளை கடற்பரப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகொப்டரின் சிதைவுகளில் உப்பு கலந்திருப்பதால் அதனை உடனடியாக அடையாளம் காண முடியாதுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், யுத்த காலத்தின் போது காணாமல் போன, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமாக ஹெலிகொப்டரொன்றின் பாகங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நம்புவதாக அவர் கூறினார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், கடற்புலிகளின் முகாம் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்காக எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 17 ரக தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில், இன்று கடலிலிருந்து மீட்கப்பட்…
-
- 3 replies
- 709 views
-
-
தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னர் தமிழ் மக்களைத் தான் சொன்னவற்றை மாத்திரம் செய்யவேண்டிய அடிமைகளாகவே கருதுகிறது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். சுழிபுரம் பாரதி கலைமன்றத்தின் 32வது ஆண்டுவிழாவும் கலையரங்கு திறப்புவிழாவும் சுழிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும், விடுதலைக் கவிஞனான பாரதியின் ‘வெள்ளை நிறத்திலொரு பூனை’ என்ற பாடலை ஒரு சிறுவன் இங்கு திறம்படப் பாடிக் காட்டியுள்ளார். ‘வெள்ளை …
-
- 0 replies
- 638 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கமைவாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாகவும் முழுமையான விபரங்களை சேகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; இந்த ஆண்டுக்கான மனி…
-
- 0 replies
- 220 views
-
-
போஸ் நிஹாலே ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களது அரசியலரங்கில் மே 2009 ற்குப் பிறகு மூன்று போராட்ட சீசன்கள் உள்ளன. முதலாவது மார்ச் மாதத்தில் சனல் 4 தொலைக்காட்சி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கத் தீர்மானத்துடன் ஐ.நாடுகள் சபைக்கு முன்பாக தீர்த்தத்திருவிழாவில் கொத்துரொட்டித் தானத்துடன் நிறைவு பெறும். இரண்டாவது சீசன் மே மாதத்தின் மூன்றாவது வாரம். இங்கே மூன்றாவது வாரம் என்று குறிப்பாக ஒரு நாளைச் சொல்லாமல் வாரத்தையும் சொல்லுவதற்கு காரணம் உள்ளது. மே பதினேழு, பதினெட்டு,பத்தொன்பது, இனப்பொடுகொலை நாள், துக்கநாள் என்று தமிழன் குழம்புவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளது. அது சரி திருவிழா என்றால் கொடியேற்றம் தேர் ,தீர்த்தம், சப்பரம், திருக்கல்யாணம் எண்டு இ…
-
- 11 replies
- 1.3k views
-
-
உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள் புலிகள் இயக்கத்தில் போராளிகளாகவிருந்தவர்களும் வன்னியில் இறுதிக்கட்டத்தில் முடக்கப்பட்டுத் தப்பியவர்களும் இன்று உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அகதிகளாக சிதைக்கப்பட்டுள்ளனர். கடந்து ஐந்து வருடங்களாக எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் நாளாந்தம் மரணத்துள் வாழ்கின்றனர். புலிகளின் முக்கிய போராளிகள் உட்படப் பலரின் இந்த அவலத்திற்குப் பணக்காரப் புலம்பெயர் அமைப்புக்கள் எந்த உதவியையும் மேற்கொள்வதில்லை. ஆபிரிக்க நாடுகளான பெனின், தன்சானியா, ரொகோ, தென்னாபிரிக்கா போன்றவற்றிலும் கிழக்காசிய நாடுகளிலும் இந்தியாவிலும் அனாதைகளாக குழந்தைகளுடன் சிதறுண்டு சிதைக்கப்பட்டுள்ள இந்த …
-
- 7 replies
- 991 views
-
-
'தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னர் தமிழ் மக்களைத் தான் சொன்னவற்றை மாத்திரம் செய்யவேண்டிய அடிமைகளாகவே கருதுகிறது' என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். சுழிபுரம் பாரதி கலைமன்றத்தின் 32வது ஆண்டுவிழாவும் கலையரங்க திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (25) சுழிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'உலகில் உயிர்களின் இருப்புக்கு இப்பல்வகைமை அத்தியாவசியமானது என்பதுதான் உயிரியல் நியதி. இப்பல்வகைமை, மொழிப்பல்வகைமை, பண்பாட்டுப்பல்வ…
-
- 1 reply
- 538 views
-
-
மோடி - மகிந்த பேச்சில் இரண்டு விவகாரங்களுக்கு முக்கியத்துவம்! [Monday, 2014-05-26 12:14:43] இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று புதுடில்லி பயணமாகும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புதிய இந்தியப் பிரதமருடன் இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுக்களில் மீனவர் பிரச்சினை, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணல் ஆகிய இரு விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. மோடி பதவியேற்கும் நிலையில் தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவ…
-
- 0 replies
- 713 views
-
-
அரசியல் சூதாட்டத்திற்கு அரச ஊழியர்களின் உரிமைகளா? ஏனக்கேள்வியெழுப்பியபடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களில் மூவர் உள்ளுராட்சி மன்றங்களில் இருந்து சுகாதார திணைகளத்திற்கு இடம் மாற்றப்பட்டதை கண்டித்து கடந்த 70 நாட்களுக்கு மேலாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்ஜி.ஏ.சந்திரசிறி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி. சத்தியலிங்கம்,பேரவையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றோர் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் த…
-
- 1 reply
- 420 views
-
-
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்துக்கு திங்கட்கிழமை (26) விஜயம் செய்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கு அரசாங்கத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஈ - பாட்டசாலா புதிய இணைய கல்வித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ளும் முகமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், அதிபர்கள், மாணவர்கள் என பலர்; கலந்து கொண்டனர். இதன் பின்னர், நாடாளுமன்ற உறுப…
-
- 0 replies
- 331 views
-
-
பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளுக்கான அழைப்பு என்ற போர்வையில் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு அனுப்பியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ்து:- பிரதமர் பதவியேற்பு விழாவை கடந்த காலங்களில் நடைபெற்றது போல் எளிமையாகவும், இனிமையாகவும், சர்ச்சைக்கு இடமில்லாமலும், ஆடம்பரம், ஆரவாரம் இல்லாமலும் நடத்த திட்டமிட்டு இருந்தால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளுக்கான அழைப்பு என்ற போர்வையில் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு அனுப்பியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இலங்கை தமிழ் மக்கள் ராஜபட்ச அரசால் படுகொலை ச…
-
- 4 replies
- 753 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பை வட மாகாண முதலமைச்சர் ஏற்றிருந்தால் அது இருதரப்பினருக்கிடையே புதியதொரு பயணத்திற்கான ஆரம்பமாக அமைந்திருக்கும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். “சார்க்" வலயத்தின் இந்தியாவின் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் காய் நகர்த்தலை "மோடி" ஆரம்பித்துவிட்டாரென்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பானஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்; இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வைபவத்தில் தன்னோடு கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு விடுத்த அழைப்பு முக்கியத்…
-
- 1 reply
- 834 views
-
-
கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைநிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தேரர் தெரிவித்தார். இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று கொழும்பு விவேகானந்தா மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமானது. இவ்வூர்வலம் ஜிந்துப்பிட்டி, செட்டியார் தெரு, மெயின் வீதி, ரெக்லமேஸன் வீதி ஊடாக கொட்டாஞ்சேனை வந்தடைந்தது. இதில் ஜனாத…
-
- 11 replies
- 995 views
-
-
கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரவினர் கைது செய்துள்ளனர்:- 26 மே 2014 புலிகளின் சார்பில் உளவுத் தகவல்களை திரட்டினாராம்? கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பணியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் தமிழிழ விடுதலைப் புலிகளின் சார்பில் உளவுத் தகவல்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையில் இருதய நோய்ப் பிரிவில் தொழில்நுட்பிவயலாளராக குறித்த நபர் கடமையாற்றி வருகின்றார். இராணுவப் படையினருடன் நட்புறவை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக விசாரணைகளின் மூலம் ஒப்ப…
-
- 0 replies
- 527 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டை:- 26 மே 2014 (2013 இறுதிப் பகுதியில் இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புச் செயலர் மலேசியாவில்) தமிழீழ விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று முக்கிய உறுப்பினர்களை மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவின் முக்கியஸ்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்கள், மலேசிய பணம், விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பொரு…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயற்சித்துள்ளதாக இவர்கள் மூவரும் கடந்த 15ஆம் திகதி கைதாகினர் என்று மலேசிய பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் குடிவரவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது. malarum.com
-
- 4 replies
- 765 views
-
-
-
- 1 reply
- 587 views
-
-
கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக இவ்வுத்தரவினைப் ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/111708-2014-05-25-04-34-18.html
-
- 2 replies
- 530 views
-
-
-எஸ்.குகன் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழாவும் தீமிதிபபும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது. அதிகாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பானை வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக நிகழ்வு இடம்பெற்றது. மதியம் பொங்கல் விழா விசேட பூசைகள் இடம்பெற்று தீமிதிப்பு வைபவமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வின் விளக்கு வைத்தல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது. அத்துடன், இன்றைய பொங்கலுக்காக கோயில் வீதி மல்லாகத்தில் அமைந்துள்ள சாடி மனை ஆலயத்திலிருந்து பொங்கல் பொருட்கள் சனிக்கிழமை (24) கே.கே.எஸ்.வீதியூடாக ஆலயத்திற்கு எடுத்து வரப…
-
- 2 replies
- 683 views
-
-
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவினை புறக்கணிக்கக் கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:- நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொள்ள உள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழார்வ அமைப்புகளைச் சேர்ந்தவரகள் எதிóர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என்று கோரிக்கைகளும் வைககப்படுகின்றன. இந்நிலையில நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவினைப் புறக்கணிக்கக் கோரி அவரது வீட்டை பாலச்சந்திரன் மாணவர் இயக…
-
- 0 replies
- 601 views
-
-
கோபி அனான் ஐநா விசாரணைகளுக்கு தலைவர்? 25 மே 2014 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. சமதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என்று தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. "கோபி அனானைத் தலைவராக நி…
-
- 10 replies
- 1.2k views
-
-
நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அப்படி யாராவது அதனை வாதம் செய்வார்களேயானால், நான் அதற்கு விவசாயிகள் சார்பில் தயாராக இருக்கின்றேன் என நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி. குமாரசிறி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். www.thinakkural.lk/article.php?local/nkraavo9qn5914dd5bfdeb5715320xcyinf7c75d400de61e99d78e2ecrnlt#sthash.ddfrCJX5.dpuf
-
- 0 replies
- 324 views
-
-
யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவனை அதிகரித்துச் செல்வதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரும் சமூகப் பிறழ்வு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த வாரம் நடந்த சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடையே போதைப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கல்வித் திணைக்களத்தினூடாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கணினிகளைச் சுற்றித் தொடர்ந்தும் மறைப்புக்களை பயன்படுத்தி வருவது மாணவர்களின் தவறான நடத்…
-
- 0 replies
- 583 views
-
-
நாமல் ராஜபக்ஸவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம் மெய்பாதுகாவலர் உட்பட 30 பேர் வைத்தியசாலையில்:- 25 மே 2014 வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிரந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியில் 30 போர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டம் இடம்பெற்றபோது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து மக்கள் மீது கொட்டியதாக தெரியவருகின்றது. இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கெதண்டிரு;தவர்கள் மீது சரமாரியாக குளவி கொட்டியதை அடுத்து நாமல்ராஜபக்சவை அவரது மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாத்துள்ளனர். இந் நிலையில் மெய்பாதுகாவலர்கள் உட்பட பொலிஸார் இராணுவத்தினர் உட்பட பொது மக்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது. இந் நிலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய…
-
- 0 replies
- 363 views
-
-
யாழ்ப்பாண தீவுகள் அதிகாலை முதல் சுற்றிவளைப்பு! [sunday, 2014-05-25 19:34:56] யாழ். குடாநாட்டை சூழவுள்ள தீவு பகுதிகளில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உத்தியோகஸ்தர்களால் இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். http://seithy.com/br…
-
- 0 replies
- 533 views
-
-
தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளது:- 25 மே 2014 அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், 424 தனிநபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்களும் தனிநபர்களும் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கையொப்பத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது, குறித்த நிறுவனங்களின் மற்றும் தனிப்பட்ட நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு;ள்ளது. …
-
- 2 replies
- 459 views
-