ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
தேசம், தேசிய இனம், தேசிய சிறுபன்மை, சிறுபான்மை தேசிய இனம், இனக்குழுஅல்லது எதுவும் அற்ற ஒரு கூட்டம் என்கின்ற வரையறைகளில் ஏதோ ஒன்றிற்குள் இலங்கைவாழ் மக்கள் பிரிவுகளை தத்தமது வியாக்கியானங்களிற்கேற்ப அல்லது தேவைகளிற்கேற்ப அடக்கிக் கொள்வதற்கு அரசியல் அறிஞர்கள், அரசியல் அமைப்புகள், போராட்டக்குழுக்கள், ஆளும் பிரிவுகள், பாசிசக்குழுக்கள் என்னும் முகாம்கள் பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். இவர்களின் இத்தகைய தாம் சார்ந்த அல்லது தாம் விரும்பும் பிரிவின் மேன்மையை நிறுவுவதற்கு, இலங்கைத்தீவில் அவர்களின் வரலாற்று தொன்மையை, பெருமையை நிறுவுவதும் மற்றவர்களின் வரலாற்றை சிறுமைப்படுத்துவது அல்லது இழிவுபடுத்துவது என்னும் வெட்கப்படத்தக்க போட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு புனைகதைகளு…
-
- 0 replies
- 359 views
-
-
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் இலங்கைக்கான உத்தேச விஜயம் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் உச்சமட்ட இலக்கைப் பூர்த்தி செய்யவே என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சந்தேகத்தை வெளியிட்டதுடன், தனது வருகையின்போது பாப்பரசர் வட பகுதிக்கு செல்லக்கூடுமெனவும் அவ்வாறு சென்றால் மன்னார், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்களைச் சந்திக்க நேரிடும் எனவும் அத்தனையதொரு நிகழ்வு இடம்பெறுமானால் அந்த இரு ஆயர்களினதும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு உரம் ஊட்டுவதாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. 2015 ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தருவதாக பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெவித்துள்ளதையடுத்து நாட்டின் பல்வேறு சமூகத் தளங்களில் பல்வேறுபட்ட கருத்துகளும் எதிர்ப்புகளும் எழுந்தவண்ணம் உள்ளன. இது தொடர்…
-
- 1 reply
- 361 views
-
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரிலும் வெசாக் அலங்காரப் பந்தல்களும் வெசாக் அலங் காரக் கூடுகளும் அமைக்கப் பட்டு வருகின்றன. ஆறு வெசாக் வலயங்கள் கொழும்பில் அமைக்கப்பட் டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்ட வெசாக் அலங்காரப் பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தொட்டலங்க, பேலியகொட, தெமட்டகொட, பலாமரச்சந்தி. பஸ்டியன் மாவத்தை, கொதட்டுவ ஆகிய இடங்க ளில் பிரதான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மஹரகம, நுகேகொட, கொட் டாவ, ஹோமகம, மாலபே, கிரிபத்கொடை பகுதிகளிலும் வெசாக் பந்தல்கள் அமைக்க ப்பட்டுள்ளன. கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் 500க்கும் மேற்பட்ட தானசாலைகளும் தாகசாந்தி நிலையங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை (லேக்ஹவுஸ்) அமாதாஹர உட்பட பல வெசாக் வலயங்கள் ஏற்பா…
-
- 1 reply
- 655 views
-
-
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர் குறித்து ஆராய வருகிறார் ஐ.நா பிரதிநிதி மே 15, 2014 வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பணிகளில் சேரும் போது பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி பிரான்ஸிஸ் க்ரீபீன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக க்ரிபீன் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் பணியாற்றும் 24 வீதத்தினர் தேசிய பொருளாதாரத்தில் 33 வீத வருமானத்தை ஈட்டி தருகின்றனர். இந்தநிலையில் வெளிநாட…
-
- 1 reply
- 579 views
-
-
அதிகளவில் புண்ணியங்களை சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம்! - ஜனாதிபதியின் வெசாக் செய்தி. [Wednesday, 2014-05-14 09:32:20] புத்த பெருமானின் போதனைகள் முழு உலகிற்கும் சாந்தியைப் பெற்றுக்கொடுப்பவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வெசாக் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரி நிர்வாணமடைதல் போன்ற மூன்று நிலைகளையும் நினைவு கூரும் வெசாக் பண்டிகை இவ்வருடம் பூரண அரச அனுசரணையுடன் நாடு முழுவதும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுகிறது.இந்த வெசாக் உற்சவம் பெளத்த மக்களாகிய எமக்கு மட்டுமன்றி உலகத்தில் வாழும் அனைத்து பெளத்த மக்களாலும் போற்றப்படுகின்ற புண்ணிய மகோற்சவமாக கருதப்படுகி…
-
- 8 replies
- 790 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம்- இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை? 15 மே 2014 இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்…
-
- 1 reply
- 521 views
-
-
புலிகளின் 120 கோடி ரூபா சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல்! [Wednesday, 2014-05-14 09:12:24] போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 120 கோடி ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், இந்த சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பிரதேசத்தில் சொசுகு தொடர்மாடி வீடுகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணிகள், ஆடைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள், கப்பல், ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் எப்போது கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் வெளியி…
-
- 5 replies
- 776 views
-
-
வியாழன், மே 15, 2014 - 04:18 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு ''போர்க்களத்தில் ஒரு பூ''இசையினை போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்பணம்! 'போர்க்களத்தில் ஒரு பூ''இசையினை போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்பணம்! உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத்துயராய்இமாறா ரணமாய்இநிறைந்து நிற்கும் இந்நாளில் தன் மொழியைஇதமிழ்மொழியை தமிழினத்தை தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் சொல்லணா கொடூரங்களுக்கு ஆட்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் இன்னுயிர்களை நாம் தொட்டு உறவாடிய தமிழ் சொந்தபந்தங்களை மனதில் இருத்தி அவர்களை நினைத்து உறுதியேற்றும் இந்நாளில் அவர்களின் நினைவுகளால் உந்தப்பட்டு அனைவரின் நெஞ்சிலும் அடங்காப்பெரு நெருப்பாய் கனன்றிடும் சுதந்திர வேட்கையின்…
-
- 1 reply
- 639 views
-
-
கிளிநொச்சியில் இராணுவத்தின் வசமுள்ள வீடுகளை விடுவிக்கக் மக்கள் கோரிக்கை! குளோபல் தமிழ் செய்தியாளர்:- 15 மே 2014 நடத்தப்படட்ட இருந்த ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது: மீள்குடியேற்றப்பட்டு ஐந்து வருடங்களை கடந்துள்ளபோதும் இராணுவத்தினர் கையகப்படுத்திய தமது வீடுகளை இன்னமும் திருப்பித் தரவில்லை என்று கூறி கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தயாராகினர். கிளிநொச்சி திருநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் அலுவலகத்திலிருந்து கிளிநொச்சி கச்சேரிவரை செல்ல இருந்த குறித்த ஆர்ப்பாட்டம் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரிடம் பிரச்சினையை எடுத்துரைக்குமாறு மக்களை பொலிசார் அழைத்து வந்தனர். இதன்போது…
-
- 0 replies
- 276 views
-
-
கடற்படை சுவீகரித்த காணியை பங்கு போட்டார் நாமல்! - கீரிமலையில் பாரிய சுற்றுலா விடுதியை அமைக்கப் போகிறார். [Thursday, 2014-05-15 09:37:34] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய சுற்றுலா விடுதி மற்றும் சிறப்பங்காடி ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காணியையும் அவர் காங்கேசன் துறைக்கும் கீரிமலைக்கும் இடையில் உள்ள 3 ஏக்கர் காணியை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினருக்காக சுவீகரிக்கப்பட்ட 186 ஏக்கர் காணியில் இருந்து அவர் இந்த 3 ஏக்கரை பிரித்து பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=109362&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 598 views
-
-
பிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை! [Thursday, 2014-05-15 09:45:14] பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்டமைக்கும் அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இலங்கையில் அந்தச் சட்டத்தை நீக்குமாறு கோருவது எந்த வகையில் நியாயமாகும் என இலங்கை அரசாங்க அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://seithy.com/breifNew…
-
- 0 replies
- 535 views
-
-
தற்போதைய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை பிரச்னையில் தமிழருக்கு எதிராக செயல்பட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் புதியவரது வருகை எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. பஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் பாதுகாப்புத்துறை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான அஜித் தோவல், 1968ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். 2005ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதியுடன் ஐபிஎஸ் சேவையில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். தற்போது விவேகானந்தா சர்வதேச பவுண்டேசனின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான் ந…
-
- 19 replies
- 1.8k views
-
-
பட்டதாரிகளை விட எமக்கு பல்லாயிரம் சம்பளம் இராணுவத்தில் உள்ள தமிழ் பெண்களின் அசத்தல்
-
- 4 replies
- 1k views
-
-
-நா.நவரத்தினராசா குப்பிளான் தெற்கு கன்னிமார் கௌரியம்பாள் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்றையதினம் காலை நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடியவர்கள் தங்களது நேர்த்திக்கடனை காவடிகள், தூக்குக்காவடி, பறவைக்காவடி சப்பாணிக்காவடி எடுத்தும் கற்பூரச்சட்டி ஏந்தியும் அங்கப்பிரதட்சை செய்தும் நிறைவேற்றினர். tamilmirror
-
- 0 replies
- 480 views
-
-
-ற.றஜீவன் யாழ். பருத்தித்துறை நகரத்தில் நடைபாதையில் உள்ள வாய்கால் மூடப்படாமை காரணமாக பாதசாரிகளும் துவிச்சக்கரவண்டியில் செல்வோரும் அதனுள் வீழ்ந்து காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வாயினை மூடி நடைபாதை அமைக்கும் பணியினை வீதி அதிகார சபை மேற்கொண்டதாகவும் அவர்கள் குறித்த கால்வாய் அமைந்துள்ள பகுதியினை மூடாமல் விட்டுச் சென்றுள்ளதாகவும் பருத்தித்துறை நகர சபையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இவ்வீதியில்இரவு வேளைகளில்; பயணிப்போர் வாய்க்காலினுள் வீழ்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு நகர சபையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். tamilmirror
-
- 0 replies
- 358 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வவுனியா- வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் நேற்றையதினம் (13.5.14) இறைச்சியை கொள்வனவு செய்தபோது புழுக்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சி கடையொன்றில் மாட்டிறைச்சியை ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்று பார்வையிட்ட போது அதனுள் சிறிய புழுக்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இறைச்சியுடன் கொள்வனவு செய்தவர் வவுனியா சுகாதார வைத்திய பணிமனைக்கு சென்ற போது பொது சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு உள்ளமையினால் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ…
-
- 4 replies
- 718 views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு பிரித்தானியா தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த தடையுத்தரவினை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில், நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி லண்டனில் 'இலங்கையை நிராகரிப்போம்' என்ற மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடை விதிக்குமாறும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கண்காட்சியொன்றையும் நடத்தி வருகின்றது. தமிழ் மக்கள் இனச்சுத்திகரி…
-
- 2 replies
- 543 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் தடை காரணமாக வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புக்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அண்மையில் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த தடையினைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பை தரப்பை ஆதாரம் காட்;டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.தடை அறிவிப்பின் பின்னர் சில புலம்பெயர் அமைப்புக்களின் நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இலங…
-
- 2 replies
- 503 views
-
-
தடைசெய்யப்பட்டவர்கள் குறித்து ஆதாரமின்றி எதுவும் செய்ய முடியாது! - கைவிரிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். [Wednesday, 2014-05-14 18:39:17] தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று இலங்கை அரசாங்கத்தினால், தடைசெய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடவில்லை என்றும், அத்தகைய ஆதாரங்களை இலங்கை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புக்கான தூதுவர் டேவிட் டலி தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் தடைப்பட்டியல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைப்பு ஒன்றைத் தடை செய்வது என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொறுத்தவரையில், மிகவும் பாரதூரமான விவகாரம். இலங்கை அர…
-
- 2 replies
- 694 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கக்கூடாது என்று ஏங்கும் ஏற்பாட்டாளர்கள்! [Wednesday, 2014-05-14 18:45:44] கிளாஸ்கொவ் நகரில் நடக்கவுள்ள கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாவிட்டால், சர்வதேச ஊடகங்களால் ஏற்படக் கூடிய கடும் இராஜதந்திர சவால்களை தவிர்க்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்புவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு போட்டியில் பங்கேற்றால், மனிதஉரிமை மற்றும் இனப்படுகொலை தொடர்பான கேள்விகளால் பாதிப்பு ஏற்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு கடிதங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய எதிர்க்கட்சியின் நிழல் வெளிவிவ…
-
- 0 replies
- 426 views
-
-
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகள் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்கு விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. இந்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமிக்க உள்ளார். பெரும்பாலும் இந்த மாத இறுதியில் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மூவர் அடங்கிய பிரதிநித…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன – சர்வதேச மன்னிப்புச் சபை:- 14 மே 2014 நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன – சர்வதேச மன்னிப்புச் சபை:- இலங்கை உள்ளிட்ட ஆசிய பிராந்திய வலய நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் சித்திரவதை சம்பவங்கள் வழமையானவையாக மாற்றமடைந்துள்ளதாகவும், இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகள் சித்திரவதைகளை ஒழிப்பது தொடர்பில் வெறுமனே வாய் மொழி மூல வாக்குறுதிகளை அளிப்பதனை நிறுத்திக் கொண்டு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை வழங்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆச…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகளால் திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிளிநொச்சி மத்திய …
-
- 61 replies
- 3.8k views
-
-
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமா…
-
- 44 replies
- 5.3k views
-
-
மூன்று மாகாணங்களிலுள்ள ணிக்கிய வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நேற்று (13) குற்றம் சாட்டியுள்ளன. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பாதுகாக்கப்பட்ட 14 காடுகளில் மரங்களை வெட்டினாரெனவும் சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, இலங்கை சுற்றுச் சூழல் காங்கிரஸ், இயற்கைக்கான பௌத்த அமைப்பு ஆகியன ரிஷாத் மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்நடவடிக்கையானது சுற்றுச் சூழல் சட்டத்தை மீறி காடுகள் வெட்டப்பட்டுள்ளதையே எடுத்தியம்புவதாக, சுற்றுச் சூழல் நிதிக்கான மை…
-
- 0 replies
- 390 views
-