ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
உண்மைகண்டறியும் அடுத்த குழுவை இலங்கைக்கு அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை! [Tuesday, 2014-05-06 09:57:38] இலங்கைக்கு உண்மை கண்டறியும் விசேட ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தில், இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முறைப்படியான அறிவிப்பு இந்தவாரம் கிடைக்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதேவேளை, புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி இம்மாதம் 19ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்…
-
- 0 replies
- 404 views
-
-
மன்னார் கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களுக்கு அரிய வகையிலான மீனினமொன்று கிடைத்துள்ளது. யானையின் தும்பிக்கையை ஒத்ததான இந்த மீனின் முக வடிவமைப்பு அமைந்துள்ளதாகவும், மீனினத்தின் உடலை ஒத்ததாக இந்த மீனின் உடல் அமைந்துள்ளதாகவும் உள்ளது. பசுவிக் மற்றும் ஆசிக் கடற்பரப்பில் இந்த மீன் இனம் அதிகளவாக காணப்படுவதாக இந்தியாவின் மத்திய கடல்சார் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மீன்கள் 200 மீற்றர் முதல் 2000 மீற்றர் வரை அழமான இடத்தில் இந்த மீன்கள் வாழ்வதாகவும், 60 சென்றி மீற்றர் முதல் 140 சென்றி மீற்றர் வரை இந்த மீன் வளரும் என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனினமானது தனது தும்பிக்கையை சு…
-
- 3 replies
- 950 views
-
-
கணணி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் வெடிப்பு சம்பவம் ஒன்றில் தரைமட்டம் - 05 மே 2014 பாதுகாப்பு தரப்பின் சதியா? இல்லை நிஜமான வெடிப்பா? மர்மம் தொடர்கிறது - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- முள்ளியவளையில் ஞாயிறன்று நள்ளிரவு வேளையில் கணணி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் அந்த வர்த்தக நிலையம் தரைமட்டமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்தக் கடையின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரும் வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்ற போதிருலும், உண்மையில் என்ன நடந்தது என்பது இன்ன…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கை வர்த்தகருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு திங்கட்கிழமை, 05 மே 2014 23:15 இந்திய வர்த்தகர் ஒருவரிடமிருந்து 5.29 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிடியாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேயிலை ஏற்றுமதி வர்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி இந்திய வரத்தகரிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக இலங்கை வரத்தகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த அந்தோணி மணிலால் எனும் குறித்த வரத்தகருக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். http://tamil.dailymirror.l…
-
- 1 reply
- 448 views
-
-
பாலியல் வன்முறைகள் தொடர்பில் அடுத்த வருட முற்பகுதியில் லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான மாநாடு தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருக்கின்றது. இலங்கை அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுக்கு வந்த பின்னர் பாலியல் வல்லுறவும், பாலியல் வன்முறைகளும் இலங்கையில் பெருமளவுக்கு இடம்பெறுவதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறப்போகும் இந்த மாநாட்டில் இலங்கையில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என இலங்கை அஞ்சுகின்றது. நெருக்கடிகளின்போது பாலியல் வன்முறைகள் குறித்த விவகாரங்களைக் கையாள்வதற்கான ஐ.நா. செயலாளர…
-
- 2 replies
- 498 views
-
-
இலங்கை அரசின் தடைப்பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டது – ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்:- தடைசெய்யப்பட்டவர்கள் இந்தியா செல்ல முடியாது:- இலங்கை அரசின் தடைப்பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டது – தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்:- கண்டனங்கள் தொடர்கின்றன:- இந்திய அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்க…
-
- 2 replies
- 954 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து 21.07.2009 அன்று கே.பியை தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரிலான கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையின் வனப்பகுதிகளில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் தங்கியிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களப் படைகள் கைப்பற்றிய சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அம்பாறை மாவட்டத் தளபதி நகுலனுடன் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தென்தமிழீழத்திற்கான கட்டளைத் தளபதி ராம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைப்பதற்குத் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு இணங்கிய நிலையில் சிங்களப் புலனாய்வுப் ப…
-
- 93 replies
- 7.2k views
-
-
american-flag (2) தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், மற்றும் 424 தனிநபர்களைத் தடை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை, அமெரிக்காவும் புறக்கணித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தடையை தாம் கருத்தில் கொள்ளப் போவதில்லை என்று கனடா அறிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாடாக அமெரிக்காவும் இந்த தடையைப் புறக்கணித்து புலம்பெயர் தமிழர் குழுக்களுடன் பேச்சு நடத்தியுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களின் தொகுப்பு- கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலரும் பங்குபற்…
-
- 0 replies
- 476 views
-
-
யாழ்தேவியில் இருந்து தனியாக கழன்றோடிய பெட்டிகள்! - மூன்றுமுறிப்பில் பரபரப்பு. [sunday, 2014-05-04 18:24:23] கொழும்பிலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகள் கழன்று, தனியாக ஓடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தனியாகச் சென்ற ரயில் பெட்டிகள் சுமார் 300 மீற்றர் தூரம் வரை பயணித்தன. பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதை அறிந்த சாரதி ரயிலை நிறுத்தி, மீண்டும் திரும்பி வந்து பிரிந்த பெட்டிகளை இணைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். http://se…
-
- 5 replies
- 790 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இந்த இரவு நேரடி களியாட்ட விடுதியில் இவர்கள் இருந்ததை பலர் கண்டுள்ளனர். ஹரின் பெர்ணான்டோவும் ஹிருணிக்காவும் நள்ளிரவு ஒரு மணி வரை அங்கு இருந்ததுடன்> இருவரும் மிக நெருக்கமாக காணப்படடதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி களியாட்ட விடுதியில் இருந்தவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதாக தெரியவருகிறது. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதி…
-
- 1 reply
- 2.6k views
-
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்று இப்போது கூற முடியாது! - ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி தெரிவிப்பு. [sunday, 2014-05-04 09:09:56] இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். எனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி டேவிட் டெலி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவு இருக்கிறது. எனினும் இலங்கையின் வடக…
-
- 1 reply
- 497 views
-
-
சம்பூர் கிராமத்தின் தடயங்களை ஆவணங்களில் இருந்து முற்றாக அழிக்கச் சதி! - ஆங்கில ஊடகம் கூறுகிறது. [Monday, 2014-05-05 10:04:31] சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. திருகோணமலை - மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் இருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்து 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.எனினும் அந்த மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற அனுமதிக்காமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தடையாக இருந்து வருகின்றனர். அங்கு மொத்தமாக 9000 ஏக்கர் காணிப் பரப்பு இருந்த போதும், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் படி, 1458 ஏக்கர் காணிப்பரப்பே சம்பூருக்கு சொந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அனல்மின்…
-
- 0 replies
- 693 views
-
-
இது போர்க்குற்றம் இல்லை, இது இன அழிப்பு - தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு [Monday, 2014-05-05 08:04:23] தமிழின அழிப்பை எத்தனை வருடங்கள் கடந்தாலும் நாம் மறக்க மாட்டோம் என உறுதியுடன் சொல்லுவோம். நமது விடுதலையை வெல்லும் வரை நாம் ஓயப்போவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் மீறி நின்று எமது விடுதலையை வென்றெடுப்போம் எனும் செய்தியை தமிழின அழிப்பு நாளான மே 18 டில் நாம் பெரும் திரளாக அணிதிரண்டு முழக்கமிடுவோம் எனவும் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை கோரி வீரியத்துடன் நாம் போராட வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் அழைப்பு . http://www.youtube.com/watch?v=YlmuC8-n-z0#t=…
-
- 0 replies
- 478 views
-
-
யாழில் வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு – புதிய தமிழ்த் தரகர்களின் நல்லிணக்க மையமும் களத்தில் - 05 மே 2014 யாழ்ப்பாணம் - மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.05.14) காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இந்த பதிவுகள் இடம்பெற்றதாக யாழ். படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க மையத்தினால் 1,350 இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்றிட்டத்திற்காகவே இந்தப் பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் படைத் தலைமையகம் குறிப்பிட்டது. இந்த செயற்றிட்டத்திற்கா…
-
- 0 replies
- 492 views
-
-
தமிழர்கள் தொடர்ந்து அவர்களின் உரிமைக்காக போராடவேண்டும் - கனடிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாம் கில். [Monday, 2014-05-05 07:53:25] புலம் பெயர் அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடைய நபர்களை ஸ்ரீலங்கா அரசு தடை செய்ததை கனேடிய அரசு கண்டித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரம்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கனேடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற நோக்கத்திற்காக இவர்கள் தடை செய்யப்பட்டுள்ளர்கள். அனால் இவர்கள் சாதாரண பொதுமக்கள் அமைப்புக்கள் என்பதனை கனேடிய அரசுஅறியும். ஸ்ரீலங்கா அரசின் இத்தடை என்பது எந்த பெறுமதியும் அற்றது. ஸ்ரீலங்கா அரசு போன்று கனேடிய அரச இவர்களை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காது. கனடா தொடர்ந்தும்…
-
- 0 replies
- 473 views
-
-
கனடாவில் இருந்து சென்ற மூதாட்டி மீது நுணாவிலில் தாக்குதல்! - சொந்த வீட்டைக் கேட்டதால் வந்தது வினை. [Monday, 2014-05-05 09:31:16] தனது சொந்த வீட்டில் குடியிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற, கனடாவில் இருந்து சென்ற மூதாட்டி ஒருவர், வீட்டில் குடியிருந்தவர்களால் தாக்கிக் காயப்படுத்தப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை இந்தச் சம்பவம் சாவகச்சேரி - நுணாவில் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர், குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்ற மூதாட்டியாவார். குறித்த மூதாட்டி, கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர், வீடில்லாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தனது வீட்டில் குடியிருக்க அனுமதித்து, வாடகை ஒப்பந்தமும் செய…
-
- 0 replies
- 828 views
-
-
14 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்து வந்த இலங்கை பெண் ஒருவர் நாடு கடத்தப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கைப் பெண் கனடாவின் வன்குவார் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கனேடியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஜனினா இபாரா என்ற பெண்ணே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார். 15 வயதில் இபாரா கனடாவைச் சென்றடைந்ததாகவும், அவருக்கு தற்போது 10 மற்றும் 7 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இபாராவை கனேடிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர். குடும்பத்தை பிரித்து ஜனினாவை இலங்கைக்கு நாடு கடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவரது கணவர் எலிசானோ இபாரா தெரிவித்…
-
- 0 replies
- 585 views
-
-
ராமநாதபுரம்: இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் 10 இலங்கை தமிழ் அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர். 2 குடும்பங்களை சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ''இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர். மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்" என்றனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=27550
-
- 0 replies
- 474 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதிகாலையில் வெட்டிக்கொலை!-அச்சுவேலியில் பயங்கரம்!! [sunday, 2014-05-04 08:12:17] யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை வாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் நிர்குணானந்தம் அருள்நாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர்களாவர். இந்தச் சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான நிர்குணானந்தம் தர்மிகா(25),த.யசோதரன்(30) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள…
-
- 5 replies
- 904 views
-
-
வடக்கில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன வட மாகாணத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் வறட்சி நிவாரணம் போன்றவற்றை வழங்காமல் ஒரு நெருக்கடி நிலைலைய அங்கு அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். 'இயற்கையாகவே ஏற்பட்டிருக்கக்கூடிய காலநிலை மாற்றங்களினாலும், சுற்றுச்சூழலின் சமநிலையில் மனிதர்கள் ஏற்படுத்திவரும் பாதிப்புகளினாலும் கடும் வறட்சியை நாம் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது' என்றார் அமைச்சர். இந்த வறட்சி வருங்காலங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் பயிரினங்களை அடையாளம் கண்டு பயிரிடுவதற்கான…
-
- 0 replies
- 459 views
-
-
அரசாங்கத்தின் தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – அமெரிக்கா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதே நிலைப்பாட்டை தற்போது அமெரிக்காவும் வெளிப்படுத்தியுள்ளது. புல…
-
- 0 replies
- 582 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலை இதய சிகிச்சைப் பிரிவில் சி.வி.விக்னேஸ்வரன்? 04 மே 2014 வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04.05.14) அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் போதனா வைத்தியசாலையின் இதயச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காகவே முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர், 'கோல்டர்' பரிசோதனை என்னும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் எனவும் வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/artic…
-
- 0 replies
- 612 views
-
-
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் -ஏப்ரலில் பொதுத்தேர்தல்! [sunday, 2014-05-04 18:33:30] அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடக் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்துவிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலையும் அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தி பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தை கலைத்ததுடன் ஏப்ரல் இரண்டாம் திகதி ந…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆனந்தசங்கரி - தங்க.முகுந்தன் இடையே வெடித்தது மோதல்! [sunday, 2014-05-04 09:20:36] ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கட்சியின் முக்கியஸ்தரும். நிர்வாக உத்தியோகத்தருமான தங்க. முகுந்தன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனந்தசங்கரி இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் அவர் கட்சியை விட்டுப் போகும்வரை அல்லது அவரது இறுதிக் காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்து கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரிக்கு அக்கட்சியின் முக்கியஸ்தரும், நிர்வாக உத்தியோகத்தருமான தங்க.முகுந்தன் நீ…
-
- 4 replies
- 1.1k views
-
-
அத்தினாபுரத்து அரண்மனையில் நடைபெற்ற சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று, அவமானத்துடன் தலைகுனிந்து செயலற்று நிற்க, அவர்கள் முன்னிலையில் துச்சாதனனால் திரௌபதி துகிலுரியப்பட்டாள். அவளது மானத்தைக் காப்பாற்ற, அங்கே கண்ணனின் கருணை இருந்தது. இன்று, சிங்களக் கயவர்களிடம் தனது கணவனைத் தெரிந்தே தொலைத்துவிட்டு, நீதிக்காகப் போராடும் அனந்தி சசிதரன் சுமந்திரனால் அவமானப்படுத்தப்பட்ட போது, அவரை அங்கே எந்தக் கண்ணனும் காப்பாற்ற முன்வரவில்லை. ஆனாலும், ஒருவேளை கண்ணகிபோல் அனந்தியும் சபதம் ஏற்றிருந்தால், அந்த துச்சாதனனுக்கு நேர்ந்த கதி நிச்சயம் சுமந்திரனுக்கும் ஏற்படக் கூடும். ஆகையால், அனந்தி அமைதி கொள்ள வேண்டும் என்பதே எமது தற்போதைய வேண்டுதலாக உள்ளது. 2009 மே 18 இற்குப் பின்னரான ஐந்து வருட கா…
-
- 1 reply
- 803 views
-