Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 29 AUG, 2024 | 02:30 PM யாழ்ப்பாணத்திலுள்ள 03 மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியை நேற்று புதன்கிழமை (28) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சுலக்ஷனா ஜயவர்தன மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் (SLSEA) தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோரிடம் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜவா வழங்கி வைத்தார். https://www.virakesari.lk/article/192294

  2. 28 AUG, 2024 | 09:52 PM (இராஜதுரை ஹஷான்) சிங்களவர்கள் தொடர்பில் மகாநாயக்கர்கள் அவதானம் செலுத்தாவிடின் சிங்கள இனப்பரம்பலும், பௌத்த சாசனமும் இல்லாதொழியும். ஷரியா சட்டத்தை செயற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்து அதிகார பகிர்வு என்பதை முடிவுக்கு கொண்டு வருவேன். சிங்களவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனசேனா முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை தொடர்பான தெளிவுப்படுத்தல் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித…

  3. யாழ். மாவட்டத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக 1233.94 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது வரவேற்பு உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்துக்கு இரண்டாயிரத்து நானூற்று அறுபத்தேழு வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச பிரிவுகளிலும் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதில் பன்முகப்படுத்தப்ப…

  4. Published By: DIGITAL DESK 7 28 AUG, 2024 | 04:30 PM கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று புதன்கிழமை (28) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (27) தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளதோடு, அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். …

  5. Published By: DIGITAL DESK 7 29 AUG, 2024 | 08:50 AM யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த 7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 1…

  6. Published By: DIGITAL DESK 7 29 AUG, 2024 | 09:59 AM சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வியாழக்கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்த காலப்பகுதியில் இலங்கை அரச படைகளால் புரியப்பட்ட மனிதகுலம் ஏற்காத யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக…

  7. யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதி- நாமல்! தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் 30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி புகையிரத பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது என தெரிவித்தார் எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூ…

  8. Published By: DIGITAL DESK 3 19 AUG, 2024 | 10:28 AM யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை, நெஞ்சு வலிப்பதாக கூறி, கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.…

  9. 28 AUG, 2024 | 05:24 PM நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 9,535 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் (NPTCDD) விசேட வைத்திய நிபுணர் பிரமிதா சாந்தி லதா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகளவான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4,362 ஆகும். இந்நிலையில், மத்திய மாகாணத்திலிருந்து 986 காச நோயாளர்களும், ஊவா மாகாணத்திலிருந்து 407 காச நோயாளர்களும், தென் மாகாணத்திலிருந்து 844 காச நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 751 காச நோயாளர்களும், வடமேல் மாகாணத்திலிருந்து 717 க…

  10. அபிவிருத்தி பணிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தால் நிதி நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றது. …

  11. Published By: VISHNU 21 AUG, 2024 | 02:25 AM கெரவலப்பிட்டிய "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எல்என்ஜி எரிவாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுஹுமான் மரிக்கார் மற்றும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மு…

  12. ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை ஐக்கியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவை கோரி சஜித்பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. வேட்பாளராகிய நீங்கள் கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்கு காரணமான ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை க…

  13. (எம்.நியூட்டன்) தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிரணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பாஅரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது. …

  14. தமிழ்த் தலைமைகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு! உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறைய…

  15. Published By: VISHNU 25 AUG, 2024 | 11:03 PM இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்தார். வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனாதிப…

  16. ”தமிழ் பொது வேட்பாளர்: பொது வாக்கெடுப்பை கோரும் கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும்” மிழர் பொதுக்கட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயத்தில், தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வினை மக்களே தீர்மானிக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு வகையான தீர்வுத்திட்டங்களை நிலைப்பாடாக கொண்டிருக்கலாம். ஆனால் தேசமாக மக்களே தாம் எந்த அரசியல் ஏற்பாட்டக்குள் வாழ வேண்டும் என்பதனை தீர்மானிப்பவர்கள். அந்தவகையில் பொதுவாக்கெடுப்பு எனும் ஜனநாயகப் பொறிமுறையூடாக மக்கள் அதனை தீர்மானிக்கின்ற வகை…

  17. தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா (Vavuniya) - மன்னார் (Mannar) வீதியில் நேற்று (26.08.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வைத்தியர் வண்டியில் இருந்து குதித்த நிலையில், அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் (Nelukkulam) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வண்டியிலிருந்து குதித்த வைத்தியர் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். …

  18. Published By: VISHNU 28 AUG, 2024 | 02:29 AM வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் வண, மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இவ்வாறு ராமன்ய மகா நிகாயவின் மகா நாயக தேரரரைச் சந்தித்தார். அதன்போது வண, வலேபொட குணசிறி தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் அக்குரெல்லே குணவன்ச தேரர…

  19. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 05:08 PM சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார். குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது அருந…

  20. Published By: VISHNU 28 AUG, 2024 | 02:05 AM (நா.தனுஜா) உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுமா எனவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா எனவும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (26) கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இ…

  21. சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால் ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரையான பத்து நாட்களுக்கு இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (28). நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் நண்பகல் 12:11 மணியளவில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும். தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கவும் இந்த சூரிய ஒளியில் தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கவும், வெப்பநிலையின் அதிகரிப்பை ஈடு செய்யும் வகையில் அடிக்கடி ஏராளமான திரவங்களை குடிக்கவும் சுகாதார நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். "சூரிய வெளிச்சம் அதிகமாக வெளிப்படுவது சிலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே அனைவரும் ச…

  22. அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது! மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் சக்திவாய்ந்த அரசியல்வாதியை அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கைது செய்யப்பட்ட சுமனரதன தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397307

  23. போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கைது! போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று டுபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பின் தலைவர் எனக் கருதப்படும் ஷிரான் பாஷிக், இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படுகிறார். இவர் பெப்ரவரி 16 ஆம் திகதி வெள்ளவத்தை வீடமைப்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின்னர் கைது செய்ய…

  24. செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கோரிக்கை! நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரிடமே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை நாட்டில் இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல, உலக வாழ் இந்துக்களும் நல்லூர் திருவிழாவில் கலந்து தங்களது பக்திபூர்வமான வேண்டுதலைச் செய்து வருகின்றார்கள். இந்நிலையில் 25 நாட்களாக விரதம் இருந்து நல்லூர் முருகனை வேண்டி நிற்கும் பக்தர்கள் செப்டெம்பர் 2ஆம் திகதி தீர்த்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.