Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஜே.ஜீ.ஸ்டீபன் -ப. பன்னீர்செல்வம்) தென்னாபிரிக்காவில் யுத்தம் முடிந்த பின்னர் நெல்சன் மண்டேலா உயிரிழப்புக்களாக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? உயிரிழப்புக்காக பாற்சோறு உண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் தெரிவித்தார். அடுத்த மார்ச் மாதம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சர்) மற்றும் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து …

  2. இந்த உலகில் வேறெங்கிலும் காணமுடியாத ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவை நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் பதிவாக்கியிருக்கின்றது. இது வெறும் நாவலாக மட்டும் நின்றுவிடவில்லை. இது ஈழ விடுதலைக்கான படைக்கருவி என்று மறுமலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்லீடர் இணையக் குழுமத்தின் வெளியீடான, நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வைகோ அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. தமிழக மக்கள், ஈழ உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் தொடர்பில், சிற…

  3. தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவத்தினர் தடுக்கின்றதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையினால் நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற 'கோவில் நகரம்' இறுவெட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வரலாற்று சின்னங்கள் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், வலி. வடக்கு பிரதேசத்தில் ஆலயம் ஒன்று அண்மையில் இடிக்கப்பட்டு விட்டது. எமது பண்டைய வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது. அரசு எம்ம…

  4. சுமந்திரன்:- சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவத் தயார் – சுமந்திரன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இலங்கை அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் முனைப்புக்களில் பங்களிப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் மெய்யாகவே முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, தென் ஆபிரிக்க போன்ற நாடுகள் இந்த பிரச்சினையில் உதவி வழங்கத் தயாராக இ…

  5. மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணம் செய்ய இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை. எனவே இலங்கை பஸ்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று நாடாளுமன்றில் கூறினார்.ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார். அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆகையால் 'மகளிர் மட்டும்' ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாக…

    • 6 replies
    • 699 views
  6. பிரித்தானியா:- அதிகளாவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது. சுற்றுலா அல்லது மாணவர் வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 7445 புகலிட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் புகலிடம் கோருவதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1951ம் ஆண்டு உலக புகலிடக் கோரிக்கையாளர் பிரகடனத்திற்கு அமைவாக பிரித்தானியா நடவடிக்கை எடுக்…

  7. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியா வீசா மறுப்பு:- 06 டிசம்பர் 2013 மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியா வீசா மறுப்பு:- அவுஸ்திரேலியா மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு வீசா வழங்க மறுத்துள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இந்த மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வு ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அனுமதி வழங்க முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசா…

  8. வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறையிலிருந்து தென்னாபிரிக்கா மக்களுக்கு விடுதலை தேடித்தந்த – கறுப்பின மக்கள் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சிய – மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலே விடுதலை உணர்வின் முழு வடிவமாக மண்டேலா அவர்கள் விளங்கினார். ஆடுகள், மாடுகள் போல் ஒரு காலத்தில் அடிமைகளாக ஏலத்தில் விலைகூறி விற்கப்பட்ட ஆபிரிக்காவின் கறுப்பின மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மனவுறுதியையும் உருவாக்கி 'எங்களுக்கும் மானமுண்டு, வீரமுண்டு – எங்களுக்கும் நாடு உண்டு, அரசு உண்டு' என வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடச்செய்த ஆயிரம் வலிமை கொண்ட ஓர் பேராற்றலின் குறியீடு மண்டேலா என…

  9. இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் எல்லை மீறி நட்­பு­ற­வினை ஏற்­ப­டுத்­திக்­கொண்டால் மார்ச் மாதம் நடை­பெறும் ஐ.நா. கூட்­டத்தில் சீனாவின் ஆத­ரவை இழக்க வேண்டி நேரிடும் எனவே, நண்பன் யார்? எதி­ரியார்? என்­ப­தனை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்­டு­மென எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் இலங்­கைக்கு எதி­ராக அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­கா­கவே ஐ.நா.வின் அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யாளர் சாலோகா பெயானி இங்கு வந்­துள்ளார் என்றும் அவ்­வி­யக்கம் தெரி­வித்­தது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில், யுத்தக் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்கும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் இலங்­கையை நிறுத்­து­வ­தற…

  10. சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறியுள்ளது. வொசிங்டனின் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார். “அண்மையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த போரை அடுத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலஅவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். ஐ.நாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதற்கு அவசரப்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவரும் கூட, அமெரிக்காவும், ஐ.நாவும் காலஅவகாசம் கொடுக்க …

  11. பிரித்தானியா தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர் கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் (ED Miliband) அவர்களுக்கும் இடையில் சந்திப்பு கடந்த வெள்ளி கிழமை பிரித்தானியா எதிர் கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர் சந்தித்து எதிர் வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய மகாநாடு (CHOGM) தொடர்பாகவும், தொடர்ச்சியாக இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப் பட்டது. இந்த சந்திப்பில் எட் மிலபான்ட் கூறுகையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரனைக்கு மார்ச் மாதம் வரை உலக நாடு…

  12. இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஹேஸ்லி வில்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை கொண்ட விசேட குழுவின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ் கிராமங்களை அண்டிய பகுதிகளில் சிங்கள குடியேற்ற கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான வேலைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கலை இலங்கை அரசு வலுவிழக்கச…

  13. வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறையிலிருந்து தென்னாபிரிக்கா மக்களுக்கு விடுதலை தேடித்தந்த கறுப்பின மக்கள் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சிய மாபெரும் தலைவர்நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலே விடுதலை உணர்வின் முழு வடிவமாக மண்டேலா அவர்கள் விளங்கினார். ஆடுகள்,மாடுகள் போல் ஒரு காலத்தில் அடிமைகளாக ஏலத்தில் விலைகூறி விற்கப்பட்டஆபிரிக்காவின் கறுப்பின மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மனவுறுதியையும்உருவாக்கி “எங்களுக்கும் மானமுண்டு, வீரமுண்டு – எங்களுக்கும் நாடு உண்டு, அரசுஉண்டு” என வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடச்செய்த ஆயிரம் வலிமை கொண்ட ஓர் பேராற்றலின் குறியீடு மண்டேலா எனலாம். ‘வ…

  14. "ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழியின்றி இருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளை இந்தச் சபையில் கூறினால் எம்மீது புலி முத்திரை குத்துகிறீர்கள். புலிகளை அழித்து விட்டதாகக் கூறும் நீங்கள் உங்கள் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இன்னமும் புலிகளின் பெயரைக் கூறுகிறீர்கள். புலிகளின் பெயரைக் கூறாமல், முடிந்தால் வாக்குக் கேட்டுப் பாருங்கள்." இவ்வாறு அரசுக்கு நேற்று முன்தினம் சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். மீண்டும் ஒரு போர் வரும் அல்லது வர வேண்டும் என்பதற்காகவும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவேண்டும் என்பதற்காகவுமா இந்த வரவு - செலவுத்திட்டத்திலும் இராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளீர்கள் என்றும் அவர் கேள…

  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து அக்காணிகளில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களைக் குடியேற்றி இம்மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது என அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் கொக்கிளாய் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், மணலாறு (வெலிஓயா) ஆகிய இடங்களுக்குச் சென்று அப்பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பிலேயே அம்மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் சிவில…

  16. இடம்பெயர்ந்தோர் மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நா விசேட பிரதிநிதி சலோகா பெயானி, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் நிலவும் நிலப் பிரச்சினை குறித்து கேள்வி அவரிடம் எழுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலளித்துள்ள, ரவூப் ஹக்கீம், இலங்கையில், 30 ஆண்டுகால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர், அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். போருக்குப் பின்னரான முன்னேற்றம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், எடுத்துக் கூறியுள்ளார். இதேவேளை, ஐ.நா விசேட பிரதிநிதி பெயானியின் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயம் நேற்றுட…

  17. நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'டானியல் றெக்சியன்; ஈபிடிபியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்சியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன. கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர். கட்சியிலும் வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன். தான் குற்றமற்றவர் என நீதிமன்ற…

  18. வமாகாண தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு அனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கு வாக்களிக்குமாறு நான் எழுதியது தொடர்பாக கோவை நஎன்னை எச்சரித்தார். இந்தியாவில் இருந்துகொண்டு என்ன துணிச்சலில் புலி ஆதரவாளர்களுக்கு சார்பாக எழுதுகிறாய் என அச்சுறுத்தினார். உன்னை இந்தியாவை விட்டு விரட்டி அடிப்பேன் என எச்சரிக்கும் தொனியில் இருந்தது அவரது எச்சரிக்கை.இப்ப இலங்கையை விட்டு நான் விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறேன். பின்னர் 9ம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கூடமொன்றில் ரவீந்திரனுக்குப் பக்கத்தில் கோவை ந இருந்தார். என்னை மிரட்ட வேண்டாமென நட்போடு கோவை நந்தனிடம் கூறினேன். அது அவரைக் கோபமடைய வைத்தது. ரவீந்திரன் புலியும் ஜேவீப்பியும் பயங்கரவாதிகள் அரசு அவர்கள் இருவரையும் ஒடுக்கியது என்கிற தோரணையி…

  19. புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்.. சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்சசைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்? ப.சிதம்பரம், “ …இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், பிரபாகரன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு.. “இலங்கை இறையாண்மை ப…

  20. இலங்கையில் மனித உரிமைகள் விடயம் உட்பட நிலைமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இனிவரும் மாதங்களில் தொடர்ந்து பேசவுள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. ஐக்கிய இராச்சியம் மீண்டும் ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவாகியுள்ளது. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு மார்ச்சில் நடைபெறும். அதற்கு முன் ஐக்கிய இராச்சியம் இலங்கை விடயத்துக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் என பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தபோது கூறினார். பொதுநலவாய மாநாட்டின்போது நாம் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்தை காண விர…

  21. புத்தளத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பாடசாலைக்குச் சொந்தமான தளபாடங்களை பழைய இரும்புக் கடைக்கு விற்பனை செய்த சம்பவத்தில் குறித்த அதிபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் 2013-10-31ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அதிபரை கைது செய்துள்ளனர். கல்பிட்டி பிரதேசத்தில் வேறு ஒரு பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் கொண்டு சென்ற தளபாடங்கள் மீண்டும் அதிபரின் பாடசாலைக்கு கொண்டுவரப்படாது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். …

  22. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை பியாணி இன்றைய தினம் முடித்துக்கொண்டார். இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்கும் முனைப்புக்களில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காணிப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைவாக காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத…

  23. யாழில் கடந்த காலங்களில் ஆயுதமுனையில் நடைபெற்ற கொலை, ஆட்கடத்தல் கப்பம் கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிக்கும் தொடர்புகள் உள்ளதாவெனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. இந்த விசாரணைகளை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும், விசேட குற்றப் புலனாய்வுப் பரிவு பொலிஸாரும் ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யுத்தத்திற்கு முன்னரும் சரி, யுத்தம் முடிவடைந்த பின்னரும் யாழ்.மாவட்டத்தில் ஆயுதங்களின் முனையில் பல்வேறுபட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக …

  24. கட்டுநாயக்க அமந்தலுவ பகுதியில் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பௌத்த தேரர் ஒருவர் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அமந்தலுவே சீலரத்ன என்ற 31 வயதுடைய தேரரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் வசித்துவரும் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய சிறுவர்கள் நால்வரை இந்த சந்தேக நபர் தகாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் புலனாய்வுகளை மேற்கொண்ட பொலிஸார் பிக்கு தங்கியிருந்த வீட்டினை சுற்றிவளைத்து அவரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நீண்ட காலமாக சிறுவர்களுடன் பாலியல் தொடர்பினைக் கொண்டிருந்ததாக ஆரம்பகட்…

  25. கொழும்பு கோட்டை அரசாங்க பஸ் நிலையத்தை அண்டிய (ஒல்கொட் மாவத்தை) பகுதியில் உள்ள கடைத்தொகுகள் தற்போது எரிந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுமார் 15க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துக்கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/359712

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.