ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
படித்ததில் பிடித்தது நான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. அந்தப் படத்தை நான் எடுத்ததிற்கு காரணம் அந்தக்கதை சொல்லப்படவேண்டும் என்பதினால் தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுச்செய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் …
-
- 2 replies
- 643 views
-
-
பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பாரத்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 569 views
-
-
ஆக்கிரமித்த கட்டடங்களை உடன் கையளிக்க வேண்டும் ஆக்கிரமித்த கட்டடங்களை உடன் கையளிக்க வேண்டும் வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை ஆக்கிரமித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஈ.பி.டி.பி. கட்சியினர் அவற்றை உடனடியாக மீளக் கையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய. கட்சிச் செயலர்கள், பொலிஸார், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கு…
-
- 0 replies
- 228 views
-
-
எமது மக்களின் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர், யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சிகள் இடம்பெறுவதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு அரச அதிகாரிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்பு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ; அண்மைக் காலங்களில் இராணுவத்தினர் படைக்கு ஆட்களைத் திரட்டும் பணியில் வடக்கில் பல்வேறு வழிமுறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். படையினர் வீடு வீடாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டு விண்ணப்பப் படிவங்களை வழங்கிய போதும் இளைஞர்க…
-
- 0 replies
- 555 views
-
-
சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை? சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை? புதிய அரசமைப்புத் தொடர்பாக மக்கள் மத்தியில் சுமந்திரன், சம்பந்தன் கூறிவருவது பொய்யா? அல்லது இலங்கை அரசின் ரணில், மைத்திரி கூறி வருவது பொய்யா? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் ஈ.பி.ஆர்.எல். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிக்கை வெளியீடு நே…
-
- 1 reply
- 276 views
-
-
இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பொதியை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா ஒரு பெரிய கடன் வழங்குநராக உள்ளது. இந்நிலையில், கடன் மறுசீரமைப்பில் இலங்கை சீனாவுடன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார். ரொயிட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை சீனாவிற்கு 6.5 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் IFF (Institute of Internati…
-
- 0 replies
- 372 views
-
-
சென்ற ஆண்டு எப்படி எமது விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டதோ, அதே பாணியில் எமது புலம்பெயர் போராட்டமும் ஒருசில பத்துப்பேரின் கையில் ஒப்படைக்கப்பட்டாயிற்று.அந்தப்பழகிய முகங்களைத்தான் எங்கும் காணமுடிகின்றது.ஏன் இந்த நிலை?இப்பொழுது எமக்கென்றொரு நாடில்லை. நேற்று இருந்ததை மீட்கவும் மனமில்லை. அப்படியென்றால், வெளியேற்றப்படும்போது எங்கு செல்வது? இதற்கு முன்னைய உதாரணங்களுண்டு. இது ஊகமல்ல. இது நூற்றுக்கு நூறு உண்மை.யூதர்கள் வெளியேற்றப்படும்போது அவர்களுக்கென்று பாலைவனம் கைகொடுத்தது. பர்மாவிலிருந்து துரத்தப்பட்டபோது கால்நடையாகச் சென்றுசேர இந்தியமண்ணிருந்தது. இடியமீன் உகண்டாவிலிருந்து துரத்தியபோதும் இந்தியமண் இடங்கொடுத்தது. கொழும்பிலிருந்து துரத்தி…
-
- 2 replies
- 1.9k views
-
-
மஹிந்தவின் அழைப்பிற்கு புதுடெல்லி முன்னுமை கொடுக்கவில்லை!? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொழும்பு வருமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், அந்த அழைப்புக்கு புதுடெல்லி முன்னுரிமை கொடுத்துப் பரிசீலிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், முதலாவது வெளிநாட்டுப் பயணம், சிறிலங்காவுக்கானதாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியான போதும், அதுபற்றி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூட இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்லவுள்ளார் நரேந்திர மோடி. இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாகும். அதையடுத்து, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்க…
-
- 1 reply
- 480 views
-
-
வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம் முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தின்போது உத்தியோகபூர்வ பாவனைக்காக ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்த குண்டுத்துளைக்காத வாகனமொன்றை தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் நீண்டகாலம் விசாரணைக்கு உட்பட்டுவந்த வழக்கில் இருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்ந இந்நிலையில், இன்றைய தினம் மீள அவ்வழக…
-
- 0 replies
- 332 views
-
-
தியாக தீபம் திலீபன், குமரப்பா, புலேந்திரன் உட்பட இவ்விரு மாதங்களிலும் மண்ணுக்காய் தம்முயிர் தந்த அனைத்து எம் தேசப்புதல்வர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு நேற்று (3-10-10) மாலை 5.30 மணிக்கு South London Merton மண்டபத்தில் பல எழுச்சி நிகழ்வுகளுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் பொதுச்சுடரினை சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை திருமதி சுபா அவர்கள் ஏற்றிவைத்ததுடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று வணக்கம் செய்தது மிகவும் எழுச்சிபூர்வமாக இருந்ததுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இளையோர் முதல் பெரியவர்கள் வரை கவிதை, பேச்சு பட்டிமன்றம் மற்றும் நடனம் என கலைநிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்விற்கு பிரித்தானியா…
-
- 3 replies
- 711 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வை பாதகாப்பு அமைச்சு ரத்து செய்ததன் பின்னணி என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். ட்ரான்பெரான்ஸி இன்டர்நெசனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் அண்மையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பில் இரண்டு செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு செயலமர்வுகளும் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. சட்டரீதியான ஓர் ஊடகச் செயலமர்வினை பலவந்தமான முறையில் ரத்து செய்வதன் சட்டப் பின்னணி என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இரண்டு செயமலர்வுகளும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமையவே ரத்து செய்யப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எந்த அதி…
-
- 0 replies
- 491 views
-
-
ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் நாள் நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார். இந்தக் குழுவில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் கிரிஹகம, விமானப்படைத் தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் டயஸ், சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் பியால் டி சில்வா, கடலோரக் காவல்படை பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, மற்றும் மேஜர் ஜெனரல் ஜிஎல்ஜே வாதுகே ஆகியோர் இடம்பெ…
-
- 4 replies
- 336 views
-
-
கொக்குளாய்ப் பகுதியிருந்து சுமார் 246 குடும்பங்களைச் சேர்ந்த 954 சிங்களவர்கள் இடம் பெயர்ந்து தமது சொந்தப் பகுதியான நீர்கொழும்புக்குச் சென்றுள்ளதாக நீர்கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே புல்மோட்டைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து முதலில் புல்மோட்டைக்குச் சென்று அங்கிருந்து நீர்கொழும்பும்பைச் சென்றடைந்ததாக தெரியவருகிறது. தமது பாரம்பரிய பிரதேசமான கொக்குளாய் பகுதியிலிருந்து ஒரே இரவில் சிறிலங்கா படைகளால் 46 000 தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தச் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:ம…
-
- 4 replies
- 1.7k views
-
-
இறுதி யுத்தம் உக்கிரமடைந்திருந்த வேளையில் அங்கிருந்து தப்பித்து வந்து படையினரிடம் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்படவில்லை என்பது உண்மையா என்று நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் மனைவி கேள்வி எழுப்பினார். ஓமந்தை திறந்த வெளி மைதானத்தில் 2009 மே மாதம் 17ஆம் திகதி 700 பேர் படையினடம் சரணடைந்தனர். இன்னும் பலர் படையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி ஆகிய இரு இடங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக சாட்சியங்கள…
-
- 0 replies
- 816 views
-
-
சி. சிவஞானசுந்தரம் (சுந்தர், இ. மார்ச் 3, 1996) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினக…
-
- 0 replies
- 734 views
-
-
வடக்கிற்கு என மாகாண சபை ஒன்று இருக்கின்ற போதும் அதனை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது என விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கொள்வனவு திட்டம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சிறுப்பிட்டியில் உள்ள ஜனசக்தி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய அரசின் ஊடாக பார்த்தீனியத்தை ஒழிக்கின்ற நடவடிக்கைக்கு பிரதேச செயலகங்களுக்கு 3மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி வடக்கு மாகாண சபையுட…
-
- 3 replies
- 381 views
-
-
அனல் மின் நிலையத்திற்கு... இரண்டு வருடங்களுக்கு, நிலக்கரி வழங்குகின்றது... ரஷ்ய நிறுவனம். நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில், ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனங்களும் இன்று 19 வரை மேன்முறையீடு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் இறுதி வரை போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 217 views
-
-
இலங்கை அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தில் மாற்றமில்லை - ஆஸி. பிரதமர் அறிவிப்பு! [Tuesday 2014-07-08 19:00] ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக இடைக்கால தடையை விதித்தபோதும், அகதிகளை நாடு கடத்தும் தமது திட்டத்தில் மாற்றம் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் டோனி அபோட் கூறியுள்ளார். தமது அரசாங்கம் சர்வதேச சட்டத்தின்கீழ் தமது கடற்பிரதேசத்திலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும், தம்மை பொறுத்தவரையில் நீண்டகாலமாக நாட்டுக்கு வந்துக்கொண்டிருக்கும் அகதிப் படகுகளை நிறுத்த வேண்டும் என்பதே நோக்கு என்றும் தெரிவித்துள்ளார். 153 பேருடன் சென்றுள்ள படகில் தமது 3 வயது குழந்தையான பாப்ரினா இருப்பதாகவும், அவரை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடை…
-
- 0 replies
- 254 views
-
-
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்ளுக்கு எதிராக வழக்கு By T. SARANYA 25 AUG, 2022 | 07:47 PM (எம்.வை.எம்.சியாம்) அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கமைவாக…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த நோர்வே வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.opprop.no/opprop.php?id=ermedltte கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த டென்மார்க் வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.tamilernessag.underskrifter.dk/
-
- 5 replies
- 1.9k views
-
-
சிலாவத்துறையிலும் சிங்களவர்கள் குடியேற்றம் - ஊர்காவல் படை பாதுகாப்பு அக் 31, 2010 கொண்டைச்சி, சிலாவத்துறை மற்றும் வில்பத்து சரணாலயத்தின் வடபகுதி ஆகிய பிரதேசங்களில் மரமுந்திரிகைச் செய்கை என்ற போர்வையில் சிங்களவர்களை குடியமர்த்தும் பணிகளை சிறீலங்கா அரசு ஆரம்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பிரதேசங்களை தயார்படுத்தும் பணிகள் சிங்கள ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6,000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அத்துமீறிய குடியேற்றத்தால் தமிழ் மக்களின் பெருமளவான நிலங்கள் பறிபோகும் நிலையை அடைந்துள்ளன. முரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடமோ அல்லது சுற்றுச்சுழல் பாதுகாப்பு அமைப்பிடமோ அனுமதிகளை பெறாது ஊர்காவல்படையினர் தன்னிச்சையா…
-
- 0 replies
- 515 views
-
-
-யொஹான் பெரேரா நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் அமையவுள்ள ஜே.வி.பி தலைமையிலான கூட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐ.தே.க மற்றும் வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஜே.வி.பி தலைமையிலான அரசியல் கூட்டை உருவாக்குவதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடைபெறுவதாக ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஹேரத் தெரிவித்தார். இது சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க என்பவற்றுக்கு மாற்றாக அமையும் என அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் …
-
- 0 replies
- 276 views
-
-
இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் அருப் ராஹா, மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய விமானப்படைத் தளபதி, நேற்றுமாலை அலரி மாளிகைக்குச் சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான பயிற்சி, மற்றும் கூட்டு வான் ஒத்திகைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தாம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகள் பயன்மிக்கதாக அமைந்தது என்று, சிறிலங்கா அதிபரிடம், இந்திய விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், இந்தியத் தூதுவர் வைகே. சின்ஹா மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், உள்ளிட்…
-
- 0 replies
- 383 views
-
-
பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகாண விடுதலைப் புலிகள் முன்வருவார்களா? [11 - July - 2006] [Font Size - A - A - A] அரசு கேள்வியெழுப்புகிறது ஐக்கிய இலங்கைக்குள்ளும், ஒற்றையாட்சியின் கீழும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் விடுதலைப் புலிகள் `பிரிக்கப்படாத இலங்கைக்குள்' அதிகாரப் பரவலாக்கல் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவார்களா எனக் கேள்வியெழுப்பும் கொள்கை திட்டமிடல் அமுல்படுத்தும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தினக்குரலுக்கு மேலும் தெரிவிக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
வன்னியிலிருந்து வெளியேறிய பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில்; காணாமல் போயினர் ‐ பெருமளவிலானோர் சாட்சியம்‐GTNசெய்தியாளர் 13 November 10 09:48 am (BST) வன்னி யுத்தத்தில் வன்னியிலிருந்து வெளியேறிய நிலையில் பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வட்டவாகல் மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பிலேயே குறிப்பிடச் சொல்லத்தக்க அளவில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று இடம்பெற்ற பல்வேறு வாக்குமூலங்களிலும் யுவதிகள் காணாமல் போனமை தொடர்பாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந…
-
- 1 reply
- 941 views
-