ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கையிலுள்ள தமிழர் தாயக மக்களின் சுதந்திர தாகம் தணியவில்லை என்பதன் வெளிப்பாடே வடக்குத் தேர்தல் வெற்றியென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் கூறியுள்ளார். ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்தவின் விஜயத்தை மையப்படுத்தி ஐநா முன்றலில் இடம்பெற்ற பொங்கு தமிழ் எழுச்சி ஒன்றுகூடலில் கலந்துகொண்டு பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாயக மக்கள், தாங்கள் தணித்துவமான இனம், தங்களுக்கென்று பாரம்பரிய தாயகமும், சுயநிர்ணய உரிமையும் உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாஷைகளை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பாரிய தார்மீக கடமையை…
-
- 0 replies
- 572 views
-
-
மிகுந்த பரபரப்புக்கு இடையில், இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் நடந்து, தமிழ்தேச கூட்டணி (டி.என்.ஏ.,) பெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விக்னேஷ்வரன், மாகாணத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச அழுத்தத்தோடு நடத்தப்பட்ட, இந்த தேர்தலை கண்காணிக்க இந்தியாவிலிருந்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமை யில், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் உட்பட, 20 பேர் கொண்டகுழு, இலங்கைக்கு சென்றது. இக்குழுவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.தெற்காசிய நா…
-
- 5 replies
- 821 views
-
-
வளரும் நாடுகளின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய அக்கறை என்ற போர்வையிலேயே வளரும் நாடுகளின் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி இதனையிட்டு தான் கவலை கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'இத்தகைய முயற்சிகள் அந்தந்த நாடுகளில் நிரந்தர அரசியல் இருப்பையோ, நல்ல மாற்றங்களுக்கு அடிகோலி உள்ளதா என்று சிந்திக்து பார்க்க வேண்டும் அப்படி நல்ல நிலைமையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்ச…
-
- 2 replies
- 496 views
-
-
மனித உரிமைகள் தொடர்பில், வடக்கு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆணைக்குழுவின் சட்டதுறை செயலாளர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும், தேசிய மனித உரிமை செயற்திட்டத்திற்கு அமையவும் நாள் முழுவதும் பாதுகாப்பு படைத்தரப்பினருக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். http://www.pathivu.com/news/27153/57//d,article_full.aspx
-
- 3 replies
- 471 views
-
-
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று வட மாகாண சபையை கைப்பற்றியுள்ள நிலையில் வடக்கு மாகாண பைத் தேர்தல் குறித்த செய்திகளை பெரும்பாலான தெற்கின் சிங்கள ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன. அதேவேளை தெற்கில் அரசாங்கம் மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாண சபைகளைக் கைப்பற்றிய செய்திகளையே முக்கியப்படுத்திப் பிரசுரித்துள்ளன. நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசாங்கத்திற்கு வெற்றி என்றே சிங்களப் பத்திரிகைகள் வர்ணித்துள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி தொடர்பிலான செய்திகளை பின் பக்கங்களிலும் உட்பக்கங்களிலும் சிறிய அளவிலான இடத்தை வழங்கி சிங்களப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதேவேளை மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் முன்ப…
-
- 1 reply
- 449 views
-
-
இனப்படுகொலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்குள்ளும், தங்களுடைய சுதந்திர தாகம் தணியவில்லை என்பதனை தாயக மக்கள் உலகிற்கு தெட்டத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொங்குதமிழ் எழுச்சி முழக்கமிட்டுள்ளார். தொடங்கியுள்ள ஐ.நாவின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கெடுப்பதற்கு நியூ யோர்க் சென்றுள்ள சிறிலங்கா அரசுத் தலைவரின் வருகையினை மையப்படுத்தி, ஐ.நா முன்றலில் பொங்கு தமிழெனச் சங்கே முழங்கு என்ற முழக்கத்துடன் இடம்பெற்றிருந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் தாயக மக்கள் வெளிப்படுத்திய விடுதலை வேட்கையின் தன்னெழுச்சி தந்த மனவெழுச்சி…
-
- 0 replies
- 411 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக முழுவதிலும் உள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்களை சந்திக்கும் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் போது சிவில், சமூக அமைப்புகளுக்கு எதிரான தடைகள் குறித்து அவர் இவர்களுடன் விவாதித்துள்ளார். சிவில், சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் தடைகள், அந்த அமைப்புகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் திகதி நடைபெற்ற இந்த விவாதத்தில் கலந்து கொள்ள இலங்கையின் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவிற்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்திருந்தது. …
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன, தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன , ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப் பொதுச்சபை உரையில் குறிப்பிட்டதை ஏற்கமுடியாது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். 'நல்லிணக்கம் ஏற்பட்டால், அரசு பழியிலிருந்து தப்பலாம்'-சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், இலங்கையில் போர் முடிந்து நான்காண்டுகளாகியும், தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார். அரசுக்கு, இந்தப் போரின் போது பல்வேறு நாடுகள் உதவின, போரின் போதும், போருக்குப…
-
- 0 replies
- 355 views
-
-
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை காலக்கெடு விதித்துள்ளார். எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக மனித உரிமை பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். குறித்த காலக்கெடுவிற்குள் இலங்கை அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறினால் சர்வதேச சமூகம் சுயாதீன விசாரணைகளை நடத்தி தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் சாட்டுக்களுக்கு காத்திரமான முறையில் விசாரணை நடத்தி தீர்வு காணும் எந்தவொரு புதிய முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் எடுத்ததாகத் தோன்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்ட தனிப்பட்ட நபர்கள…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழர் பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இராணுவத்தினால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பதற்கு புதிதாக தெரிவாகியுள்ள வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது…
-
- 3 replies
- 681 views
-
-
பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். "பாதுகாப்பு, மனித உரிமை என்ற போர்வையில் தலையீடு கூடாது" மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா மன்றத்தில் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச ஒப்புதலுடன், இந்தக் கடமைகளை ஆற்றவென்று ஐ.நா மன்றம் பணிக்கப்பட்டிருக்கும் சூழலில், இது போல சில நாடுகள் சர்வதேச அரங்கில் “போலிஸ்கார்” வேலை பார்ப்பது தேவையற்றது என்றார். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இது போன்ற காரணங்களைக் காட்டி, சில நாடுகள் தலையிட்டு வருவது கவலையளிக்கும் விஷயம் என்றார் மஹிந்த ராஜபக்ஷ. வேறு விதமான கலாசாரங்கள…
-
- 4 replies
- 566 views
-
-
வடமாகாண சபையின் முதலமைச்சராக சி.வி விக்னேஷ்வரனை நியமிப்பதற்கு வடமாகண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திர சிறியின் அனுமதி வழங்கிய பின்னரே புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுவார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண சபையின் முதலமைச்சராக சி.வி விக்னேஷ்வரனை நியமிக்குமாறு கோரி வடமாகண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திர சிறிக்கு கூட்டமைப்பினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதற்கு வடமாகாண ஆளுநர் அனுமதி வழங்கிய பின்னரே அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரெஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். http://tamilworldtoday.com/archives/34922
-
- 0 replies
- 489 views
-
-
வடமாகாண ஆளுநரையும் வடக்கிலுள்ள படையினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ. வடமாகாணசபையைக்கைப் பற்றியதால் முழுநாடும் தமக்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு நினைத்தால் முடிந்தால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சிரிபாயவில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; இனவாதஇ பிரிவினைவாத அரசியல் பயணத்துக்கு நாட்டை மீண்டும் கொண்டுசெல்ல எம்மால் இடமளிக்க முடியாது. வடக்கில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை தேசிய ஒற…
-
- 3 replies
- 601 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கும் குறைவான இளம் பெண்கள் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளது. சிறுவர்களையும் சிறுமிகளையும் இயக்கங்களும் இராணுவ துணைக்குழுக்களும் பிடித்து செல்வதற்கு அஞ்சி சிறுவயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து கொடுப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக இராணுவ துணைக்குழுக்களின் பிள்ளைபிடி மற்றும் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் மேற்கொண்ட பிள்ளைபிடி பிரச்சினைகளின் பலன்களை இப்போது மட்டக்களப்பு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த ஆண்டு குடும்ப சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புள்ளி விபரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கும் குறைவான பெண்கள் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளமை கண்டற…
-
- 0 replies
- 416 views
-
-
24 செப்டம்பர் 2013 "இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அரசியல்ரீதியில் ஜனநாயகரீதியில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகப் போராட வேண்டியநிலையில் உள்ளனர்" 2010ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் நான் நேரடி அரசியலில் முதன் முதலே பங்குபற்றினேன். பின்னர் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டேன. எனினும் அப் பதவிக்குரிய கடமைகளை சுயமாக என்னால் மேற்கொள்ளமுடியாமல் இருந்ததை காலப்போக்கில் உணர்ந்து கொண்டேன். எனக்குப் பல வரையறைகள் காணப்பட்டன. இந்நிலையில் தலைவர் பதவியில் தொடர்ந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை உணர்ந்து கொண்டேன். இங்கு துவிச்சக்கரவண்டியை நிறுத்தவேண்டாம் என்று ஒரு அறிவித்தல் பலகை நாட்டப் பட்டிருக்கும். ஆனால் அதற்கு அருகிலேயே…
-
- 6 replies
- 744 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அடுத்த மாத முற்பகுதியில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட மாகாண சபை தேர்தல் நடைபெற்று இரண்டு வார காலப் பகுதிக்குள் அவர் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடப்படத்தக்கது. ஒக்டோபர் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளிலேயே அவர் இலங்கை வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரவனை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். http://www.pathivu.com/news/27138/57//d,article_full.aspx
-
- 2 replies
- 522 views
-
-
போனஸ் ஆசனங்கள் நியமனச் சந்திப்பு: கட்சித் தலைவர்களிடையே இழுபறி! சந்திப்பு நிறைவு ! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி வடமாகாண சபைக்கான போனஸ் இடங்களுக்கான ஆட்களை நியமித்தல் மற்றும் மாகாண சபைக்கான அமைச்சர்களை நியமித்தல் சம்பந்தமாக பல மணி நேரம் கலந்துரையாடிய போதிலும் ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலையில் கட்சிகளின் தலைவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள். வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதுடன் இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந் நிலையில் குறிப்டபிட்ட போனஸ் ஆசனங்களை வழங்குவது சம்பந்தமாக இன்று கலந்துரையாடப்பட்ட போதிலும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தலைமைகளின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முற்பட முடியவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணி யாழ்.மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தெரிவித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல்லை நட்டார் அமைச்சர் டக்ளஸ். அமைச்சர் டலஸ் அழகப் பெரும, வடக்கு மாகாண ஆளுநர் ஜி. ஏ.சந்திரசிறி ஆகியோரும் நூற்றுக்கணக்கான மக்களும் சாட்சியாக இருந்து அமைச்சர் டக்ளஸ் ஆரோக்கியமாக இருந்ததைக் காணுகையில், அமைச்சர் டக்ளஸ் உடல் நலக்குறைவால் நீதிமன்றுக்கு வரமுடிய வில்லை என்றும் அவரது சட்டத்தரணி அப்துல் மஜீத் நீதி மன்றில் சமர்ப்பணம் செய்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ராஜதந்திரிகளின் ஆவணங்களில் அம…
-
- 1 reply
- 609 views
-
-
“யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழைப் போன்று அதே அமைப்பில் பத்திரிகை பிரசுரிக்கப்பட்டமை மிக நுட்பமாக அரங்கேற்றப்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவம்” என ‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். தேர்தல் நிறைவுற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஈடுபட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது “தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் என்றுமில்லாதவாறு அதிகளவில் இடம்பெற்றுள்ளன. மிக நுட்பமாக உள ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சட்டவிரோதத் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தி சசிதரன் மீதான தாக்குதலும் நுட்பமான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் வாக்காளர்கள்…
-
- 0 replies
- 526 views
-
-
2006ஆம் ஆண்டு திருமலையில் 5மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12அதிரடிப்படையினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். குறிந்த சந்தேக நபர்கள் கடந்த திங்கட்கிழமை திருகோணமலை நீதிவான் நீதிமற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள் இதன்போது இவர்கள் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 7 ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 29 ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்னிலையில் குறித்த குற்றவாளி சந்தேக நபர்களான படையினரால் தொடுத்த பிணைண கோரிய மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் நாள் வரை திருகோணமலை மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது. http://www.sanka…
-
- 0 replies
- 279 views
-
-
புத்தளம் பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது – புத்தளம் மாவட்ட தோ்தல்லை மீண்டும் நடத்துமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஜயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளும் அதரவாளர்களும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 7 மணிக்க போராட்டம் ஆரம்பித்துள்ளது. பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவளை தோ்தலை மீண்டும் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் தோ்தல்கள் திணைக்களம் தோ்தலை நடத்தும் என ஆணையாளா் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு கூறியுள்ளார்…
-
- 0 replies
- 249 views
-
-
மீண்டும் தமிழ் மக்களையும் மாகாண சபையையும் பொறிக்குள் வீழ்த்த மாட்டாதா? ( ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் மாவீரர் துயிலும் இல்லம் குறித்த ஊடகவியலாளரின் கேளிவிக்கு சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் வழங்கிய பதில் இணைக்கப்பட்டு உள்ளது.) மாவீரர் கல்லறை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அங்கீகாரம் வழங்கியதாக தமிழ் ஊடகங்கள் ஒருசிலவற்றில் செய்திகள் வெளிவந்துள்ளன. அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களும் வெளியாகி உள்ளன. உண்மையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு தம் இன்னுயிர் நீந்த அனைத்து போராளிகளின் நினைவுகளும் பேணப்பட வேண்டியவை. அவர்களின் தியாகங்கள் தமிழ் மக்களி…
-
- 0 replies
- 548 views
-
-
தேனிசை செல்லப்பாவின் உருக்கமான பாடல்
-
- 3 replies
- 411 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா ஆகியோர் நியூயோர்க்கில் வரவேற்பின்போது இணைந்து எடுத்துக்கொண்ட படம். (படம்: வெள்ளை மாளிகை) http://tamil.dailymirror.lk/--main/83644-2013-09-25-05-30-15.html சர்வதேசக்கொலைகாரனும் உள்ளூர்கொலைகாரனும் .... என்று தலைப்பு இட்டிருக்கலாம்
-
- 0 replies
- 211 views
-
-
வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வடக்கு மாகணத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டிது. அவற்றில் ஒரு சில துயிலும் இல்லங்…
-
- 18 replies
- 4.4k views
- 1 follower
-