ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினருமே சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ளது அதனால் அது பற்றி பேசுவது பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்பட்டால் புலிகளக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் அரசாங்த்திற்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்துமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளினால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என…
-
- 7 replies
- 455 views
-
-
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும், தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்தார் சீமான். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, அவரது தம்பிகளுள் ஒருவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். 2007-ம் ஆண்டு முதல் இலங்கையில் தொடங்கிய இன அழிப்பு போ…
-
- 126 replies
- 18k views
-
-
முள்ளிவாய்க்காலுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிகள் முடிந்து விட்டதாகவும் அவர் தற்போது இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி விட்டு, அலுவலகத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல. நினைவில் வைத்து கொள்ளுங்கள் விளையாட்டு சரிப்பட்டு வராது என்றும் இது இலங்கை என்பதை நினைவில் வைத்து கொள்ளுமாறும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருந்தார். இதன் மூலம் தமிழ்…
-
- 1 reply
- 336 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், நடிகையுமான கீதா குமாரசிங்கவை பார்க்கும் போது திருமணம் செய்ய ஆவலாக உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அன்று தான் அவரை திருமணம் செய்திருந்தால் அவர் கீதார குமாரசிங்க இல்லை, கீதா சில்வா ஆகியிருப்பார் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7060
-
- 6 replies
- 650 views
-
-
யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/--main/82483-2013-09-14-11-03-31.html
-
- 19 replies
- 876 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு முதலாவது சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ் நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டதினைத் தொடர்ந்து முத்திரைச் சந்தியில் வீதிச்சமிஞ்ஞை விளக்குகள் நேற்று மாலை பொருத்தப்பட்டுள்ளன. யாழ்.நகரத்திற்குள் இருந்தும் ஏ – 9 வீதிக்கு செல்லும் வாகனங்கள், வெளியிடங்களிலிருந்து யாழ்.நகரத்திற்கு நுழையும் வாகனங்கள் முத்திரைச் சந்தியினூடகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2…
-
- 11 replies
- 1.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வடக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் டொலர்கள், ஸ்ரெலிங் பவுண்ட்கள் மற்றும் யூரோக்களுக்காக வடக்கு தமிழ் மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் மட்டுமே சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களை வடக்கில் பார்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள தங்களது சொகுசு வீடுகளுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் திரும்பி விடுவார்கள் என தெரிவித்துள்ளார். தங்கள…
-
- 6 replies
- 487 views
-
-
"வடக்கின் வசந்தத்தில்இருந்து விலகுவோம்" தம்பி பசில்– தேர்தலில் ஆதரித்தால் அபிவிருத்தி அண்ணன் மகிந்த 14 செப்டம்பர் 2013 “இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க தரப்பை ஆதரித்து வாக்களித்தால் வடக்கிற்காகன உதவிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் இரட்டிப்பாக செய்வேன்” என கிளிநொச்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.. வடக்கின் கிளிநொச்சிக்கான புகையிரத சேவையை ஆரம்பித்த ஜனாதிபதி, ஓமந்தையிலிருந்து முதலாவது பயணியாக கிளிநொச்சியைச் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரினால் அழிவுக்குள்ளான பிரதேசத்தின் தேவைகள் அனைத்தையும் மந்திர வித்தைக்காரரைப் போல, தன்னால் உடனடியாகப் பூ…
-
- 1 reply
- 556 views
-
-
முள்ளிவாய்க்காலுடன் கோத்தபாயவிற்கு வேலை முடிவுற்றது - படையை முடக்கி அலுவலகத்திற்குள் இருக்கட்டும் 14 செப்டம்பர் 2013 தம்பர அமில தேரர் : முள்ளிவாய்க்காலுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிகள் முடிந்து விட்டதாகவும் அவர் தற்போது இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி விட்டு, அலுவலகத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல. நினைவில் வைத்து கொள்ளுங…
-
- 1 reply
- 732 views
-
-
"வெற்றிலைக்கு வாக்களித்தால் வீடும் வீதியும் தருவோம்" கிளிநொச்சியில் தேர்தல் வியாபாரம் களைகட்டியது 14 செப்டம்பர் 2013 குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் அரசாங்கத்திற்கு நீங்கள் வாக்களித்தால்தான் எதுவும் கிடைக்கும். உங்கள் நலனுக்காகவே ஜனாபதி மகிந்த ராஜபக்ச ஏ-9 பாதையை திருத்தி யாழ் தேவி ரயிலை ஓட வைத்திருக்கிறார். எனவே வெற்றிலைக்கு நீங்கள் வாக்களித்தால்தான் உங்களுக்கு வீடும் வீதிகளும் திருத்தித் தரப்படும் என்று ஸ்ரீலங்கா சுகந்திக்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தற்காலிக வீடுகளில் உள்ள மக்களைப் பார்த்து இவ்வாறான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றார். அரசாங்கம் மாகாண சபையை கைப்பற்றா விட்டால் கூட்டமைப்பின் மாகாண …
-
- 0 replies
- 465 views
-
-
சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லையென்று அமைச்சர் டியூ குணசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்தது வரவேற்கத்தக்கதென்று தெரிவித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தியாவையும் சங்கடப்பட வைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல. மாறாக அது ஒரு அரசியல் அறிக்கை. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ள அரசியல் அறிக்கை இந்திய அரசாங்கத்தையும் …
-
- 4 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு மாட்டத்தில் கொக்குத் தொடுவாய் பகுதிப் பிரதேசவாசி ஒருவர் 28 வருடங்களின் பின்னர் அப்பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டார். தனது அன்றாட பிழைப்பிற்காக முல்லை கொக்கிளாய் வீதியில் கடை ஒன்றை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு சுகந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அவரது கடைக்கு முன்பாக வெற்றிலை சின்னத்தை வரைந்து வேட்பாளர் இலக்கத்தையும் வரைந்தனர். இதனை காலையில் கடை திறக்கும் பொழுதே அந்தப் பிரதேசவாசி அவதானித்தார். அன்று மாலை மதுபோதையில் சென்ற அந்தப் பிரதேசவாசி வெற்றிலைச் சின்னம் வரையப்பட்ட இடத்தை பிக்கான் கொண்டு கிளறி எறிந்தார். காபற்றால் ஆன அந்த வீதியில் வெற்றிலை வரையப்பட்ட இடம் கிளறி எடுக்கப்பட்டது. அந்தப் பிரதேசவாசியை காவல்துறையினர் கை…
-
- 2 replies
- 408 views
-
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அமைத்துள்ள புதிய தளத்துக்கு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் 'எஸ்எல்என்எஸ் கோத்தாபய' தளத்தை, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே திறந்து வைத்துள்ளார். இந்தத் தளத்தை ஆரம்பித்து வைக்கும் உத்தரவை, இதன் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கொமாண்டர் உடகமவிடம், சிறிலங்கா கடற்படைத் தளபதி, கையளித்தார். 2011 ஜனவரி 13ம் நாள் முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை, முகாம் ஒன்றை நிறுவியது. பின்னர், இந்த முகாம், பிராந்திய பாதுகாப்பு நிலையமாக 2012 செப்ரெம்பர் 17ம் நாள் தரமுயர்த்தப்பட்டது. தற்போது, செம்மலை, நாயாறு, சிலாவத்தை பகுதிகளில…
-
- 1 reply
- 378 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது புகைப்படம் தாங்கிய துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக்கூறி கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 40 பேர் வரையினில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டமைப்பின் இறுதிக் கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் குடாநாடு முழுவதும் தொடர் பிரச்சாரங்களை செய்யவென கூட்டமைப்பின் வேட்பாளர்களான சுகிர்தன் மற்றும் அனந்தியினது ஆதரவாளர்கள் 40 பேர் வரை வாகனமொன்றில் சுற்றிச்சுழன்று வருகின்றனர். அக்குழுவினர் இன்று கொடிகாமம் நகரப்பகுதியினில் பிரச்சாரங்களினில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களது வாகனமும் பொலிஸார…
-
- 1 reply
- 301 views
-
-
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்தால் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இராஜதந்திர மட்டத்தில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் உறுதிப்படுத்தியதாக லக்பிம தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 4வது பிரிவில் உள்ள விடயங்களை நிறைவேற்றுதல், ஊடக சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாத்தல்,…
-
- 2 replies
- 596 views
-
-
கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் சிறைப்பிடிப்பு! கொடிகாமத்தினில்..! யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40பேர் சிறீலங்கா பொலிஸாரினாலும், படையினராலும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.வடமராட்சி கிழக்கில் தமிழ்தே சிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்… சுகிர்தன் என்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் இன்று காலை 11மணியளவில் கொடிகாமம் சந்தியில் நின்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருக்கின்றனர். இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸாரும், படையினரும் துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த ஆதரவாளர்களை சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர…
-
- 0 replies
- 673 views
-
-
-சி.சிவகருணாகரன்,எஸ்.ஜெகநாதன்,சுமித்தி தங்கராசா கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார். கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.…
-
- 17 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படங்களை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ''மாவீரர்'' என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றை இவர்கள் பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் அதனை கூட்டமைப்புத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. அரசாங்கத்தரப்பினரின் திட்டமிட்ட சம்பவமாக இது இருக்கக்கூடும் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்பின்னணியில் தமிழ்…
-
- 4 replies
- 1.3k views
-
-
கொழும்பு நாரஹேன்பிட்டிய காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படும் படை வீரரொருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் இந்த சம்பவம் நாரஹேன்பிட்டியவில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்டப்டுள்ளது கைது செய்யப்பட்டவர் படை வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றுபவர் என்று தெரிவித்த நாரஹேன்பிட்ட காவல்துறையினர் சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜனை நாரஹேன்பிட்ட காவல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர். http://www.sankathi24.com/news/33164/64//d,fullart.aspx
-
- 0 replies
- 406 views
-
-
யாழ்.வடமராட்சிப் பகுதியில் சிறிலங்கா ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த முற்பட்ட பொது மக்கள் சிறிலங்கா இராணுவத்தினை வைத்து அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, யாழ்.வடமராட்சிப் பகுதியில் அபிவிருத்திப் பணிகள் பலவற்றினைச் செய்து தருவதாக கூறித்திரியும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிராஸ் என்பவருடைய ஆதரவாளர்கள் இன்று நண்பகல் குடத்தணைப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த பொது மக்கள் அதனை தடுக்க முற்பட்டுள்ளனர். பொது மக்களையும் மீறி அங்கு வந்த ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 286 views
-
-
தென்பகுதியில் சிறீலங்கா படை சீருடையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த படையில் இருந்து தப்பி சென்ற நபரொருவர் மோதரை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோதரையை வசிப்பிடமாக குறித்த நபரிடமிருந்து 2400 மில்லிகிராம் ஹெரோயினையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.சந்தேகநபர் நீண்ட நாட்களாக மொரடுவ மோதரை பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். http://www.sankathi24.com/news/33163/64//d,fullart.aspx
-
- 0 replies
- 408 views
-
-
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் பின்புற பகுதியில் வசிக்கும் சு.ரவிவர்மன் (14வயது) என்ற மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/33165/64//d,fullart.aspx
-
- 0 replies
- 446 views
-
-
வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய குண்டர்கள் சிங்களத்தில் கத்திக்கொண்டு வந்து எங்களைத் தாக்கினார்கள் என்று நேற்று பிற்பகல் நாவற்குழியில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கள் வாகனத்திற்கு குறுக்கே தங்கள் வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினர். இதனால் எங்கள் வாகனம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அந்த வெள்ளை வாகனத்தில் வந்த பத்து வரையான குண்டர்கள் இரும்புக் கம்பிகளால் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் செய்வதறியாது ஓடினோம் என்றும் அவர்கள் சாவகச்சேரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறிலங்கா படையினரே உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தனங்கிளப்பில் பிரச்சாரம் நிறைவடைந்து நாவற்குழ…
-
- 0 replies
- 411 views
-
-
Thirumurugan Gandhi இலங்கை - இந்தியாவின் ஏகபோக அடிமை தனது சேவையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். மிகவும் கடுமையான கண்டனத்தினை அவருக்கு பதிவு செய்ய விரும்புகிறேன். புலம்பெயர் தமிழீழ குடிமக்கள் இவரது அயோக்கியத்தனமான பேச்சிற்கு எதிர்வினையாற்றுவார்கள் என நம்புகிறேன். இவரது "தி இந்து" நாளிதழுக்கான இன்றய பேட்டியில் ” தமிழகத்தில் எங்களது பிரச்சனை பந்துவிளையாட்டினைப்போன்று கையாளப்படுகிறது. பிரிவினைதான் தீர்வு என தமிழக அரசியல் செயல்பாட்டாளார்களால் பேசப்படும் பொழுது எங்களக்கு பிரச்சனை வருகிறது. எங்களுக்குள் (சிங்களவர்- தமிழர்) பிரச்சனை வரும் பின் தீரும், கனவன் மனைவிக்குள் வருவதைப் போல , அதற்காக அடுத்த வீட்டுக்காரன் (தமிழகத் தமிழர்கள்) விவாகரத்தினைப் பற்றி பேசுவதை ஏற்க முடியா…
-
- 2 replies
- 863 views
-