ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்? [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:13 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார். இவ்வாறு கொழும்பை தனமாகக்கொண்ட The Island ஆங்கில ஊடகத்தில் Gnana Moonesinghe எழுதியுள்ள விவரண கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், மக்களின் நீண்ட காலக் காத்திருப்பி…
-
- 0 replies
- 736 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் தீனியாவள பாலித ஹெமி கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமாகவே இராணுவ ஆட்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்துகின்றது. அரசு தனது பிழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்திய இக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் இருவரின் உயிர் சூறையாடப்பட்டுள்ளன. ஜனநாயக ஆ…
-
- 16 replies
- 1.5k views
-
-
வன்னியில் சிங்கள ராணுவம், மற்றும் மஹிந்த அரசு, அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் விதி முறைகளை மீறி பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவகின்றனர். தேர்தல் விதி முறைகளை கடைப்பிடித்து பிரச்சாரம் செய்தால் ஒரு டசின் மக்கள் கூட அரச ஆதரவு பிரச்சார கூட்டங்களுக்கு வரமாட்டார்கள். ஆகவே பாடசாலை நிகழ்ச்சிகள், நிவாரணம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பிரச்சார களமாக மாற்றுகின்றனர் அரச தரப்பினர். கண்டாவளை புளியம்பொக்கணையில் சமூர்த்தி வங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று குரல்கள் எழுப்பியுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தமிழ் விழா என்ற பெயரில் மேற்படி …
-
- 2 replies
- 486 views
-
-
நவுறுவில் அண்மையில் நடந்த கலவரத்தில் தஞ்சக் கோரிக்கையாளர் தங்குமிடம் தீக்கிரையாகியது. ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது. ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் த…
-
- 24 replies
- 1.3k views
-
-
முப்படையைச் சேர்ந்தவர்களே இன்று அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் அதிகளவில் பொலிஸாரும் படையினருமே தொடர்புபட்டிருக்கின்றனர்.கொள்ளைக் கூட்டத்தில் முப்படையைச் சேர்ந்த ஒருவரேனும் இருக்கின்றார். கொலை செய்தால் தூதுவர் பதவி கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.குடிக்க சுத்தமான நீரைக் கேட்டால் அரசாங்கம் அவர்களை தேசத்துரோகிகள் என்கிறது. குற்றவாளிகளே இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர். எங்களது கடவுச் சீட்டில் ஜனநாயகக் குடியரசு என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்று நாட்டில் இருக்கின்றதா?குடிநீர் கேட்டவர்கள் க…
-
- 0 replies
- 804 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மையில் சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி தனது கட்சிப் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை விற்பனையை செய்யும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி ஈடுபட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படக்கூடாது என்று சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள ஈ.பி.டி.பி கட்சி தமது பிரச்சாரப் பத்திரிகையை மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர்களைக் கொண்டு எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்தச் செயற்பாடானது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடாகவே கருதப்பட வேண்டும். அரசில் அங்கம் வகிக்கும் தேசவிரோத கட்சியாகிய ஈ.பி.டி.பி இந்…
-
- 6 replies
- 1.6k views
-
-
இன்னுமொரு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தப்ப பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணமும் தேர்தல் திருவிழாவை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந் நிலையிலேயே மாகாண சபைகளின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. அடிப்படையில் மாகாண சபைகளின் உருவாக்கமானது இனங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை. மாறாக பிரதேச அடிப்படையிலேயே அமைக்கப்படடது. ஆங்கிலேயர் உருவாக்கிய மாகாணங்களில் எல்லைகளே மாகாண சபைகளின் நில எல்லைகளாக கொள்ளப்பட்டது. இதனால் எந்த மாகாணத்திலும் மலையக மக்கள் செறிவாக இல்லை. அவர்கள் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் சிதறி வாழ்கின்றனர். அரசியல் யாப்பின்படி மாகாண சபைகளுக்கு சுயாதீனமான இருப்பு கிடையாது. மத்திய அரச…
-
- 0 replies
- 637 views
-
-
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக இவ்வாறு ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பி;ட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சியாமை கொலை செய்த குற்றத்திற்காக, ரவிந்துவின் தந்தை வாஸ் குணவர்தனவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ரவிந்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாஸ் குணவர்தனவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94976…
-
- 0 replies
- 643 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இம்மாதம் சிறிலங்கா வரவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் சில விபரங்களை முன்னரே அறிவிக்க வேண்டுமென அவரை சிறிலங்கா அரசு கோரவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சே இவ்வாறான விபரங்களைப் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நவநீதன் பிள்ளையின் சிறிலங்கா விஜயத்தின்போது அவர் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் அரச சார்பற்ற அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவர் பயணிக்கவுள்ள பிரதேசங்கள், அவருடன் வருகை தருவோர் பெயர் மற்றும் விபரங்கள் போன்றனவற்றை அவரது வருகைக்கு முன்னரே வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அறிவிக்க வேண்டுமென …
-
- 1 reply
- 525 views
-
-
தாய்நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரித்து வேறுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த வெளிநாட்டு சக்திகள் உள்ளிட்ட பல பிரிவினர் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பளை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என அனேகர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்த தயார் என்றாலும், நாட்டின் நிலையான சமாதானம், சுதந்திரம் என்பவற்றை கருத்திற் கொண்டு அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளவும் தயார் என பிரதமர் க…
-
- 0 replies
- 407 views
-
-
வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானியா, இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை சிறிலங்கா அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவானதும், வெளிப்படையானதுமான விசாரணைகளை நடத்துமாறும் அவர் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். தனது எண்ணங்கள்,…
-
- 0 replies
- 257 views
-
-
பாணமையிலிருந்து 5 மைல் பயணித்ததும் சந்நியாசிமலை வருகிறது. வள்ளியம்மனை மணந்து கதிர்காமத்தில் வாழ்ந்த முருகனைத் திருப்பி அழைப்பதற்காக கொங்கோட்டியார் சந்நியாசியார் கலாயாணகிரி ஆகிய மூவரையும் தெய்வானையம்மன் கதிர்காமத்திற்கு அனுப்பினார் என்றும் பாணமையிலிருந்து வந்த சந்நியாசியார் மேற்படி இடத்தில் அடங்கினார் என்றும் கொங்கோட்டியர் புத்தலையிலிருந்து 4 மைல்களுக்கு அப்பாலுள்ள மடத்தில் அடங்கினார்.கல்யாணகிரியார் மட்டும் கதிர்காமம் சென்றார் என்பது வரலாறு . உன்னரசுக்கிரி என்பது திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தைமலைக்கும் பாலர்நகைநாடு (பாணமை) என்ற பண்டைய துறைமுகத்திற்குமிடையே இருந்திருக்கின்றது. அதனாலும் வேறு சான்றுகளாலும் தற்காலம் சன்னாசிமலை என்ற பெயருடன் வழங்கப்படுகின்றது என மட்டக்க…
-
- 3 replies
- 787 views
-
-
நாம் கொடுத்த சவப்பெட்டி: ஈபிடிபி – சாவு வீட்டில் கட்சி மோதல் Comment கிளிநொச்சியில் சாவு வீடு ஒன்றில் நாம் வாங்கிக் கொடுத்த சவப்பெட்டி என்று ஈபிடிபியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது மைத்துனர் கடந்த சில நாட்களின் முன்பு காலமானார். இச்செய்தியை அறிந்த ஈ.பிடி.பியைச் சேர்ந்தவர்கள் சவப்பெட்டி வாங்கிக் கொடுத்துள்ளனர். இறந்தவர் தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு மாமன் என்ற பொழுதும் அவர் தமது கட்சி ஆதரவாளர் என்றும் அதனால் தாம் அவருக்கு சவப்பெட்டி வாங்கிக் கொடுத்தாகவும் தெரிவித்தனர். சாவு வீட்டுக்கு வந்த ஈபிடிபியினர் காலமாகியவரின் உ…
-
- 1 reply
- 989 views
-
-
நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி ஏலவே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எமது மண்ணையும் மக்களையும் நாமே ஆழ்பவர்களாக ஆணைபெறுவோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளருமான வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, எத்தகைய சலுகைகளைக் கண்டும் எமது மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை பலமுறை நிரூபித்த பின்பும், அரசாங்கம் பல ஏமாற்று மோசடி வேலைகளில் எமது மக்களை பலிகடாவாக்கி வாக்கினை பெறலாம் என எண்ணுகின்றது. பலதசாப்த இனவிடுதலை போராட்டம் அதனால் பல இலட்சம் உயிர்கள் அழிக்கப்பட்டும் அனாதைகள், அங்கவீனர்கள், விதவைகளாக ஆக்…
-
- 0 replies
- 397 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் புதிய தங்க நீர்த்துறை கூறும் செய்தி உள்ளூரைப் பொறுத்தவரை பெரிதும் உற்றுநோக்கலுக்கு உரியதல்ல. ஆனால் பூகோள அரசியலைப் பொறுத்தவரை இது அதிகமான உற்றுநோக்கலுக்கும் முக்கியத்துவத்துக்கும் உரியது. தமிழகத்தின் சேது சமுத்திரத் திட்டத்தை மையப்படுத்தி பாக்கு நீரிணையின் அக்கரை நீண்ட காலமாகவே இழுபறிப்படும் நிலையில், கொழும்பும் பெய்ஜிங்கும் இந்த விடயத்தில் கச்சிதமாக சுதாகரித்திருப்பதன் மேலும் ஒரு அறிகுறியாக கொழும்பில் தங்க நீர்த்துறை உருவாகிவிட்டது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26787
-
- 0 replies
- 477 views
-
-
திருகோணமலை மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் நினைவாக, பரிசின் புறநகரான கிளிச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு கல்லின் முன்பாக வணக்க நிகழ்வு நடைபெற்றது. 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதியன்று சிறீலங்காப் படையினரால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிச்சியில் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநகர சபைகளின் துணை நகரபிதாக்களான வினீமீ. Mme. Mireille Gitton, M. Serge Setterahmanen, M. Fawzi ben Abdallah ஆகியோரும், இனப்பாகுபாட்டுக்கு எதிரான அமைப்பின் தலைவர் வி. M. Cristien அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர். இதே…
-
- 4 replies
- 407 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் இலங்கை அரசியலமைப்பில் காணப்படும் ஓட்டைகள் ஊடாக தமிழ் ஈழம் அமைப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைந்தமையால் அவர் நல்ல நீதிபதியாக இருந்திருக்க முடியாது. நீதிபதியாக இருந்தவர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வாழவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள் என்றும் விமர்வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு வெளிநாடுகளில் சென்று குடியேறாமல் அரசியலுக்குள் நுழையும் நீதிபதி உண்மையானவராக இருக்க முடியாது என கருத்து தெரிவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கையில் இந்த வருடத்தின் முதலாவது அரையாண்டில் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பாலியல் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 41 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், இந்த வருடத்தின் குறித்த காலப் பகுதியில் 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற உடலுறவே, 96 வீதம் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக அமைந்துள்ளதெனவும் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இலங்கையில் 1,739 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகி உள்ளதாகவும், எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://goldtamil.c…
-
- 1 reply
- 468 views
-
-
இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா 2013-08-06 13:40:39 தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையை நிச்சயம் ஒரு நட்பு நாடாக ஏற்க முடியாது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன்.இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக விரித்துள்ள வலையில் சிறீலங்கா விழுந்து விடக்கூடாது, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி.விக்கினேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளியாவார். ஆகவே பிரிவினைவாத அதிகாரங்கள் ஓரம் கட்டப்படும்வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தியும் மேலும் 17 கோரிக்கைகளை முன்வைத்தும் சிறீலங்காவின் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் இந்தியத் தூதரகம் முன்பாக கடந்த வாரம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தியாவிற்கு அமெரிக்காவை விடச் சிறீலங்காவின் நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து பலனில்லை. எவ்வாறாயினும் இந்தியாவின் பிரிவினைவாத தேவைகளை இலங்கையில…
-
- 1 reply
- 509 views
-
-
13 ஆவது திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து ஆராயும் வகையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் மூன்றாவது அமர்வு இடம்பெறவுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26766
-
- 0 replies
- 358 views
-
-
அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசுக்கும் ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் உருவசிலைகளை எரித்தும், கண்டித்தும், ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தும் டக்ளஸ், அங்கஜன் போன்ற தமிழின துரோகிகளால் மக்களை ஏமாற்றி, கபடத்தனமான முறையில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இராணுவத்தினரின் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக த…
-
- 10 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில், சுயாட்சியை பெறுவது, போர் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது, வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை நீக்குவது, வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு இடைக்கால நிர்வாகத்தை பெறுவது உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த நான்கு கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கவில்லை என்றால் ஆதரவு வழங்க போவதில்லை எனவும் பேரவை கூறியுள்ளது. இந்த நான்கு கோரிக்கைகளில் வடக்கு, கிழக்கில் இருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேற்படி விடயங்களுக்கு இணங்கவில்லை என்றால், தமிழ்…
-
- 4 replies
- 688 views
-
-
முஸ்லிம் மக்கள், பொது பலசேனா அமைப்பினை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு தமிழ் ஊடகங்களே காரணம் என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று பொது பலசேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காபை பற்றி நாங்கள் பேசும் போது தமிழ் ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன. நாங்கள் தீவிரவாதத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=89434&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 654 views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தாது வேறு நாடு ஒன்றில் நடத்துமாறு எந்த உறுப்பு நாடும் கோரிக்கை விடுக்கவில்லை என அந்த அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையுடன் மோதல்களை ஏற்படுத்தி கொள்வதற்கு பதிலாக இணைந்து செயற்படுவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா கூட இலங்கைக்கு வெளியில் வேறு நாட்டில் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கவில்லை எனவும் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94929/langua…
-
- 3 replies
- 401 views
-