ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி -கூட்டமைப்பு கண்டனம் [saturday, 2013-08-03 10:14:19] வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்கு கம்பஹா வெலிவேரியாவில் நடைபெற்ற சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கம்பஹா வெலிவேரிய பகுதியில் நேற்றுமுன்தினம் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிங்கள இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், இரு ஊடகவியலாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மிலேச்சத்தன தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித…
-
- 1 reply
- 322 views
-
-
மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமைதியான வழியில் மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதனை தடுக்கக் கூடாது என ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தூதரகம் சுட்டிக்காட்யுள்ளது. வெலிவேரிய சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தூதரகம் அறிவித்துள்ளது. வெலிவேரிய பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் போரணியொன்று வன்முறையாக வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditor…
-
- 11 replies
- 587 views
-
-
கிளிநொச்சியில் ஒரே நாளில் இரண்டு குடும்பஸ்தர்கள் துக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரண்டு தற்கொலைகளும் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அத்துடன் உதயநகர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆனந்தபுரத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதனைத் தாங்க முடியாது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போருக்குப் பின்னர் வன்னிப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைகள் மக்க…
-
- 0 replies
- 311 views
-
-
மஹிந்த ஆட்சியில் குடி நீருக்காக போரடிய தனது இனத்தைச்சேர்ந்த பாடசாலை மாணவனை கொன்ற மஹிந்தரின் போர்க்குற்ற படை, தமது குற்றத்தினை மறைக்க இப்போது அந்த பாடசாலை மாணவன் பெற்றோல் குண்டு வைத்திருந்ததாக கூறுகின்றது. வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவனின் படம் இதுதான்.. கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கிகா ஜயவர்தன அடையாளங் காட்டியுள்ளார். குறித்த இளைஞனின் பெயர் அகில தினேஷ் ஜயவர்தன. 17 வயதான அவர் யக்கல சந்ரஜோதி வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்விகற்று வந்தவர். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் தனது தாயாரை சந்திப்பதற்காக அங்கு சென்றிருகொண்டிந்ததாகவும் அதன் ப…
-
- 0 replies
- 472 views
-
-
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம் காங்கிரஸை, கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ள முனைகின்றது – 03 ஆகஸ்ட் 2013 அருண் தம்பிமுத்து குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம் காங்கிரஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள முனைவதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவியை நாடி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் சூழ்நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 0 replies
- 413 views
-
-
போருக்குப் பின்னர் வன்னியில் தற்கொலைகள் அதிகரிப்பு - கிளிநொச்சியில் ஒரே நாளில் இரண்டு தற்கொலைகள் 03 ஆகஸ்ட் 2013 குளோபல் தமிழ் செய்தியாளர் கிளிநொச்சியில் ஒரே நாளில் இரண்டு குடும்பஸ்தர்கள் துக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரண்டு தற்கொலைகளும் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அத்துடன் உதயநகர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆனந்தபுரத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதனைத் தாங்க முடியாது தூக…
-
- 0 replies
- 303 views
-
-
விடுதலைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர் ஒருவரை, இந்தியா ரகசியமாக இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் வைத்து 35 வயதாகும் சதீஷ் குமார் என்பவரை இந்திய கிரைம் பிரிவு பொலிசார் கைதுசெய்திருந்தார்கள். அவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து நைரோபி என்னும் நாட்டிற்கு பயணிக்கவிருந்த வேளையே அவரை இந்தியப் பொலிசார் கைதுசெய்தார்கள். சதீஷ் குமார் இந்தியாவில் எக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும் இலங்கையில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பி, இந்தியா சென்றிருந்தார். அவர் இலங்கைக்குச் செல்லும் பட்சத்தில், சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் மற்றும் கொலைசெய்யப்படலாம் என அவரது வக்கீல் வாதாடியிருந்தார். இவ…
-
- 2 replies
- 690 views
-
-
திடீர் அழைப்பையடுத்து கோப்பாய் கலிவியியல் கல்லூரிக்கு மக்கள் விரைவு யாழ் அச்செழு இராணுவமுகாம் முற்றாக மூடப்பட்டு அப்பிரதேசத்தின் காணிகள் மற்றும் குடியிருப்புகளை மக்களிடம் கையளிக்க உள்ளதாக படைத்தரப்பினர் பிரதேச மக்களிடம் அறிவித்துள்ளனர். இதற்கமைய இன்று காலை கோப்பாய் கல்வியியல் கல்லூரிக்கு வருமாறு அச்செழு பிரதேச மக்களுக்கு விடுத்த அழைப்பின் பேரில் பலர் அங்கு சென்றிருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் சற்றுமுன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே முகாம் அமைந்திருந்த சுமார் 3 கிலோ மீற்றர் பரப்பில் பாதுகாப்பிற்காக எழுப்பப்பட்டு இருந்த மண் அணைகள் மற்றும் தாம் அமைத்த முகாம் கட்டடங்கள் என்பவற்றை அகற்றும் பணியில் படையினர் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் …
-
- 5 replies
- 696 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் 218 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=26176
-
- 1 reply
- 474 views
-
-
ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக இலங்கையின் வடபகுதி காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=26115
-
- 2 replies
- 530 views
-
-
கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் மக்களின் ஆர்ப்பாட்டமொன்றைக் கலைப்பதற்கு ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் களறமிக்கப்பட்டனர். மேலும், http://tamilworldtoday.com/?p=25918
-
- 6 replies
- 568 views
-
-
மொறட்டுவை, இரத்மலானை பகுதிகளை ஊடறுத்து இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. காற்றினால், ஏகொட உயன ரயில் நிலையத்தின் கூரைக்கும் சேதமேற்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சன்ன ஜயதிலக்க கூறியுள்ளார். காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பிடும் நடவடிக்கைகளில் தமது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. http://www.sankathi24.com/news/32006/64//d,fullart.aspx
-
- 2 replies
- 431 views
-
-
நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26081
-
- 0 replies
- 483 views
-
-
வெலிவேரியவில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு இன்று விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜயவர்தன, ஜோன் அமரதுங்க வெலிவேரிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்ததுடன், அங்குள்ள விஹாரைக்கு சென்று உண்ணாவிரதமிருந்த தேரரையும் சந்தித்து கலந்துரையாடுவதை படங்களில் காணலாம் (படங்கள்: குசான் பத்திராஜா) http://tamil.dailymirror.lk/--main/77453-2013-08-02-14-43-53.html
-
- 5 replies
- 668 views
-
-
மன்னார் பேசாலையில் சமூர்த்தி பணம் பெறச்சென்ற தலைமன்னார் பியர் கிராம மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை குழவி கொட்டியதில் காயமடைந்த இரண்டு சமூர்த்தி பயணாளிகள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சமூர்த்தி பயணாளிகளுக்காண சமூர்த்தி கொடுப்பணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தலைமன்னார் பியர் கிராம மக்கள் தமது மாதாந்த சமூர்த்தி கொடுப்பணவை பெற்றுக்கொள்ள இன்று காலை பேசாலை சமூர்தி வங்கிக்கு வருகை தந்தனர். இதன் போது மக்களுக்கு சமூர்த்தி பணம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த போது மது போதையில் அவ்விடத்திடத்திற்கு வந்த ஒருவர் மரத்தில் இருந்த குழவிக்கூட்டின் மீது கல்லால் எறிந்துள்ளார். இதன் போது மரத்தில் இருந்…
-
- 0 replies
- 599 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினப் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். இந்த வைபவம் யாழ். அரியாலையில் நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பல வருடங்களிற்கப் பின்னர் இந்த வீடுகளை பொது மக்களிடம் கையளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் மேற்கொள்ளவில்லை. யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ். நகரில் முக்கிய இடங்களில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற…
-
- 3 replies
- 415 views
-
-
-எஸ்.கே.பிரசாத் ,சுமித்தி தங்கராசா யாழ் மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த இடங்களில் 112 இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையம் அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு முந்திய காலத்தில்; 43 ஆயிரம் படையினர் யாழ் மாவட்டத்தில நிலைகொண்டிருந்தனர் இவர்கள் யாழ் மாவட்டத்தில் 188 இடங்களில் இருந்தனர். இதில் 112 இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாகவும் இன்னும் 76 இடங்களில் மட்டுமே இராணுவத்தினர் உள்ளனர் என்று பாதுகாப்பு படைத்தலையகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு படைத்தலையகம் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk…
-
- 3 replies
- 419 views
-
-
கதிர்காமர் மகனுக்கும் காணி தேவையாம் – சுவீகரிப்புக்கு எதிராக வழக்கு [ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 08:47 GMT ] சிறிலங்காப் படையினருக்காக வலிகாமம் வடக்கில் உள்ள தமது பாரம்பரிய காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகனும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் கிறிஸ்ரியன் கதிர்காமர், சமர்ப்பித்துள்ள இந்த மனுவில், சிறிலங்காவின் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள மாவிட்டபுரம், ஆழ்வார் மாலையடியில் உள்ள தமது காணியை சுவீகரிப்ப…
-
- 8 replies
- 710 views
-
-
அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் அநாவசிய தலையீடுகளால் கல்வித்துறை இன்று பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதொன்றாகிவிட்டது. எனவே, கல்வித்துறைக்குள் அரசியல் புகுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வித்துறைக்குள் ஒழுக்கம் பேணப்படாமைக்கு அரசியல் வாதிகளே முன்னுதாரணமாக திகழ்கின்றனர். அதேபோன்று ஆசியாவின் ஆச்சரியம் என்று கூறும்போது அது பாரிய கட்டிடங்களை அமைப்பதால் நிறைவேறி விடப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, சுதந்திரக் கல்வித்துறையானது கூட்டுத்தாபனமாகவும் நிறுவனமாகவும் பின்னர் அரசியல் மயமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் கல்வித்துறை இன்று பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. அரசியல்வாதிகளால் ஆசிரிய…
-
- 1 reply
- 357 views
-
-
அரசாங்கம் வடக்கில் வெற்றிபெற்றுவிட்டது - டிலான் பெரேரா! [Friday, 2013-08-02 09:22:26] வட மாகாண தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் மூலம் அரசாங்கம் வட மாகாண தேர்தலில் இப்போதே வெற்றி பெற்று விட்டது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். வட மாகாண தேர்தலை நடத்தக் கூடாது என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகவும் இருந்தது. இந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில் தென் பகுதியிலுள்ள சில அடிப்படைவாத குழுக்களும் வடக்கில் தேர்தலை நடத்தாதே என கோஷங்களை எழுப்பின. இன்னமும் வட மாகாணத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்தாது என்ற எண்ணத்திலேயே சிலர் இருக்கின்றனர். அரசாங்கம் மிகவும் வெற்றிகரமாகத் தேர்தலை நடத்துவதுடன் வட மாகாணத்தில் வெ…
-
- 1 reply
- 514 views
-
-
இராணுவத்தினர், வெலிவேரிய மனித வேட்டைக்கு முன்னர், ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ஊடகவியலாளர் சிலர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவர்களது புகைப்படக் கருவிகள் மற்றும் கெமராக்களை சேதப்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாடத்தின் போது ஊடகவியலாளர்கள் சிலரும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், காயமடைந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினால் சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாக வெலிவேரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சிக்கியுள்ளதுடன் இராணுவம் அங்கிருந்து வெளியேறும் வரை அந்த வீட்டில் ஒளிந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வெலிவேரிய ரத்துபஸ்வல ப…
-
- 8 replies
- 612 views
-
-
பிரதான வீதியில் இருந்து கலைந்துசெல்லுமாறு முன்னதாக இராணுவம், அறிவித்த போதிலும் அதனை மறுத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26026
-
- 2 replies
- 551 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ருவான் விஜயரட்ன ஆகியோர் இன்று முற்பகல் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினர். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொதுமக்களையும் பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர். அங்கு நின்ற மக்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க குழவினர் வன்னி இறுதிக்…
-
- 3 replies
- 499 views
-
-
‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தம் நடைபெற்று முடிந்த காலத்திலிருந்தே இலங்கையின் நிலைமைகளை பார்வையிட எடுத்த அனைத்து முயற்சிகளும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன’ என மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார். ‘உண்மை நிலையை மூடி மறைக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தம் நடைபெற்று முடிந்த காலத்திலிருந்தே இலங்கையின் நிலைமைகளை பார்வையிட எடுத்த அனைத்து முயற்சிகளும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன. நான்கு வருடங்கள் கடந்த பின்னர் இம்மாதம் இற…
-
- 5 replies
- 1.1k views
-
-
தெற்கிலும் இராணுவ அடக்குமுறை ஆரம்பம்!துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!15 மேற்பட்டோர் காயம்!!! வியாழக்கிழமை, ஆவணி 1, 2013 3:35 pm பெலுமஹரவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் படுகாயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில், 11 பேர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும்இ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல…
-
- 10 replies
- 1k views
-