ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
தமிழினப் படுகொலைக்கு நீதி தமிழர் நாடு முழுவதும் இருசக்கிர ஊர்திப் பரப்புரையை இன்று சனிக் கிழமை (22.06.2013) காலை முதல் மாணவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே . இலங்கை உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து விடு. இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்து . இலங்கை ராணுவத்திற்கு பயிற்சியும் ஆயுதங்களையும் வழங்காதே . இலங்கை மீது பொருளாதார தடை விதி . இலங்கையில் தமிழர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்து . தனி ஈழத்தை அங்கீகரி போன்ற கோரிக்கைகள் முன் வைத்து இம்மாணவர்கள் நாடு முழுவதும் பரப்புரை செய்ய உள்ளனர். சுயநலமில்லாத இம்மாணவர்களை ஊக்குவிப்பது நம் கடமை. சென்னையில் உள்ளவர்கள் நாளை காலை 7 மணிக்கு மாணவர்களை வழியனுப்ப கடற்கரை காந்தி சிலை அருகே வாருங்கள் . …
-
- 0 replies
- 417 views
-
-
வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மன்னார் மாவட்டத்தில் சொந்தமாக நட்சத்திர அந்தஸ்திலான உல்லாச விடுதியொன்றை அமைக்க தயாராகி வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=18055
-
- 1 reply
- 610 views
-
-
இலங்கையில் முதல் முறையாக பொழுதுபோக்கிற்கு செயற்கையான குட்டித்தீவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு,.. http://tamilworldtoday.com/?p=18048
-
- 1 reply
- 443 views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பாரக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பயணம் செய்த குழுவில் அடங்கிய சுரேஷ் பிரமச்சந்திரன் நாடு திரும்பிய பொழுதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் ஏற்பாடான 13ஆவது அரசியலமைப்பை மாற்றவோ நீக்கவோ இந்திய அனுமதிக்காதென இந்தியா உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிராந்தியம் என்ற சரத்து அடங்கிய இலங்கை இந…
-
- 7 replies
- 586 views
-
-
இலங்கையில் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனை அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் உட்பட 13 பேர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. 2008 ஜூன் மாதம் 7ஆம் தேதி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தலாஹேனவில் கல்வாரி என்ற கத்தோலிக்க வழிபாட்டிடத்தில் தாக்குதல் நடத்தி, தங்க மாலை ஒன்றையும் கைத்தொலைபேசி ஒன்றையும் கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர். விசாரணையின்போது கல்வாரி கத்தோலிக்க வழிபாட்டிடத்தின் போதகர் சாட்சியமளிக்கையில், வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தன்னை மிரட்டி வந்த ஞானசார தேரர் தலைமையிலான …
-
- 0 replies
- 549 views
-
-
சிங்கள இளைஞர் வழக்கு தாக்கலால் மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை: பிரதி சொலிஸிட்டர் [Friday, 2013-06-21 07:50:17] மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதா…
-
- 3 replies
- 574 views
-
-
13இல் மாற்றமின்றி வடக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் பொதுபல சேனாவைக் கலைப்பதாகக் கூறவேண்டும். அப்படியெனில் 13ஆவது திருத்தத்துடன் வடக்குத் தேர்தல் நடத்தப்படுமாயின் நான் அரசியலில் இருந்து விலகத் தாயர் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொதுபல சேனாவிற்கு சவால் விடுத்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18037
-
- 5 replies
- 934 views
-
-
மட்டக்களப்பு, மீள்குடியேற்ற முஸ்லிம் கிராமமான உறுகாமத்தில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் நேற்றிரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தையே இனம்தெரியாத சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு நடைபெற்ற மேற்படி சம்பவத்தில் கடையும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு முச்சக்கர வண்டியும், சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் உறுகாமத்தில் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட…
-
- 0 replies
- 467 views
-
-
யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என தெரிவித்த யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் இளைஞர்கள் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலத்திற்குள் 16 வயதிற்குட்பட்ட 11 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின…
-
- 0 replies
- 466 views
-
-
அடுத்தத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ, இந்த ஆதரவோ கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறது. எனவே 13ஆவது அரசமைப்பை வலுவிழக்கச் செய்வதோ, அல்லது இரத்துச் செய்வதோ தற்போதையே செய்ய முயற்சிக்க வேண்டும். எனினும். இதுவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சவாலான விடயம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18034
-
- 1 reply
- 584 views
-
-
மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் வழங்குவதில்லை என்பதை இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திற்கு பல தடவைகள் அறிவித்த போதும், இந்திய அரசாங்கம் இதுவரை அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், தனது இந்த தீர்மானத்தை இந்திய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, தெரியப்படுத்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கடந்த காலங்களில் புதுடெல்லி சென்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இதனை அறிவித்திருந்தனர் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93153/…
-
- 1 reply
- 666 views
-
-
மக்களுக்கு ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்த முன்னர் அதிகார போதையிலுள்ள ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கும், அவரது சகாக்களுக்குமே ஒழுக்கக் கோவைத் தேவைப்படுவதாக என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18003
-
- 0 replies
- 343 views
-
-
"வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள்; எனவே தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்று இலங்கை அரசு நினைக்கின்றது. ஆனால், போர் முடிவடைந்த பின்னர்தான் தமிழ் மக்கள் ஏராளம் பிரச்சினைகளை எதிர்நோக்குவதை நாம் அவதானிக்கின்றோம். இந்நிலையில், தீர்வுக்கு அடித்தளமாகவுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு ஒழிக்க விடமாட்டோம். அதற்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுப்போம்.'' இவ்வாறு புதுடில்லி சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவிடம் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் நேற்று "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இந்திய மத்திய அரசுடன் பேச்சு நடத்த…
-
- 0 replies
- 635 views
-
-
பிரபாகரனை சூரியக்கடவுளாகவே தமிழ் மக்கள் அடையாளப்படுத்தி புகழ்ந்து போற்றினார்கள் என ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17965
-
- 0 replies
- 742 views
-
-
தாய் மண்ணுக்காக தோற்றுப்போன தங்கப்பர்ச்சன் – தமிழ் அவுஸ்திரேலியன்க்கு விசேட செவ்வி [News Published On: Wed, Jun 19th, 2013 at 8:35 pm] ஈழத்தில் தமிழர்களின் அவலங்களையும், விடுதலையின் தேவையையும் வெளிப்படுத்த 2002 இல் நான் ஈழத்திற்கு நேரில் சென்று மக்களின் அவலங்களையும் போரின் பாதிப்பையும் அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களைச் சந்திதேன் பலவகையான செய்திகளைத் திரட்டி திரைக்கதை ஒன்றை உருவாக்கினேன். அதற்கு ”தாய் மண்” என்று தலைப்பிட்டு திரைப்படமாக்க பலரையும் அணுகினேன். யாரும் முன்வரவில்லை அதில் தோற்றும் போனேன் என்கிறார் தங்கபர்ச்சன்… அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு வருகைதந்த வேளையில் உங்களுக்காக எங்களுடன் கதைத்த வேளையில்….. ஈழத்தமிழர்கள் …
-
- 0 replies
- 542 views
-
-
-
- 0 replies
- 287 views
-
-
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. வீடியோ http://tamilworldtoday.com/?p=17914
-
- 1 reply
- 821 views
-
-
பிரிட்டனில் உள்ள கார்டிப்பில் நடந்து வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Champions Trophy 2013) இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகின்றது. போட்டியின் இறுதி ஓவரில் புலிக்கொடியோடு தமிழர்கள் மைதானத்தில் புகுந்து வலம் வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் புலிகொடியோடு மைதானத்தில் வலம் வந்த வீரர்கள் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ப்பட்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16180:pulikkotikal-tamils-%E2%80%8B%E2%80%8Bwith-the-law-on-the-grounds-of-london-images&catid=36:tamilnadu&Itemid=102
-
- 6 replies
- 1.7k views
-
-
வட மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச் செய்துள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நேற்றுமாலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தின் முக்கியமான அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள திட்டங்கள், தன்னை திடுக்கிடச் செய்துள்ளதாகவும், முன்மொழியப்பட்டு…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.க்களை மாவை சேனாதிராஜா , சுரேஜ் பிரேமச்சந்திரன் , செல்வன் அடைக்கலநாதன் , எம்.ஏ. சுமந்திரன் , பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். http://www.thinakkural.lk/article.php?local/g9mhttprtg836751fda174c317155zkkss60f4ea5d21de87c4c9a792ivjsc
-
- 12 replies
- 1.5k views
-
-
கார்டிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஜூன், 2013 - 15:36 ஜிஎம்டி சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தம…
-
- 0 replies
- 926 views
-
-
தற்போதைய செய்தி விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்த சிங்களவர்களை அவர்களின் சிங்கக்கொடிகளை சுருட்டி வைக்குமாறு லண்டன் வேல்ஸ் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.. அதற்கேற்ப சிங்களவர் சிங்கக்கொடியின்றி தமிழர்களிடமிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்ல மறைத்து கொண்டு செல்கின்றனர். அதே நேரத்தில் புலிக்கொடிகள் பறக்க சிங்கக்கொடிகளை சிங்களவர் கண்கள் முனாலேயே எரித்துத் தள்ளுகின்றனர் தமிழர்..எரியும் கொடியை அணைக்கும் முயற்சியில் சிங்களக் கொடிகளைக் காலால் மிதிக்கின்றனர் பிரித்தானிய போலீஸ்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16182:cinkakkoti-lion-in-london-before-combustion-movies&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அரங்கிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கும், கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடவந்த சிங்களர்வகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/?p=17185
-
- 40 replies
- 4.1k views
-
-
13ஆவது அரசமைப்பு இரத்துச் செய்யப்படவோ, வலுவிழக்கச் செய்யப்படவோ மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=17689
-
- 2 replies
- 513 views
-
-
இலங்கையின் மின்சார தேவைகளில் 90 சதவீதமானவை தற்சமயம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானிய பூலோகவியல் எரிசக்தி கொள்கைகள் தொடர்பான நிறுவனப்பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மின்சார தேவைகளில் 90 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனினும் மிகுதியாக இருக்கின்ற வீதமும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு நாடெங்கிலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். அத்துடன் தற்போது 24 மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்காத ஒரே நாடாக இலங்கை உள்…
-
- 4 replies
- 2.4k views
-