Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 08 தமிழ் கட்சிகள் கலந்தும் தமிழ் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷனம் நாச்சியப்பன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கை இந்திய ஒப்பந்ததிற்கு உயிரூட்டுவது இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அதேவேளை இந்த மாத நடு பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினகர் இந்தியாவிற்கு சென்று இந்திய ஆட்சியாளர்களை http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92571/language/ta-IN/article.aspx

  2. ஹலால் பிரிவினைவாதத்தை தடுத்தன் காரணமாக கூட்டுத்தாபன கட்டளைச் சட்டத்தின் ஊடாக பிரிவினைவாதத்தை தூண்ட முஸ்லிம் அடிப்படைவாதம் முயற்சித்து வருவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஏற்கனவே ரில்வானியா அரபு கல்லூரி உள்ளிட்ட இரண்டு அரபு கல்லூரிகள் தொடர்பான கட்டளைச் சட்டங்கள் தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நஹூபிக் இந்த சட்டமூலங்களை சபையில் சமர்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/a…

  3. இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்தி நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் சில ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன அதேவேளை,ஞாயிறு பத்திரிகைகளில் 90 வீதமானவை அரசாங்கத்துக்கு எதிரானதாகவே செயற்பட்டு வருவாக ஆளும் கட்சி எம்.பி.யான சஜின் வாஸ் குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது பத்திரிகை பேரவைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சஜின்வாஸ் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறாகும். அவ்வாறானதொரு நிலைமை இங்கு இருக்கவில்லை என்பதைக் கூறிக் க…

  4. எல்பிட்டிய, குருந்துகஹாதலா என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்குள் இரவு 8.00 மணியளவில் அத்துமீறிப் புகுந்த நால்வர் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி அந்த வீட்டிலுள்ள தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட தாய் 65 வயதானவர் எனவும் மகள் 21 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் கருவா உரித்துக் கொண்டிருந்த போது இரவு 8.00 மணியளவில் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நால்வர் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி கட்டிப் போட்டுவிட்டு தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தாயும் மகளும் எல்பிட்டிய வ…

  5. 13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது வேறு திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். சௌசிறிபாயவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது அரசாங்கம் வடக்குத் தேர்தலை நடத்துமானால் அது பிரிவினைவாதிகளின் ஈழக் கனவை நனவாக்கும். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் தேவையில்லாத திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. எனவே ஜனாதிபதி உடனடியாக…

  6. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்திய எம்.பிக்கள் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள, இந்தியாவுக்கான கவுன்ஸ்லேட் ஜெனரல் வி.மகாலிங்கத்தின் வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழரசு கட்சியின் சார்பில் இரு பிரதிநிதகளும், ஈ.பி,ஆர்.எல்.எப் சார்பில் ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஆகியோ…

  7. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை நல்லூருக்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு நல்லூர் கந்தசாமி கோயிலிலுக்கு சென்ற இந்த குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழியாடுகளில் கலந்துகொண்டனர். இவர்களுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் மற்றும் யாழ் மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 11.00 மணிக்கு பின்னர்; கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், கொழும்பில் 4 நாள்கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் …

  8. -பாருக் தாஜுதீன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதுங்கவின் வலது கண் முழுமையாக செயலிழந்திருந்த போதிலும் அவருடைய மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று கண் வைத்திய நிபுணர் சரித் பொன்சேகா சாட்சியமளித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது கொழும்பு மாநகசபை மண்டப வளாகத்தில் 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதல் தொடர்பிலான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவாசம் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் ரகுபதி சர்மா,வேலாயுதன் உதயராசா மற்றும் சந்திரா சர்மா ஆகியோர்…

  9. சுவிஸ் கிறபுண்டன் மாநிலத்தில் வசிக்கும் நண்பர்களின் முயற்சியால் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது .அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை(hamilton bonaduz swiss) ஒன்றின்உள்ள சிற்றுண்டி ஒன்றில் வேலை செய்த பணத்தை எமது உறவுகளுக்கு மகா தேவா ஆச்சிரம் ஊடாக கொடுக்கப்பட்டுள்ளது .மின் வசதி இல்லாத பாடசாலைக்கு சூரியகதிர் வீசசினால் பெறப்படும் மின்வசதிக்கொடுத்து அம்மாணவர்கள் படிப்பற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளனஇவர்களுக்கு 2,722,41/=ரூபாய் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பணியில் கடமை புரிந்த அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் இப்பணி தொடர்சியாக எம்மக்களை சென்றடையும் . (படங்கள் இணைப்பு ) http://www.eelamwebsite.co…

    • 9 replies
    • 903 views
  10. மாகாண சபைக்குட்பட்ட அதிகாரங்களை நீக்கி வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் அரச பணியாளர்கள் மற்றும் மக்களிடம் அச்சுறுத்தி கையெழுத்தினை பெற்றுக்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14618

    • 0 replies
    • 285 views
  11. சீனாவுடனான சிறிலங்காவின் பாதுகாப்பு உடன்படிக்கை விவகாரம்! - கடும் அதிர்ச்சியில் இந்தியா!! சீனாவுக்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான உயர்மட்டக் குழு அந்நாட்டுடன் பாதுகாப்பு விவகாரம் சம்பந்தமாக இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்தியிருப்பதானது இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான உயர்மட்டக் குழு தமது சீன விஜயத்தின் போது வர்த்தக ஒத்துழைப்பு, நீரியல் பாதுகாப்பு, தொழில்நுட்பம், வீதி அபிவிருத்தி என பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தாலும், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பிலான புரிந்துணர்வு …

    • 9 replies
    • 949 views
  12. ஹக்கீம் அவசரமாக நாடு திரும்பினார்! அவரச சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில்! அமைச்சரவையிலும் பல முக்கிய தீர்மானங்கள்? மேலதிக தகவல்களுக்கு, http://tamilworldtoday.com/?p=14551

    • 0 replies
    • 484 views
  13. பழ.நெடுமாறன் மருத்துவமனையில் அனுமதி! FILE தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அண்மை காலமாக உடல்நிலைக்கு அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், திடீரென இன்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1306/05/1130605035_1.htm

  14. 13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் செப்டெம்பருக்குள் திருத்தப்படும் 13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் செப்டெம்பர் மாதத்திற்குள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களித்தின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது 13 ஆவது திருத்தமும் வடக்க…

    • 0 replies
    • 521 views
  15. பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வசிக்கிறார் - அருந்திக்க பெனாண்டோ காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெனாண்டோ தெரிவித்துள்ளார். பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் இது பிரான்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (05ம் திகதி) இடம்பெற்ற விவாதமொன்றின் போதே அருந்திக்க பெனாண்டோ இத்தகவலை தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 390 views
  16. 13ம் திருத்தத்திற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை 13ம் திருத்தத்தை திருத்துவதற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை அல்லது பெரும்பான்மை மாகாணசபைகளின் ஒப்புதல்கள் இருந்தால் போதும் என்ற புதிய திருத்த சட்டமூல யோசனையை அமைச்சரவையில் அரசாங்கம் நாளை சமர்பிக்க போகின்றது. இது காணி, பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெறுவது என்ற திட்டத்தைவிட மிகவும் மோசமானது. ஏனென்றால் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மட்டும் அல்ல, அவற்றைவிட இனிமேல் எஞ்சியுள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள எந்த ஒரு மாகாணசபைகளிடம் இருந்தும் வெறும் பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் மீளப்பெறுவதற்கான அதிகாரத்தை இந்த புதிய யோசனை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குகின்றது. எனவே 13ம் திருத்தத்தை…

    • 0 replies
    • 399 views
  17. பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுக்கு மாறான பாதையில் இலங்கை செல்கிறது! பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதற்கு மாறான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கனடா விசேட பிரதிநிதி ஹியுஜ் சிகல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என கனேடிய பிரதமர் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த மாநாட்டில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி யார் பங்கேற்பது என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் சு…

    • 0 replies
    • 489 views
  18. இலங்கை நிலைமைகள் குறித்து சொல்ஹெய்ம் ​தொடர்ந்தும் கண்காணிக்கிறார் இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தற்போது சமாதானத் தூதுவர் பதவி வகிக்காத போதிலும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் புலம்பெயர் மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான செய்திகளை வாசிப்பதாகவும், மக்களை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 1 reply
    • 416 views
  19. எதிர்ப்புகளையும் மீறிக் கவுணாவத்தையில் மிருகபலி கீரிமலை சருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் எழுநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன. அதிகாலையில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து வைரவருக்கு பொங்கி படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வெளி மண்டபத்தில் மாமிசப்படையல் செய்யப்பட்டது. இதில் முட்டைகள், கள்ளு,கருப்பணி போன்றவற்றுடன் உணவு படைக்கப்பட்டு கடா வெட்டப்பட்டு தலையும் படைக்கப்பட்டது. தொடாந்து ஏனைய கடாக்கள் வெட்டப்பட்டன. இன்று இடம் பெற்ற இந்த வேள்வியில் யாழ்.குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் ஆட்டுக்கடாக்கள் அதிகாலையில் உழவுஇயந்திரங்கள் மற்றம் லாண்ட் மாஸ்டர்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதனை விட சுமார் 300க்க…

    • 2 replies
    • 705 views
  20. இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இடம்பெயர்ந்துள்ள சிங்களவர்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதற்கே அரசாங்கம் இந்த அவசர சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=14427

    • 1 reply
    • 510 views
  21. சக்தி வாய்ந்த இங்கிலாந்தின் தொழிலாளர் சங்கங்களோடு தமிழ் அமைப்புக்களின் தோழமை தினம் நிகழ்வு பிரித்தானியத் தமிழர் பேரவையும் (BTF), தமிழ் தோழமை இயக்கமும் (Tamil Solidarity) இணைந்து எதிர் வரும் ஜூன் மாதம் 8ம் திகதி, பிரித்தானியாவைச் சேர்ந்த UNISON போன்ற பல்வேறு தொழில் சங்கங்களோடு தோழமை தினம் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இடம்: SOAS (School of Oriental and African Studies, University of London), Vernon Square Campus, Vernon Square, Penton Rise, WC1X 9EW நிலக் கீழ் புகையிரதம்: Kings Cross/St Pancras (Lines: Victoria, Piccadilly, Northern, Metropolitan, Hammersmith and City, Circle and other national rail service நேரம்: பி ப 4 மணி தொடக்கம் இரவு 8 மணி இன் நிக…

    • 0 replies
    • 518 views
  22. பிரித்தானிய தம்பதி கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான இளைஞர் ஒருவரை பிரித்தானிய ஸ்கொட்லாண்ட்யார்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து குறித்த பிரித்தானிய தம்பதியினர் கடத்தப்பட்டிருந்தனர். இந்தக் கடத்தல் சம்பவமானது லண்டனிலும் சென்னையிலும் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பிரித்தானிய தம்பதியினர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, லண்டனின் டோர்செட் பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சென்னை பொலிஸார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். http://w…

  23. வடக்கில் நெடுஞ்சாலை அபிவிருத்தியென்ற பெயரில் சீனாவிடம் கடனெடுத்து அதில் சீன அதிகாரிகளை ஈடுபடுத்தி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கில் பாரிய நெடுஞ்சாலை அமைப்பதற்கென சீனாவிடம் இருந்து கடன்பெற்று சீன நாட்டு பொறியியலாளர்களை அவ் அபிவிருத்தியில் ஈடுபடுத்தியுள்ளதால் அவர்கள் வேறு விதமாக அதனை பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை உருவாக்க வாய்ப்புகள்…

    • 2 replies
    • 483 views
  24. செல்லக் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதம குரு கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லக் கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம குருவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் காயங்களுடன் பிரதம குருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளத. 70 வயதான ராஜபக்ஷ முதியன்சேலாகே பிரேமதாச என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92536/language/ta-IN/article.aspx

  25. வடகிழக்கில் உள்ள தமிழர்களின் எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை தமிழ் அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் வேண்டுகேள் விடுத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களான தாந்தாமலை, நாப்பதுவெட்டை,மக்களடிசுற்று ஆகிய இடங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், வடகிழக்கு தமிழர்களின் எல்லைக் கிராமங்களை அபகரிக்கும் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.குறிப்பாக எல்லைக் கிராமங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதுடன் புத்தவிகாரைகளையும் அபிவிர…

    • 0 replies
    • 457 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.