ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
-கு.சுரேன், எஸ்.ரூபன் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.ஆஸ்பத்திரி வீதி மற்றும் யாழ்.நகரப் பகுதிகளிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி உரிமை கோரியுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/67430-2013-05-16-16-37-02.html
-
- 0 replies
- 266 views
-
-
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈக்வடோர் வழியாக இந்தக் கும்பல் இலங்கை மற்றும் இந்தியப் பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் அழைத்து செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்திய மற்றும் ஈக்வடோர் பிரஜைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சட்டவிரோதமான முறையில் நபர்களை அழைத்துச் சென்று ஈக்வடோர் ஹோட்டல்களில் தங்க வைத்து பின்னர் அவர்களை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்கா…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது. இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது. கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்க…
-
- 0 replies
- 413 views
-
-
முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசு தற்போது ஆயிரத்து 500 சிங்களக் குடும்பங்களை அங்கு அழைத்து வந்து குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன் அரசு சிங்களக் குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சுமார் 5 ஆயிரம் குடும்பங்களைக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் போரினால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்வுகளை சந்தித்…
-
- 0 replies
- 217 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து சர்வதேச ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கப் படையினரா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளே குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாடசாலைகள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்ததா…
-
- 0 replies
- 456 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செனல்4 ஊடகத்தின் ஓர் வீடியோ உண்மையானது என 2011ம் ஆண்டின் ஏப்ரலில் கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்ப…
-
- 0 replies
- 178 views
-
-
இலங்கை கல்வி அமைச்சின் பிரிவேனாக் கிளையினால் நடத்தப்பட்ட வெளிக்கள தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த தென்னிலங்கையைச் சேர்ந்த இருபத்தைந்து பிக்குகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்விற்கு கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றி வைக்க, கல்வியியற் கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் பாடினர். இந் நிகழ்வில் அகில இலங்கை பிரிவேனா கல்விப் பிரிவின் தமிழ்மொழி ஆலோசகர் உயங்காவே ஞானரத்னதேரர், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, 51ஆது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேணல் பர்ணாந்து, விசேட அதிரடி…
-
- 11 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து இந்து ஆன்மீகத்தை எமது சிவபூமியான இலங்கைத் திருநாட்டில் வளர்த்த ஆன்மீகத் துறவி சமாதியடைந்த வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் 63வது ஜனனதினம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள சுவாமி தந்திரதேவா மகராஜின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கோட்டமுனை அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்று பின்னர…
-
- 0 replies
- 203 views
-
-
விடுதலைப் புலிகளால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்த குற்றத்திற்காக யுவதியொருவர் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில் அந்த அடையாள அட்டையில் கையொப்பம் இட்டுள்ள தயாமாஸ்டர் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகத் தெரிவித்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கா ,இது அந்த வகையில் நியாயமானதென கேள்வியெழுப்பினார். இதேவேளை கே.பி அனுப்பிய ஆயுதங்கள் மூலம் யுத்தம் செய்தவர்கள் சிறையில் இருக்க ஆயுதங்களை அனுப்பிய கே.பி யோ அரசாங்க பாதுகாப்பில் இருப்பதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெர…
-
- 0 replies
- 296 views
-
-
By General 2013-05-16 10:53:28 இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரி…
-
- 3 replies
- 648 views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி : ஆனந்தவிகடன் இதழ் - 22 May, 2013 “நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான். சிறுபான்மை மக்கள் என்ற சொல்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எமது அகராதியில் இருந்து நீக்கிவிட்டோம். இப்போது இந்த நாட்டில் இருப்போர் இரண்டு இனங்கள்தான். ஒன்று, நாட்டை நேசிக்கும் இனம். இன்னொன்று, நாட்டை வெறுக்கும் இனம். நாட்டை வெறுப்போர் மிகச் சிறுபான்மையாகிவிட்டனர்!'' - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே 19-ம் த…
-
- 1 reply
- 775 views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார். ''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசா…
-
- 4 replies
- 1.4k views
-
-
மக்களுக்குக் கொடுக்கும் துன்பங்களுக்காகவும்,மக்களுக்கு செய்யும் பாவங்களுக்காகவும் மகிந்த அரசாங்கத்தின் மீது இடி விழட்டும் எனவும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்காவிடின் நாசமாகப் போக வேண்டும் என்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன சாபமிட்டுள்ளார். மின் கட்டண அதிரிப்பிற்கு எதிராக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு கருத்துரைத்த விக்ரமபாகு கருணாரத்ன, ''மக்களுக்கு இவர்கள் செய்யும் துன்பத்திற்காக இவர்களுக்கு இடிவிழ வேண்டும். நாம் இரண்டில் ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்கு இன்று வீதியில் இறங்கியிருக்கிறோம். இது இத்துடன் நிறுத்தப்படமாட்டாது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ்.. தமிழ்... என்று சொல்லியே அடித்து நொருக்கினர்: தங்காலை தமிழர்கள் தெரிவிப்பு தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (14) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலின்போது காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
-
- 2 replies
- 601 views
-
-
வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப்பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்படுவதால் எழுந்துள்ள பிரச்சினைகள், அதிகரித்துள்ள இராணுவத் தலையீடு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் க…
-
- 3 replies
- 734 views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/67396-2013-05-16-08-23-08.html
-
- 10 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக் கூறியுள்ளார். இலங்கை மனித உரிமைகளை மீறியிருக்கும் நிலையில் பிரிட்டனின் இப்படியான முடிவு சர்ச்சைக்குரியது என்று அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை உரிய வகையில் கையாளாவிட்டால், அதற்கான பிரதிபலன்களை தலைநகர் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடக்கும் போது இலங்கை எதிர்கொண்டாக வேண்டும் என்று நிக் கிளெக் கூறியுள்ளார். பிரதமர் டேவிட் கமெரனுடன் நிக் கிளெக் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரனும் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கும் நவம்பரில் நடக்கு…
-
- 2 replies
- 560 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. விமானம் வெடித்து சிதறியபோது இந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இவர் சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகின்றார். இவரது பெயர் குணமணி கோவிந்தசாமி (59 வயது) (547642317V)என்பதாகும். 1998 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாய்களுடனும் லயன் எயார் அன்ரனோவ் 24 ரக இந்த விமானம் பயணித்த போது இரணை தீவுக்கடலில் வீழ்ந்தது. இவ் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவ…
-
- 9 replies
- 749 views
-
-
இலங்கைத்தீவின் நவ பௌத்த காவலரணில் குந்தியுள்ள வகையறா தொகையறாக்களில் ஒன்றான 'ராவண பலய' அல்லது ராவணா சக்தி, தமிழக திரையுலக நட்சத்திரங்களை குறிவைத்தமைக்கான பச்சைக்கொடி ஶ்ரீலங்காவின் திரைப்படக் கூட்டுத்தாபனத்திலிருந்து கிளம்பிவிட்டது. குறிப்பாக, தமிழக நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், சரத்குமார், விஜயகுமார் போன்றோர் நடித்த திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டுமாயின் சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய நடைமுறையின் அடிப்படையில் மேற்படி நடிகர்கள் நடித்த திரைப்படங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மகிந்த & co வின் அமைச்சரவை அனுமதி அவசியம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, இல…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தலைவரும், தற்போதைய பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் ஆயுதக் குழுவொன்றை இயக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'கருணா தரப்பினர் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்வதில் எனக்கு பிரச்சினையில்லை' 'கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியேறியமை எமக்கு சாதகமானதே எனினும், கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல நடவடிக்கைகளையும் இராணுவத்தினரே மேற்கொள்கின்றனர்.' என கோதபாய குறிப்பிட…
-
- 2 replies
- 453 views
-
-
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ்.மாநகரப் பகுதியில் மீள் நிர்மானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்ட பிரதம செயலாளர் ஏ. விஜயலட்சுமி, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்றினால் டிஜிட்டல் கடிகாரம் பொருத்தப்பட்டு அடிக்கடி பழுதடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது. இதனையடுத்து மாநகர சபையினால் கம்பி…
-
- 1 reply
- 579 views
-
-
மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட முடிவு! [Wednesday, 2013-05-15 11:11:20] மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாட்டால் நாட்டில் எரிபொருள் சிக்கல் நிலை ஏற்படும் என எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதனால் எரிபொருட்களின் விலை உயர்வடையக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.எனினும், நாட்டில் போதியளவு எரிபொருட்கள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. …
-
- 6 replies
- 717 views
-
-
முன் எப்போதும் இல்லாத அளவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் மிக அதிகபட்சமாக ரூ.984 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. காரணம் என்ன? சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிரொலித்தது…
-
- 1 reply
- 1k views
-
-
யாழில் இராணுவம் மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது: கோத்தபாய பாதுகாப்பு வவிகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும் சில தரப்பினர் இதனை தங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதே தவறை தாமும் செய்ய விரும்பவில…
-
- 0 replies
- 491 views
-
-
வடக்கு இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட தனிநாடு அங்குள்ள தமிழ் மக்கள் அடிமைகள் : ஜே.வி.பி. வடபகுதி இலங்கையால் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநாடு என்ற மனோபாவத்திலும் அங்குள்ள தமிழ் மக்கள் தமது அடிமைகள் என்ற மமதையிலுமே அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அங்கு முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி.யின் அரசியல் சபை முக்கியஸ்தரும் எம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். வட மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது. அவர்களுக்கு சம உரிமைகளையும், ஜனநாயகத்தையும் வழங்கி நிர்வாகத்தை பரவலாக்க வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக எம்.பி. இதனைத் …
-
- 0 replies
- 802 views
-