Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது அரசியல் தந்திரத்திற்காக என இந்தியாவின் றோ புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை ஆய்வாளர் ஜோதி சிங் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு செயற்படுவதாகவும், அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், போரின் இறுதிக்கட்டத்தில் அவ்வாறான போராட்டங்களை நடத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014 ஆம் நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைக்கு எதிரான இந்த பாரிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர். …

  2. முஸ்லிம்களைச் சீண்டுவது மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் - ஹஸன் அலி எச்சரிக்கை!! உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பொதுபலசேனா தெரிவித்துள்ள கருத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் முஸ்லிம்களையும், உலமா சபையையும் சீண்டி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதானது, மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி கூறியவை வருமாறு: உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என்று பொதுபலசேனா…

  3. -கெலும் பண்டார பாடசாலைக்கு செல்வதற்காக நாளொன்றுக்கு 24 கிலோமீற்றர் நடக்கும் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் இரத்தினபுரி,பலாங்கொடை நான்பெரியல்ல தோட்டத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவர் விவேகானந்தா வித்தியாலயத்திலேயே கல்விபயின்று வருகின்றார். இந்த பாடசாலை மற்றுமொரு தோட்டத்திலேயே இருக்கின்றது. சப்ரகமுவ மாகாண சபை உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு முதலமைச்சர் மஹிபால ஹேரத்துடன் இப்பகுதிக்கு விஜயம் செய்தது. நான்காம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் பாடசாலை செல்வதற்கு அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவார் என்றும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு 7 மணியாகிவிடும் என்றும் இந்த குழுவினர் கண்டறிந்துக்கொண்டனர். குடும்பத்தில் மூத்தப…

  4. மறக்கப்பட்ட மோதுகை (The Forgotten Conflict) என்ற தொனிப்பொருளில் இலங்கைத் தீவில்; மனித உரிமை' என்ற மாநாடு இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில், டென்மார்க்கின் ஆளும் சோசலிச கட்சியும் மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னை நாள் வெளியுறவு அமைச்சருமருமான, மோனென்ஸ். இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச கண்ணோட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையின் சாரம்சம் வருமாறு, இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும், இனப்பிரச்சினை தொடர்கிறது. தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதற்கான கடப்பாடு சர்வதேச சமூகத்திற்கு உண்டு. அந்த அடிப்படையில், சிறீலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கிறது. இதற்கான பொறிமுறைகளு…

  5. சிறிலங்கா இராணுவ இரகசியங்களை இந்தியாவுக்கு வழங்கினாரா சுரேஸ் பிறேமச்சந்திரன்? [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் இராணுவ இரகசியங்களை இந்திய நாளிதழுக்கு வெளியிட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு நேற்றுக்காலை காலை 10 மணிக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் இது தொடர்பாக சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 'ரைம்ஸ் ஒப் இந்தியா' நாளிதழுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் அளித்த செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவத்த…

  6. குளோபல் தமிழ்ச் செய்தி இணையத்துள் சீனாவில் இருந்து 43000 தடவைகள் உட்புகுந்து தகவலை பெற முயற்சி 19 ஏப்ரல் 2013 சைபர்த்தாக்குதலில் இருந்து இணையத்தை பாதுகாத்துள்ளோம்- குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தளத்தின் இணையத்தளப் பராமரிப்பாளர் இன்று மதியம் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார் அதில் சீனாவில் இருந்து (IP address 123.125.99.101. இல் இருந்து) ஒரு தரப்பினர் அண்மைய நாட்களில் 43000 தடவைகள் எமது இணயத்தளத்திற்குள் பிரவேசித்து அதனுள் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முற்பட்டு இருக்கிறார்கள் எனக்குறிப்பிட்டிருந்தார். கடந்த சில நாட்களாக இணையத்தளத்தின் வேகம் குறைந்து சென்றமையை யாவரும் அறிவர் இதற்கான காரணத்தை எமது இணையப்பராமரிப்பாளர் ஆராய முற்பட்ட போதே இது அறியப்பட்டது…

  7. இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது மரபு ரீதியான போராட்ட உத்திகளே பின்பற்றப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க் கப்பல்கள், நவீன ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட போர் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் எதுவுமின்றியே முன்நகர்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. போர் தொடர்பான அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20379:2013-04-20-07-27-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  8. பிரான்ஸ் - பிரித்தானியா : தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டங்கள் ! அணிதிரளுமாறு அழைப்பு தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் விறுவிறுப்படைந்து வருவதன் தொடர்சியாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-04-2013) இடம்பெறுகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது. இந்நிலையில் பிரித்தானியாவில் தென…

  9. தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீப காலமாக இலங்கை ஊடகங்க‌ளும் சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்குக் கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, மாணவர் போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு, கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத் தன் கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி கேலிச்சித்திரம் வரைவதும் கோபக் கட்டுரைகள் தீட்டுவதுமே முழு நேரத் த…

    • 0 replies
    • 440 views
  10. 'புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும்' - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய 20 ஏப்ரல் 2013 "கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா - தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்" மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு - மனித உரிமை கலாசாரத்தை நோக்கி இவர்கள் முணுமுணுக்க இடம் கொடுக்காமல் கூட புதைக்கப்பட்டிருக்கலாம். அது மிகப்பெரிய கொலைக்களமாக இருந்திருக்கும். தற்போது அவர்கள் 25 வருடங்களுக்கு பின்னர், மண்ணுக்குள் இருந்து வெளியில் வந்துள்ளனர். அவர்கள் சரியாக விடயங்களை வெளிப்படுத்தும் தருணத்தில் வந்துள்ளனர். அடையாளங்கள் இல்லாது காணாமல் போனதாக இவர்கள் வரலாற்றில் அழிந்து போய்விடுவார்கள் கொலையாளிகள் சிந்தித்திருக்க கூடிய ஜே.வி.பியி…

  11. மணலாறு பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! - காணி உரித்துப் பத்திரங்களை வழங்கினார் மகிந்த!! தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காணி உரித்துப் பத்திரங்களை வழங்கியுள்ளார். வெலிஒய சம்பத்நுவர மகாவலி விளையாட்டரங்கில் இன்று கதலை இடம்பெற்ற நிகழ்வில் மொரவௌ, ஹெலெம்பவௌ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த காணி உரித்துப் பத்திரங்களை வழங்கியுள்ளார். வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் எல் வலயம் என்ற குறியீட்டுடன்…

  12. கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தால் இலங்கைக்கு பாதிப்பு தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் வெடிப்புக்கள் ஏற்படும் ஆயின் அதன் கதிரியக்கம் இலங்கையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த விடையம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்: 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி,அதாவது 30 வருடங்களுக்கு முன்னர் உக்ரேயினில் உள்ள சர்னோபில் பகுதியில் இருந்த அணுமின்சார உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பின் கதிரியக்க தாக்கங்கள் இலங்கையிலும் காணப்பட்டதாகவும்,குறித்த விபத்தினால் 31 பேர் இறந்ததாக முதலில் அறிவிக்கப்பட்ட போதும்,பின்னர் இந்த சம்பத்தில் நான்காயிரம் பேர் வரையில் பலியானதாக உறுதி செய்யப்பட்டது. இந்த அணுவெடிப்…

  13. சிறிலங்கா உளவுப் பிரிவில் அதிகளவில் முஸ்லிம்கள் உள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சோக தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களுடன் சண்டையிட்டு முஸ்லிம் இராணுவ வீரர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்கள் எவ்வித ஒத்தாசைகளையும் வழங்கவில்லை.மாறாக, அரச படையினருக்கே அவர்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுடனான நட்பை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் நாடுகள் கூட எம்மோடு மிக நட்புக் கொண்டவை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி…

    • 15 replies
    • 887 views
  14. இலங்கை அரசின் அடக்கு முறையை எதிர்த்து, தமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இம்முயற்சியின் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மதிக்காத இலங்கை நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, மனித நேயம் கொண்ட எமது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவ்விடயத்தை ஜனநாயக வரைமுறையில் பரப்புரைக்கு உட்படுத்தி இலங்கை அரசிற்கு எதிராக மேலதிக அழுத்தத்தை கொடுக்க முடியும். இம் முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக, அமெரிக்கத் தமிழர்களுடன் இணைந்து, இலங்கையில் உற்பத்திசெய்த ஆடையணிகளை வாங்குவதைப் புறக்கணிக்குமாறு கனேடியப் பொதுமக்களை அறிவுறுத்தும் போராட்டத்தின் விபரம் பின்வருமாறு: இடம்: டண்டாஸ் ஸ்குயர் (DAND…

    • 181 replies
    • 11k views
  15. பூர்வீகத்தில் இலங்கை ஒரு இந்து நாடு - யோகேஸ்வரன் விளக்கம் இலங்கை நாடு பூர்வீகத்தில் இந்து நாடாகும். இந்து மதம் இலங்கையின் பூர்வீக மதமாகும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். “இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (17) மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உயைராற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூ…

    • 13 replies
    • 4.1k views
  16. சர்வதேச விசாரணையை சமாளிக்க புதிய திட்டம்! - உண்மைகளைக் கண்டறியும் மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்க முயற்சி!! இலங்கையில் இறுதி மோதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக உண்மைகளைக் கண்டறியும் மற்றொரு விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. இது குறித்த அறிவிப்பை அரசு உத்தியோகபூர்வமாக விரைவில் வெளியிடவிருக்கிறது. இறுதிப் போரின்போதும் அதனை அண்டிய காலகட்டங்களிலும் மோசமான அளவில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்ததாக சர்வதேச சமூகம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், அவற்றுக்குப் பதில் கொடுக்கும் வகையில் இலங்கை இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அங்க…

  17. தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்- தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டது:- தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவினரால் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளை பட்டியலிட்டுள்ளதில் 2012 ஆம் ஆண்டு இலங்கை 89 ஆவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் பிரகாரம் இலங்கை 57வது இடத்தில் இருந்ததுடன் கடந்த வருடத்தில் இலங்கை ஜனநாயகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜனநாயகம் பழுதடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் இலங்கை இருந்தது. எனினும் தற்போது சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது வெளிநாட்டு முதல…

  18. மனித உரிமை நிலைவரங்கள் குறித்த அமெரிக்காவின் வருடாந்த அறிக்கை இன்று நள்ளிரவு வெளியீடு Written by tharsan // April 19, 2013 // Comments Off சர்வதேச நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்த அமெரிக்காவின் வருடாந்த அறிக்கை இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டர் இணையத்தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வருடத்துக்கான சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://news.tamilstar.…

  19. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்புரிமையை இழக்கும் கட்டத்திற்கு சிறிலங்கா வந்துவிட்டதாகவும் அரசாங்கத்தின் தீர்க்கதரிசனமற்ற செயல்பாடே இதற்குக் காரணம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்காவைப் பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என்று கோரி பொதுநலவாயச் சட்டத்தரணிகள் சங்கம் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளமை குறித்து கருத்துரைக்கும்போது, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடனும் அரசாங்கம் முரண்பட்டுக்கொண்டுள்ளது. இதனால் நாட்டுக்குப் பாரியளவில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது எனவும் அவர…

  20. நுவரெலியா வசந்த காலத்தை சீர்குலைப்பதற்காக குறுஞ்செய்தியின் (எஸ்.எம்.எஸ்) மூலமாக சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர் கொழும்பிலுள்ள 15 வயது சிறுவன் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) தெரிவித்தனர். பாடசாலை மாணவனான குறித்த சிறுவன் தங்களுடைய உறவினர்களுக்கே முதலில் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்; தெரிவித்துள்ளனர். அந்த குறுஞ்செய்தி தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் நகரத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் மக்களிடம் அன்றையதினமே கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த குறுஞ்செய்தியை கவனத்தில் எடுக்காது நுவரெலியா…

  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதியில் அமைந்துள்ள முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசன் என்பவரின் வீடு நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கு சேதமேற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினரும் வீட்டு உரிமையாளருமான கோணமலை கண்ணதாசன் தெரிவித்துள்ளதாவது: நேற்று இரவு 8.00மணியளவில் நான் வீட்டில் இல்லாத போது சிலர் இந்த நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முழுப்பொறுப்பும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனும் த.ம.வி.பு கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனுமே கூற வேண்டும் என்றார். சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி…

    • 1 reply
    • 377 views
  22. ‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கை விளக்கத்திற்கு மாற்றீடாக தமிழீழ சுதந்திர சாசனம் வரைவது தேவைதானா?’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழத்தின் அரசியல் வடிவம், பொருளாதாரப் பொறிமுறை, சமூகக் கட்டமைப்பு, மலையக மக்களின் நிலை, சாதி, சமயம், பெண்ணடிமைத்துவம், வர்க்கம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையை தெளிவுபடுத்தும் அiனைத்து அம்சங்களையும் 1985ஆம் ஆண்டு வெளியாகிய ‘சோசலிச தமிழீழம்’ கொண்டிருப்பதையும் தனது உரையில் சீம…

    • 8 replies
    • 990 views
  23. இலங்கைத் தீவின் 2012 ஆம் ஆண்டுக்குரிய நிலவரம் மிகப் பாதகமான திசைவழியைக் கொண்டதாக அறிக்கையிட்டுள்ள லண்டன், 2013 இல் தனது தேசிய விமான சேவையான பிரிட்டிஷ் எயார்வேர்ஸ்சை கடந்த திங்களன்று கொழும்பு ஓடுபாதையில் சாதகமான திசைவழியில் தரையிறக்கியுள்ளது. மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் மிக மோசமாகப் பயணித்துச் செல்லும் ஒரு நாடெனவும், பொறுப்புக் கூறலுக்குரிய தார்மீகத்தை துச்சமென மிதிக்கும் தேசமெனவும் அடையாளப்படுத்தும் அதே நாட்டில் தமது பயணிகள் விமானத்தை இறக்க அனுமதித்த லண்டனின் துணிவையும் சற்று வியப்புக்குரியதாக நோக்கலாம். ஆயினும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய தேசிய நலன்களுக்கும், அரசியல் தடங்களுக்கும் உள்ள இடைவெளியையும் இது சற்று பகிரங்கப்படுத்துவதை மறுக்க முடியாது. தஞ்சக் கோரிக்…

    • 0 replies
    • 526 views
  24. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் இவ்வாறு கேள்வியெழுப்பினார் ஊடகவியலாளர் : 'இலங்கையைப் பொதுநலவாய அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துமாறு வலியுறுத்தி தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே! இதுகுறித்த…

    • 1 reply
    • 774 views
  25. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பது நல்லிணக்கமாகாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை விதிப்பதனை அரசாங்கம் நல்லிணக்கமாக கருதவில்லை எனவும், காயங்களை ஆற்றுவதே முக்கியமானது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி தண்டனை விதிக்குமாறு இலங்கை மீது மிதமிஞ்சிய அளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான சகல விடயங்கள் குறித்தும் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்கியு…

    • 1 reply
    • 326 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.