Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 11:54 AM அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பான கடிதம் ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெ…

  2. அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்களும், வர்த்தகர்களும் பெரும் முதலாளிகள் மற்றும் பெரும் தொழில்முனைவோர் போன்று நடந்து கொள்கின்றனர். இலங்கையில் சமூகப் பாதாள உலகம் தவிர, அரசியல் பாதாள உலகமும் இருப்பதாக கூறியதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத…

  3. கணவன் படுகொலை: மனைவி தவறான முடிவு வவுனியா, நெடுங்கேணி் - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவியான 37 வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அண்மைக்காலமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்திருந்தனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a) …

  4. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் …

  5. 03 MAY, 2024 | 09:35 AM நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03) முடிவடைகிறது . இதேவேளை , பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182531

  6. கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் நாளை (04) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரம் திறக்கப்படும். இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk இலிருந்து உரிய தகவல் உற…

  7. 03 MAY, 2024 | 10:28 AM ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம். ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர். அவர்கள் …

  8. சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்! யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுற…

  9. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:14 PM முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை,…

  10. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:18 PM மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தியுள்ளார். கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் போசாக்கு மட்டமே ஒரு பிள்ளையின் கல்வியையும் விளையாட்டு துறையையும் நிர்ணயிக்கின்றது என்றும் சுட்டிக்காடியுள்ளார். வேலணை மத்திய கல்லுரியின் வருடாந்த விளையாட்டு திறமை காண் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அன்ரன…

  11. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:20 PM ( எம்.நியூட்டன்) உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தரச் சான்றிதழைப் வழங்கும் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொன்றோள் யூனியன் (CONTROL UNION) என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் செட்டித்தெரு இல.40 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ. ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள உற்பத்தியாளர்கள் விவசாயம் உணவு உற்பத்தி போன்ற பல வகையான உற்பத்திகளுக்கான உற்பத்தி தரச் சான்றிதழை வழங்குவதற்கு இந்த நிறுவனம் தயாராகவுள்ளது. உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கான தரத்தி…

  12. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைமையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது. வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை…

  13. Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 04:41 PM பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று வியாழக்கிழமை (2) முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது. …

  14. 02 MAY, 2024 | 01:30 PM ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஒலுவில் துறைமுக விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஜே.பீ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சிறில…

  15. இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். இதன்போது எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு எதிர்காலத்தில் இந்தியா நடவடி…

  16. Published By: VISHNU 01 MAY, 2024 | 11:57 PM இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வவனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெற்றபோது வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அப்பிரகடனத்தில்,மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்மக்கள் காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்க…

  17. 02 MAY, 2024 | 10:55 AM பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி வியாபாரிகளிடமிருந்து பணம் பெறும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பண மோசடிகள் தொடர்பில் பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். இந்த மோசடி கும்பலானது தொலைபேசி அழைப்புகள் மூலம் வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி பண மோசடி செய்வதாகவும் அவ்வாறான நபர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182457

  18. Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 11:51 AM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று வியாழக்கிழமை (02) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர். இந்நிலையில், மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்…

  19. Published By: RAJEEBAN 02 MAY, 2024 | 10:35 AM இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இராணுவத்தினர் அங்கு தங்கள் முகாம்களை விஸ்தரிக்கின்றனர் ஊடகங்கள் சிவில் சமூகத்தினர் போன்றவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் இது அமைதிக்கு மாறான நிலையை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார். அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவ…

  20. பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன் May 2, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இம்முறை அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு என்ன காரணம்? பதில் – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இரு நிலைகளில் தமிழா் தரப்பில் முன்னிலைக்கு வந்தது. ஒன்று – கடந்த காலங்களில் குமாா் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் தமிழ் வேட்பாளா்களாக ஜனாதிபதித் தோ்தல்களில் போட்டியிட்டிருந்தாா்கள். அவா்கள் பொது வேட்பாளா்கள் …

  21. தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் – சிறீதரன் உணா்வுச்சிக உரை May 2, 2024 “இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப் போடும், ஆயிரக்கணக்கான பொது மக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும…

  22. புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! இனியபாரதி. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீ…

  23. சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார். மேலும் விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

    • 1 reply
    • 300 views
  24. Published By: VISHNU 01 MAY, 2024 | 09:37 PM வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் எ…

  25. 01 MAY, 2024 | 08:17 PM அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி, சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும் என்றும் எதிர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.