Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் - மஹிந்த யாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் சில தனியார் காணிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று (23) காலை பலாலியில் நடைபெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு பின்னர் பத்திரிகையாலர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக 5 தடவைகளாக மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி உள்ளோம்.…

  2. நவனீதம்பிள்ளையை சந்திக்கின்றது ஜெனீவா செல்லும் இலங்கை குழு? [sunday, 2013-02-24 11:35:45] ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு, மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு இந்த வாரம் ஜெனீவா செல்கிறது.இந்த குழுவினர் தங்களை சந்திக்க வேண்டும் என்று நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெறவிருப்பதாக, இதன் போது இலங்கையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள புனர்வாழ்வளிப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விபரிக்கப்படவுள்ளதாக தெரிவ…

  3. புனர்வாழ்வு பெற்றவர்களில் 650பேர் அங்கவீனர்கள்: இராணுவம் ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013 11:34 -சுமித்தி தங்கராசா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் சுமார் 650பேர் அங்கவீனர்களாக உள்ளனர் என்று புனர்வாழ்வு பொதுநல வேலைத்திட்ட யாழ். காரியாலய அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார். '2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் 650 பேர் கண், கை மற்றும் ஒவ்வொரு அவயங்களை இழந்தவர்களாவர். இவர்கள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்' எ…

  4. இந்திய வீட்டுத்திட்டம் யாருக்கு?; இந்திய உயர்ஸ்தானிகரிடம் மக்கள் கேள்வி ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013 11:21 -நவரத்தினம் வடக்கில் நிர்மாணிக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா? அல்லது வீடுகள் இன்றி இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கா? என்று போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் 50,000 வீட்டத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பில்; ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இ…

  5. விரைவில் கட்சியாக பதிவாகின்றது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு! [saturday, 2013-02-23 10:53:15] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. நேற்று (22) மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவுசெய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் கோரிவந்த நிலையில் அது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது. எனினும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது உயர் பீடம் அமைக்கும் தீர்மா…

  6. சண்டே லீடர் ஊடகவியலாளரை சுட்டவர்கள் இவர்கள்தான் முடிந்தால் கண்டுபிடிக்கவும் சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களது வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரு சந்தேகநபர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேல் காணும் வரைபடத்தில் உள்ளவர்களை நீங்கள் அடையாளம் காணும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்தின் 011-2662323, 011-2738088 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும். சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் அஸ்கர் பராஸ் கடந்த 2013-02-15ம் திகதி இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வைத்தியசா…

  7. மாகாண சபைத் தேர்தல் ஐ.தே.க. வுக்கு எதிராக மாற்றுக்குழு களத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாற்றுக்குழுவொன்றை தேர்தலில் போட்டியிடவைப்பதற்கான ஆயத்தங்களை செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவையும், கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வேலைத் திட்டத்துக்கு எதிராகவும் தாம் இந்த மாற்றுக் குழுவொன்றை களத்தில் இறக்கவுள்ளதாகவும், கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மை யானவர்கள் இந்த வேலைத் திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அணை (ஜாதிக பவுர) என்ற பெயரில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்…

  8. சிறிலங்கா மீதான தீர்மானம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்! - ஆதரவு தரும்படியும் கோரிக்கை!! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், சிறிலங்கா மீதான இத்தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும்படியும் இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேற்று அந்நாட்டின் வெளிவிவகார அம…

  9. 'போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது' என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார். 'யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் காணிகளை அபகரிப்பதாக மக்களை பயப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அமைதி இருக்க வேண்டுமானால் அரச நிறுவனங்கள் முழுமையாக செயற்பட வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'படைகளின் செயற்பாடு மக்களின் அமைதியை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதற்காக எமது படையினர் பாடுபடுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக கூறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து பூச்சாண்டி காட்டுகின்றார். அத்…

    • 6 replies
    • 926 views
  10. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது. இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு சாதமாகவே செயற்படும் என கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மிகவும் வலுவான, பாரியளவில் தீர்மானமொன்றை அமெரிக்கா நிறைவேற்ற உத்தேசித்துள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. அரசாங்கம் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. போரின் பின்னர் அரசாங்கம் வடக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள போதிலும், பா…

  11. யாழ்ப்பாணத்தில் இந்தியக் கலைக்கூடம் ஒன்று இன்று இந்திய தூதுவர் அசேக் கே. காந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர். இந்த கலைக்கூடமானது யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாத்தில் இருந்து நடைபெற்று வந்தாலும் இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாஸ்திரிய சங்கீதம் மற்றும் நடனத்தில் அடிப்படை அறிவுள்ள வட மாகாண இளைஞர் யுவதிகளிடையே அவற்றைப் விரிவுபடுத்தி கலாச்சார செயற்பாடுகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தியக் கலைக்கூடத்தின் நோக்கமாகும் இங்கு நடனம் இசை என்பவற்றுடன் யோகாவும் வறிந்தி மொழியும் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் இந்தியக் கலைக்கூடத்தின் ஒரு பகுதியயாக ஒரு நூலகம் அமைக்க…

  12. இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். உலக நாடுகள் “ராஜபக்ஷ ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கை அதிபர் ராஜபக்ஷ அவர்கள் ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொண்டவரைப் போல இந்திய அரசிடம் காட்டிக் கொண்டு, இந்திய அரசிடம் இருந்து தே…

  13. காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் வீழ்ந்து சிதறிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்ததையடுத்து நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காலி பிரதேச பிரதம பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக புலன் விசாரணை நடாத்துமாறும், பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=…

    • 8 replies
    • 594 views
  14. முன்னிலை சோசலிசக்கட்சியும் புதிய திசைகளும் புதிய திசைகள் அமைப்பு, இன்று இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்களுக்கான போராட்டத்தில் இணைந்தும், அமைப்பாகியும், ஆதரவளித்தும் இயங்கும். குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் நேரடிப்பங்காளியாக செயற்படும், போராடும். இலங்கை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான சம உரிமை அல்லது விடுதலை என்பது முன்னிபந்தனை என்ற அடிப்படையில் இலங்கை சமூக மாற்றத்திற்காக போராடும் சக்திகளுடனும், ஜனநாயகத்திற்காக போராடும் சக்திகளுடனும் ஒரு பொது தளத்தில் இணைந்து இயங்கும். எமது அரசியல் நிலைப்பாட்டின் விரிவாக்கத்தை ஓர் அரசியல் வேலைத்திட்ட வடிவில் வெகு விரைவில் உங்கள் பார்வைக்கு கொண்ட…

    • 2 replies
    • 627 views
  15. இன்று (23-02-13) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் லண்டனில் பாலச்சந்திரன் மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கேட்டு துண்டுப் பிரசுர விநியோகம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளவும் 020 3371 9313 http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19110:2013-02-23-10-42-50&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  16. முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார். பௌத்த அடிப்படை வாத குழுக்களினால் அண்மைக்காலமாக இலங்கையில் இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் காவல்;துறையில் முறைபாடு அரசாங்கம் கோரிய போதிலும், காவல்துறையினர் முறைப்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவில்லை என அவர் …

  17. By M.D.Lucias 2013-02-23 21:59:40 சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இரு சந்தேக நபர்களின் மாதிரி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இருந்த போது, இனந்தெரியாத நபர்கள் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் பராஸ் சவுகதலி வழங்கிய தகவலின் அடிப்படையில் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு பகுதியில் உள்ள ஓவியர் ஒர…

  18. By Sridaran 2013-02-23 19:54:25 கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கொட்டகலை பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் ஊடாக பொலிஸார் அழைத்துச் சென்ற போது உயரமான பாலத்திலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்ற சந்தேக நபர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று முன்தினம் 21 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. நோர்வூட் பிரதேச தோட்டமொன்றினைச் சேர்ந்த குறிப்பிட்ட சந்தேக நபரொருவர் கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டு முச்சக்கர வண்டி ஒன்றையும் நிலம் ஒன்றினையும் கொள்வனவு செய்துள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபரைக் கைது செய்த தலாங்கம பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்பு சந்தேக நபர் தெரிவித்த தகவலொன்றைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கொட்டகலைப் பிரதேசத்துக்கு பொல…

  19. புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=3176

  20. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அறிய மக்கள் மத்தியில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் பெருபான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை என்பதால், 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் இதேவகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா அல்லது அதிகாரங்களை குறைக்க வேண்டுமா அல்லது அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பகது மிகவும் சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சிகள், அ…

    • 7 replies
    • 779 views
  21. குமார் தர்மசேனவுக்கு எதிர்ப்பு; சென்னையில் த.பெ.தி.க.வினர் கைது சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013 12:19 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை நடுவரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா - அவுஸ்திரேலியாவுக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். குமார் தர்மசேனா நடுவராக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இந்தியாவை விட்டு வெளியேற்றக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்தனர். …

  22. ஜெனீவாவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெனீவா விஜயம், தென்னாபிரிக்க விஜயம் தொடர்பிலான விளக்கம், வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஜெனீவாவுக்கு செல்வதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இந்தநிலையில் இராஜதந்திரிகளின் கூற்றின் பிரகாரம் …

  23. லண்டனிலிரிந்து ஜெனீவா நோக்கிய நடைபயணம் இன்று மூன்றாவது நாளாக 123 கிலோ மீற்றர்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. புதன்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமான தமிழ் இளைஞர் திரு.சத்தியின் நடைபயணம் அடுத்த நாள் பிற்பகல் 6:05 மணிக்கு Newhaven துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கு சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு 10:30 மணிக்கு அங்கு அவரை வழியனுப்பி வைக்க கூடியிருந்த மக்களிடம் விடைபெற்று தனது பிரான்ஸ் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். 22.02.2013 காலை 3:20 மணிக்கு பிரான்ஸ் Dieppe துறைமுகத்தை சென்றடைந்த சத்தி அங்கிருந்து காலை 4:00 மணிமுதல் தனது ஜெனீவா நோக்கிய நடைபயணத்தை பிரான்ஸ் மண்ணில் தொடர்ந்துள்ளார். Dieppe துறைமுகத்திலிருந்து 36 கிலோ மீற்றர்கள்…

  24. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, விடுதலை புல…

  25. -எம்.சுக்ரி, ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரி.லோஹித் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ ஆட்சியை நீக்கக் கோரி சமஉரிமை இயக்கத்தினால் மட்டக்களப்பு நகரில் இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வு, மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இடபெற்றது. இதில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கையெழுத்திட்டனர். வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்க வேண்டும். கைதுகள், கடத்தல்கள் உடன் நிறுத்தப்படல் வேண்டும். அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை பறிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் எழுதப்பட்ட நீளமான பதாகையில் இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை கொழு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.