Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சவுதியில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தான் பணியாற்றிய சவுதி அரேபிய வீட்டில் ஒரு குழந்தையைக் கொன்றதாக 2005 ஆம் ஆண்டில் ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த 4 மாதக் குழந்தையை தான் கொன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார். அந்த கொலை நடந்ததாகக் கூறப்பட்ட தருணத்தில் ரிசானாவுக்கு 17 வயது மாத்திரமே என்றும் அவர் சட்டபூர்வ வயதை எட்டாதவர் என்றும் அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் கூறியிருந்தனர். இந்தக் கூற்று உண்மையாகும் பட்சத்தில், ஒரு சிறுமிக்கு மரணதண்டனை விதித்ததற்காக சவுதி…

  2. 'மக்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்ற 'சுவர்ண புறவர' விருது வழங்கள் விழாவின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பொதுமக்கள் ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்காக இல்லை. மக்கள் பிரதிநிதிகளே பொதுமக்களுக்காக உள்ளனர்' என்றும் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56478-2013-01-08-13-20-35.html

  3. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கு அச்சுறுத்தல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தை நீதிச் சேவை ஆணைக்குழு கண்டித்துள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவில் இருவருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அனில் குணரத்ன ஆகியோருக்கு நேற்று (08) அழைப்பை ஏற்படுத்திய இனந்தெரியாத நபர்கள் அவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்து நீதியரசர்கள் பம்பலபிட்டி மற்றும் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  4. 2013 ஆம் ஆண்டு முதற்கொண்டு 29 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிக குடியுரிமை விசாவிற்கும், கனடாவில் படிக்க மற்றும் வேலை பார்க்க அனுமதி கோர விரும்பினால் கனடிய தூதரகம், துணைத் தூதரகம் ஆகியவற்றிக்கு கீழ்க்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்நேரில் வர வேண்டும் என கனடிய குடிவரவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தோர் நேரில் வரும் போது அவர்களின் விரல்ரேகை , ஒளிப்படம் மற்றும் இன்ன பிற பயோமெற்றிக் விபரங்கள் பதிவு செய்யப்படும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் செப்ரெம்பர் 2013 முதல் டிசம்பர் 2013 வரையிலும் விபரங்களைச் சேகரிக்கும் பணியை குடிவரவுத்துறை மேற்கொள்ளும். இதர நாடுகளிளில் உள்ளவர்கள் …

  5. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தனியார் உறுப்பினர் விவாதம்:இலங்கை மற்றும் ஐ.நா. விவாதம் Siobhain McDonagh. WESTMINSTER HALLTuesday 8 January 2013 Westminster Hall Meeting started at 9.29am. Ended at 11.30am Private Members’ Debate: Sri Lanka and the UN responsibility to protect – Siobhain McDonagh Private Members’ Debate: Victims of female genital mutilation – Karl Turner http://www.parliamentlive.tv/Main/Player.aspx?meetingId=12159

    • 2 replies
    • 632 views
  6. By General 2013-01-09 21:52:37 ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிஸானா நபீக் மீது சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவையாவன, மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கின் பெற்றோரும், குடும்பத்தினரும் என்னுடன் இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட காலமாக தொடர்புகளை ஏற்படுத…

  7. -டியான் சில்வா இலங்கைக்கு வந்து யுத்தத்தின் பின்னரான நிலைமையை மதிப்பிடுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னும் பதிலளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நவநீதம்பிள்ளை, தனது வருகைக்கு முன்னோடியாக விதித்த நிபந்தனைகள் இரண்டும் நிறைவேற்றப்பட்டுவிட்ட போதிலும் அவர் தனது வருகை குறித்து இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடந்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படுவதற்கு முன்னர், நாம் ஓர் அழைப்பை அவருக்கு விடுத்திருந்தோம். இருப்பினும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி…

  8. நிழற்பட ஆதாரங்கள் உங்களிடம் இருக்கின்றதா? ஜன 10, 2013 எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவரும் இன அழிப்பை அம்பலப்படுத்தும் ஆதரங்களை கையளிக்கவுள்ளோம். இவ்வாறு கையளிப்பதற்காக, 1948 முதல் இன்று வரை சிறீலங்கா சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கள் தொடர்பான நிழற்பட ஆதாரங்கள் உங்களிடம் யாரிடமாவது இருந்தால் அதனை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். Email: punithapoomi@gmail.com தொடர்புகளுக்கு:  00 33 6 52 55 89 20 (Kagen) http://www.sankathi24.com/news/25834/64//d,fullart.aspx

  9. யுத்தத்தை அரசாங்கம் வெற்றி கொண்டுள்ள போதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் குழுவிடம் எடுத்துரைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் திருமதி கிறிஸ்ரின் றொபின்சன் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ். ஆயரையும், மாவட்டச் செயலரையும் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே ஆயர் மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் யாழ்.மக்கள் எவ்வாறான மனோநிலையில் உள்ளனர். சுதந்திரமாக செயற்படும் நிலையுள்ளதா? அவர்களுக்குத் தற்போதுள்ள பிரச்சினை என்ன என்பன தொடர்பாக கேட்டறியவே தாம் வந்ததாக பிரான்ஸ் தூதுவர் குழு சுட்டியுள்ள…

  10. வடக்கில் தமிழ் மொழிமூல இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால் ஏன் தெற்கில் இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியாதென கேள்ளவியெழுப்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வோறொரு சட்டமா எனவும் கேள்வியெழுப்பினார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே சுரேஷ் எம். பி. இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள சிங்கள பாடசாலைகளில் 17ஆயிரம் ஆங்கிலபாட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் வடக்கில் இராணுவத்திற்கு பய…

  11. பேலியகொடை பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் களனி தொகுதி கிளை அலுவலகத்தில் இருந்து வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வட பிரிவு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து களனி பொலிஸ் பிரிவில் உள்ள 468/01 நுன்னன்கொட வீட்டில் சோதனை நடாத்தப்பட்டது. இதன்போது குறித்த வீட்டில் இருந்து இரு வாள்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் களனி கிளை அலுவலகம் அமைந்துள்ளது. மேல் மாகாண வட பிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.seith…

  12. இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு ஒரு வார கால கொழும்பு சுற்றுலா! [Monday, 2013-01-07 11:00:02] இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவாரத்திற்கு கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று கொழும்புக்கு செல்லவுள்ளனர். எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து தமிழ் யுவதிகள் 8ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவது இதுவே முதற்தடவையாகும். தமிழ் யுவதி…

    • 13 replies
    • 701 views
  13. இலங்கை சட்டக் கல்லூரி விடயங்களில் என்னால் தலையிட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக்கல்லூரியின் முகாமைத்துவம் மற்றும் நிருவாகம் ஆகியவற்றை மேற்கொள்வது சட்டக் கல்லூரி சட்டத்தின் கீழ் நியமிக்கப்படுகின்ற சட்டக் கல்லூரி பேரவையின் மூலமேயாகும் என அவர் குறிப்பிட்டார். சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், "2013 ஆம் ஆண்டுக்கு இலங்கை சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதித்து ;கொள்ளும் பிரவேச பரீட்சையின்…

  14. டெல்லி மாணவி பற்றி அக்கறைப்படுவோர் மண்டைதீவு சிறுமி பற்றி அக்கறை கொள்ளாததேன்? Published on January 9, 2013-10:19 am · No Comments டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது. பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இரு…

  15. -மேனகா மூக்காண்டி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கும் என்று அக்கட்சியின் இணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கின்ற போதிலும் மேற்படி பிரேரணைக்கு எதிராகவே தமது கட்சி வாக்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற கட்சிக்குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மேற்படி விவாதத்துக்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படவுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்திலும் கூட்டமைப…

  16. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்னர் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் பிரிட்டன் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ்டர் புர்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அலிஸ்டர் புர்ட் கண்காணிக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையுடன் தொடர்பை பேணும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மெக்டொனாவிற்கு, அந்த நாட்டு இராஜாங்கச் செயலாளர் வில்லியம் ஹேக் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அலிஸ்டர் புர்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பொதுநலவாய நாடுகள் மாநாட்…

  17. நான் பிரபாகரனை அழிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கவில்லை: - கூட்டமைப்பை தாக்கினார் ஆனந்தசங்கரி [Wednesday, 2013-01-09 11:52:06] தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையகத்தில் 29-12-2012 அன்று இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை அனைவருக்கும் வணக்கம். தமிழ்மக்களின் இன்றைய நிலை முன்பு என்றும் இல்லாதவாறு மிக மோசமாகி இருப்பதோடு நிலைமை நாளுக்குநாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சாதிகார போக்கும் சுயநல நோக்கமும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கடந்…

  18. சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கிற்கு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் இறங்கல் தெரிவித்து ஒருநிமடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது http://www.virakesari.lk/article/local.php?vid=2471

  19. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேசசபை உறுப்பினரான ஹசித்த மடவல துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளார். ஹசித்த மடவலவில் வீட்டுக்ருமையில் வைத்து மாலை 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2401

  20. முஸ்லிம் காங்கிரஸுக்குள் பெரும் குழப்பம்! - திவிநெகுமவை ஆதரிப்பதா? இல்லையா? கருத்து மோதல் உச்சம்!! 'திவிநெகும' சட்டமூலம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதனை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா? என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய கருத்து முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தக் கருத்து முரண்பாடு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடிய முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டத்தில் பகிரங்கமாகியுள்ளது. மு.காவின் அதியுயர்பீடக் கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு 11மணிவரை நடைபெற்றது. இருந்தபோதிலும் 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் தீர்க்கமான முடிவின்றியே கூட்டம் நிறைவுபெற்றுள்ளது. 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் சில விடயங்களுக்கு த…

    • 2 replies
    • 418 views
  21. தென்னிலங்கை மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பம் நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டிடமொன்றை அமைப்பதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது மனித சடலங்களின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இதனையடுத்து நீதிமன்றத்தின் பணிப்புரையின்பேரில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதுவரை 64 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 59 மண்டை ஓடுகள் அடங்குவதாகவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பி…

  22. எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி முக்கிய அதிதியாக கலந்து கொள்ளவிருந்தார். அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா, தேசிய பொங்கல் விழாவில் பங்கு பற்றுவதற்கும் எதிர்வரும் 15ம், 16ம் திகதிகளில் யாழ்.வருகை தரவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயம் ரத்துத் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள காலநிலை சீரின்மையினாலேயே குறித்த பயணம் ரத்துச் செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலகம் உறுதி செய்துள்ளதுடன், அவர் அ…

  23. முன்னாள் போராளிகளுக்கான இலகு கடன்களை கொடுக்காமல் இழுத்தடிக்கும் வங்கிகள். 09 ஜனவரி 2013 புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் அவர்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்காக அரச வங்கிகள் மூலம் தொழில் தன்மைகளுக்கு ஏற்ற வகையில் வங்கிகடன்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடன்களை பெற்றுக்கொள்பவர்களின் வசதிகளுக்குகேற்ப அவர்கள் விரும்பும் வங்கிகளுகளின் ஊடாக இந்த இலகு கடன்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடன்களும் வழங்ப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில வங்கிகள் அந்த இலகு கடன்களை வழங்காமல் இழுத்தடித்து வருதாக பல முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர் தங்களுக்கான கடன் தொகையி…

  24. மகளிர் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் கொழும்பு வருகை By V.Priyatharshan 2013-01-08 17:26:54 இராணுவத்தின் மகளிர் படையணியில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் இன்று கொழும்புக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இராணுவத் தளபதியின் பாரியாரை சந்தித்து கலந்துரையாடினர். http://www.virakesari.lk/article/local.php?vid=2449

    • 2 replies
    • 874 views
  25. பிரதம நீதியரசரின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை, 08 ஜனவரி 2013 21:28 0 COMMENTS கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் உத்தியோகபூர்வ வீட்டுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்பிலிட்டோர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டேரே பேரணியின் நிறைவில் பிரதம நீதியரசரின் வீட்டின் முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56487-2013-01-08-16-04-20.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.