Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 19 JUN, 2024 | 01:28 AM விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்ஸபான தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவனே டங்கல் காட்டுப்பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (18) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (17) மாலை சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பதற்றமடைந…

  2. 19 JUN, 2024 | 10:03 AM வவுனியா மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று (18) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஐன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர். வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை தாம் உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் க…

  3. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது. இதற்கிடையில் ஆண்டு இறப்புகள் 2017இல் 146,000இலிருந்து 2023இல் 181,000ஆக அதிகரித்திருந்தன. திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.…

  4. இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் . கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில…

  5. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அதிகபட்ச வேதனமாக 1,200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விசேட நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலதிக தேயிலைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளதாகவும் இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். முன்னர் 1,000 ரூபாவாக காணப்பட்ட வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதன் ஊடாக 70 சதவீதம் வேதன அதிகரிப்பு இடம்பெறும். தொழிற்துறையில் உள்ளவர்கள் வேதனத்தை அதிகரிக்குமாறு எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவ…

  6. 18 JUN, 2024 | 10:53 AM கொவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார். கொவிட்பெருந்தொற்று காலத்தில் பெரும் வேதனை காணப்பட்டது குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் அதேவேளை இந்துக்கள் பௌத்தர்கள் கிறிஸ்தவர்களும் வேதனையை அனுபவித்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வேளை இது குறித்து ஆராயநியமிக்கப்பட்ட குழு உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரைத்தது,உயர்நீதிமன்றமும் இதனை அங்கீகரித்தது என ஜனாதிபதி த…

  7. Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயி…

  8. Published By: VISHNU 18 JUN, 2024 | 02:33 AM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோட்டபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. பஷில் ராஜபக்ஷவின் காட்டிக் கொடுப்பு வெற்றிப் பெற கூடாது. 69 இலட்ச மக்களாணையை பலப்படுத்தும் வகையில் அனைவரும் செவ்வாய்க்கிழமை (18) நுகேகொடயில் ஒன்றிணைய வேண்டும் என சர்வஜன சக்தியின் பிரதிநிதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சன்ன ஜயசுமன கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்தனர். கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி காரியாலயத்தில் திங்கட்கிழமை (…

  9. Published By: VISHNU 17 JUN, 2024 | 11:38 PM சாதாரணமாக எமது தமிழர் பகுதிகளிலுள்ள பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இந்த இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு மக்களின் போக்குவரத்திற்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்ற வட்டுவாகல் பாலம் உடனடியாக நிர்மாணிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், …

  10. தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்!-விக்னேஸ்வரன் Posted on June 17, 2024 by தென்னவள் 10 0 மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13ஆவது சீர்திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி தோன்றியதாகவும் அதற்கு முன் சிங்கள இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறுவது போல துட்டகைமுனு…

    • 0 replies
    • 287 views
  11. 17 JUN, 2024 | 08:43 PM தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க லண்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொ…

  12. பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் …

  13. 17 JUN, 2024 | 05:32 PM (இராஜதுரை ஹஷான்) சட்டமா அதிபரின் பதவி காலத்தை நீடிப்பது குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு கிடையாது. அரசியலமைப்பு பேரவையை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார் எனச் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் பொருளாதாரம் இன்றும் கத்தி முனையி…

  14. வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தைக் கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை நல்ல…

  15. 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்…

  16. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும…

  17. 15 JUN, 2024 | 12:24 PM (எம்.நியூட்டன்) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா மற்றும் 17ஆவது சர்வதேச மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. 4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பண்பாட்டுக் குழு வரவேற்புடன் விழா அரங்கிற்கு பேராளர்கள் அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் சர்வதேச மாநாட்டிற்கான நூல் வெளியிடப்பட்டது. நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் மதத்தலைவர்கள், புதுவைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம், லண்டனை சேர்ந்த அமுது இளஞ்செழியன் வி ஐ டி பல…

  18. இலங்கை வரும் இந்திய பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன. இதன்படி இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட…

  19. Published By: VISHNU 16 JUN, 2024 | 10:48 PM வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று மதியம் கடைக்கு சென்று உள்ளார். இதன் போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் மீதான மரண விசா…

  20. Published By: DIGITAL DESK 3 17 JUN, 2024 | 09:29 AM இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (17) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் தெற்கின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரில் பிரதானமானவர்களாக கருதப்படுவோர் தமது தேர்தல் களச் சந்தையை வடக்கிலும் விரித்து தமது முகவர்களோடு இரகசிய பேச்ச…

  21. யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ஈழத்து கவிஞர் தீபசெல்வன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ஆம் ஆண்டு கூறிய பின்னர் , கிழக்கு மாகாணத்தில் தொட…

  22. தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் – சுமந்திரன் அறிவிப்பு! தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த…

      • Like
    • 3 replies
    • 500 views
  23. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் வடமாகாண மீனவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்திய மீனவர் விவகாரம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்து…

    • 1 reply
    • 290 views
  24. 16 JUN, 2024 | 01:25 PM திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார். தரம் 10இல் கல்வி கற்கும் 15 வய­துடைய இவர், கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு…

  25. யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் மீசாலைப் பகுதியை சேர்ந்த 25 வயதுடைள சிவகுமார் ராகுலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள் அவா்களை மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கொடிகாம பொலிஸார் சந்தேக நபர்களை மீட்டு பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.