ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
ஓரணியில் தமிழ் உறவுகள் ; அடக்கியாள நினைக்காதீர்;சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன." - இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் க…
-
- 4 replies
- 586 views
-
-
தமிழினத்திற்காக ராஜீவ் காந்தி இறந்தாராம் ! தங்கபாலு சேலத்தில் பேச்சு. Published on 10-02-2009 இலங்கை நல உரிமை பேரவை சார்பாக சேலத்தில் பேரணி நேற்று(09.02.2009) நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் நடந்த பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர். அவர்களுக்காக உயிரையே இழந்தவர் ராஜீவ்காந்தி என்று கூறியுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், இலங்கை சுதந்திரமடைவதற்காக பிரித்தானிய அரசை எதிர்த்து போராடியவர்கள் காங்கிரசினரே என்றும் கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. எனவே தற்போது நடக்கும் இந்த போரை கூட எங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் எனவும், மேலும் மத்திய அரசு, சிங்கள அரச…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் இந்தியத் தூதுவராலயம் முன்பாக தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டம். இந்தியத் தூதரகத்தின் முன்னால் இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் மக்கள் உண்ணர்சிக் கொந்தளிப்பில் காவல்துறையினருடன் முரண்பட்டதாக தெரியவருகின்றது. சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போக வேண்டாம் எனக் கோரியும், இலங்கையில் நடைபெற்று வரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிட வேண்டும் எனக் கோரியும் இன்று (13.02.09) மாலை மூன்று மணி முதல் இந்தியத் தூதரகம் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கூடி ஆர்ப்பாட்ட கண்டன ஒன்று கூடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தியத் தூதரகத்திற்கு சுமார் 200 மீற்றர் தூரத்தில் வீதி முனையில் கூடியிருந்த மக்கள…
-
- 2 replies
- 802 views
-
-
கச்சதீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைச் சிங்கள கடற்படை மீண்டும் வெறித் தாக்குதலை நடத்தி உள்ளது. அத்துடன், இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தி வருவது கடந்த சில நாட்களாக தொடர் கதையாக உள்ளது. கச்சதீவு அருகே நடைபெறும் இந்த தாக்குதலின் போது மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 200 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சதீவு அருகே இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்கள கடற்படை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மீனவர்களின் வலைகளையு…
-
- 0 replies
- 282 views
-
-
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சொக்னாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில், ஈழத்தமிழருக்காக உயிர்விடுகிறேன் என்று கூறிக்கொண்டு தீக்குளித்தார். இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீக்குளித்ததில் இடுப்புக்குக் கீழே தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்குளித்தது பற்றி செய்தியாளரிடம் பேசிய முருகானந்தம், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் யாரும் போராடவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. ஆகையால்தான் நான் தீக்…
-
- 2 replies
- 968 views
-
-
வைகோ கைது! முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2009, 16:02 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன. 108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நி…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு; யாழ் ஊடக மையம் சுட்டிக்காட்டு “யார் ஆட்சியில் இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்” என யாழ். ஊடக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்று நவம்பர் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊடக மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது; “நடந்து முடிந்த ஊடகப்படுகொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்க தயாரில்லாத ஒரு நாடாக…
-
- 2 replies
- 538 views
-
-
புரூஸ் பின் அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் செய்த வழக்கு பதிவுக்கு ஆதரவு - ப.உ வால்டர். பி. ஜோன்ஸ் புரூஸ் பின் கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் செய்த வழக்கு பதிவுக்கு அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த ப.உ வால்டர். பி. ஜோன்ஸ் ஆரதவு தெரிவித்துள்ளார். இன அழிப்பு தொடர்பாக 1000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்காவின் முன்நாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பின் தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் வழக்கு பதிவை ஆதரித்தும், வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து தற்போதைய சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றையும…
-
- 0 replies
- 832 views
-
-
வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது – நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கேள்வி பதிலில் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவருடைய கேள்வி பதிலில் பிவருமாறு அமைந்துள்ளது . கேள்வி :- இன்று நடந்த “கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டக்” கூட்டத்தில் நீங்கள சில முக்கியமான கருத்துக்களைஆங்கிலத்தில் எடுத்துரைத்தீர்கள். அவற்றைத…
-
- 1 reply
- 444 views
-
-
இதன் பிண்ணனி என்னவென்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=42689
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை யுத்தம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 21 மார்ச் 2013 இலங்கை யுத்தம் தொடாபில் இந்திய உச்ச நீதிமன்றில் மலேஷிய சட்டத்தரணியொருவர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இலங்கை யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த உயிரிழப்புக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கியதாகவும், இது தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.பொதுமக்கள் நல மனுவொன்றே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய சட்டத்தரணி ஏ. கணேசலிங்கத்தின் சார்பில் மஹாரியா என் கோ என்ற சட்டத்தரணிகள் நிறுவனத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகள் கூட்டாக இணைந்து யுத்தம் நடத்த…
-
- 2 replies
- 707 views
-
-
வவுனியாவில் ஊர்காவல் படையணிக்காகச் சேர்க்கப்பட்ட பலர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் : வவுனியாவில் அண்மைய நாட்களாக இராணுவத்திற்காகவும் ஊர்காவல் படையணிக்காகவும் சேர்க்கப்பட்ட பலர் இராணுவத்தினரால் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது வவுனியாவில் உள்ள கிராமங்களில் பல சிங்கள இளஞர்கள் ஊர்காவல் படையாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தார்கள். இவ்வாறு சேர்க்கப்பட்ட பலர் ஊர்காவல் படை பயிற்சி முடித்து கடமையில் இருந்தவர்களுக்கு இராணுவத்தினரால் அண்மைய நாட்களாக விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர் இவர்களில் பெரும் பாலானவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங…
-
- 0 replies
- 1.6k views
-
-
சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீருக்கு எதிராக அண்மையில் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. சூடானில் நிகழ்ந்த கொலைகள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக மக்களை இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருக்கின்றன. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சூடானிய அரசாங்கம் நிராகரித்திருப்பது வேறு விடயம். ஆனால் இனப்படுகொலைகளை, சித்திரவதைகளை, கட்டாய இடப்பெயர்வுகளுக்கு காரணமான போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த விவகாரம் ஈழத்தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் செய்யக் கூடிய சில விடயங்களை எடுத்துக் காட்டியிருக்க…
-
- 1 reply
- 871 views
-
-
இன்று பெப்பிலியான பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான Fashion bug கடையினை சிங்கள இனவாதக் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி 2 முஸ்லிம் ஊடகவியளாலர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். வீடியோ: ஆங்கிலத்தில்: A tense situation was reported from Pepiliyana this evening when a leading textile shop was attack by a group of people, sources said. It is learnt that several people received minor injuries including a journalist from a private TV channel. The building and a vehicle were also damaged in the attack. However, the police brought the situation under control. http://www.dailymirror.lk/news/27384-tension-in-pepiliyana.html
-
- 18 replies
- 2.4k views
-
-
கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 – கி.பி 2000)’ என்னும் ஆய்வுநூல் நூலுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது என நேற்று (3) வேலணையூர் சுரேஷின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றியாற்றிய வடமாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கென அனுப்பப்பட்ட கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு’ என்ற நூல்களை சுங்கவரித் திணைக்களத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றைத் தரும்படி வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தாலே தரமுடியும…
-
- 0 replies
- 391 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா துறை சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார தரப்பினருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், நாட்டுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தற்போது 80 சுற்றுலாத்துறை பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தடுப்பூசிக…
-
- 0 replies
- 353 views
-
-
இவ் விடயம் 27. 03. 2009, (சனி), டென்மார்க் நேரம் 11:37க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி இலங்கையில் ஒரு மனிதாபிமான போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. மோதலில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்து அது விடுதலைப் புலிகளைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. உத்தியோகப்பற்றற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டமொன்றின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐ.நா. மனிதாபிமானப் பணிகளுக்கான தலைவர் ஜோன் ஹோம்ஸ், விடுதலைப் புலிகளால் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் …
-
- 0 replies
- 865 views
-
-
(வ.சக்திவேல்) கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீங்கள் அனைத்து விடயங்களையும் செய்ய முடியும் எனக் கூறுகின்றீர்கள். ஆனால் உங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக பயன்படுத்தினாலும் கூட இந்த அனைத்து விடயங்களுக்கும் செய்யும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்காது. அதேபோன்று பால்சேனை என்ற பிரதேசத்தில் வாகரையில் அந்த இடத…
-
- 2 replies
- 969 views
-
-
ரவிக்குமார் எம்.எல்.ஏ. ''ஐ.நா-வின் குரலை எதிரொலிப்போம்!'' ஈழத் தமிழர் பிரச்னை எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் மையப் பிரச் னையாக மாறிவருகிறது. ஒருபுறம் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளை யில், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஐ.நா. போன்ற அமைப்பு கள், முன்னிலும் அழுத்தமாக இப்போது வலியுறுத்தத் தொடங் கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் ஹைகமிஷனர் நவநீதம் பிள்ளை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐ.நா. ஹைகமிஷனரோடு என்ன விவாதிக்கப்பட்டதுஎன்பதை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. …
-
- 1 reply
- 607 views
-
-
(இராஜதுரை ஹஷான்) 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குதல் அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான செயல்களை மேற்கொள்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும், அதற்கு முடிந்தவரை தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். அதனால், அதுதொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனை…
-
- 0 replies
- 248 views
-
-
மனிதப் புதைகுழிகளையும் விட்டு வைக்காத இலங்கை இராணுவம்:- 11 ஏப்ரல் 2013 மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைக்குழி அமைந்துள்ள பிரதேசத்திற்குள் நேற்றிரவு சென்ற இராணுவத்தினர் அங்கு விசேட தேடுதல்களை மேற்கொண்டதாக தெரியவருகிறது. நேற்றிரவு 09 மணி முதல் 9.25 மணி வரையில் போலேரா ரக வாகனத்தில் சென்ற சீருடை அணிந்த சுமார் 10 பேர் இந்த தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மனித புதைக்குழி உள்ள பிரதேசத்திற்கு சூழவுள்ள பகுதியில் மின்விளக்குகளை எரிய விட்டு, இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேடுதலில் ஈடுபட சென்றிருந்தவர்களின் வாகனங்களில் இலக்க தகடுகளை அடையாளம் காணமுடியாத வகையில், மின் விளக்குகள் எரியவிடப்பட்டிருந்தாக தெரியந்துள்ளது. http://www.global…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுமந்திரன் கொடுத்தது கூட்டமைப்பின் யோசனை அல்ல; அதனை நாம் பார்க்கவும் இல்லை – ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனீவா குறித்த ஆவணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையதல்ல” எனத் தெரிவித்திருக்கும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி, “இந்த ஆவணத்தை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எவையும் பார்வையிடவும் இல்லை. அது குறித்து கலந்துரையாடப்படவும் இல்லை” எனவும் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக தினக்குரலுக்கு இன்று கால…
-
- 7 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 650 views
-
-
இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது. ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது- Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно и…
-
- 5 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வா்னுஜா வயது 17 எனும் மாணவியே இவ்வாறு இறந்துள்ளாா். குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் உயா்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளாா். சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி கா…
-
- 1 reply
- 502 views
-