ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143417 topics in this forum
-
வலது கொடுக்க இடது பறிக்கும் 13 ஆம் திருத்தம் என்பது இதுவே; அமைச்சர் கெஹலிய புதிய விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் வலது கையால் கொடுத்து விட்டு இடது கையால் தட்டிப்பறிப்பது தான். இதனால் யாருக்கு என்ன பயன்?இப்படித் தெரிவித்தார் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சரவைப் பேச்சாளர் என்ற வகையில் கெஹலிய ரம்புக்வெல ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தார். இவ்வேளையில் வடமாகாண சபை மற்றும் "தி…
-
- 1 reply
- 433 views
-
-
[size=2][size=4]முஸ்லிம் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்தாலும், நாங்கள் முதுகெலும்புடன் இருந்து அந்த மக்களுக்காகப் பேசுவோம். முஸ்லிம் மக்களுடன் பேசுவதற்கு எமக்கு எவரினதும் அனுமதி தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]"மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு மீண்டும் பெரும் அநீதியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துவிட்டது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் இப்போது வழிமாறிப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். விரைவில் அவர்கள் சரியான பாதைக்கு வருவார்கள் என சம்பந்தன் மேலும் தெரிவி…
-
- 2 replies
- 682 views
-
-
யாழில் பாக். வேவு தளம்- அதிர்ச்சியில் உறைந்த இந்தியா குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது. யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் வேவு தளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த இந்திய குழு அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறது. இலங்கையின் பாகிஸ்தான் தூதரகம் இந்தியாவுக்கு எதிரான உளவு வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளே உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நேரடியாக தகவல்களை பரிமாறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தமீம் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட தமீம் அன்சாரியும் இதே தகவல்களையே தமிழக போலீசாரிடம் தெரிவித்திருந்தார். மேலும் இந்திய…
-
- 1 reply
- 994 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படலாம் என அடையாளம் காணப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்க முடியும் என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அடையாளப்படுத்தப்பட்டோருக்கு புகலிடம் வழங்க முடியாது என அந்நாட்டு பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆயினும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்ற நீதவான்கள் தெரிவித்துள்ளனர். எம்47 என அடையாளப்படுத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை திருப்பி அனுப்புவது தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதவான்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பானது இலங்கைப் புகலிடக் கோரிக்…
-
- 0 replies
- 563 views
-
-
வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ் By General 2012-10-05 09:21:27 வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ௭னக் காட்டுவதற்கே மெனிக்பாம் முகாமிலிருந்த தமிழர்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் காடுகளுக்குள் தள்ளிவிட்டுள்ளார். இதனூடாக இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத்தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. இதனை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உ…
-
- 1 reply
- 447 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்ததாகவும், சில பிரச்சினைகளை இனங்காண்பதற்கும், சாத்தியமான தெரிவுகளைத் தேடுவதற்கு உதவியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மனிதஉரிமைகள் கற்கைகளுக்கான நிலையத்தில் கல்வியாளர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 27 வீதமான மக்களே அங்கு சிங்களவர்களாக இருந்த போதிலும், அங்கு ஆளும் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார். போருக்குப் பிந்திய அபிவிருத்தி,…
-
- 0 replies
- 477 views
-
-
[size=4]இலங்கையின் இராணுவ சீருடைகளுக்காக 2 பில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் யோசனையின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.[/size] [size=4]பொலிஸ், விசேட அதிரடிப்படை, மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கு இந்த நிதியில் சீருடைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்கிடையில் இராணுவத்தினருக்கென்று 10 மாடிக் கட்டிட மருத்துவமனை ஒன்றை ஸ்தாபிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 203 views
-
-
சரத் பொன்சேகாவின் புதிய முன்னணியில் இணையுமாறு மனோ கணேசன் மற்றும் ஜே.வி.பியினருக்கு அழைப்பு! [Friday, 2012-10-05 08:43:03] எதிர்வரும் 18 ஆம் திகதியன்று இலங்கையில் புதிய அரசியல் முன்னணி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.இதில் முக்கிய பங்கை இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வகிக்கவுள்ளார். எனினும் இந்த முன்னணிக்கான பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. ஊழல்மிக்க தற்போதைய அரசாங்கத்தை தூக்கியெறிவதே புதிய அரசியல் முன்னணியின் நோக்கம் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். தமது குடியியல் உரிமைகளை முழுமையாக வழங்கிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அரசாங்கத்துக்கு கடந்த தேர்தலில் 4.5 மில…
-
- 1 reply
- 438 views
-
-
கொழும்பு நகர ௭ல்லைக்குள் வாழும் வறிய மக்களுக்கு வேறிடங்களில் வீடுகள் By General 2012-10-05 09:17:42 கையகப்படுத்தப்படும் இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கொழும்பு நகர ௭ல்லைக்குள் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு மாடி வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக, தெரிவு செய்யப்பட்ட 15 பிரதேசங்களில் காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை கையகப்படுத்தவுள்ளது. இவ்வாறு மாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் மக்கள் வாழ்ந்த வதிவிடங்கள் அல்லது காணிகள் கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைய வர்த்தக மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது ௭ன்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல…
-
- 0 replies
- 722 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரைப் பாதுகாக்க தோண்டிய பதுங்கு குழிக்குள் கொல்லப்பட்ட உடலைப் புதைத்த இராணுவத்தினர். சிறீலங்கா | ADMIN | OCTOBER 4, 2012 AT 20:20 ஒரு சில அதிகாரிகள் அண்மையில் இலங்கை இராணுவத்தினருடன் முள்ளிவாய்க்கால் பகுதியிற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டபோது இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித எலும்புக்கூடுகளை வட்டுவாய்க்கால் வடக்கே அமையப்பெற்றுள்ள L – வடிவிலான சவக் கிடங்குகளைக் காணக்கூடியதாக இருந்தன என தெரிவித்தனர். அவ்விடத்திற்கு இராணுவத்தினைத் தவிர பொதுமக்கள் செல்வது முற்றாக தடைச்செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விடம் இன்னும் துப்புரவு செய்யப்படாமலும் காட்சியளிக்கின்றது. மேலும் கண்ணிவெடிகள், தானியங்கித் துபாக்கிகள், RPG ரவைகள் எ…
-
- 0 replies
- 313 views
-
-
[size=4]வடக்கு கிழக்கில் பிரச்சினை இருக்கிறது. அதனை தீர்க்க வெளிநாடுகள் அவசியமில்லை என கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் தவைரான கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார். சில நாடுகள் இப்பிரச்சினையில் சுய இலாபம் தேட முயற்சிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் கூரே மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "சமயங்கள் என்ற அத்திவாரத்தில் குறிப்பாக பௌத்த சமய அடித்தளத்தில் கட்டியொழுப்பப்பட்ட இலங்கையின் கலாச்சாரம், பொருளாதார நலனுக்காக மாற்றப்பட கூடாது. பொருளாதார அபிவிருத்திக்காக கலாச்சாரமும் சுற்றுச்சூழலும் அழியவிடப்படுமாயின் இலங்…
-
- 5 replies
- 1k views
-
-
[size=5]இலங்கை இன்று: முள்வேலி முகாம்கள் விற்பனைக்கு![/size] [size=4]ஆக்கம்: பாரதி தம்பி[/size] [size=4]இலங்கையில் இப்போது முகாம்கள் இல்லை. 'முள்வேலி முகாம்கள்’ என்று நாமும் 'நலன்புரி மையங்கள்’ என்று இலங்கை அரசும் அழைத்த அகதி முகாம்கள் முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறது இலங்கை அரசு. 'இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கை’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால், உண்மை என்ன?[/size] [size=5]வனாந்தரத்தில் மக்கள்...[/size] [size=4]இலங்கை இறுதி யுத்தம் நிகழ்ந்த 2009 மே மாதத்தில் வவுனியா மெனிக்ஃபார்ம் பகுதியில் காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டு அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. சுமார் 1,750 ஏக்கர் நிலப் பரப்பில் உருவான இந்த முகாமில் அதிகபட்சமாக 2,2…
-
- 0 replies
- 748 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்…
-
- 8 replies
- 1k views
-
-
[size=2] [/size] இலங்கையில் ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பணிகளை குறைக்க தீர்மானம் வியாழக்கிழமை, 04 ஒக்டோபர் 2012 08:17 0 COMMENTS இலங்கையில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பணிகள் கிரமமான முறையில் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு வந்த செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை குறைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் உயர்ஸ்தானிகர் என்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கும், இடம்பெயர…
-
- 0 replies
- 523 views
-
-
[size=4]எம்மை எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர அனுமதியுங்கள். எம்மை மந்தைகள் போல் அடைத்து வைக்கா தீர்கள் என்று கோப்பாபிலவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.[/size] [size=4]மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர்வதற்கு என்று அழைத்து வரப்பட்ட போதும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படாது சீனியா மோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=4]இந்த மக்கள் தமக்கு எது வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், காடுகளுக்குள் தாம் அநாதைகளாக விடப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தனர். இந்தநிலையில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் காரணமாக இந்த மக்கள் குடிதண்ணீர்…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையுடன் மிகவும் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ள பங்களாதேஷில் ஒரு நாகரிகமற்ற செயல்களுக்கான இடமாக மாறியிருப்பது எதிர்பாராத ஒன்றாகும். எனினும் அங்கு இடம்பெற்ற பௌத்தர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தையிட்டு மிகவும் மனம் வருந்துகிறேன் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் முஸ்லிம்களால் பௌத்த விகாரை தீக்கிரையாக்கப்பட்டு பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் சபியுர் ரஹ்மானுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களைப் போல் பங்களாதேஷில் பௌத்தர்கள் சி…
-
- 1 reply
- 354 views
-
-
ஹிருணிக்காவுக்கு நாமலுடன் காதல் இல்லையாம் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் காதல் எதுவும் இல்லை என்றும் அவர் தனது நல்ல நண்பர் என்றும் மறைந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். " நான் கடந்த ஐந்து வருடங்களாக அமைச்சர் பியசேன கமகேவின் மகனான ரந்திம கமகேவை காதலித்து வந்தேன். ஆனால் தந்தையின் மறைவுக்குப் பின்னர் அந்தக் காதல் முறிந்துவிட்டது. பாடசாலை சென்ற காலகட்டத்திலும் நாமலுடன் காதல் இருக்கிறதா எனப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அதே பதிலைத்தான் நான் கூறினேன். ரந்திமவுக்கும் எனக்கும் இடையிலான காதல் முறிவடைந்த போதிலும் என்னால் அந்தக் காதலை மறக்க முடியவி…
-
- 1 reply
- 473 views
-
-
இந்த நொடியில், என் மனதில் (04 /10 /12 ) >>>>> சகோதர தமிழ் தேசிய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவன் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்! தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு உடன் முடிவு கட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க ஜனநாயக தமிழ் தேசிய அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும். அசாத்திய பொறுமையுடனும், ஒருவித சலிப்புடனும் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலான இந்த முரண்பாட்டு நிகழ்வுகளையும…
-
- 3 replies
- 646 views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் எதவிதமான உண்மையிமில்லை. எனது உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேறாது என வடக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். போர் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது அதனை இந்திய ஊடகவியலாளர்கள் நேற்று நேரில் பார்வையிட்டனர். அவர்களைச் சந்தித்த கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன மேற்கண்டவாறு அவர்னகளிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதாகத் தமிழகத்தி…
-
- 2 replies
- 529 views
-
-
திவிநெகும சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் நேற்று (04) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸனலி சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றுவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்தமை அனைவரும் அறிந்ததே. இவ்வாறானதொரு நிலையில் திடீரென நேற்று (04) மாலையே இந்தச் சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதும் தெரிந்த விடயமே. இவ்வாறு அவசர, அவசரமாகக் குறித்த சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் எவ்வாறு நிறுவேற்றப்பட்டது என்ற பின்னணிகள் தற்போது அம்பலத்துக்கு வந்து…
-
- 0 replies
- 848 views
-
-
தமிழ் மக்களின் சுடுகாடுகளையும்,இடுகாடுகளையும் சிங்களப்படைகள் ஆக்கிரமித்தது பழைய கதையகி இப்போது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் மையவாடிகளையும் சிங்களப்படைகள் ஆக்கிரமிக்கத்தொடங்கியுள்ளன.பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டுக்கல் பிரதேசத்தில் முஸ்லிம் மையவாடியை இராணுவம் சுவீகரித்துள்ளதாக பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ். வாஸிர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊறணியில் முகாமை அமைத்துள்ள இராணுவத்தினர் சட்டத்துக்கு முரணாக பொத்துவில் பிரதேச செயலாளருக்கோ, பிரதேச சபைக்கோ தெரியாமல் கொட்டுக்கல் பிரதேச மைய வாடியை சுவீகரித்து எல்லையிட்டுள்ளனர். இதனை நான் கடந்த 01ஆம் திகதி திங்கட்கிழமை சென்று பார்வையிட்டேன். இராணுவத்தின் இந்நடவடிக்கை குறித்து இப்பிரதேச ம…
-
- 0 replies
- 679 views
-
-
காலிவீதி இராணுவ முகாமின்காணியில் 140 மில்லியன் முதலீட்டுத் திட்டம்- 04 அக்டோபர் 2012 இந்திய ஐ.ரீ.சி நிறுவனத்துடன் உடன்பாடு:- கொழும்பு காலி வீதியில் முன்னர் இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை 140 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு திட்டத்திற்காக இந்தியாவின் ஐ.ரீ.சி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனை ஒன்றுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த இந்திய…
-
- 0 replies
- 455 views
-
-
அதிகாரப் பகிர்வு என்ற பேச்சிற்கே இடமில்லை; மஹிந்தவின் ஒப்பந்தம் அம்பலம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 4, 2012 AT 15:56 அதிகாரப் பகிர்வுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது அரசு இணங்காது என உறுதிபடத் தெரிவித்து ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, பங்காளிக் கட்சிகளுக்கிடையில் 2005 ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அதிர்ச்சித் தகவலொன்றை நேற்றுப் பகிரங்கமாக வெளியிட்டது. வடமாகாண மக்களுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எவருக்காக இந்த மாகாணசபை கொண்டு வரப்பட்டதோ, அவர்களுக்கே அரசு இன்று வஞ்சகம் இழைக்கின்றது மிகவும் கீழ்த்தரமான வகையில் செயற்படுகின்றது அரசின் செயற்பாடுகள் நாட்டுக்குத் தொடர்ந்தும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றது என்று…
-
- 0 replies
- 713 views
-
-
பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாலும் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடித்து வருவதாக இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்குப் பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் பி.கே. வர்மா தெரிவித்துள்ளார். கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகைள வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசயிமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக தீர்ந்துவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83790/…
-
- 3 replies
- 494 views
-
-
சிறீலங்காப் படையினரின் என்ன எதிர்ப்பு நடைபெற்றாலும் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, லட்சோப லட்சம் ஈழத் தமிழர்களை, ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த சிங்கள கொலைவெறி இனவாத அரசின் அமைச்சரும்இ ஜனாதிபதியின் சகோதரனுமான பசில் ராஜபக்ச நேற்று கொழும்பில் மிகவும் திமிராகவும், அகம் பாவத்தோடும் என்ன எதிர்ப்பு இருந்தாலும் சிங்கள படைச் சிப்பாய்கள் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள், இதுவரை இந்தியாவில்தான் பயிற்சி பெற்றும் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார். இந்திய அ…
-
- 0 replies
- 582 views
-