ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனைச் சந்திக்க விருப்பம் வெளியிட்டுள்ளார். http://www.puthinapp...?20120604106325
-
- 0 replies
- 500 views
-
-
அபிவிருத்தி நிதியின்றி மாகாண சபை திண்டாட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் மற்றும் ஆளுநர் சந்திரசிறிக்கான ஆடம்பர பங்களா அமைப்பு வேலைக்கென வடமாகாணசபையின் நிதிகள் சுரண்டப்பட்டுவிட்டதால் இவ்வாண்டில் புதிய வேலைதிட்டங்களையோ அவசர திருத்த வேலைகளையோ எதனையும் செய்யமுடியாத நெருக்கடி ஏற்பட்;டுள்ளது. யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் கட்டி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும் பிரச்சாரத்துடன் நாமலின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பு நீச்சல் தடாக வேலைகளை முன்னெடுப்பதாக கூறப்பட்ட போதும் அது இடை நடுவில் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமலின் செல்ல அ…
-
- 0 replies
- 422 views
-
-
திருட்டுத்தனமாக சற்று முன் குற்றவாளி ராஜபக்ஷ் லண்டனைச் சென்றடைந்துள்ளார். நேற்று தமிழ்கள் திரண்டு இருப்பதை அறிந்த மகிந்த லண்டன் செல்லாமல் வேறு ஒரு நாட்டில் தங்கி இருந்து பின்னர் இன்று திருட்டுத்தனமாக லண்டனைச் சென்றடைந்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/
-
- 1 reply
- 994 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்லத் தயாராக இல்லை என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன. 2009இல் விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக் குவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2008ஆம் ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதுவும் இருதரப்புப் பயணமாக அமையவில்லை. சார்க் மாநாட்டுக்காகவே அவர் இலங்கை சென்றார். கடந்த 2010 ஜுன் மாதம் புதுடெல்லிக்கு இருதரப்புப் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வருமாறு அழைத்திருந்தார். …
-
- 3 replies
- 979 views
-
-
மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது. அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த திட்ட…
-
- 0 replies
- 802 views
-
-
இலங்கையை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா பல வளிகளில் முயற்சிக்கிறது எனவும் இந்த இலக்கை அடைவதற்காக பிரிவினைவாதிகளுடன் அது சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். 'இலங்கையின் பூகோள அமைவிடமும் அதன் இயற்கை வளங்களும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானவை, இதனால் நாட்டை சீர்குலைக்க முனையும் பிரிவினைவாத அமைப்புகளை அமெரிக்கா சார்ந்திருந்து நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது' என அவர் கூறினார். மாரவிலவில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற அமெரிக்காவினதும் ஏனைய சக்திகளினதும் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்கு இதுவே காரணம் என அமைச்சர் வீரவன்ஸ தெரிவித்தார். இதனால்தான் அமெரிக்…
-
- 1 reply
- 735 views
-
-
யாழ் இளைஞர் யுவதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.முகமட் அஸமீ கபூர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மட்டக்களப்பின் மாநாகர சபை உறுப்பினராக உள்ள இந்நபர் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை பிரித்தானியா, கனடா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் தந்திரமாக பல இலட்சங்களை மோசடி செய்துள்ளார். ஆனைக்கோட்டை, உரும்பிராய், அச்சுவேலி, திருநல்வேலி, கோப்பாய், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேந்த இளைஞர் யுவதிகளிடம் 50, இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்துள்ளார் என விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் …
-
- 55 replies
- 3.1k views
-
-
ல்லாயிரக்கணக்க மக்களை துடிக்க துடிக்க கொலை செய்த கொடியவன் ராஜபக்சே லண்டன் வருகிறான். அவனை விரட்ட அனைத்து தமிழ் மக்களும் புறப்படுங்கள் வைகோஅழைப்பு. http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/
-
- 0 replies
- 811 views
-
-
மனிதநேயத்துக்கெதிரான மாபெரும் இனப்படுகொலையை மேற்கொண்ட போர்க் குற்றவாளி மகிந்த இராஜபக்சஆற்றவிருக்கும் உரையினை நிறுத்தக்கோரியும் பொதுநலவாய அமைப்பின் மனிதாபிமானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் இச்செயலைக் கண்டித்தும் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் ஐரோப்பியவாழ் தமிழ்ப்பெண்களுக்கு ஒர்அவசரமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள். தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த மகிந்த இராஜபக்சவை பிரித்தானிய மாகாராணியின் வைரவிழாவிற்கு அழைத்திருப்பது தமிழ்மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்றம் புரிந்து தமிழ்மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்த மகிந்த இராஜபக்ச லண்டன் மண்ணில் காலடிவைப்பதை ஒருபோதும் அனுமதிக் கூடாது எனவும் ,…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு நேசக்கரம் ஆதரவில் நேசம் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பயிற்சி நெறியின் முதல் உற்பத்தியாக நேசம் சாம்பிராணிக்குச்சி தயாரிப்பு பயிற்சி வகுப்பு 28.05.2012 திருக்கோவில் அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் இப்பயிற்சிப் பட்டைறையில் கலந்து கொண்டனர். ஒருநாள் பயிற்சி நெறியாக நடைபெற்ற பயிற்சியைப் பெற்ற 11பெண்களுக்கும் பயிற்சிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் நிறைவில் சான்றிதழ்களை முன்னாள் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் வழங்கினார். வழக்கறிஞர் பிறேம்நாத் சிறப்பரையோடு நிகழ்வு நிறைவாகியது. நேசம் உற்பத்திகளின் அடுத்த கட்டமாக பயிற்சிபெற்ற 11பெ…
-
- 26 replies
- 4.1k views
-
-
- கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்ல - வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம் பெற்ற வேர் அறுதலின் வலிகவிதை தொகுப்பு வெளியீட்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம். ஏனெனில் அவரும் தமது மண்ணிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அரசிலுக்குள் வந்து இன்று ஒரு அமைச்சராக இருக்கின்றார். அதே போன்று நானும் எனது யாழ் மண்ணிலிருந்து வெள…
-
- 4 replies
- 1.1k views
-
-
மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறியமுடிகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது ! எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அற…
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயத்தினுள் நேற்று முன்தினம் பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில், தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும். இந்தப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகி…
-
- 0 replies
- 762 views
-
-
கொழும்பில் தமிழர் ஒருவரின் சடலம் மீட்பு : மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு பிரதேசத்தை வசிப்பிடமாக.. கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு அருகில் இருந்து தமிழர் ஒருவரின் சடலம் மீட்;கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டிருந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 38 வயதான இந்த நபரின் மரணம் குறித்து பம்பலப்பிட்டி காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://globaltamilne...87/Default.aspx
-
- 3 replies
- 820 views
-
-
மஹிந்த ஒரு ஜனநாயகவாதி என்றால் வடக்கில் தேர்தலை நடத்தவும்! ஜயலத் சவால் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல் தொடர்பில் பயம் கிடையாது. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. ஆனால் ராஜபக்ஷ சர்வாதிகாரத்தை, அரசு பாதுகாக்க தேர்தல்களை பகுதி பகுதியாக வைப்பதும் ஒத்தி வைப்பதுமாக உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய ஜயலத் ஜயவர்தன, இந்த அரசு ஜனநாயக கோட்பாடுகளை முழுமையாக மீறியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சுமத்தினார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்த தயாரா என நான் மஹிந்த ராஜபக்ஷ்விடம் சவால் விடுக்கின்றேன். நீங்கள் ஜனநாயகவாதியாக இருந்தால் வடக்கு மாகாண மக்களின் ஜனநாயக …
-
- 0 replies
- 604 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை வரவேற்கப்பட வேண்டியது என அராசங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எவ்வாறு மீள ஒருங்கிணைந்து நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக புலி ஆதரவாளர்கள் தமிழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் இந்தியாவில் மீள ஒருங்கிணைந்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியா புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ…
-
- 2 replies
- 597 views
-
-
சில நாடுகள் பல்வேறு உபதேசங்களை செய்கின்ற போதிலும் அவற்றை அந்த நாடுகள் பின்பற்றுவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வல்லரசு, பிராந்திய வல்லரசு மற்றும் பொருளாதார கேந்திர நிலையம் என பல்வேறு பெயர்களில் சில நாடுகள், ஏனைய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதூகக் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கௌதம புத்தரின் கொள்கைள் கோட்பாடுகளை நாட்டுத் தலைவர்கள் பின்பற்றினால் தற்போது பல நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிணக்குகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltam...IN/article.a…
-
- 6 replies
- 788 views
-
-
உள்நாட்டு விவகாரம் குறித்து சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் இடமளிக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் சட்டமாஅதிபரும், சிறிலங்கா அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழு கொழும்பு வருவதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "போருக்குப் பிந்திய நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து நேரில் கண்டறிய வருமாறு நவநீதம்பிள்ளைக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் எந்தவொரு ஐ.நா உண்மை கண்டறியும் குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நவிப…
-
- 1 reply
- 708 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுண்டிக்குளம், சாலை பகுதியில் நண்டு பிடிக்கச் சென்ற 14 வயதுடைய சிறுவனொருவன் மர்மம் பொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய கூறுகையில், ”14 வயதுடைய மாணவனொருவன் தனது வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர்கள் நடந்து வந்து சாலை வாவியில் நண்டு பிடித்துக் கொண்டிருந்தபோது மர்மப் பொருளொன்று வெடித்ததால் அவனது காலில் பலத்த காயமேற்பட்டுள்ளது. காயமடைந்த சிறுவன் தற்சமயம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். மழை பெய்ததன் காரணமாக புதையுண்டிருந்த வெடிபொருள் வெளியே வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்ட…
-
- 1 reply
- 322 views
-
-
பிரித்தானிய மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) அமைப்பு பிரித்தானியாவின் இலண்டன் மாநகரக் காவல்துறைச் சேவையிடம் ஒரு முறையான புகார்மனுவை சமர்ப்பித்துள்ளது. அத்துடன், மகிந்தவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலண்டன் மாநகரக் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாட்டு மனுவில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை மகிந்த ராஜபக்ச இழைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, உலகளாவிய அதிகார விதிகளுக்கு உட்பட்ட பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு…
-
- 0 replies
- 977 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் இருந்து இலங்கை மீளாமையே அந்த நாட்டின் மீது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை கோருவதற்கான முக்கிய விடயமாக இருக்கிறது ௭ன்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. தமது அமைப்பு இந்த விசாரணையை கோருவதற்கு இதுவே காரணம் ௭ன்று மன்னிப்பு சபையின் இலங்கை விடயங்களுக்கு பொறுப்பான நிபுணர் யோலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதஉரிமை மீறல்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. குற்றங்கள் தொடர்பான நீதிமுறை சீரற்றுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை ௭ன்று யோலண்டா சுட்டிக்காட்டியுள்ளார். போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளில் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ௭னினும், அதனை இலங்கை…
-
- 0 replies
- 416 views
-
-
மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது. அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தி…
-
- 0 replies
- 979 views
-
-
நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை. இதனால் நாடு பிளவுபடப்போவதில்லை, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும்படி நான் வலியுறுத்துவேன். எனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதி நிதிகளை நியமிக்க வேண்டும். மீன்பிடி நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கியதால் உலகில் எந்தவொரு நாடும் பிளவுபட்டதாக சரித்திரத்தில் இல்லை. தனி நாடுதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று சற்று இறங்கி வந்து ஐக்கிய நாட்டுக்குள் அதிகாரப் பரவலாக்கலை ஏ…
-
- 0 replies
- 502 views
-
-
சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டனர். ஆறுமுகன் தொண்டமானின் மகள் நாச்சியாரின் திருமண வரவேற்பு இந்திய முறைப்படி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு வேட்டர்எட்ஜ் விடுதியில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் பங்கேற்பதற்காக, தாய்லாந்துக்கு நான்கு நாள் பயணமாகச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெள்ளிக்கிழமை காலையில் கொழும்பு திரும்பியிருந்தார். திருமண வரவேற்பில் பங்கேற்க முன்னாள் அதிபர் சந்தரிகாவும், அவருக்கு நெருக்கமான இருந்த அமைச்சர்களில் ஒருவருமான மங்கள சமரவீரவும் நேரகாலத்துடனேய…
-
- 0 replies
- 601 views
-
-
தமிழ் புலம்பெயர் சமூகம் தகவல் தொழில்நுட்பத் துறையை பிழையாக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை துஸ்பிரயேகம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற பெண்கள் ஊடகப் பேரவையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையை பிழையாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இனப்படுகொலை அரசும் அதற்கு ஆதரவளிக்கும் சுமந்திரன் உட்பட்ட இலங்க…
-
- 21 replies
- 2k views
-