ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் 36 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா 70 முதல் 80 வரையான இலங்கை அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அதில் 40 பேரை நாடு கடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் படி 40 அகதிகளை நாடு கடத்தாத பிரித்தானியா ஏனைய 36 இலங்கை அகதிகளையும் நேற்றைய தினம் நாடு கடத்தியது. இவர்கள் அனைவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். http://www.saritham.com/?p=61170
-
- 3 replies
- 977 views
-
-
மகசின் சிறையிலுள்ள எனது கணவனை விடுதலை செய்யுங்கள்! ஜனாதிபதிக்கு கடிதம் (கடிதம் இணைப்பு) புதிய மகசின் சிறைச்சாலையில் இருக்கும் தனது கணவனை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இளங்கேஸ்வரன் சுதர்சினி என்ற இப்பெண், 13 வருடங்களாக தண்டனை பெற்று வரும் சக்திவேல் இளங்கேஸ்வரன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தமது இல்லற வாழ்க்கை சபீட்சமடைய, தனது கணவனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இளங்கேஸ்வரன் சுதர்சினி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தினை மேலே நீங்கள் காணலாம். (அத தெரண)
-
- 0 replies
- 430 views
-
-
புத்தளத்தில் இருந்த - இர்ஷாத் றஹ்மத்துல்லா - வடக்கில் வந்து முஸ்லிம்கள் குடியேறுங்கள் என்று பேச்சளவில் மட்டும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மக்கள் மீள்குடியேற வரும் போது கூட்டமைப்பின் சில ஆயுதக் குழுக்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மதம் சார்ந்தவர்களும் அதனை தடுக்கும் பணியினை செய்கின்றனர் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார் வேர் அறுதலின் வலி என்னும் கவிதை தொகுப்பின் வெளியீடு இன்று கொழும்பு முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்ச்ர் றிசாத் பதியுதீன் இதனை கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்த்pன தலைவர் என்.எம்.…
-
- 3 replies
- 790 views
-
-
அமெரிக்காவிடம் இரகசியமாகக் கையளிக்கப்பட்ட- நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயற்திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கோர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஐதேக கோரியுள்ளது. இதுதொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கு நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடந்த மே 18ம் நாள் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியை சந்தித்தபோது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சமர்ப்பித்த செயற்திட்ட அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கோ பொதுமக்களுக்கோ பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர…
-
- 1 reply
- 413 views
-
-
26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேறோ நகரசபை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு இனப்பிரச்…
-
- 6 replies
- 1.2k views
-
-
அடுத்த வாரம் நடக்கயிருக்கும் பிரிட்டன் அரசின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தனது பயணத்தை திட்டமிட்டிருப்பதும் அக்கொண்டாட்டத்தின்போது மேன்சன் ஹவுஸில் தனதுரையை பேசயிருப்பதும் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. தமிழர் இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமையன்று லண்டன் காமன்வெல்த் செயலகத்தின் முன் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. சீரான அரசியல் செயலற்றிருந்த சீனாவையும் ரஷ்யாவையும் சாடிவந்த பிரிட்டன், ராஜபக்சேவை பிரிட்டனில் நுழைய விடுவதும் அதிலும் அரசியாரின் ஆண்டுவிழாவிற்கு அழைப்பு விடுத்ததும் அதன் வஞ்சகத்தையே புலப்படுத்துகிறது என தமிழர் இணைப்புக் குழுவைச் சார்ந்த சசிதர் மகேஸ்வர…
-
- 0 replies
- 820 views
-
-
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார். மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000…
-
- 0 replies
- 883 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக உயர்சபையை அமைப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள தமிழரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், தமிழரக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் ரொலோவின் சார்பில் சிவசக்த…
-
- 23 replies
- 1.4k views
-
-
அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியாளர் ஒருவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கடந்த 28ஆம் திகதி தாக்கிய சம்பவத்தை கண்டித்து ஊடகவியாளர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை பொதுச்சந்தை சதுக்கத்தின் முன்னால் இன்று ஒன்று கூடிய ஊடகவியலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் முஸ்லிம் ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், அம்பாறை மாவட்ட மீடியா பேரம், மூண்பிறைட் ஊடகவியாளர் சங்கம், தேசிய ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், ஆகிய ஊடக சங்கங்கள் ஒன்றினைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இதில் ஜவாத்தின் அரசியல் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைப்போம், ஊடகவியாளருக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து, பேனாமுனைக்கு முன் காடைத்தனம் வெற்றுத் …
-
- 1 reply
- 744 views
-
-
பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள வருகின்ற போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து எதிர் வரும் 4ம் திகதி ஜூன் திங்கட்கிழமை மதியம் ஒருமணியில் இருந்து மாலை எட்டுமணிவரை அவர் தங்கும் உல்லாச விடுதியின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களையும் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களையும் ஒன்று திரண்டு வந்து எங்கள் எதிர்ப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம். 4th of June 1p.m - 8p.m DORCHESTER HOTEL Park Lane, London, W1K 1QA Nearest underground station: HYDE PARK அதைத்தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை 6ம்திகதி பொதுநலவாய பொருளாதார பேரவையில் நடைபெற இருக்கின்ற …
-
- 1 reply
- 972 views
-
-
தமிழினப் படுகொலைதாரியும், போர்க் குற்றவாளியுமான மகிந்த இராஜபக்ச சுதந்திரமாக நடமாடுவதைத் தடுப்போம் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எமது சுதந்திர விடுதலைக்காக ஐ.நாவின் தீர்மானங்களுக்கமைய சுயமாக போராடிய ஓர் இனம் நாம். உலக மனிதாபிமான விழுமியங்களுக்கு மதிப்பளித்து ஓர் சமாதான வழிமுறையில் எமக்கான தீர்வைக் கண்டுவிடலாம் என்று திடமாக நம்பி சர்வதேசங்களுடன் கைகோர்த்து நடந்தவர்கள் நாம். நமது தேசியத் தலைவரது தீர்க்கதரிசனமான செயற்பாடுகளோடு இதுவரை காலமும் உயிர்ப்புடன் இணைந்திருந்தவர்கள் நாம். ஆனால் இலங்கையின் அரச பயங்கரவாதமும், சர்வதேச பயங்கரவாதமும் கைகோர்த்து எம் தமிழ் உறவுகளை முள்ளிவாய்க்…
-
- 0 replies
- 616 views
-
-
எமது மக்கள் அனைவரினையும் யூன் மாதம் 6ஆம் நாள் காலை 9:00 மணிக்கு லண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். மாபெரும் போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில்(Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில்(Marlborough House, Pall Mall, London…
-
- 0 replies
- 865 views
-
-
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விடுதலைப் புலிகளாலும் மேற்குலக நாட்டவர்களினாலும் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இவர்களின் நிழல்கள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவி பிரிவினைவாதத்திற்கு நாட்டை நகர்த்தி செல்கின்றனர் எனவும் வீரவங்ச தெரிவித்துள்ளார். நாட்டின் மையப் பகுதியை நோக்கி பிரிவினைவாத சக்திகளால் பிரயோகிக்கப்படும் சவால்களை ௭திர்கொள்ள பொதுமக்களின் ஆதரவு அரசிற்கு அத்தியாவசியமானதாகும். எனவே பேதமின்றி அரசுக்கு ஆதரவு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூபாவின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய சர்வதேச புலிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முகம் கொடுக்கும் வகையில் மத்திய வங்கி உசார் நிலையில்…
-
- 1 reply
- 762 views
-
-
(கே.சஞ்சயன்) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பதற்கு, கடந்தவாரம் ஐ.நா பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளது. இவரது பதவியை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுமதி கோரியதை அடுத்து, இந்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் ஏகமனதான அங்கீகாரம் கிடைத்தது. 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா பொதுச்சபையில் நவநீதம்பிள்ளையின் பதவி நீடிப்புக்கு எந்த நாடுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமான விடயம். நவநீதம்பிள்ளையை கடுமையாக எதிர்த்த நாடுகளில் ஒன்று இலங்கை. அவர் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஐ.நா சாசனங்களை மீறிச் செயற்படுவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் க…
-
- 0 replies
- 1k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானதையடுத்து, தனது "அனோமா பொன்சேகா மன்றத்தில்" இணைந்துகொள்ள பெரும் எண்ணிக்கையானோர் ஆர்வம் காட்டுவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி அனோமா பொன்சேகா மன்றத்தை அனேமா பொன்சேகா ஸ்தாபித்தார். இவ்வமைப்பு பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்கான அமைப்பாகும்.இந்த மன்றத்தில் அங்கத்தவர்களாக இணைவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். இம்மன்றத்தில் இணைய விரும்புவதாக கூறும் பலரின் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அடுத்த மாதம் புதிய அங்கத்தவர்களை சேர்க்கவுள்ளோம். இதில் பெரும் எண்ணிக்கையானோர் இணைவர் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். அனோமா பொன்…
-
- 0 replies
- 612 views
-
-
-
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவற்றில் சம்பந்தப்பட்ட ஐந்து தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றக் காவலில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய அவரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு அமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதிகள் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்ற சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 1982 ஆம் ஆண்டு திருத்த விதிகளுக்கம…
-
- 1 reply
- 369 views
-
-
தமிழர்கள் வந்தேறுகுடிகள்தான் என்பதை நிரூபிப்பதற்கு விவாதம் தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள் உள்ளன எனக் கூறி கலாநிதி விக்கிரமபாகு கரு ணாரட்னவின் சவாலை ஏற்கமறுத்துவிட்டார் எல்லாவ மேதானந்த தேரர். தமிழர்கள் எந்த உலகிலிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துத்தான் வாழவேண்டும் என்றும் தேரர் கூறுகின்றார். வடக்கு, தமிழர்களுக்கு மட்டும் உரிய பிரதேசம் அல்ல. யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பி.பி. பாதுகாப்புச் செயலரின் கூற்றை வரவேற்று அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வகையில், “வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்குக்கு உரிமை கோருவதா” எனக் கடும் போக்கிலான கருத்துகளை முன்வைத்தார் ஜாதிக ஹெல உ…
-
- 1 reply
- 608 views
-
-
சிறீலங்காவின் சிங்கள பௌத்த துறவி ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை நேற்று வெள்ளிக்கிழமை ஐஸ்வேத் க்ரௌவ்ன் நீதிமன்றம் வழங்கியது. டல்வேட்டன் வீதியில் உள்ள குரொய்டொன் என்ற இடத்தில் வசித்து வந்த பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க தேரரும்இ தேமஸ் பௌத்த விஹாரை சிறீலங்காவின் கம்பஹா பரிவேனாதிபதியுமான ஸ்ரீ கல்யாணி சமாகி தர்ம மஹா சங்கத்தின் தலைவருமான பஹலாகம சோமரத்ன தேரருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறுமி ஒருவரை தகாத முறையில் தாக்கிய குற்றச்சாட்டுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவரை சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து ஆயுட்கா…
-
- 1 reply
- 540 views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணத்திற்கு எதிரான இரண்டாவது மக்கள் போராட்டம் (01-06-2012) லண்டனில் இடம்பெற்றது.பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மத்திய லண்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளில் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்ற நபர் பிரித்தானிய மண்ணில் காலடி வைக்க தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறினர். …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய இந்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 30, 31ம் தேதிகளில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் 16வது அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமது நிஜாடின் விடுத்த அழைப்பு கடிதத்தை அவர் கொடுத்தார். இலங்கை மற்றும் ஈரான் சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதற்கு ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந…
-
- 2 replies
- 657 views
-
-
பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறீலங்காவின் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை படைபுலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 36 பேர் இன்று காலை பிரித்தானியாவில் இருந்து கொழும்பை சென்றடைந்துள்ளார்கள். அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று பின்னர் புலனாய்வு விசாரணக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-36-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை இறுதிப் போரின் போது ஐ.நா சபையின் கண்களில் மண்ணைத் தூவி பல காரியங்கள் நடந்துள்ளன. போர்க் குற்றத்தைவிட பாரிய சர்வதேச ஏமாற்று கபட நாடகம் ஒன்று நடந்துள்ளது. இதை ஐ.நா அம்பலப்படுத்துமா என்ற கேள்வியை சனல 4 தொடர்ந்து கேட்டு வந்தது. இந்த நிலையில் ஐ.நாவின் புதிய குழு அமைப்பு சிறிய நம்பிக்கை தருகிறது. இது குறித்த செய்தி …. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறி வதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதால் அரசுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது. என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணித்தல், அரசியல் தீர்வை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட…
-
- 2 replies
- 694 views
-
-
யாழ் போக்குவரத்து பஸ்களில் நடப்பது என்ன? யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்கு வதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக் கொண்டு செயற் படுகின்றன. யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்குவதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. போக்குவரத்து பிரச்சினை பற்றி எத்தனையோ முறை ஊடகங்கள் கூக்குரல் இட்டபோதும் அவற்றை கிஞ்சித்தேனும் கணக்கில் எடுக்கவில்லை இந்தப் போக்குவரத்துச் ச…
-
- 2 replies
- 1.7k views
-