ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவ…
-
- 0 replies
- 563 views
-
-
சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளை…
-
-
- 1 reply
- 539 views
-
-
Published By: RAJEEBAN 09 MAY, 2024 | 08:16 AM இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ்சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2015 முதல் 2022 வரை இலங்கை படையினரால் தாக்கப்பட்ட பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய சித்திரவதைகளுக்குள்ளான 123 தமிழர்களின் விபரங்களை அடிப்படையாக வைத்து புதிய அறிக்கையை வெளியிட்;டு…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 MAY, 2024 | 02:50 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 MAY, 2024 | 02:37 AM உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் புதன்கிழமை (8) கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம் மகஜர்களை கையளித்தார். அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பிற்கும் பாசத்திற்கும் இனிய எமது தமிழக மீனவ தொப்புக்கொடி உறவுகளே, மற்றும் வடமாகாண யாழ்ப்பாண மீனவ உறவுகளே. உங்கள் அன்பின் மாதகல் N.V.சுப்பிரமணியம் ஆகிய நான் வேண்டி நிற்பது, இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இரண்டும் எ…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன. பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 04:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் தற்போதைய பலவீன நிலைமை,சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும். அப்போது யாருக்குப் பொருளாதாரம் தொடர்பில் புலமை உள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்,அவரும் தெரிந்து கொள்வார் எனப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 2014-2015 ஆம் ஆண்டில் 16330 கோடி ரூபாய்க்கு மேல், 2015-2016 இல் 13084 கோடி ரூபாய்க்கு மேல், 2016-2017 ல் 2800 கோடி ரூபாய்க்கு மேல், 2017-2018 இல் 417 கோடி ரூபாய்க்கு மேல், 2018-2019 இல் 4413 கோடி ரூபாய்க்கு மேல், 2020 - 2021 இல் 4970 கோடி ரூபாய்க்கு மேல், 2021 2022ல் 16358 கோடி ரூபாய், 2022 - 2023 இல் 7130 கோடி ரூபாய் மற்…
-
-
- 8 replies
- 782 views
- 1 follower
-
-
(புதியவன்) கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர். பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த குறித்த சிறைக் கைதிகளின் உடல்கூற்றுப் பரிசோதனை தொடர்பில் இறப்பு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் ஐஸ் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில…
-
-
- 4 replies
- 591 views
-
-
இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாவுக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் இரண்டு கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபா வரை குறைந்துள்ளது. இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம் (newuthayan.com)
-
-
- 7 replies
- 674 views
-
-
பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு! வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளர் - குவியும் பாராட்டுக்கள் வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், ஒரு லட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றுநாற்பது இலங்கை ரூபா பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை இன்று (07) சாலையில் …
-
- 3 replies
- 410 views
-
-
Published By: VISHNU 08 MAY, 2024 | 01:24 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) சுற்றுலாப் பயணிகளுக்கு விசா சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக் கிடைக்கும் நிதி, மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அதனால் இது தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்ப…
-
- 1 reply
- 647 views
-
-
08 MAY, 2024 | 02:34 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் …
-
-
- 7 replies
- 671 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (க…
-
- 0 replies
- 352 views
-
-
08 MAY, 2024 | 04:04 PM (எம்.நியூட்டன்) மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்…
-
- 2 replies
- 285 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 11:55 AM முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/182955
-
- 4 replies
- 389 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 12:05 PM இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது. செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும். 375 இரா…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 11:30 AM இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க …
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/301111
-
-
- 33 replies
- 3.4k views
-
-
மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இலங்கை மின்சார சபை அதற்கு கால அவகாசத்தை கோரியிருந்ததாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகள் கிடைத்ததன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான …
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 09:47 AM குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகதம்பிரான் ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று, மீண்டும் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் மீளக் குடியே…
-
-
- 3 replies
- 461 views
- 1 follower
-
-
நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மதஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமத…
-
- 2 replies
- 443 views
-
-
கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239 குடும்பங்களைச்சேர்ந்த 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர் செட்டியார்குறிச்சி, ஆலங்கேணி,ஞானிமடம், கொல்லக்குறிச்சி, மட்டுவில் நாடு கிழக்கு, பரமன் கிராய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இவர்களுக்கான குடிநீரை பூநகரி…
-
- 0 replies
- 178 views
-
-
Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 01:21 PM ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியம் விமானியும் விமான பணியாளரும் தங்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார்கள், இன பாரபட்சத்தை வெளிப்படுத்தினார்கள் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் பணியாளர்களும் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பாரிய இனவெறி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்பிரல் 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலத்த நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமான சேவையை வலுப்படுத்துவதற்காக டிசம்பரில் பெல்ஜி…
-
- 0 replies
- 247 views
-
-
07 MAY, 2024 | 12:12 PM நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது. இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம்…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-