Jump to content

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களைக் கூலிப்படைகளில் அமர்த்தும் மனித கடத்தல் செயற்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
08 MAY, 2024 | 11:55 AM
image
 

முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/182955

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேர்ந்த 200க்கும் அதிகமான முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய உக்ரைன் போர்முனையில் உயிரிழந்துள்ளனர் - முன்னாள் படைவீரர் தகவல்

Published By: RAJEEBAN   09 MAY, 2024 | 02:17 PM

image

பல குழுக்களால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய எல்லையில் உள்ள  கொலைகளங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய  முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

russia_ukraine_war_may_2024.jpg

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே என்னை ரஸ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர். அதற்காக 1.6 மில்லியன் செலுத்தினேன் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவில் தமிழில் பேசிய ஒருவர் எங்களை வரவேற்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஸ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர் சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் எங்களிற்கு உதவினார் அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றார்கள் அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர் அதே எண்ணிக்கையானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஸ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஒரு கிழமைக்குள் கடவுச்சீட்டு விசாவுடன் கிடைக்கின்றது. அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஸ்யாவிற்கு அனுப்பப்படுகின்றனர் எனவும் அங்கிருந்து தப்பிவந்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்குக் கடத்தும் நடவடிக்கை தொடர்பில் மேஜர் ஜெனரல் ஒருவர் கைது!

10 MAY, 2024 | 12:22 PM
image
 

ரஷ்ய இராணுவத்தில் வேலை பெற்ற தருவதாகக் கூறி இலங்கை இராணுவ வீரர்களைக் கடத்தியதாகக் கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வு  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  என்பதுடன் இவர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது, இராணுவ தலைமையகத்திலிருந்து  ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் தகவல் அடங்கிய பட்டியலை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்ததுள்ளது . 

இந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் தகவல் அடங்கிய பட்டியலைப் பயன்படுத்தி இலங்கை இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்குக் கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள  இராணுவ  முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து பொலிஸார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183137

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா - உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு

10 MAY, 2024 | 01:10 PM
image

(எம்.மனோசித்ரா)

ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களைச் சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்ய - உக்ரேன் போருக்கு சம்பந்தப்பட்டுள்ள  ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112 441 146 ஊடாக பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் நபர்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு நபர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அவ்விவரங்களைத் தெரிவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படுவதனால், இது தொடர்பில் அனைவரும் விசேட கவனம் செலுத்தி, தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

https://www.virakesari.lk/article/183148

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழப்பு : ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பாதுகாப்பு சபையில் சாட்சியம்

Published By: DIGITAL DESK 7    12 MAY, 2024 | 09:40 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாட்சியமளித்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி, ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று மீண்டும் இலங்கைக்கு  தப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளனர். இவர்களை போரில் தொடர்புப்படுத்தியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு சபையில் வலியுறுத்தினார்.

இலங்கை பாதுகாப்பு படைகளை சார்ந்தவர்களை ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்க செய்தவர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோரையும் அன்றைய தினம் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு தகவல்கள் கோரப்பட்டது. ஏனெனில் குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பல தகவல்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இதன் பிரகாரமே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு தப்பிவந்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் குறித்து தகவல்கள் வழங்கப்பட்டது. உடனடியாக தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட பாதுகாப்பு சபை அதிகாரிகள், முழு விபரத்தையும் கேட்டறிந்தனர். குறித்த இராணுவ அதிகாரி வழங்கிய தகவல்களுக்கு அமைய, இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு முப்படைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், நாட்டு மக்களை தெளிவுப்படுத்தி ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கையர்கள் பங்கேற்பதை தவிர்க்க ஊடகங்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரட்னவுக்கு ஆலோசனை வழங்கினார்.

https://www.virakesari.lk/article/183284

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.