ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலில் களமிறங்காமல் சுயேட்சையாக போட்டி? அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பெயரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான குழவினர் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதன் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதனால் தலமைப் பதவியைக் காரணம் காட்டி நீதிமன்றம் செல்வது அல்லது தேர்தல் ஆணையகத்தில் முறையிடுவதானால் சிக்கல்கள் உருவாகும் என்பதனால் சுயெட்சையாக தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியினரையும் மற்றும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது பட்ட…
-
- 0 replies
- 820 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கியமை துர்ப்பாக்கிய நிலைமை. – சி.வி ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல், போட்டிகளில் மக்கள் ஈடுபடுவதுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களுக்கு அதற்கென விசேட ப…
-
- 3 replies
- 732 views
-
-
அகில கால மீளாய்வு அமர்வுகளில் 99 நாடுகள் இலங்கை குறித்து பேசவுள்ளன 28 அக்டோபர் 2012 அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகள் முன்கூட்டியே இலங்கை தொடர்பான கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. மனித உரிமை மீறல்கள், வட மாகாணசபைத் தேர்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, செக்குடியரசு, கனடா, ஸ்பெய்ன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தின் போது ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒதுக…
-
- 0 replies
- 387 views
-
-
அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம்! பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2023/1361395
-
- 0 replies
- 595 views
-
-
அகிழ்சை வழியில் அடுத்த கட்டப் போராட்டம்! - வவுனியா மாநாட்டில் மாவை நீண்ட உரை [sunday 2014-09-07 17:00] இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. என்று, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும்பேதே அவர் இதனைத் தெரிவித்தார். நீண்ட உரையை ஆற்றிக்கொண்டிருந்த மாவையின் குரல் திடீரென ஸ்தம்பித்தது. அவர் தொடர்ந்து பேசமுடியாமல் அவஸ்த்தைப்பட்டு தனது ஆசனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து அவரது உரையைக் கட்சிப் பிரதிநிதி ஒருவர் வாசித்தார். அந்த உரையின் முழுவிவரம் வருமாறு: …
-
- 0 replies
- 507 views
-
-
அக்கராயன் கரும்புத்தோட்டக் காணியை தாரை வார்த்து விட்டார் முதலமைச்சர் Share அக்கராயன் கரும்புத் தோட்டக்காணியான 210 ஏக்கர் நிலத்தை வடக்கு முதல்வர் முறையற்ற விதத்தில் குத்தகைக்கு விட்டுள்ளார். அதனை அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கவனவீர்ப்பை மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று முன்தின அமர்வில் கொண்டு வந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அக்கராயன் பகுதி கரும்புத் தோட்டக்காணியை முதல்வர் சண்டியர்களுக்கும், செல்வந்தர்களுக்கு…
-
- 0 replies
- 283 views
-
-
அக்.7ல் தென்கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா அம்பாறை மாவட்டம் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 6வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மையில் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு நிகழ்வுகளின்போது கலை கலாச்சார பீடத்தைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கும், பிரயோக விஞ்ஞான பீடத்ததைச் சேர்ர்நத 39 மாணவர்களுக்கும், இல்லாமிய அரபு மொழிபீடத்தைச் சேர்ந்த 242 மாணவர்களுக்கும் வெளிவாரியாக பயின்ற 261மாணவர்களுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளது. இந்த பட்டமளிப்பு நிகழ்வின் முதல் அமர்வின்போது இந்தி…
-
- 0 replies
- 336 views
-
-
அக்கரப்பத்தனையில் மத முரண்பாட்டை உருவாக்க திட்டமா? January 2, 2022 அக்கரபத்தனை நகரில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் …
-
- 5 replies
- 542 views
-
-
அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை! கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில்…
-
- 0 replies
- 589 views
-
-
Published By: VISHNU 12 APR, 2023 | 03:25 PM கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் தனது ஐந்து மாத கர்ப்பிணியான காதலித்து திருமணம் செய்த மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். இச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவத்தில் 33…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
அக்கராயன்குளத்தில் முன்னேறும் படையினருக்கு ஆதரவாக MI௨4 ரக உலங்கு வானூர்திகள் மூலம் இன்று மாலை 6:15 அளவில் வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். அக்கராயன்குளத்தில் சிறீலங்கா படையினரது 57வது படைப்பிரிவே இன்று காலை முதல் முன்னேற்ற முயறச்சியை மேற்கொண்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html
-
- 0 replies
- 1.8k views
-
-
[size=3] கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் எட்டாங்கட்டை கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குலிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் புலியை சுடும் இராணுவத்தின் நடவடிக்கை தோல்வியில் முடிந்தது அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியை தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் மறைந்தது.[/size] [size=3] எட்டாங்கட்டையில் புலி, இராணுவத்தினர் சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் பிரதேச மக்கள் கிண்டலாக பேசிக் கொள்வதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்[/size] [size=3] http://www.globaltamil…
-
- 0 replies
- 1k views
-
-
அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:07 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி: கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் பட…
-
- 5 replies
- 2.7k views
-
-
அக்கராயனை ஆண்ட ஈழக் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு பிரமிப்பான சிலை : ஈழத்தில் 13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு இன்று சிலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார். இவரது பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் அக்கிராசன் என்பது மருவி அக்கராயன் என காலப்போக்கில் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்க…
-
- 0 replies
- 630 views
-
-
அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…
-
- 8 replies
- 3.1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான மண் அகழ்வால் பாரிய சூழலியல் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன் ஆறு 7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து குடமுருட்டி ஆற்றுடன் இணைகின்றது. இந்த ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் நடைபெறும் மண் அகழ்வால் ஆற்றுப் பகுதியிலுள்ள அக்கராயன் மத்தியப்பகுதி, அக்கராயன் கிழக்குப்பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடிநீர் பெரும் ஆபத்;தை எதிர்நோக்கியுள்ளது. அக்கராயன்மத்தி என்பது கடல் மட்டத்திலிருந்து 115 அடிக்கு மேலான உயர்வான பகுதியாகும். மேற்படி பகுதிகளில் நிலத்தடி நீரை தக்கவைப்பதில் அக்கராயன் ஆறு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது அக்கராயன் ஆற…
-
- 6 replies
- 677 views
-
-
அக்கராயன் களமுனையில் இன்றும் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயன் கோணாவில் பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்ட்டுள்ளன. கோணாவில் பகுதியில் மும்முனைகளில் செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கான முறியடிப்புத் தாக்குதல் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ளது. இதில் படையினர் பலத்தை இழப்புக்களுடன் பின்வாங்கினர். புதினம்
-
- 0 replies
- 682 views
-
-
-
-நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சியின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ், 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான கூட்டம் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில், நேற்று (24) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளால் அக்கராயன் குளத்தின் 4ஆம் வாய்க்கால் உட்பட முக்கிய வாய்க்கால்கள் புனரமைக்கப்பட வேண்டும், நெல்லுக்கான நிர்ணய விலை அறுவடை தொடங்க முதல் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயிகளின் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/வ…
-
- 1 reply
- 956 views
-
-
கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக செய்கைக்குத் தேவையான நீர், 14ஆம் திகதி திறந்துவிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய குளமான அக்கராயன் குளத்தின் கீழ் இந்த வருடம் 2,500 ஏக்கரில் நெல் மற்றும் உபபயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செய்கைக்குத் தேவையான நீரானது திறந்து விடப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டால் சிறுபோக செய்கையில் 4000 ஏக்கரில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ள முடியும். குளத்தை முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு 1,000 மில்லியன் ரூபாய் தேவையென பொறியலாளர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/144048#sthash.Axo0ahSy.dpuf
-
- 0 replies
- 585 views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கராயன்குளத்திலிருந்து ஏ- 9 வீதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்ட இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதும் அவர்கள் அமைத்திருந்த பாரிய மண்ணரன் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவும் விசேட படையணியொன்றும் அடம்பன், அடம்பன் வடக்கு மற்றும் புதுமுறிப்புக்குளம் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை எதிர்கொண்டன என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 3k views
-
-
கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் நீர் சிறுபோக செய்கையின் தேவைக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இடதுகரை வாய்க்கால் ஊடாக வயல் நிலங்களுக்குச் செல்லும் நீர் அக்கராயன் அணைக்கட்டு வீதியில் ஓரிடத்தில் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதன் காரணமாக குளத்தின் நீர் அக்கராயன் ஆற்றினைச் சென்றடைந்து வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றது. அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு 2500 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. குளத்தின் நீர் நெற் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. அக்கராயன் அணைக்கட்டு வீதியில் அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக வீதியின் குறுக்கறுத்து வாய்க்காலில் செல்லும் நீர் வீணாகப் பாய்வதன் காரணமாக நீர் விரயமாகின்றது. இப்பகுதியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் இது…
-
- 0 replies
- 792 views
-
-
அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இதேநேரம், அக்கராயன் கோ…
-
- 1 reply
- 1.3k views
-
-
அக்கராயன் தெற்கில் கடும் மோதல். படையினரது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு - விடுதலைப் புலிகள் [ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 11:08.40 AM GMT +05:30 ] வன்னியில் அக்கராயன் தெற்கு பிரதேசத்தில் சிறீலங்கா படையினர் புதிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு எதிராக கடுமையான முறியடிப்புத் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பித்துள்ள இந்த முன்னகர்வு முறியடிப்பில் சிறீலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கொல்லப்பட்ட படையினரது பல உடலங்களும், ஆயுத தளபாடங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/view.php…
-
- 14 replies
- 4.1k views
- 1 follower
-
-
நன்னீர் மீன்பிடித் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வட மாகாண மீன் பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரனால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் குளம் மற்றும் வன்னேரிக்குளம் ஆகிய குளங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. இதன்படி இரு குளங்களிலும் தலா 75ஆயிரம் நன்னீர் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. http://malarum.com/article/tam/2014/10/25/6458/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A…
-
- 0 replies
- 398 views
-