ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல், காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்த தீர்வு எட்டப்படல், வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்புவாழ்வை ஏற்படுத்துதல் உட்பட பல தீர்மாஅடங்கிய தீர்மானங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்டன. மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகூடிய அத…
-
- 0 replies
- 765 views
-
-
மட்டக்களப்பு ஊறணியில், கடும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுக்கொண்டுள்ள இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்த பஸ் வண்டி மீது இன்று பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த சிலரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறதது. அதே நேரம், தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மாநாட்டு மண்டபத்தக்குள் நுழைந்த சிலர் மாநாட்டைக்குள் நுழைந்து குழப்பமும் விளைவிக்க முனைந்தனர். இருப்பினும் அவர்களை பொது மக்கள் வெளியேற்றினர். இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தமது மாநாட்டைக் குழப்புவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளி…
-
- 0 replies
- 857 views
-
-
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது. பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந…
-
- 0 replies
- 839 views
- 1 follower
-
-
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதுபற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்பக் கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,தொடர்ந்து அது பற்றிக் கேள்வி எழுப்பினால் செவ்வியை நிறுத்தி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். கொழும்பில் இருந்த வெளியாகும் ‘சண்டேலீடர்‘ வாரஏட்டின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்சுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு சீறிப் பாய்ந்துள்ளார். அந்தச் செவ்வியில் சரத் பொன்சேகா தொடர்பாக பிரெட்ரிகா ஜான்ஸ் எழுப்பிய கேள்விகளும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச வழங்கிய சீற்றமான பதில்களும் வருமாறு- கேள்வி - சரத் பொன்சேகாவுக்கு சிறிலங்கா அதிபர் ஏன் பொதுமன்னி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் அரசியலில் நுழைவதை நோக்காகக் கொண்டு, தற்போது பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். எவ்வாறெனினும், சரத் பொன்சேகாவின் திட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ராஜபக்ச அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்து வருவது போல் தெரிகிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவால் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்களில், சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள ஊழல் மற்றும் ஆட்சி மோசடி போன்றவற்றை எதிர்த்து சிறிலங்கர்கள் அனைவரும் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் போராட வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத…
-
- 3 replies
- 1.2k views
-
-
பலத்த எதிர்பார்ப்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கின்றார். மேற்கு நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கம் தெரிந்ததுதான். பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பது சாதாரண சிங்கள மக்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பாகும். பொன்சேகா வெளியே வந்தபோது காணப்பட்ட மக்களின் ஆரவாரம் இதனைத் தெளிவாகப் பலப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்…
-
- 7 replies
- 1.6k views
-
-
போதை ஏற்றும் கிரிக்கெட்டும் தடுமாறும் தமிழ் தேசியமும்! என் வாழ்கையில் நான் மிகவும் நேசித்த ஒன்று கிரிகெட். நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் (Past tense). பள்ளியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், கல்லூரி, மாவட்ட அளவில் என பலவகை போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளேன். எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் எங்களது அணியை (Killer CC) தெரியாத எவரும் இருக்க மாட்டார்கள். இங்கே FB-இல் கூட இருக்கும் எனது நண்பன் Ismail Mohammed ஒருமுறை எங்களது ஜோனில் வரும் ஒரு மிக சிறந்த அணியை ஆட்டத்தின் முதல் நான்கு பந்துகளிலும் நான்கு விக்கெட்டுகளை 'போல்ட்' என்ற முறையில் வீழ்த்தியது மறக்க முடியாத நினைவு! புகழின் உச்சத்தை அடைந்திருந்தோம்! எனது நண்பர்கள் அனைவரும் SDAT எனும் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அதாரிட்டி ஆப் தம…
-
- 2 replies
- 638 views
-
-
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்ற…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்து ஆராய ஜெனிவாவில் இருந்து ஒரு குழுவை சிறிலங்காவுக்கு அனுப்ப ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முடிவு செய்துள்ளது. இது குறித்து கடந்த 14ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் பயணம் வரும் ஜுலை மாதம் இடம்பெறும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா ஏற்கவில்லை என்பதா…
-
- 5 replies
- 759 views
-
-
கிளிநொச்சி தருமபுரம் மருத்துமனையின் மருத்துவர் விஜிதரன் மருத்துவமனை மருந்துகளை கையப்படுத்தி தனது தனிப்பட்ட மருத்துவமனையில் கருத்தடை ஊசிமருந்தினை ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். வடமாகாண ஆளுனர் சந்திர சிறீயினால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனைக்கு நியமிக்கப்பட்ட மருத்து அதிகாரியான கார்த்திகேயன் என்வரின் சிபாரசில் தர்மபுரம் மருத்துவமனைக்கு தெரிவு செய்யப்பட்டவர்தான் விஜிதரன்,இவர்கள் இருவரும் ரஷ்யாவில் மருத்து கல்வியினை கற்றுவிட்டு சந்திரசிறியின் சிபார்சிற்கமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தருமபுரம் மருத்து மனையில் நாள்தோறும் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனைக்குஉரிய மருந்து பொருட்களை மருத்துவர் விஜிதரன் தனது…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து சுயநல நோக்குடன் பிரிந்து சென்று தன் இனத்தையே காட்டிக்கொடுத்து இன அழிப்பு செயவதற்கும் துணை போன கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற தமிழ் இன துரோகி ஆயுத தாரிகளை இன்னும் இயக்கி வருகின்றமை அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து ஆயுதங்களுடன் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையை அடுத்தே அவர்கள் கருணாவின் ஆட்கள் என்பதும் கருணா இன்னும் ஆயுத குழுவினரை இயக்கி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் கருணாவின் ஆட்கள் என்பதனால் சிறீலங்கா காவல்துறையினர் அவர்களை உடனே விடுதலை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 1.5k views
-
-
சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்தின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சந்திரவட்டகல்லின் பகுதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அகழ்வு இன்று மாலை மேற்கொள்ளப்பட்டது. சந்திரவட்டக்கல்லின் பகுதியொன்று தோன்றியதை அடுத்து அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் அகழ்வில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் சந்திரவட்டக்கல் தோன்றியிருப்பதானது புராதன காலத்தில் அது பௌத்த விகாரை இருந்த பிரதேசமாக கருதமுடியும் எனவும் பொளத்த துறவி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலாபம் பிரதேசத்தில் பௌத்த மதத்திற்கு உரித்தான …
-
- 9 replies
- 1.6k views
-
-
கருணையாளர்களிடம் கல்வியை வேண்டும் வன்னி மாணவி யுத்தம் பலரது கைகளையும் கால்களையும் பறித்ததோடு விட்டுவிடாமல் அவர்களது கல்வியை அவர்களது வாழ்வையும் தின்று முடித்துப் போயிருக்கிறது. கல்வியை மட்டுமே நம்பிய ஒரு குடும்பத்தின் மகள் எறிகணை வீச்சில் கையும் பாதித்து காலும் பாதித்து நம்பிய கல்வியையும் இழந்து நிற்கிறாள். தனது எதிர்காலத்தை மேம்படுத்த இவளது எதிர்காலமே தங்களை காப்பாற்றுமென நம்புகிற இவளது அம்மாவும் தங்கையும் வாழ தனது கல்வியைத் தொடர விரும்புகிறாள். கல்வியில் முன்னேற வேண்டுமென்ற கனவோடு இருக்கிற இவளுக்கு தொடர்ந்து கற்க பொருளாதாரம் இல்லை. அயல் பிள்ளைகளிடம் பாடநூல்களைப் பெற்றுப்படிக்கிறாள். 2013ம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் போகும் கனவோடு இருக்கிற இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு திட்டமிட்டபடி மட்டக்களப்பில் இன்று காலை 9.30 மணிக்கு மங்கள மேளவாதியம் முழங்க கோலாகலமாக ஆரம்பமானது. கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்பட்டனர். அதனையடுத்து மாநாட்டின் ஆரம்ப நிகழ்வை கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் கட்சிக்கொடியியை ஏற்றிவைத்து அரம்பித்து வைத்தார். அதனையடுத்து சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கீதத்தினை இசைத்தார்.இதனைத் தொடர்ந்து இதுவரை காலமும் போராட்டங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி மங்கல விளக்கேற்றலையடுத்து தந்தை செல்வா…
-
- 1 reply
- 789 views
-
-
யுத்தத்தை வெற்றி கொண்டது தன்னால்தான் என யாரும் கூற முடியாது. அவ்வாறு கூறினால் யுத்த வெற்றியை உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும். யுத்தத்தை தான் வெற்றி கொண்டதாக சரத் பொன்சேகா சொல்வாரானால் அவரும் சக வீரர்களுடன் சேர்ந்து உயிரிழந்திருக்க வேண்டும். நான் என்றால் உண்மையில் அப்படித்தான். அதனால்தான் நான் ஊடகவியலாளர்களைப் பேசினேன். (ஏசினேன்) ஏதிரானவர்களைப் பேசினேன். (ஏசினேன்) இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர்கள் எனக்கு ஆகாதவர்கள். வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தன்னை இராணுவத் தளபதியாக்கி யுத்தத்தின் முக்கிய பங்கினைக் கையளித்த ஜனாதிபதிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவுக்கே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம். இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும். அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும். மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும்ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவ…
-
- 0 replies
- 524 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்கல் போஸ்னர், ‘கொழும்பு கசெற்‘ ஊடகத்துக்கு வழங்கியுள்ள ‘முகநூல்‘ வழி செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கில் படைக்குறைப்பிலும் கூட அமெரிக்கா குறிப்பிடத்தக்க ஆர்வம் காட்டியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு தொகையான பரிந்துரைகள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் துரிதமாகப் பதிலளிக்கும் என்பதே எமது நம்பிக்கை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் வொசிங்டன் பயணத்தின் போது இவை பற்றி கலந்துரையாடப்பட்டது. மனிதஉரிமை விவகாரங…
-
- 0 replies
- 617 views
-
-
ஐ.நா, ஐ.நா அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக எந்த அறிக்கைகளையோ கருத்துகளையோ வெளியிட வேண்டாம் என்று கோரும் கடிதத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளிநாடுளில் உள்ள தமது தூதரகங்களுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டே, இந்தக் கடிதம் அனுப்பப்படவுள்ளது. ஐரோப்பாவில் உள்ள சிறிலங்காவின் அனைத்து தூதரகங்களுக்கும், குறிப்பாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பணியகத்துக்கும் அனுப்புவதற்கான இந்தக் கடிதம் தற்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வரையப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில…
-
- 0 replies
- 647 views
-
-
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கிடைத்திருக்கும் இந்த இறுதி வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, இதயசுத்தமாக எம்மோடு கைகோர்க்க சிறிலங்கா அரசாங்கம் தவறினால், இந்த நாடு ஒரு வரலாற்றுப் பின்னடைவைச் சந்திக்கப் போவது உறுதி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் சற்று முன்னர் நிகழ்த்திய தலைமைப் பேருரையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தந்திரோபாயங்கள், அனைத்துலக அரசியல் சூழல், தமிழ்மக்களின் உரிமைகளை அடைவதற்கான போராட்டத்தில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை விரிவாக விளக்கும் வகையில் இரா.சம்பந்தன் நிகழ்த்தியுள்ள உரையை…
-
- 0 replies
- 332 views
-
-
ஆழ ஊடுருவும் அணி சிறிலங்காவின் இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி ஆழ ஊடுருவும் அணியால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் குறிப்பாக மருத்துவ வாகனங்கள் அவர்களால் குறிவைக்கப்பட்டன. நெடுங்கேணி வைத்தியசாலைக்கான ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டதில் மருத்துவர் உட்பட ஐந்து ஊழியர்கள் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள் ஆனைவிழுந்தானில் மருத்துவ வாகனம் தாக்கப்பட்டதில் மருத்துவத்தொண்டர் கொல்லப்பட்டார் மாவீரர் நாளன்று ஐயன்குளத்தில் ஆம்புலன்ஸ் மீதான தாக்குதலில் பத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளான முதலுதவித்தொன்டர்கள் கொல்லப்பட்டனர் அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் வெள்ளாங்குளத்திற்கு அர…
-
- 0 replies
- 620 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பாக 'சனல் 4' வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தான் பார்வையிடவில்லை. அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வியுற்றேன். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கதையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே அண்மையில் விடுதலையான பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தப் பேட்டியில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது: நான் அறிந்தவரையில், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவுகள் மற்றும் கடமைகளின் அடிப்படையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு காணப்படவில்லை. …
-
- 4 replies
- 748 views
-
-
சத்தமின்றி இலங்கை வந்த தேமுதிக உறுப்பினர்! அதிர்ச்சியில் உளவுத்துறை! தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்ற…
-
- 0 replies
- 989 views
-
-
இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே!- கவனயீர்ப்புப் போராட்டம் ரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம். இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும். அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும். மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழரசு கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இராசம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது. தமிழரசு கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் இதர தலைவர்களுக்கான தெரிவு நடைபெற்றிருந்தது. இதில் தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு செயலாளராக மாவை சேனாதிராசாவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டு செய்தியாளர் http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 9 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான “பரம வீர விபூஷண“ என்ற விருது வழங்கப்பட்டது. போர்க்களத்தில் தமது உயிரை மதிக்காமல் தீரத்துடன் செயற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற 15 பேரில் ஒருவர் கூட உயிருடன் இல்லை. 1981ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டே எட்டுப் படையினருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் சுமார் 24 ஆயிரம் படையினரை இ…
-
- 0 replies
- 900 views
-