Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீண்டகாலம் இருந்து வரும் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் சகோதரதுவத்தையும் முஸ்லீம் மக்களின் மத சுதந்திரத்தையும் தற்போதை அரசாங்கம் பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் உள்ள முஸ்லீம் பள்ளி வாசல் ஒன்றை அங்கு சென்ற குழுவொன்று உடைத்துள்ளதுடன் அங்கிருந்த முஸ்லீம்களையும் விரட்டியடித்துள்ளனர். குறித்த பள்ளிவாசலை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ள நிலையில், எவ்வித இடையூறோ, அழுத்தங்களோ இன்…

  2. தம்புள்ளை – ரங்கிரி பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பிரச்சினை தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நேற்று (22) கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என அலவி மௌலானா கூறியுள்ளார். பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், கம்பளை கூட்டத்தில் அலவி மௌலானாவும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியானது உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கை என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா இன்று (23) விடுத்துள்ள ஊடக அறி…

  3. ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு: புதிய நாடுகளை வளைத்துப் போட சிறிலங்கா முயற்சி! - களத்தில் மகிந்த!! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் புதிதாக அங்கத்துவம் பெறும் நாடுகளை தமது பக்கம் வளைத்துப் போடும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக தற்போதிலிருந்தே இராஜதந்திர மட்டத்தில் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இதன் ஓர் அங்கமாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நேரடியாகக் களத்தில் இறங்கிப் புதிதாக அங்கத்துவம் பெறும் நாடுகளுக்கு விஜயம் செய்து, அந்நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறியமுடிகின்றது. ஐ.நா மனிதவுரிமைகள…

    • 0 replies
    • 472 views
  4. தெளிவடையாத கேள்வி நாயகர்கள் அன்னை பூபதியின் வணக்க நிகழ்வும் மக்கள் அரங்கமும் என்ற பெயரில் 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி போகும் நகரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. நானும் அங்கு போயிருந்தேன். குறைந்த அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மூவர் மட்டும்தான் வந்திருந்தனர். எனக்குப் பக்கத்தில் இருந்தவருடன் "ஏன் பெண்கள் குறைவாகக் காணப்படுகின்றனர்"| என்றபோது. அவர் அக்கம் பக்கம் பார்த்தபின், "கூட்டத்தைக் குழப்பவெண்டு ஒரு குழு(ளு) இருக்கு. அதுகள் வந்து அடி, தடி என்று இறங்கினால் பெண்களுக்கு கஸ்டம்தானே"| ஏன்றார். அகவணக்கத்தைச் தொடர்ந்து. ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது, அதன்பின் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்கள் உரை காணொளியில் போடப்பட்டது. சிறதுநேரம் செல்ல…

  5. பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம் (எம்.சுக்ரி) பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டியது பலமுடைய அரசாங்கத்தின் பொறுப்பாகும். பலவீனமான சமூகத்தை பாதுகாப்பதற்கு பலமான அரசாங்கத்தினால் முடியாவிட்டால் அதை பலமான அரசாங்கம் என்று கூறமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மட்டக்களப்பு, காத்தான்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கதீப் முஅத்தீன்கள் சேவை மூப்புள்ளவர்களை கௌரவிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'எந்த அரசாங்கம், எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் பலவீனமானவர்களைப் ப…

    • 1 reply
    • 428 views
  6. திருகோணமலை குச்சவெளிக் கிராமத்தினைச் சேர்ந்த பதினொரு பேர் கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது... கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் திருகோணமலையில் உள்ள இராணுவத்தினர், கடற்படையினர் பொலிஸாரின் துணையுடன் குச்சவெளிக் கிராமத்திற்கு நேற்று முற்பகல் 9மணியளவில் சென்று அதே கிராமத்தினைச் சேர்ந்த பதினொரு இளைஞர்களையும் யுவதிகளையும் அழைத்துத் தனித்தனியாக தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யதாகத் தெரிவித்தே இவர்கள் மீது …

  7. நான் முதலமைச்சராவதென்பது அரசின் கட்டுக்கதையே: நீதியமைச்சர் ஹக்கீம் (ஹனீக் அஹமட்) 'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக அரசாங்கமே வேண்டுமென ஒரு கதையை உருவாக்கி விட்டுள்ளது. இதை நான் சந்தேகத்துடனேயே பார்க்கிறேன். இந்தக் கதையானது கட்சி நலனையோ என்னுடைய நலனையோ பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டதொன்றல்ல. ஒரு குழறுபடியினை உருவாக்குவதே இந்தக் கதையில் உள்நோக்கமாகும். இதற்கு நிறையப் பேர் இப்பொழுதே இரையாகி விட்டார்கள்' என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 'எமது கட்சிக்குள் இருக்கின்ற மேல் மட்டத்தவர்களே கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் எனும் பாங்கில் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக கிழக்…

    • 0 replies
    • 432 views
  8. இதன்பின்னர் எல்லை மீறி செயல்பட்டால் ''கன்னத்தில் அறைவேன்'' என அமைச்சர் டிலான் பெரேராவிற்கு, மகிந்தர் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்னவின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் டிலான் பெரேரா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அமைச்சர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, மகிந்தருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவை தொலைபேசியில் தொடர்புகொண்டமகிந்தர் , சம்பவம் தொடர்பாக அமைச்சர் கடுமையாக எச்சரித்து, …

  9. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல்- செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தடுமாறியது இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் கேலிக்குரிய விவகாரமாகப் பார்க்கப்படுகிறது. அண்மையில் பலஸ்தீன அதிபர் அப்பாசுடன் கொழும்பு வந்திருந்த பலஸ்தீன வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தன் பக்கத்தில் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சரை வைத்துக் கொண்டே, “மதிப்புக்குரிய இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் றியாட் அல் மலிகி, மதிப்புக்குரிய இஸ்ரேல் தூதுவர் ....."என்று வரவேற்கத் தொடங்கினார். அப்போது அவருக்கருகில் இஸ்ரேலிய வெளிவிகார அமைச்ச…

    • 2 replies
    • 525 views
  10. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில்கோதாபய ராஜபக்‌ஷ மீதான எதிர்ப்பு மேலெழுந்துள்ளது. இதனால் பாதுகாப்புச் செயலாளரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் பகிரங்கமாக விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர். அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், சிரேஷ்ட அமைச்சர்கள் என பல்பிடுங்கப்பட்டுள்ளவர்களுமான முன்னாள் பிரதமர் ரத்ன சிறிவிக்ரமநாயக்க, அமைச்சர் ஜோன் சேனவிரத்ன ஆகியோரே கோதாபய ராஜபக்‌ஷ மீது பகிரங்க விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவரும், பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்‌ஷ, இராணுவ அதிகாரிகளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக நியமித்து கட்சியை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அவர்கள் க…

  11. கொழும்பு பொரல்லை மயானத்தில் இன்று அதிகாலை (22) 1.00 மணி முதல் 2.00 மணி வரை எரிவாயு மூலம் இரண்டு உடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுவாக இரவு 7 மணியின் பின்னர் தகனம் செய்யப்படாத நிலையில், இன்று அதிகாலையில் உடலங்கள் தகனம் செய்யப்பட்டமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் மயானத்தில் இரண்டு ஜீப் வண்டிகளும், இரண்டு வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். அத்துடன் இதுகுறித்து பொரல்லை பொலிஸாருக்கும் தகவலளித்துள்ளனர். தான் இதுகுறித்து அதிகாலை 1.40 அளவில் பொரல்லை பொலிஸ் நிலையத்திற்கு தகவலளித்த போதிலும், குறித்த வாகனங்கள் அங்கிருந்து செல்லும் வரை பொலிஸார் அந்த இடத்திற்கு வரவில்லையென பிரதேசவாசியொ…

  12. எட்டாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். நேற்று திரு. விக்கிரமசிங்கம் மற்றும் திரு. சிறீ செயன் ஆகியோர் 90 அடி மரத்திலேறி, அரசு விடுதலை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வோம் என அறிவித்திருந்தனர். அதுசமயம், முகாமிற்கு வெளியே, ஏதிலிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த திரு. மல்லை சத்தியா, “சிறப்பு முகாமில் உள்ள ஏதிலிகளில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற செய்வோம், என கொடுத்த உறுதி மொழியை அடுத்து, மரத்திலிருந்தவர்கள் தற்கொலை அறிவிப்பை தற்போதைக்கு…

    • 0 replies
    • 368 views
  13. 13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாக இந்தியா மீது இலங்கை அதிபர் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை வந்து சென்ற நிலையில்,இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை என்றும்,13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. http://news.vikatan.com/?nid=7644#cmt241

  14. நாட்டில் மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக சிலர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் புனிதப் போர் வெடிக்க மக்கள் காரணமாக அமைந்து விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனவாத யுத்தத்தினால் நாடு மூன்று தசாப்த காலமாக எதிர்நோக்கிய துன்பங்கள் துயரங்கள் போதுமானது என அவர் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை விடுத்து அரசாங்கமும் அதன் அமைச்சர்கள…

  15. முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் – நெடுங்கேணி பகுதியில் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 2250 ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். http://www.tamilthai...newsite/?p=8383

  16. தம்புள்ள மஸ்ஜித்துல் ஹாய்ரா பள்ளிவாசலை அகற்றிவிட்டு வேறு இடத்தில் அதை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ள சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ண, அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவித்ததாக பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறிலங்கா பிரதமர் செயலக ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்ட சிறிலங்கா அரச முத்திரையுடன் கூடிய அறிக்கை ஒன்றில், தம்புள்ள பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைமைகள் இணங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. கம்பளையில் நேற்றுக்காலை நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சிறிலங்கா பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போன்று எந்த இணக்கப்பாடும் எட்ட…

  17. பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது - வழக்கத்தில் கனத்தை மயானத்தில் மாலை 7 மணிக்குப் பின்னர் சடலங்களை எரிக்கும் பணிகள் இடம்பெறுவதில்லை. நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் பணி இடம்பெற்றபோது மயானப் பகுதியில் இரண்டு ஜீப் வண்டிகளும், வெள்ளைவான்களும் நின்றதாக அயலில் உள்ள ஒருவர் பொறளை காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். இதுபற்றித் தாம் 1.40 மணியளவில் பொறளை காவல்துறையிடம் முறையிட்டதாகவும், ஆனால், அந்த ஜீப்கள் மற்றும் வெள்ளைவான்கள் அகன்று செல்லும் வரை சிறிலங்கா கா…

  18. ஒன்பதாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். நேற்று திரு. விக்கிரமசிங்கம் மற்றும் திரு. சிறீ செயன் ஆகியோர் 90 அடி மரத்திலேறி, அரசு விடுதலை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வோம் என அறிவித்திருந்தனர். அதுசமயம், முகாமிற்கு வெளியே, ஏதிலிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த திரு. மல்லை சத்தியா, “சிறப்பு முகாமில் உள்ள ஏதிலிகளில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற செய்வோம்”, என கொடுத்த உறுதி மொழியை அடுத்து, மரத்திலிருந்தவர்கள் தற்கொலை அறிவிப்பை தற…

  19. என்னை நாடு கடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து என்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் மக்களுக்கு நான் அரசியல் ரீதியாக சேவையாற்றுவதைத் தடுக்க முடியாது இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு: கேள்வி உங்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு திரும்பிவர முயற்சிக்கிறீர்களா? பதில் நாங்கள் மார்க்ஸிஸம், லெனினிஸம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் பணியாற்றுகிறோம். உலகில் எந்த பாகத்திலிருந்தாலும் நாம் மக்களுக்காகப் பணியாற்றலாம். மொழி…

  20. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஆட்சி செய்யவில்லை பொது மக்கள் கூறுவதைப்போல் இராணுவத்தினர் பொது மக்களுக்கு இடையூறாக ஒருபோதும் இருக்கவில்லையென தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை குறைக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட இராணுவத்தினரின் உதவியுடன் கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் இருதய சிகிச்சை செய்து கொண்ட ஏழாலையைச் சேர்ந்த கி.கஜேந்தினி (20 வயது) தனது சிகிச்சை முடிந்து யாழ்ப்பாணம் திரும்பியபோது அவரை வரவேற்கும் நிகழ்வு யாழ். சிவில் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இந்தியாவிற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பலவந்தமாக தீர்வுத் திட்டமொன்றை எட்டாமல் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்ட மூல அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்த…

  22. இலங்கை வந்த இந்திய பாராளுமன்றக் குழுவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெளிவாகவே கூறிவிட்டார்: "வடக்கில் உள்ள படையினரை அங்கிருந்து வெளியேற்ற முடியாது." அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் "அங்கிருந்து படையினரை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்?" எனவும் பதில் கேள்வி ஒன்றைக் கேட்டு இந்தியக் குழுவினரை மகிந்தர் வாயடைக்கச் செய்திருக்கின்றார். இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் பிரதானமானது வடக்கு, கிழக்கில் காணப்படும் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம்தான். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சுமார் ஆறு பேருக்கு ஒருவர் என்ற வகையில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றது. வன்னியில் பத்து வீடுகளுக்கு ஒரு முகாம் என்ற வகையில் இராணுவ முகாம்கள் உள்ளன. தமிழர்களை எதிரிகளாக…

  23. தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார். அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத…

    • 23 replies
    • 1.6k views
  24. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். “எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவ…

    • 10 replies
    • 1.2k views
  25. தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு இலங்கை வந்திருந்த இந்திய எம்பிக்கள் குழு முன்வைத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதென ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளதாக ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது. தமிழர் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியிருந்தனர். இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். “நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம்” என ஜனாதிபதி கூறியதாக அவருடைய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவது சாத்தியம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.