Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புனரமைக்கப்பட்டது காந்தியின் உருவச்சிலை மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37522

  2. அடிமைப்பட்டு கிடந்த தமிழினத்தை கேட்கநாதியற்று கிடந்த போது சிங்கள இனவெறி அரசபடைகளும் காடையர்களும் கொன்று குவித்து சொத்துக்களை சூறையாடிய கொலைவெறியாட்டம் போட்டு நிற்கையில் அந்த கொலைவெறிப் பேய்களிடம் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்கும் உண்ணத நோக்கத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முகவர் (ஏஜென்ட்) விநோத் என்ற உளவுப்படம் இந்தியில் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வேடமேற்று றோ உளவுத்துறையின் உயரதிகாரியாக இந்தி நடிகர் சயிப் அலி கான் நடித்துள்ளார். கடைசியாக எல்லாப் புலிகளும் செத்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன். நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்....? எனக் கூறி புலிவீரனாக சித்தரித்துள்ள நபரை இந்திய உளவுத்துறை அதிகாரியாக …

  3. 'யாழ். ஆலய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன' இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தின் இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ விக்கிரகங்களின் வாகனங்களாக விளங்குகின்ற மரத்திலான உருவங்களின் தலைகள் சில அடையாளம் தெரியாதவர்களினால் அறுத்துச் செல்லப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். கோப்பாய் பிரான்பற்று பிரதேச பிள்ளையார் கோவில் மற்றும் அச்செழு பகுதியில் உள்ள ஆலயம் ஆகியவற்றிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கருத்து வெளியிட்ட, யாழ்ப்பாணம் துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் ஆன்மீகத் தலைவருமாகிய ஆறு திருமுருகன், பழைமை வாங்ந…

  4. குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள் முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம், அந்தக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல ஆகியோரை தாம் கைது செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் தரப்புகள் கைவிரித்துள்ள நிலையில், இவர்கள் கடத்தப்பட்ட சூழல் பற்றிய பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளன. ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் நேற்று அதிகாலை குணரட்ணத்தின் வீட்டுக்குச் சென்றதை அயல்வீட்டுக்காரப் பெண் ஒரு வர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் வருமாறு: இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த முற்போக்கு சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பாக, வெள்ளிக்கி…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகலரும் ஆயுதம் ஏந்தியவர்கள்: டக்ளஸ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களுக்குமிடையில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சகலரும் ஆயதம் தரித்தவர்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேர்தல் கூட்டமைப்பு என்றும் தமிழ்த் தேசிய இராணுவம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து கூறினார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன் உள்ளிட்ட எம்.பி. க்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது. ஜெனீவா விவகாரம் தொடர்…

  6. சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த - கணவனை இழந்த பெண் ஒருவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற பெண்ணை, நாளை விசாரணைக்கு வரவேண்டும் என்று கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு, கல்முனை காவல்துறை ஊடாக அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னரும் இவரை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்திருந்தனர். ஆனால் அவர் அங்கு செல்ல மறுப்புத் தெரிவித்திருந்துடன், அதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் முறையிட்டிருந்த…

  7. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் 18ஆம் திகதி வடபகுதிக்குச் செல்லவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய தூதரக கென்சியூலர் அதிகாரி தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 15 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் இலங்கை வரவுள்ளது, பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜவாதிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். இக்குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி வடபகுதிக்குச் சென்று இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக் கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடவிருப்பதாக அந்த…

    • 1 reply
    • 537 views
  8. கடத்திச் செல்லப்பட்டுள்ள முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் வேறு பெயரில் இலங்கைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் இலங்கைக்கு அறிவித்துள்ளது. நொவேல் முதலிகே என்ற பெயரில் செய்யப்பட்டிருந்த கடவூச்சீட்டில் அவர் இலங்கை சென்றிருந்ததாக அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் குணரட்னம் சம்பா சோமரத்ன என்ற தனது மனைவியை வேறு பெயரிலேயே மணமுடித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது. http://www.saritham.com/?p=56695

    • 1 reply
    • 841 views
  9. காணாமற்போன இரு செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அவை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பிறேம்குமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகிய முன்னிலை சோசலிச கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கடந்த ஆறாம் திகதி முதல் காணாமற்போயிருந்தனர். இதேவேளை, காணாமற்போன தனது கணவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பிறேம் குமார் குணரத்னவின் மனைவி சம்பா சோமரத்ன ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.saritham.com/?p=56692

  10. புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையின் மீது சுமத்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதது சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன் என்று நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மருதமுனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ச அரசுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியதாக புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப்பெரிய விமர்சனங்களை முன்…

  11. மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த, இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் இச்சிலையை மீளமைப்பதற்கு உதவ வழங்கவும் முன்வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஆட்சேபத்தை தெரிவித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.இச்சிலைஉடைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு சம்பபந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர கூறினார். மட்டக்களப்பில் இனந்தெரியாத குழுவினால் அழிக்கப்பட்ட 5 சிலைகளுள் மகாத்மா காந்தி சிலையும் ஒன்றாகும்.இந்தியாவின் ஆட்சேபனையின் பின்னர், இச்சிலையுடைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த…

  12. குணரட்ணம் எப்போது இலங்கைக்கு வந்தார்: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் கோட்டாபய கேள்வி முன்னிலை சோசலிஷக் கட்சியின் (பி.எஸ்.பி.) தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் காணாமல்போன சிறிது நேரத்தில் அவரை கண்டுபிடிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி விசேட கோரிக்கை விடுத்தார். ஜே.வி.பியிலிருந்து பிரிந்த பிரேம்குமார் குணரட்னம் மற்றும் முன்னிலை சோசலிஷக் கட்சியின் அங்கத்தவரான திமுது ஆட்டிகல ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளனர். அவுஸ்திரேலிய பிரஜையான பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி ரொபின் மூடி தனக்கு அறிவித்ததாக பாதுகாப்…

    • 8 replies
    • 1.5k views
  13. இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அதிஉயர் பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடம் பதிவு செய்துள்ளது என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற 2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கி அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்: இலங்கை மத்திய வங்கியின் 62 ஆவது ஆண்டறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் நிதி அமைச்சர் என்ற வகையிலும் நான் ஆறு தடவைகள் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டுள்ளேன். உலக நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் இலங்கை 8.3 சதவீத பொருளாதார வள…

  14. வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்குவதனை தடுத்து நிறுத்த படையினரின் பிரசன்னம் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட அயர்லாந்தில் கிளர்ச்சிக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் நீண்ட காலத்திற்கு பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்ததாகக் கு…

  15. Started by Nellaiyan,

    Sri Lanka could learn from Myanmar which has radically changed bringing democratic reforms in the country says Sri Lanka Ambassador to France, Dr.Dayan Jathilleka. He told Sandeshaya that in 2009, Myanmar came under vigorous international pressure over its human rights record and Myanmar was defeated in a vote brought in the UN Human Right Council. Changing Myanmar “A few weeks after Sri Lanka won our battle in Geneva in May 2009, Myanmar lost in the same forum. It had the votes of India, Russia and China,” said Dr.Jayathilleka. But, he said, today there is nothing levelled against that country because it is changing. With defeat in UN Human Right…

    • 10 replies
    • 1.1k views
  16. பலம் உள்ளவர்கள்இ பலமற்றவர்களை அடித்துஇ பிடித்துஇ குதறி கொல்வது என்பது காட்டு விலங்குகளின் சட்டம். நாட்டில் நடப்பதுவும் அதேவிதமான காட்டாட்சி என்றால் நாட்டுக்குள்ளே பொலிஸ்இ நீதிமன்றம்இ நாடாளுமன்றம் ஆகியவை எதற்கு? சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கடத்தல்கள்இ சட்டம் இயற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களையும்இ அந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கும் கெளரவ நீதிபதிகளையும்இ அதே சட்டத்தை அமுல்படுத்த கடமைபட்டுள்ள போலிஸ் அதிகாரிகளையும் கோமாளிகளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். முன்னணி சமவுடமை கட்சியின் தலைவர்களான குமார் குணரத்தினம்இ திமுது ஆடிகள ஆகியோர் கடத்தப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் நட…

  17. தாம் முன்வைத்த தீர்வு யோசனைகள் குறித்துப் பதிலளிக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெற முடியாதென இரா சம்பந்தன் கூறினார் அரசியல் தீர்வு குறித்த இருதரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லையென தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இர.சம்பந்தன் தெரிவித்தார். கடந்த ஆண்டு கூட்டமைப்பு கையளித்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைகளுக்கு அரசு இன்னமும் பதிலளிக்காத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்க முடியுமென அவர் எமது செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாம் சமர்ப்பித்த யோசனைகளின் அடிப்படையில் பேசி இணக்கத்தை ஏற்படுத்தி அந்த இணக்கப்பாட்டை நாடா…

    • 0 replies
    • 320 views
  18. ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை. காலத்திற்குக் காலம் இந்தியாவின் அரசியலில் என்றாலும் சரி, சிறிலங்காவின் அர…

  19. நல்லிணக்கத்திற்கு அருமையான வாய்ப்பு: சந்திரிகா[ அரசியலிலிருந்து 6 வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளார். இந்த அமைப்பின் முதலாவது வருடாந்த மாநாட்டை புதுடில்லியில் ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் தான் முன்பு மட்ரிட் கிளப், கிளின்டன் பூகோள முன்னெடுப்பு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்ததாகவும் இப்போது தனது சொந்த பவுன்டேஷனை தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இந்த தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய உபகண்டம் தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் எடுக்கும். இவற்றை ஆராய்வதற்கு உலக அளவில் ஆராய்ச்சி நிபுணர்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்…

  20. இந்தியாவுடன் உறவுகளை சிராக்கும் முயற்சி சறுக்கல் ; ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே முதலில் எதிர்பார்க்கிறது புதுடில்லி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர விரிசலை சரி செய்ய இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியாவிடம் இருந்து பச்சைக் கொடி காட்டப்படவில்லை. விரிசலைச் சீர் செய்யும் நோக்கில் அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான பஸில் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு புதுடில்லியிடம் இருந்து இதுவரை சாதக மான பதில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண காத்…

  21. ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு உறுப்பினர் பிரேம் குணரட்னம் அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு திரும்பியமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிடம் கோரியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியிடம், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிரேம்குமார் குணரட்னம் ஓர் அவுஸ்திரேலிய பிரஜை என ரொபின் மூடி சுட்டிக்காட்யுள்ளார். அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவர் இலங்கை திரும்பியமைக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பிரேம்குமார் குணரட்னம் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவிலிருந்து அந்நாட்டு பிரஜைகள் யாரும் கட்டுநாயக்க விமான …

    • 1 reply
    • 1.1k views
  22. பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு அவசியமற்றது. கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது மூன்றாம் தரப்பு அவசியமற்றது என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவது த…

    • 11 replies
    • 727 views
  23. கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு அடுத்த முதல் அமைச்சர் தேர்தலிற்கு ஹகீமை நிறுத்த மஹிந்த தீர்மானைத்துள்ளார்.ஆனால் தேர்தலொன்று வருமாயின், முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை. என பிள்ளையான் வெடித்துள்ளார். “கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுமா என்பது பற்றி தனக்கு இதுவரை எந்தத் தகவலும் அறியக்கிடைக்கவில்லை. எவரும் என்னுடன் அதைப்பற்றிப் பேசவுமில்லை. மாகாணசபை கலைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவிக்கு தானேன் போட்டியிடுவேன்.இதில் வேறு கேள்விக்கே இடமில்லை” என்று பிள்ளையான் வீரவசனம் பேசியுள்ளார்.. http://thaaitamil.com/?p=15077

  24. திருகோணமலையில் இளைஞன் கடத்தல் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.திருகோணமலை அன்புவழி புரத்தில் கடந்த வெள்ளிக் கிழமை காலை 7.30 மணியளவில் 27 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நால்வர் கொண்ட குழுவால் கடத்தப்பட்டதாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார்.திருகோணமலை அன்புவழி புரத்தைச் சோந்த ரவிந்திரர்- ரகுமாரன் (வான் சாரதி) என்பவரே கடத்தப்பட்டவராவார். தயார் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தனது மகன் கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை தனியார் மருத்துவமனைக்கு வானில் சென்ற வேளையில் வானில் இருந்து இறக்கப்பட்டு மற்றொரு வானில் கொண்டு செல்லப்பட்டதாகவும் இது வரையும் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவித்தார். இது தொடர்பாக திருகோணமலை பொலிஸில் ம…

    • 0 replies
    • 719 views
  25. ஏ- 9 வீதியினுள் பளை நகரில் பயணித்துக் கொண்டிருந்த கென்டர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள இராணுவ காவலரணை தகர்த்துள்ளது. இதனால் குறித்த காவலரணில் கடமையாற்றிக்கொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர் மற்றும் கென்டர் ரக வாகனத்தில் பயணித்த இருவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இராணுவத்தினர் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=15145 தலைப்பு தவறான அர்த்தத்தினை கொடுத்து இருந்ததால் திருத்தப்பட்டுள்ளது: நிழலி

    • 0 replies
    • 381 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.