ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இலங்கையை நம்ப சர்வதேச சமூகம் தயாரில்லை - ஜமமு இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும், என்ன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினாலும், உலகம் இவற்றை பொருட்டாக கணக்கில் எடுக்கவில்லை என்பதுடன், சர்வதேச சமூகம் அரசாங்கத்தை நம்ப தயாராக இல்லை என்பது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது. உலகம் வெறும் வாக்குறுதிகளால் அல்ல, நடவடிக்கைகளாலேயே இலங்கை அரசாங்கத்தை உலகம் எடை போடுகிறது. எனவே சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற கசப்பான பாடத்தை அரசாங்கம் கற்றுக்கொண்டு வருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து …
-
- 0 replies
- 854 views
-
-
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க பிரதான உதவியாளர் கிடைத்துவிட்டார் - மகிழ்ச்சியில் அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார். "நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது," என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என…
-
- 0 replies
- 2.1k views
-
-
சுனந்த கைது செய்யப்படவில்லை – பாதுகாப்பிற்காக அழைத்துச்;செல்லப்பட்டு வீட்டில் இறக்கிவிடப்பட்டார் : 19 மார்ச் 2012 ஜெனிவா மனித உரிமை பேரவையின் அலுவலகத்திற்கு எதிரில் இன்று இலங்கைக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுனந்த தேசப்பிரிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுனந்தை பார்த்து ' நீ கொட்டிய. நீ புலி என கோசமிட்டுள்ளனர். இதனையடுத்த அவரது பாதுகாப்புக் கருதி சுவிஸ் காவற்துறையினர் அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி ஜெனிவாவில் வசித்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சுவிஸ் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது…
-
- 1 reply
- 935 views
-
-
வடக்கிலுள்ள பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்களிலும்; எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கட்டிட திறப்பு விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்தக்கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள கண்டம் தாண்டும் வரை மௌனம் காக்க அவர் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களிற்கு முன்னர் கோப்பாய் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் இரு பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாக்களுக்கு ஆளுநர்; தலைமையினில் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பாடசாலை நிர்வாகங்கள் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் குறித்த நாளன்று காலைவேளை தீடீரென இவ்வறிவித்தலை வடக்கு மாகாண ஆளு…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருச்சி அருகே வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமில் 800 பேர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உண்ணாவிரதம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். http://www.koodal.co...hy-refugee-camp
-
- 0 replies
- 545 views
-
-
இந்தியாவின் தலைவிதி 23 ஆம் திகதியோடு மாறிவிடும்!-குணதாச அமரசேகர! ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இதுதொடர்பாக குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது. அதேவேளை தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அடிபணிந்து எமக்கெதிரான செயல்பாட்டிற்குள் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசி…
-
- 8 replies
- 1.9k views
-
-
பயங்கரவாத அமைப்புடன் ஐ.நா தொடர்பு கொள்வதனை ஏற்க முடியாது என்றார் ஜனாதிபதி – விக்கிலீக்ஸ் 20 மார்ச் 2012 விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தம் அல்லது புலி உறுப்பினர்கள் சரணடைவது ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நேரடியாக தலையீடு செய்வதனை ஏற்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 765 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் இராணுவ மயக்கமலை தவிர்த்தல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பல பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்கத் தீர்மானத்தின் பிரதான கோரிக்கை என குறிப்பிட்ட அவர் தமிழர் பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகளை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எ…
-
- 2 replies
- 725 views
-
-
'எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற பாடத்தை உலகம் அரசாங்கத்திற்கு கற்று தந்துள்ளது' இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும், என்ன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினாலும், உலகம் இவற்றை பொருட்டாக கணக்கில் எடுக்கவில்லை என்பதுடன், சர்வதேச சமூகம் அரசாங்கத்தை நம்ப தயாராக இல்லை என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. வெறும் வாக்குறுதிகளால் அல்ல, நடவடிக்கைகளாலேயே இலங்கை அரசாங்கத்தை உலகம் எடை போடுகிறது. எனவே சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற கசப்பான பாடத்தை அரசாங்கம் கற்றுக்கொண்டு வருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கை…
-
- 1 reply
- 647 views
-
-
ஜெனிவா நெருக்கடி: கிருஸ்ணாவுடன் இன்று பேசுகிறார் பீரிஸ் [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 01:11 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்காக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனிவாவில இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவைச் பீரிசை சந்தித்துப் பேசவுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், “இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பேச்சுக்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்…
-
- 4 replies
- 867 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பு “மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்…
-
- 0 replies
- 482 views
-
-
உதவிகள் வழங்கல் என்ற போர்வையில் அழைக்கப்பட்ட மக்களைக் கொண்டு ஜெனீவாப் பிரேரணைக்கு எதிராக யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் தலைமையில் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து ஆரம்பித்து யாழ். மத்திய பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது. பல்வ…
-
- 1 reply
- 860 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனழதவுரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார். நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது, என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்ற கருத்துக்கு பதிலளித்துள்ள அமெரிக்காவின் ஜெனீவா தூதுவர…
-
- 0 replies
- 863 views
-
-
இருட்டில் வழிதவறிய நமக்கு தூரத்து வெளிச்சம் ஒன்று தெரிகிறது.இந்தத் தருணத்தில் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பிழைகளைத் திருத்திக்கொண்டு காலத்துக்கும் வல்லமைக்கும் பொருத்தமாக நகர்வது அவசியமாகும். சர்வதேச அரசியலுக்கு பொருளாதார/அரசியல் நலன்கள் அடிப்படை. ஆனாலும் நாடுகளின் அரசியல் நலன்களும் அவற்றின் பொது அரசியல் அவிப்பிராயங்களும் சர்வதேச அரசியலில் வலுவாகச் செயல்படுகிறது. இவற்றுக்குள்ளேதான் நம்போன்ற சிறு அமைப்புகள் செயல்படும் வெளியை கண்டடைய வேண்டி உள்ளது. மேலும் நமது அரசியல் அவர்களது நலன்களுக்கு குந்தகமானதல்ல என்பதை நாம்தான் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியும் உள்ளது. நம் தொடர்பான சந்தேகங்களின் ஆதாயம் எப்பவும் எதிரிக்கே கிட்டுகிறது என்பதை நாம்தான்…
-
- 3 replies
- 793 views
-
-
அமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்பாலான நாடுகள் முடிவு [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் அழுத்தங்களை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வெளியிட்ட பல நாடுகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நாளை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க சிறிலங்கா, பல மாதங்களாகப் பரப்புரைகளை மேற்கொண்டு பல நாடுகளின் …
-
- 1 reply
- 1.5k views
-
-
"முன்னர் தமிழர்களின் குரலை செவிமடுக்காத அமெரிக்கா" எதற்காக இலங்கைக்கு மீது இத்தனை உறுதியோடு தீர்மானத்தைக் கொண்டு வருகிறது.....? Monday, March 19, 2012 ஈழத்தவன் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் இலங்கை அரசாங்கத்தைக் கடும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. ஒருபக்கத்தில் நட்பு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தவும், இன்னொரு பக்கத்தில் எதிர்த்து நிற்கும் நாடுகளைச் சமாளித்து- அவற்றின் ஆதரவைப் பெறுவதற்கும் கடுமையான இராஜதந்திர முயற்சிகளில் மகிந்த அரசு ஈடுபட்டுள்ளது. கொழும்பு, புதுடெல்லி, ஜெனிவா போன்ற நகரங்களில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் இந்த இராஜதந்திர யுத்தம் விரிந்து நிற்கிறது. வெளிவிவகார அமைச்சர் ஜி…
-
- 1 reply
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மறைத்த கூகுள் ஏத்! கூகுள் தேடுபொறி, கூகுள் ஏத் எனப்படும் அதி நவீன சட்டலைட்டைப் பயன்படுத்தி பூமியின் எப்பாகத்தையும் பார்க்கும் தொழில் நுட்ப்ப புரட்சியை ஏற்படுத்தியது யாவரும்அறிந்ததே. நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக பார்ப்பது போல, கூகுள் ஏத் எனப்படும் சட்டலைட் மூலம் நாம் உலகின் எப்பாகத்தையும் பார்க்க முடியும். உதாரணமாக லண்டனில் வசிப்பவர் ஒருவர் இலங்கைக்கு மேலே சென்று, அங்கிருந்து யாழ்ப்பானத்தைப் பார்த்து, அதிலும் நல்லூர் கோவிலை துல்லியமாகப் பார்க்க முடியும். அதுமட்டும் அல்ல மட்டும் அல்ல வெளிவீதியையும் பார்க்க முடியும். சிரியாவில் நடைபெற்ற அரச அடக்குமுறை, பலஸ்தீனத்தின் மேல் இஸ்ரேல் …
-
- 0 replies
- 1.1k views
-
-
http://naathamnews.com/?p=4589 ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்… சிறிலங்காவில் மனித உரிமை மீறல…
-
- 8 replies
- 1.7k views
-
-
Monday, March 19, 2012 ஈழத்தவன் ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக அரசியல் சதுரங்க விளையாட்டின் இறுதிப் போட்டியின் முடிவு இம்மாத(23.03.2012) முடிவுக்குள் தெரிந்துவிடும். மும்முனைப் போட்டியாக நடைபெறும் இவ்விளையாட்டில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகியன போட்டியில் கலந்து கொள்கின்றன.அமெரிக்காவின் பக்கம் வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆதரவு செலுத்தும் அனைத்து வாழ் தமிழ்மக்கள் ஒருபுறமும், இலங்கையும் இந்தியாவும் கூட்டு வெற்றி பெறவேண்டுமென பேரினவாத சிங்கள மக்களும் அடிவருடும் ஏனைய சமூகத்தினரும் ஒரு பக்கமாக இரு கூறாக பிரிந்து நிற்பதை காணலாம். இறுதி நிலைய அடையப்போகும் இந்த அரசியல் சித்து விளையாட்டில் நாடுகளின் உள் அந்தரங்கங்களை சரிவர புரிந்து க…
-
- 4 replies
- 1k views
-
-
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் – தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் எனும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் உத்தியோக பூர்வ காணொளி ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. இக்காணொளியினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. “பயங்கரவாத நிழல்கள்: சேனல் 4 க்கு பதில்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில் இறுதிக் கட்ட போர் நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த ஆவணப்படத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்திற்கு வலுக்கட்டாயமாக சிறுவர்களை சேர்த்துக் கொண்டமை பற்றியும் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிதம் இணை…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு கிருஸ்ணா அனுப்பிய இரகசியக் கடிதம் [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 02:07 GMT ] [ தா.அருணாசலம் ] 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமர்று சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே சிறிலங்காவிடம் இந்தியா இது பற்றி விளக்கம் கோரியுள்ளது. எனினும், இந்தக் …
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயிட்டு எரிப்போம் Monday, March 19, 2012 ஈழத்தவன் மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகள் தமிழரின் துன்பத்தை முன்வைத்து இலங்கையை நெருக்குவதாக பேசுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு முறை இப்படியான தலையீடுகள் நமக்கு நடந்து இருக்கிறது. 1987இல் இந்தியா தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் இராணுவத்தை அனுப்பி, பின் அதுவே தமிழர்களை வேட்டையாடியது என்பதை நாம் மறக்க முடியாது. சிங்களம் தமிழருக்கு உதவி செய்ய வந்தவர்களின் பின்புறமாக நின்று தனது காரியத்தை சாதித்தது. இதன் பிறகு 2001இல் நார்வேயின் மூலமாக மேற்குலக நாடுகளும், பின்னனியில் இந்தியாவும் செயல்பட்டு அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் விடுதலைப் புலிகளை ஒடுக்குவதில் 6 ஆண்டுகள் திட்ட…
-
- 0 replies
- 944 views
-
-
http://naathamnews.com/?p=4532 ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொள்வதாக, ஆங்கில ஊடகமொன்றின் செய்தியினை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கிடைத்த தகவல்களை தொகுப்பாக தருகின்றோம் : சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக, 22 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளது. மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்த…
-
- 6 replies
- 2.5k views
-
-
ஜெனிவா முடிந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்து சம்பந்தன் உட்பட சகலரையும் கைது செய்ய வேண்டும் ஜெனிவா பிரச்சினை முடிந்த கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்து சம்பந்தன் தலைமையிலான அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய இராணுவம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை நடத்தலாம் .வெளிநாட்டு தலையீடு அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமென அரச தரப்பினர் ஜெனிவாவில் உறுதிமொழி வழங்கியுள்ளது தொடர்பாக கேட்ட போதே டாக்டர் குணதாச அமரசேகர இதனை தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் …
-
- 6 replies
- 1.8k views
-
-