Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இந்தியா தற்போதைக்கு முடிவெடுக்காது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவை தமக்கு ஆதரவாக செயற்பட வைக்க இலங்கை கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஜெனீவா பிரேரணையின் போது இந்தியா தமக்கே ஆதரவளிக்கும் என்று இலங்கையின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் வைத்து தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், உடனடியாக புதுடில்லி நிர்வாகம் இந்த விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்காது என்று இந்திய உயர் ஸ்தானிகர் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரச…

  2. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை தூக்கிப்பிடிக்கும் சர் வதேச சக்திகளுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று கர்ஜித்தார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்கத்தேய சக்திகளின் பிரிவினைவாத நோக்கத்தை முறியடிப்பதற்கு ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன. நாட்டில் மலர்ந்துள்ள சமாதானத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை, உலகில் முறியடிக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்துக்காட்டிகாட்டியவர்கள் நாங்கள்.புலிகள் …

  3. யாழ். மாவட்டத்தில் 52 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக்கு உட்பட்ட நிலையில் உள்ளனர் என யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு உற்பத்தித்திறன் மேம்படுத்தல் பயிற்சி நெறி யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். விவசாயம், மீன்படி இம்மக்களின் முக்கிய தொழிலாக இருந்து வருகின்றது. கடந்தகால போர்ச்சூழல் இம்மக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீன்படி, விவசாயம் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்க வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ். மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு 58 ஆயிரம் மில்லியன் ருபா செலவிடப்பட்…

  4. ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமைக்குத் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘… தற்போது நிலவும் நி…

  5. சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டும் நல்லிணக்க அரசியல் அடையாளம் என்ன? ஜெனீவாவிற்கு போகாமல் கூட்டமைப்பு தலைவர் அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டியுள்ளார். இதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் கூட்டமைப்பு தலைவருக்கு காட்டும் நல்லெண்ண அரசியல் அடையாளம் என்ன? இதுவே இன்று தமிழ் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்ற கேள்வி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, நெருக்கடிமிக்க ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார். கூட்டமைப்…

  6. ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாகுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒட்டுமொத்த நல்ல நிலையை நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரச தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு…

    • 37 replies
    • 3.2k views
  7. சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும்: டி.எம்.ஜயரட்ண வீராப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும் என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவிருப்பதை எதிர்த்து கம்பளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். "அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சியை தோற்கடிக்க அனைவரும் வீத…

  8. Started by akootha,

    திட்டமிட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொள்ளும் மகிந்தா ராவய பத்திரிகையின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36734-2012-02-28-16-58-16.html

  9. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்று மனிதஉரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுடன் இந்தக் கூட்டத்தொடரில் இந்தியாவும், சிறிலங்காவுக்கு பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இவர் இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளார். எனினும் இந்தியா இதுபற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறது. ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் சிறிலங்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?2012…

    • 2 replies
    • 935 views
  10. வீரவன்சவும் சம்பிக்கவுமே துரோகிகள்: விக்கிரமபாகு _ இனவாதத்தை தூண்டிவிட்டு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை குழப்பியடிக்கும் விமல் வீரவன்ச, சம்பிக்க போன்றவர்களே உண்மையான தேசத்துரோகிகளாவர். அவ்வாறானவர்களை அரசாங்கம் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று நவசமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதும், குறித்த அமைச்சர்கள் மாத்திரம் அதனை எதிர்ப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர…

    • 3 replies
    • 858 views
  11. ஜெனிவா மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொள்ளாமை குறித்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் கட்சியின் தீர்மானம் பகிரங்கப் படுத்தப்பட்டது. இது ஓரிருவர் எடுத்த முடிவல்ல. இவ்வாறு நேற்று யாழ் உதயனுக்குக் கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். கூட்டமைப்பின் ஜெனிவா பயணம் இடைநிறுத்தப்பட்டது. தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான காரணங்களை விளக்கி கட்சி விரிவான அறிக்கையொன்றை விடுத்தது.இந்த அறிக்கை விடப்படுவதற்கு முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர இதர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் …

    • 4 replies
    • 1.3k views
  12. இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் _ வீரகேசரி இணையம் 2/28/2012 12:19:53 PM இலங்கைக்கு எதிரான ஜெனீவாவின் தீர்மானங்களுக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் அமெரிக்காவை போன்று இந்தியா துரோகத்தனமாக செயற்படாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையரசு இடமளிக்காது. என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அரசாங்கத்தை பாதுகாக்க பொது மக்கள் நாடளாவிய ரீதியில் போராடி வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சூழ்…

  13. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலகத்திடம் நீதி கேட்டுக் கூடியுள்ளோம்! - ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியினைக் கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன. இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் …

  14. இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்…

  15. ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஈழம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் தமிழ் நெட்(ஆங்கில இணையம்) மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் 2007ம் ஆண்டு முதல் தமிழ் நெட் இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை தமிழ் நெட் இணையம் உடனுக்குடன் வெளியிட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் Distributed Denial-of-Service Attack (DDoS), என்னும் செயல்பாட்டு மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு அவ்விணையம் முடக்கப்பட்டது. நேற்றைய தினம் முதல் அது வழமைக்குத் திரும்பியுள்ளது. http://www.tamilthai...newsite/?p=5569

    • 3 replies
    • 1.6k views
  16. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்ற சம்பந்தரின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பையும் வருத்ததையும் வல்வெட்டித்துறை நகரசபைதலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். 27.02.2012 அன்று வெளியான தினக்குரல் நாளிதழில் வந்த அவரின் அறிக்கை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவா அமர்வுகளில் கலந்துகொள்ளாது என்ற அறிக்கை மக்கள் மத்தியில் நேரடி தொடர்பினை கொண்டிருக்கும் எங்களை தலைகுனிய வைத்துள்ளது என்றும் வல்வை நகரசபை தலைவர் தனது மறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த விருப்பமும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவா அமர்வுகளி…

  17. Dear Friends, The 19th session of the UN Human Rights Council (UNHRC) taking place in Geneva will shortly be upon us. On Monday 27th February there is a large Tamil demonstration outside their offices. The London-Geneva walkers (http://forjusticeandpeace.org/) will arrive to take part! The session will last for one month so we must do all we can to maintain pressure upon the Council as soon as possible. We recently asked you to send an e-mail to the e-campaign group Avaaz asking them to contact their 13 million subscribers to support an Independent international investigation into war crimes. Thanks to all who did so but we need more e-mails! SEND AVAAZ A…

  18. சிங்கக் கொடியை நெஞ்சிலேந்தும் அங்கயன் ஐநாவில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய தீர்மானத்திற்கு எதிராகவும் மகிந்தவிற்கு ஆதரவாகவும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது. ஆக்கிரமிப்பு ராணுவத்தின் ஆளுநர் சந்திரசிறியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சிங்களத்தின் வேட்டை நாய்களான ஈ.பீ.டீ.பீ துணை இராணுவக்குழுவின் தலமையில் ஒரு பகுதியினரும், யாழ்ப்பாணத்தின் சிங்களத் தமிழனான யாழ் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அங்கயன் தலமையிலான இன்னொரு பகுதியினருமாக இந்த பேரணியில் ஈடுபட்டனர், மகிந்தவின் ஆளுயக் கட்டவுட்டினை அருகில் ஏந்தியவாறு, சிங்கள ஆக்கிரமமிப்பின் அடையாளமான சிங்கக்கொடியை நெஞ்சிலும் ஏந்தியவாறு கம்பீரமாக அங்கய…

  19. (இவரிடம் நான் இரண்டு கேள்விகள் வைக்கபட்டது. ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார். டுவிட்டரில் நூற்றி நாற்பது எழுத்துகள் மட்டுமே ஒரு நேரத்தில் எழுதலாம். ஆகவே கேள்விகள் அதற்கமைய சுருக்க பட்டது. ) Question 1- Obama said 'world should not be idle when #genocide happens'. Why no action to save #Tamils not only n 2009 but for 60 yrs? இன அழிப்பு நடக்கும் போல்ழுது உலகம் பார்த்துகொண்டிருக்க மாட்டாது என்று ஒபாமா சொனார், ஆனால் தமிழர் கொல்லப்படும்போது யாரும், காப்பாற்றவில்லையே, 2009 இல் மட்டுமல்ல கடந்த 60 வருடமாக எதற்காக? Answer: US has been very active to encourage reconcilitation and accountability. See http://ow.ly/9kWBt #AskSCA ஐக்கிய அமெரிக்கா, நல்லிணக…

  20. சர்வதேச தலையீடு தேவையென ஆயர் டுட்டு கூறியமைக்கு இலங்கை கவலை ஐ.நா. மனித உரிமைப் பேரவை அங்கத்தவர்களிடம் இலங்கையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டுமென நினைப்பதாக தென்னாபிரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் டெஸ்மண்ட் டுட்டு கூறியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஆழமான விளக்கமும், மிகுந்த ஆராய்வும் தேவையான இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்கள் தலையிட வேண்டுமென நீங்கள் கருதுவது மனவருத்தத்துக்கு உரியதாகும் என ஆயர் டுட்டுவுக்கு எழுதிய கடிதத்தில் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் விடயங்கள் பற்றி நாம் சர்வதேசத்துக்கு விளக்கமளித்து வருகின்றோம். அண்மையில் நாம் தொடங்கிய…

  21. Started by nunavilan,

    DDoS attack disrupts TamilNet web traffic [TamilNet, Monday, 27 February 2012, 23:14 GMT] Distributed Denial-of-Service Attack (DDoS), identified by the service provider of TamilNet as originating in an orchestrated way from certain affluent parts of the world, has been disrupting web traffic of TamilNet.com since Saturday. The attack on the independent media reporting to the world on Tamil affairs coincides with the opening of the 19th sessions of the United Nations Human Rights Council (UNHCR) in Geneva on Monday, where the USA and Sri Lanka have already pitched positions in hijacking the focus of issues concerning the cause of genocide-affected Eezha…

    • 2 replies
    • 701 views
  22. ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சற்று நேரத்திற்கு முன் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரை நிகழ்த்தியுள்ளார். நவநீதம்பிள்ளை தனது ஆரம்ப உரையில் சிரியாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கை குறித்து ஒரு வார்த்தைகூட உரையாற்றவில்லை. எனினும் உலகில் மனித உரிமையை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படத் தயார் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். http://www.eeladhesa...lle-nachrichten

  23. பொதுமக்களை கடத்தியது துணை ஆயுதக் குழுக்களே! படைகளுக்கோ புலிகளுக்கோ தொடர்பில்லை!- ரஜீவ சமாதான காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கோ, விடுதலைப்புலிகளுக்கோ எதுவித தொடர்பும் இல்லை. மாறாக துணை ஆயுதக்குழுக்களே பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக இத்தகைய கடத்தல்களில் ஈடுபட்டன. இவ்வாறு பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்றுத் தெரிவித்தார். அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மீளிணக்கக் கருத்துக்கான குழுவின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க நேற்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற மீளிணக்கத்துக்கான கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலி…

  24. சுயாதீன விசாரணைகள் வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்து பிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புவிசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மனிதத்திற்கு எதிராக இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்களை வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம்ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உதவிகளைவழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தைஏற்படுத்தல் ஆகியன நிரந்தர…

  25. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொதுமக்கள் உயிர்ச் சேதவிபரங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென சர்வதேச அனர்த்தக்குழுவலியுறுத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடக்க உள்ள நிலையிலும் சரியானபுள்ளி விபரத் தரவுகள் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது. உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் வெளியிடப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உறுப்பு நாடுகள், இலங்கையை வலிறுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் உயிர்ச் சேதவிபரங்கள் தொடர்பில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.