Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண கல்வி திணைக்களத்தால், 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 3 ஆம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் ,அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது. “ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு க…

  2. சிம் அட்டைகளை பதிவு செய்யுங்கள் : இல்லையேல் பிரச்சினை ! கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி கையடக்கத் தொலைபேசிகளில் #132# என டைப் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் என ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் ஒருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் தங்களுக்குத் தெரியாமல் வேறு சிம் கார்டுகள் வழங்கப்பட்டிரு…

  3. நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்திய போதிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291414

  4. 12 FEB, 2024 | 06:11 PM நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும், மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்க இடமளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சரியான திகதியில் நடத்தாமல், அதற்கு நிதி ஒதுக்காது மக்களின் வாக்குரிமையை மீறும் அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. மக்களின் சர்வஜன வாக்குரிமையில் இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கத்துக்கு நாம் ஒத்துழையோம். தேர்தலில் மக்கள் ஆணையை காண்பிக்க…

  5. Published By: DIGITAL DESK 3 12 FEB, 2024 | 04:56 PM யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இது தொடர்பில் யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்க…

  6. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் 12 FEB, 2024 | 05:55 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது…

  7. Published By: VISHNU 12 FEB, 2024 | 08:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறைக்கைதிகள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர்கள் சமூகத்துக்குப் பயனுள்ள நபர்களாக உருவாக்குவதை நோக்காகக்கொண்டு அனைத்து சிறைச்சாலைகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காகச் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தொழில்துறை அபிருத்தி சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (12) நீதி அமைச்சில் இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வுக்கு முன்னால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் தொழில்துறை அபிவிருத்தி சபையின் தலைவர் சாரங்க அலகப்பெரும ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். புரிந்துணர்…

  8. அவசரமாக மைத்திரியை புதுடில்லிக்கு அழைக்கும் இந்தியா! இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய விஜயத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திரக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1369394

    • 1 reply
    • 538 views
  9. யாழில் கோர விபத்து : நெல்லைக் காய வைத்தவர் உயிரிழப்பு! மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதால் வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1369405

  10. இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது? ”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். எவ்வாறு இருப்பினும் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண…

  11. யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் கடந்த வருடம் 13 பேர் உயிரிழப்பு! “யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1369514

  12. 12 FEB, 2024 | 10:19 AM தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்கு தீர்வு காணும் முகமாக தற்போதைய பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செயலாளர் பதவிக்கு ப…

  13. சொகுசு வாகனங்கள் ரகசியமாக பதிவு! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு Published By: VISHNU 11 FEB, 2024 | 09:48 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப…

  14. நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர் Published By: VISHNU 11 FEB, 2024 | 10:01 PM இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத…

  15. Published By: VISHNU 11 FEB, 2024 | 06:17 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து…

  16. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார். WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ? ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன்…

  17. 11 FEB, 2024 | 09:35 PM மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் த…

  18. 11 FEB, 2024 | 09:28 PM (எம்.மனோசித்ரா) முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல. இந்திய…

  19. பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை. பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காண…

    • 1 reply
    • 367 views
  20. Published By: RAJEEBAN 11 FEB, 2024 | 08:14 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் சண்டே ஒப்சேவருக்கான பேட்டியொன்றின் போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என அவர் தெரிவித்துள்ளார். …

  21. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ…

  22. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. https://thinakkural.lk/article/291294

  23. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/291253

  24. இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல் இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்…

  25. திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் குறித்த ஆலோசனையை கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு 10 FEB, 2024 | 02:30 PM இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.