ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
பிளேக் குழுவினர் மீது அரசு கடும் அதிருப்தி நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகி யோர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்திப்பதற்குத் தீர்மானித் துள்ளனர். இது அரசுக்குப் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. முன்னதாக, இராஜாங்கத் திணைக்கள பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரீபன் ராப்பும் கொழும்பு வந்த கையோடு முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்தித்திருந்தார். “ஐக்கிய நாடுகள் சபை யினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட இறையாண்மையுள்ள ஒரு நாட்டிற்கு உயர் மட்ட இராஜதந்திரிகள் வரும் போது அவர்கள் முதலில் இராஜதந்திரக…
-
- 5 replies
- 1.5k views
-
-
போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்க விவகாரம்: மகிந்த ராஜபக்சவை பணியவைக்க அமெரிக்கா. இந்தியா அழுத்தம்! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தாலும், அனைவரையும் கொல்வது என்பது தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், களமுனை படைத் தளபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் ஒலிப்பதிவு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பிரிவுக்கு கிடைத்துள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
வடக்கு மாகாணத்தில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் சிறிலங்காப் படைகள் அகற்றப்பட்டு விடும் என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் கதை விட்டிருக்கிறார் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சென்னையில் இருந்து சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்களிடமே, வடக்கில் எஞ்சியுள்ள படையினரை அகற்ற தனக்கு ஒருமாதம் காலஅவகாசம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை பிரிஐ வெளியிட்டுள்ளது. “வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். பத்தில் இரண்டு பகுதிகள் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகளில் இர…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிங்கராசாவின் மீது விதிக்கப்பட்டுள்ள கொடிய தீர்ப்பினை உங்களுக்குத் தெரிந்து அறிந்த எல்லா இடங்களுக்கும் தெரிவியுங்கள் உறவுகளே :- 16.07.1993 அன்று தனது 19வது வயதில் இலங்கை இராணுவத்தினரால்; நல்லரட்ணம் சிங்கராசா அவர்கள் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்ட நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு தற்போது 38வயது. கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனைகளோடும் காயங்களோடும் வாழ்கிற நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு இலங்கை நீதிமன்றம் 50வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்டுள்ளார். சிங்கராசாவின் சோகங்கள் சிங்கராசாவின் குரலில். சிங்கராசாவின் கதையை சிங்கராசாவின் குரலில் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இவர…
-
- 2 replies
- 1.1k views
-
-
தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மிக விரைவில் கவிழும் அறிகுறி தென்படுவதாக சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்புக்களினால் தத்தமது தேர்தல் தொகுதிகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்ப சகிதம் மேற்கொண்டுவரும் பாரியளவிலான ஊழல், மோசடிகளைக் குறைந்தபட்சமாக குறைத்துக் கொண்டாலும், எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். http://www.eeladhesa...ndex.php?opti…
-
- 8 replies
- 1.8k views
-
-
பூந்தமல்லி முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென நாம் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தாமல் பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான எந்த வழியையும் நாட விடாமல் தங்களை கியூ பிரிவு போலீசார் தடுக்கின்றனர் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை விடுவித்து மற்ற …
-
- 1 reply
- 721 views
-
-
ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்கவேண்டும். இதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய நாடாளுமன்ற நீதிமன்றம் ஆகியவற்றின் கீழாக இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை உடன் வாபஸ் பெறவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்துள்ளார். பிரசல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற மனித உரிமைகள் …
-
- 2 replies
- 1k views
-
-
இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்தின் செய்தியாளர் மத்யூ ரசல் லீயிடம், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன தெரிவித்துள்ளார். எப்போதும் ஜெனரல் சவீந்திர சில்வாவை போர்க்குற்றவாளி என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாலேயே அவர் கோபத்தில் இருப்பதாகவும் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள மிலேனியம் விடுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இரவு விருந்திலேயே இன்னர்சிற்றி பிரசின் செய்தியாளரிடம் பாலித கோகன்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈரான் தேசியநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இந்த இரவு விருந்தில் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார். அவருடன் இன்னர்சிற்றி…
-
- 2 replies
- 640 views
-
-
இலங்கை - ஈரான் உறவை அமெரிக்கா உட்பட எந்த தரப்பினாலும் தடுக்க முடியாது: ஈரான் தூதுவர் எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் தெரிவித்தார். இந்த உறவினை அமெரிக்கா மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு 33 ஆண்டு நிறைவு மற்றும் தேசிய தினம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை ஈரான் கொண்டாடுகின்றது. இந்நிலையில், உலக நாடுகளுக்கு அமெரிக்காவினால் ஈரானிய எண்ணெய் தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை தொடர்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவர்…
-
- 3 replies
- 964 views
-
-
ஐரோப்பாவில் 420 தமிழீழ விடுதலைப் புலிப் பாடசாலைகள் இயங்கி வருவதாக கொழும்பு இனவாத பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களினால் நடத்தப்பட்டு வரும் இந்தப் பாடசாலைகள் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு முதல் இருபத்து ஒன்று வயது வரையிலான 20 ஆயிரம் மாணவர்கள் இந்தப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர் எனவும் பாடசாலை மாணவர்களிடம் அறவீடு செய்யப்படும் நிதி புலிகளின் சர்வதேச வலையமைப்பு பயன்படுத்துகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்ச் சோலை என்ற பெயரில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
சுதந்திர தின விழாவை விட்டு சாய்பாபா கோவிலுக்கு கோத்தபய ஓடியது ஏன்? கொழும்பு: இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச அந்த நாட்டின் 64வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், இந்தியாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இந்த வழிபாட்டை அவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் சுதந்திர நாளான கடந்த 4ம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் அவர் வழிபாடு நடத்தியுள்ளார். இலங்கை அதிபருக்கு அடுத்து ஆட்சியில் அதிகாரம் செ…
-
- 3 replies
- 1.5k views
-
-
"ஏனைய தமிழ்க் குழுக்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது" ராஜபக்ச விளக்கமளித்திருந்தார். "அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கருணா குழு ஆகிய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவர்களால் நாம் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது" என ராஜபக்ச தெரிவித்திருந்த கூற்றை சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வோசிங்ரனுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தது. இதனுடன் தொடர்புபட்ட இரகசியக் குறிப்பை, 'கொழும்பு ரெலிகிராப்' [Colombo Telegraph] என்னும் ஆங்கில ஊடகம் விக்கிலீக்சின் தரவுத்தளத்திலிருந்து கண்டறிந்துள்ளது. ஒக்ரோபர் 04,2006 அன்று சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் மேற்கொண்ட சந…
-
- 5 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து அவுஸ்ரேலிய வெளிவிகாரத்துறை அமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து செய்தி வலையமும் சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் அழுத்தங்கள் குறித்து வானொலியும் நிகழ்சியொன்றினை வழங்கியுள்ளது. செய்தி : Adam Gartrell, AAP Diplomatic Correspondent சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை அவுஸ்ரேலிய அரசாங்கம் விரைவில் தெரிவிக்கும் என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர் கெவின் ருட் அவர்களின் பேச்சாளர் AAP செய்திவலையத்துக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அரசாங்கம் இரு பக்கத்தினாலும் இழைக்கப்பட்ட போற்குற்ற முறைப்பாடுகளை விசாரிக்குமாறு சிறி லங்கா அரசாங்கத்தை எப்போதும் கேட்டு வந்துள்ளது என…
-
- 0 replies
- 852 views
-
-
புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சி…
-
- 22 replies
- 2.4k views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் றப் (Rapp), வன்னிப் பகுதியில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் றப் (Rapp), வன்னிப் பகுதியில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கைப் பயணத்தின்போது, யாழ்ப்பாணம் சென்ற அவர், அங்கு சந்திப்புக்களை நடத்திய நிலையில், நேற்று அவர் கிளிநொச்சி செல்லக்கூடுமென்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று செல்வபுரம் பகுதியில் உள்ள கிறீஸ்தவ ஆலயம் ஒன்றில் அவர் மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். போரின் இறுதியில், அரச படையினரிடம் தாம் கையளித்த தமது உறவினர்கள், மூன்று வருடங்களாகும் நிலையில், இன்…
-
- 1 reply
- 551 views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாய் -முகத்துவாரத்திலுள்ள இல்மனைற் படிமம் உள்ள 15 ஏக்கர் தமிழரது நிலத்தை வலுக்கட்டாயமாக பறித்தெடுக்க சிறீலங்கா ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகத்துவாரத்தில் தமிழரருக்கு சொந்தமான இக்காணியில், 250 இற்கும் அதிகமான சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர். இப்பகுதிக்கு கடந்த புதன் கிழமை கனிய வள அமைச்சின் அதிகாரிகள் சகிதம் சென்ற நாமல் அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கனிய வளமான இல்மனைற் இருப்பதை உறுதி செய்துள்ளார். இல்மனைற் இருப்பது உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்நிலத்தில் குடியேறிய சிங்க குடும்பங்களை அழைத்து கொக்கிளாய் பகுதியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அங்கிர…
-
- 1 reply
- 562 views
-
-
மாலை தீவில் மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளதைப் போன்று, இலங்கையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் காலம் தொலைவில் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் மாலைதீவில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்ட அலை தென் ஆசியாவையும் தாக்கியுள்ளது என குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அழகிய நாட்டை உருவாக்கிக் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெப்ரவரி 8ஆம் திகதி தன்னை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.vannionline.com/2012/02/blog-post_825.html
-
- 0 replies
- 585 views
-
-
http://naathamnews.com/2012/02/10/rohan-gunaratn/ இந்தியாவுக்கு விரோதமூட்டாதவாறு ஒரு வெளியுறுவுக் கொள்கையை அமைத்துக் கொள்ளவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து தங்களது செயற்பாடுகளுக்கு தமிழ்நாட்டை ஒரு தளமாகப் பாவிப்பதை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டுடன், சிறிலங்கா நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என பேராசிரியர் றோகான் குணரட்ன சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா மேற்குலக நாடுகளுடனான அதன் உறவுகளையும் மீட்டெடுப்பதோடு, விடுதலைச் புலிகள் மீள்குழுக்களாக ஒருங்கிணைவதற்கு ஏற்ற சொர்க்கபுரியாக மேற்குலகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேற்கத்தைய அரசியல்வாதிகளுக்கு நிதி வழங்குவதாலும், மற்றும் மனித உரிமைத் தொண்டு நிறுவனங்களிடம் பிரச்சாரம…
-
- 1 reply
- 947 views
-
-
http://naathamnews.com/2012/02/09/maldives-mahinda/ மாலைதீவில் பதவி துறந்த முன்னாள் அரசுத் தலைவர் மொகமெட் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவின் புதிய அரசுத் தலைவராக பதவியேற்றுள்ள மொகமெட் வாஹிட் ஹஸனிடம் இந்தக் கோரிக்கையினை சிறிலங்கா அரசுத் தலைவர் முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கிய நண்பர்களில் ஒருவராக பதவி துறந்துள்ள மொகமெட் நஷீட் உள்ளாதோடு சிறிலங்காவின் தமிழின அழிப்பினை ஐ.நா மனித உரிமைச் சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் நியாயப்படுத்தி இருப்பவர். இதேவேளை சிறிலங்கா அரசுத தலைவர் மகிந்த ராஜபக்சவின் பணிப்புக்கமைய மொகமெட் நசீட்டின் குடும்பத்தினருக்கு சிறி…
-
- 13 replies
- 1.5k views
-
-
http://naathamnews.com/2012/02/10/sinhala-bhudist/ 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள் சிறிலங்காவிலும், தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் தமிழீழத்திலும் என்பது இலங்கைத்தீவின் இன்றைய செய்தியாக உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையில் நின்றவாறு, தமிழீழத்தையும், தமிழ் மக்களையும் அடக்கி ஆள நினைக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகள் புதியன அல்ல. வியாழக்கிழமை, கொழுப்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக 13வது திருத்தச் சட்த்துக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை துன் ஹெல தேசிய இயக்கம் என்ற அமைப்பினைச் சேர்ந்த பௌத்ததுறவிகளும் இனவாதிகளும் விநியோகித்துள்ளனர். தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழத்தில், நாட்டைக் கா…
-
- 0 replies
- 949 views
-
-
இந்தியப் புகழ் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமின் யாழ் வருகையின் போது யாழ்ப்பாணம் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் ஆற்றிய உரை மற்றும் மாணவர் கலந்துரையாடலின் பூரண காணொளி இங்கே இணைக்கபட்டுள்ளது. இச் சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 23 திகதி மாலை 3 மணியளவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. http://youtu.be/ceIO7rWJ0GE http://youtu.be/pvYcpFkKSnM http://youtu.be/4tJd2XMsRrU http://youtu.be/Zo-6dHR1pSk http://youtu.be/-API9vEROSY -அனுப்பிவைத்தவர் - யாழ் செழியன்- http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 868 views
-
-
சிரேஸ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்காவிற்கு தகவல்களை வழங்கினார் – விக்கிலீக்ஸ் இலங்கையின் சிரேஸ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்காவிற்கு தகவல்களை வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் இராணுவப் பேச்சாளரும், இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, சில முக்கியமான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதான சமிக்ஞை அதிகாரியாகவும், பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி மற்றும் ஆய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த மூன்று படையணிகளின் கட்டளைத் தளபதியாகவும் ம…
-
- 1 reply
- 888 views
-
-
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (10) அங்கு பயணமாகிறார். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு செல்லும் மஹிந்த, அந்நாட்டு ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். லிபியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் உள்ளுர் குழப்பங்களும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் காணப்பட்ட காலங்களில் இந்த இரு நாடுகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணங்களை மேற்கொண்டிருந்தமை தெரிந்ததே. லிபியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து முகம்மர் கடாபி அந்நாட்டு மக்களால் தூக்கி எறியப்பட்டதுடன் இறுதியில் சுட்டும் கொல்லப்பட்டார். அதேபோன்று மாலைதீவிலும் மக்கள் மற்றும் அந்நாட்டுப் பொலிஸாரி…
-
- 5 replies
- 1.7k views
-
-
“மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்“ என்று இன்னர்சிற்றி பிரஸ் ஊடகத்தின் செய்தியாளர் மத்யூ ரசல் லீயிடம் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன தெரிவித்துள்ளார். எப்போதும் நீங்கள் அவரை போர்க்குற்றவாளி என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாலேயே அவர் கோபத்தில் இருப்பதாகவும் பாலித கொகன்ன கூறியுள்ளார். நேற்றிரவு நியுயோர்க்கில் உள்ள மிலேனியம் விடுதியில் ஈரான் தேசியநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்திலேயே இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளரிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த இரவு விருந்தில் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார். அவருடன் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ உரையாடிய போது, “…
-
- 1 reply
- 790 views
-
-
போருக்கு முந்திய நிர்வாகத்தை தமிழ் மக்கள் நினைக்க தலைப்படுவர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-10 09:06:27| யாழ்ப்பாணம்] விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எழுந்த மானமாக எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக விடுதலைப் புலிகள் தமது பகுதிக்குட்பட்ட நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே அவர்கள் மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று. விடுதலைப்புலிகள் செய்ததெல்லாம் சரியென்று எவரும் வாதிடமாட்டார்கள். அப்படியானதொரு வாதம் நடந்ததாகவும் வரலாறு இல்லை. அப்படியிருந்தும் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக, அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. …
-
- 1 reply
- 722 views
-