ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
புதிய கட்சி உதயம் எஸ்.சசிக்குமார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் என்னும் கட்சியொன்றினைத் தாம் கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கி வைத்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா, ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில், நேற்று மதியம் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. கட்சியின் தோற்றம் பற்றிப் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தாம் இதனை ஏற்பாடு செய்ததாக, கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "2009ஆம் வருடம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12,000க்கும் அதிகமான போராளிகள்…
-
- 0 replies
- 711 views
-
-
"இத்தால்... ஶ்ரீலங்கா சோசலிச ஜனநாயகக் குடியரசின் குடிமக்கள் யாவரும் அறிவது என்னவென்றால், வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்... ஏற்றுக்கொள்ளப்படும்!" மேலும், http://tamilworldtoday.com/?p=22377
-
- 0 replies
- 419 views
-
-
நயினாதீவு விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜை April 27, 2021 நயினாதீவு நாக விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜையும் , மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மத வழிபாட்டு இடங்களில் 50க்கும் குறைவானவர்களே அனுமதிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களும் குறித்த சித்திரை பௌர்ணமி விசேட பூஜை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை கடந்த 24ஆம் திகதி நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாயத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அ .பத்திநாதன் , வடமாகாண கல்வி அமைச்சின் செய…
-
- 1 reply
- 438 views
-
-
வன்னியில் அண்மைக் காலத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்தே வருகின்றது. இதனால் இந்த முகாம்களில் உள்ள சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில், எதுவுமே தெரியாத ஒரு நிலையே நீடிப்பதாக வன்னியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்ற பெயரில் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய உணவின்மை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பெரும் நோய்த் தொற்றல்களையும் கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்திருப்பதாக அங்குள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் கூறுகின்றன. இந்த மு…
-
- 0 replies
- 839 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பை எற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரியா நாட்டின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான தூதுவர் ரைமுன்ட் மாஜில் உறுதியளித்துள்ளதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் நேற்று மதியம் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடபாகவும் இங்குள்ள நிலமைகள் குறித்து ஆஸ்திரியா நாட்டின் தூதுவர் கேட்டறிந்ததுடன் யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? ஈழத் தமிழ் நிலமே நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து இருக்கிறது. போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்பது ஆண்டுகளில் நீதிக்கும் உண்மைக்குமான புள்ளியை இலங்கையை ஆட்சி செய்தவர்கள் துளியேனும் நகரவில்லை. போர் நடந்த கணங்களிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்…
-
- 1 reply
- 445 views
-
-
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல 22 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை மீது இந்தியா பலவந்தமாக திணித்தது ஒன்றாகும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில வகை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் 13ம் திருத்தச் சட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற…
-
- 0 replies
- 522 views
-
-
தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.http://goldtamil.com/?p=2734
-
- 0 replies
- 377 views
-
-
16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானமாம்? தமிழீழம் கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈடுடப்பட்டுள்ளது. முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இந்த பாதுகாப்பு சேவை சிறிலங்கா கடற்படையிடம், கடந்த 2015நொவம்பர் மாத நடுப்பகுதியில் கையளி…
-
- 0 replies
- 194 views
-
-
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் உள்ள டேவிட் வீதியில் வீடொன்றிலிருந்து தங்க நகைகளும் பணமும் நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளன. இவ் வீட்டில் வசித்த குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த சமயம் கதவு உடைக்கப்பட்டு பத்துப் பவுண் தங்க நகைகளும் 22 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அரியாலையில் உள்ள பிறிதொரு வீட்டின்மீது தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம்…
-
- 0 replies
- 399 views
-
-
தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றம் செல்கின்றார் – கட்சி மத்திய குழு இன்று முடிவு 15 Views ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் எம்.பியான ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார். இப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச்செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக…
-
- 0 replies
- 205 views
-
-
வஞ்சக வலை – புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல. சிறுபான்மை இனமாக இருந்தாலும் பெரும்பான்மை இனத்திற்கு சமமான பலம் கொண்டவர்கள் என்று நிருபிக்க தமிழர்களின் மன பலத்துடனும் அவர்களின் பிள்ளைகளாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்துடனும் முப்பது ஆண்டு காலம் போராடி உலகத்தின் மூலையில் மாங்காயாக தொங்கி கொண்டிருந்த இலங்கையில் தமிழினம் என்ற ஒரு இனம…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி -இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். இறந்தவர…
-
- 2 replies
- 428 views
-
-
சுதந்திர இணையத்தள ஊடகமான 'லங்கா நியூஸ்' இணையத் தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாதவாறு அந்நாட்டு அரசு தடை செய்திருப்பதையிட்டு ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக நிறுவனமான எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு (RSF) வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஜூன் மாதம் 11 ஆம் நாள் முதல் சிறிலங்கா அரசின் உத்தரவின் பேரில் இந்த இணையத்தளம் சிறிலங்காவில் உள்ள படிப்பாளர்களால் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 465 views
-
-
கனகராசா சரவணன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. இராஜா…
-
- 9 replies
- 925 views
-
-
நிர்வாணமாக அடைத்து வைக்கப்படும் சிறைக்கைதிகள் – த.தே.கூ. சிறைக்கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்குக் கொண்டுவந்ததும் நிர்வாணமாக்குகிறார்கள் என்று த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறி காந்தாவும், சிவநாதன் கிஷோரும் முன்வைத்த முறைப்பாட்டை நீதி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு வாதத்துக்கு எடுத்தது. மேற்படி முறைப்பாட்டை கடந்த வியாழக்கிழமை நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையில் இடம்பெற்ற குழுக் கூட்டத்திலேயே முனவைத்திருந்தார்கள். ஒரு சிலர் கஞ்சா, கெரோயின் போன்றவற்றைக் கடத்தியதாக அறிந்திருந்தாலும் கூட சிறைக்கைதிகளை இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது, கருத்தில்லாதது, நியாயமற்றது என சிறி காந்தா சொன்னார். தேடுதலின்போதும் உடலின் எந…
-
- 0 replies
- 700 views
-
-
சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் 22 Views இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 334 views
-
-
சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினர் தவிர்ந்த வேறு எவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கிழக்குப் பிராந்திய பிரதி காவல் மா அதிபர் எடிசன் குணதிலக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
த.தே.கூவின் மே தினக் கூட்டம் எஸ்.சபேசன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாகச் சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை வந்தடைந்தது. "தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்" எனும் …
-
- 1 reply
- 278 views
-
-
சர்வதேச போலீஸாரால் கைது செய்யப் பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இயக்குனரும் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரென தன்னைத் தானே அறிவித்துக்கொண்டவருமான கே.பி. எனப்படும் செல்வராஜாபத்மநாதனை கொழும்புக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வுத் துறையினர். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ரகசிய இடத்தில் வைத்து, இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடுமை யான உளவியல் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் பத்மநாதன். பத்மநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச தொடர்புகளில் விசாரித்த போது,…
-
- 0 replies
- 981 views
-
-
-
பா.நிரோஸ் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட், தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக…
-
- 17 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா? பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக…
-
- 16 replies
- 1.6k views
-
-
. தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் – விஜயகலா! தமிழ் மக்கள் தீர்வு தீர்வு என தீர்வை எதிர்பார்க்காது இருக்கவேண்டுமெனவும், கடவுள் கருணை கூர்ந்தால் மாத்திரமே எங்களுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வே…
-
- 11 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் அண்மையில் சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பாஜியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பாவி இளைஞர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்கின்றனர் எனத் தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜியின் படுகொலையை அடுத்து அவரது குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பாவி இளைஞர்கள் என அப்பகுதிப் பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பாவி இளைஞர்களைக் கைது செய்யும் காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்…
-
- 0 replies
- 422 views
-