ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அநாதரவான படகிலிருந்து 153 கிலோ கஞ்சா மீட்பு 0 SHARES ShareTweet காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து வட கிழக்கில் 8.5 கடல் மைல் தூரத்தில் அநாதரவாக இருந்த படகிலிருந்து 153 கிலோ கிராம் கேரளக் கஞ்சா நேற்றுக் கைப்பற்றப்பட்டது என்று கடற்படையினர் அறிவித்தனர். கடற்படையினர் வழமையான கடல் சுற்றுக் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு படகின் நடமாட்டத்தை அவதானித்தனர். அந்தப் படகை நெருங்கியபோது படகில் எவரும் இருக்கவில்லை. படகை கடற்படையினர் சோதனையிட்டனர…
-
- 0 replies
- 213 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை... ஆறு மாதங்களிற்கு, ஏற்படுத்துவதற்கான யோசனை – முன்னாள் ஜனாதிபதி முன்வைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். தனது யோசனைகளை கடிதமொன்றில் தெரியப்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர், “நான் பல கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர், காலிமுகத்திடலில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களின் கோரிக்கைகளை-மூத்த அரசியல்…
-
- 0 replies
- 81 views
-
-
ஈழம் – இன்றைய அவலம் : எம்.ரிஷான் ஷெரீப் “கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழ மாணவர்களின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக…
-
- 0 replies
- 937 views
-
-
சிறிலங்காவின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களில், சீனாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வடக்கிற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பையும் சீனாவே ஏற்றுக் கொண்டுள்ளது. சீன அரசுத்துறை நிறுவனமான மேர்ச்சன்ட் குழுமம், 1 பில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளது. போரினால் பாதிக்கப்பட வடக்கையும், சுற்றுலா நகரான கண்டியையும் கொழும்புடன் இணைக்கும் வகையில் சுமார் 300 கி.மீ தூரத்தைக் கொண்டதாக இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, 48 கி.மீ தூர நெடுஞ்சாலை அமைப்புப் பணிகள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான சாத்திய வள ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான புரிந்த…
-
- 4 replies
- 713 views
-
-
‘உங்களை புரிந்துகொள்கின்றோம், எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ சிங்கள மக்களிடம் தமிழர் தரப்பு! தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியாக ‘உங்களை புரிந்துகொள்கின்றோம் எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு தமிழர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து, தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்தனர். இதன்போது, வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு…
-
- 1 reply
- 355 views
-
-
''ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் எங்கள் பதவிகளைத் துறந்து எமது மக்களது விடுதலைக்காக உலகத் தமிழர்களுடன் இணைந்து போராடங்களை முன்னெடுப்போம்'' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக இணையத் தளங்களில் வந்த செய்திகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் சற்றுத் தலை நிமிர்த்த வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடத்தை மீது சந்தேகம் தெரிவித்தவர்கள் கூட, இந்தச் செய்தியால் உற்சாகம் கொண்டுள்ளார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் நொருங்கிப்போய், பேச்சு - மூச்சிழந்து முகம் புதைத்…
-
- 12 replies
- 1.6k views
-
-
மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை May 6, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன . எனினும் சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2022/176256 பதவி விலகுமாறு ஜனாதிபதி…
-
- 5 replies
- 520 views
-
-
போர் முடிந்தும் இனஉறவுகள் மேம்படவில்லை இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், அங்கு அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இன்னமும் முகாம்களில் மக்கள் போர் முடிந்து ஓராண்டாகியும் மக்கள் முகாம்களில் உள்ளனர் இந்நிலையில் பல ஆண்டுகளாக சமூகங்களுக்கு இடையே சீர்குலைந்து போயிருந்த இன உறவுகளை சீரமைக்கின்ற பணி இன்னும் இலங்கையில் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்று ஆய்வாளரும் இலங்கை விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான டி பி எஸ் ஜெயராஜ் கூறுகிறார். டி பி எஸ் ஜெயராஜ் பேட்டி போர் ஏற்படுத்திய பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் கூட இன்னமும…
-
- 1 reply
- 499 views
-
-
துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த இ.போ.ச பேரூந்து மீது யாழில் தாக்குதல்! [Monday, 2014-03-17 08:47:36] யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது மடத்தடியில் வைத்து இன்று (17) காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், அதில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்ததுடன், பேரூந்தின் முன்பக்க கண்ணாடிகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேரூந்து - பேரூந்து நிலையத்தில் தரித்து நின்றிருந்த வேளை அங்கு வந்த சிலர் பேரூந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முயற்றுள்ளனர். எனினும் அதனை சாரதியும் நடத்துனரும் அதற்கான …
-
- 0 replies
- 335 views
-
-
அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்குள் அரசினால் செல்லவிடாமல் தடுக்கப்பட்டமைக்கு சர்வதேச சமூகம் இன்னமும் கண்டனம் வெளியிடாமை குறித்து கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்தவை வருமாறு: அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு சர்வதேச அமைப்பும் இன்னமும் கண்டனம் வெளியிடவே இல்லை. சர்வ தேசத்தின் மௌனம் தமிழ் மக்களை மிகவும் காயப்ப டுத்தி உள்ளது. தமிழ் மக்களுக்கு அரசு எ…
-
- 0 replies
- 620 views
-
-
ஒரு முடியாத போர் admin | March 22, 2014 | 0 Comments நேற்றைய தினம் (21.03.2014) அன்று பிரித்தானியா கனடிய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ‘ஒரு முடியாத போர்” இலங்கையில் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் என்ற நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்ந நூலை யஸ்மின் சூகா ( The Bar Human Rights Committe,England & Wales,The International Truth and Justice Project-Srilanka) அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் போருக்குப் பின்னர் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களின் உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளது. நூலை வாசிக்க கீழ் வரும் இணைப்பில் அழுத்தி வாசியுங்கள் :- http://www.stop-torture.com/ போருக்கு…
-
- 0 replies
- 658 views
-
-
யாழ். கண் சிகிச்சை விவகாரம்: பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் பார்வையிழப்பு சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும் பார்வையிழந்தார். கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப் பேர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்துகொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை ச…
-
- 1 reply
- 629 views
-
-
இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து புதுடெல்லி , புதன், 9 ஜூன் 2010( 15:51 IST ) தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு, முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராஜபக்சவுடன், பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்த நிலையில், இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. இலங்கை அதிபராக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நான்கு நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார் ராஜபக்ச.அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜபக்ச, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை முகாம்களில் அடைக்…
-
- 0 replies
- 603 views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய, ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளனர் 20 June 10 01:50 am (BST) இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய மற்றும் ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய சர்வதேச முதன்மையாளர் குழுவில் அங்கம் வகித்த இந்தோனேஷியாவின் சட்ட மா அதிபர் மாரூஸ்கீ டாருஸ்மான் இந்த நிபுணர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலைச் சம்ப விசாரணைக்குழுவிலும் டாருஸ்மான் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிபுணர்கள் குழு…
-
- 0 replies
- 794 views
-
-
கைது செய்யப்பட்ட 14 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்கக் கோறி மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள் (படங்கள்:கித்சிறிடிமெல்) http://tamil.dailymirror.lk/--main/105668-2014-04-03-09-51-08.html
-
- 0 replies
- 376 views
-
-
டீசல் விநியோகத்தை... மட்டுப் படுத்தப்படுத்த, தீர்மானம். மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285466
-
- 0 replies
- 231 views
-
-
மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங் எல்லாப் பாதைகளுமே மகிந்தவை நோக்கி - தமிழ்நெட் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அறிவுரை கூறியதாக வெள்ளியன்று வந்த பத்திரிக்கைச் செய்திகள் கூறியுள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியின் கூற்றுப்படி , " முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களையும் சேர்த்து மகிந்தவுடன் ஒற்றுமையாக அரசியல் தீர்வைத் தேடுங்கள் என்று இந்தியப் பிரதமர் எமக்கு அறிவுரை கூறினார்.நாம் அதற்கு முயற்சிப்பதாகக் கூறினோம்" என்றும் அவர் சொன்னார். அவர் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத சாரதி- தெய்வாதீனமாக தப்பித்த சம்பவம்! கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக உள்ள புகையிரத கடவையில் சமிக்ஞை போடப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடை நடுவில் மாட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் நேற்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக உள்ள புகையிரத கடவையில் நேற்று(16) பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிக்கும் புகையிரதம் வருகை தரும் நேரம் புகையிரத கடவை சமிஞ்சை போடப்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடைநடுவில் மாட்டிக்கொண்டார். …
-
- 0 replies
- 396 views
-
-
சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு அம்பாறையில் கிராமவாசிகள் மீது தாக்குதல் ‐ கிராமவாசிகள் கிராமங்களைவிட்டு வெளியேற்றம் 19 July 10 01:39 am (BST) சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கிராமவாசிகள் சிலரைத் தாக்கியதை அடுத்து அக்கிராமவாசிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி உள்ளார்கள். பொத்துவில், பாணம, ராகம்வெல ஆகிய கிராமங்களுள் நுழைந்த இந்த ஆயுதக்குழுவினர் கிராமவாசிகளைத் தாக்கியதோடு அங்கிருந்த வீடுகளையும் சேதப்படுத்தினர். ராகம்வெலவில் உள்ள வாலுகாராம விகாரையும் தாக்குதலுக்குள்ளானது. தாக்குதலுக்குள்ளானவர்களில் உணவட்டுணே விஜயவன்ச தேரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ஒரு மணியளவில் எங்களை எழுப்பிய ஆயுததாரிகள் விகாரையை …
-
- 2 replies
- 1.3k views
-
-
மூகாம்பிகை அம்மனை வழிபட்ட பிரதமர் ரணில் : நாளை மோடியுடன் சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று முற்பகல் 11.15 மணியளவில் கொல்லூர் அருகே உள்ள அரசிரூர் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வந்திறங்கிய பிரதமர், ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள விடுதி ஒன்றில் தயாராகிக் கொண்டு மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்குச் சென்றார். நேற்று முற்பகல் 11.50 மணியளவில் அங்கு பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.. முகாம்பிகை அம்மனை தரிசித்த பின்னர், அவர்…
-
- 0 replies
- 262 views
-
-
யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி… http://globaltamilnews.net/archives/51644
-
- 1 reply
- 471 views
-
-
இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு- கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் புதுப்பிக்கத்தக்க மி…
-
- 14 replies
- 786 views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 19வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இன்று காலையில் Baigneux-Les-Juifs என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 8 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 41 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 40 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலையில் இணைந்து நடந்திருந்தனர். சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றி பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்டறிந்து அதனை ஏனையவர்களும் அறியச்செய்து வருகின்றனர். பரிஸ் நகரில் இருந்து 301 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வே…
-
- 0 replies
- 583 views
-
-
தேர்தல் பங்கீட்டில் குழப்பம்! தேர்தல் பங்கீட்டில் குழப்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கண்டிருந்த இணக்கப்பாடுகள் நேற்று முற்றுமுழுதாகக் குழம்பிப்போயின. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த முதல் கூட்டத்தில் பங்கீடு தொடர்பில் 8-0 சதவீதமான இணக்கப்பாடு ஏற்பட்டதாக அனைத்துக் கட்சிகளும் அறிவித்திருந்தன. ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அந்த 80 வீதத்துக்…
-
- 0 replies
- 325 views
-
-
லொறியில்... பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள், விபத்தில் காயம் – 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி! கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின் பகுதி இடிந்து விழுந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பிரதேசவாசிகள் காயமடைந்த மாணவர்களை கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தின்போது மாணவர் ஒரு…
-
- 1 reply
- 220 views
-