ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான இடம் குறித்து அரசாங்கம் விஷேட தகவல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு நோர்வே தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளது. அரசாங்கத்தின் விசேட தகவலை வன்னி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் புலிகளுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதியை பொறுத்தவரையில் சமரச பேச்சுவார்த்தையை ஐரோப்பிய நாடு ஒன்றில் அல்லது புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே நாட்டில் நடத்த விருப்பம் கொண்டுள்ளார். அதனை நோர்வே தூதுவர் ஊடாக புலிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கொலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஈரானில் உள்ளனர் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன ஐந்து இலங்கை மீனவர்கள், தற்போது ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 29ம் திகதி பிற்பகல் முதல் சில நாட்கள் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஐவர் காணாமல் போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டது. இந்தநிலையில், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்த நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ஐவர் ஈரான் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளதாக, இலங்கைக்கு தெரியப்படு…
-
- 0 replies
- 371 views
-
-
"போராடித்தான் எமது தேசத்தை மீட்கமுடியும்": தனது மகளைப் போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை!! [திங்கட்கிழமை, 30 சனவரி 2006, 19:07 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துக்கு தன் மகளை ஒரு தந்தை வழி அனுப்பி வைத்திருக்கிற "நிகழ்கால" புறநானூற்று நிகழ்ச்சி தமிழீழத்தில் நடந்துள்ளது. "எனக்கு இப்போது 56 வயதாகிறது. இந்த நாட்டில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால் எங்களுக்கு இன்னமும் நிம்மதி கிட்டவில்லை. எனவே நாங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் முழுமையாக அணிதிரண்டு போரிடுவதன் மூலம்தான் எமது தேசத்தை முழுவதுமாக மீட்கமுடியும். அப்போது தான் எமது பிள்ளைகளுக்காவது ஒரு நிம்மத…
-
- 0 replies
- 1.6k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- இணைப்பு - 2 முதற் பதிவேற்றம்- 19-05-2014 - 15:37 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர். இது தொடர்பில் உஷாளினியின் பெற்றோர் தெரிவிக்கையில் 'இறுதிப்போரின் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார். மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல…
-
- 11 replies
- 993 views
-
-
முக்கிய இரகசியங்களை... வெளியிட்ட, ஜனக ரத்நாயக்கவை பதவி விலக்க முயற்சிக்கும் ஆளும் தரப்பு? பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பிலான யோசனை ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் 113 பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை கடிதம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர்களிடம் …
-
- 0 replies
- 145 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு, சாளை கடற்பரப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகொப்டரின் சிதைவுகளில் உப்பு கலந்திருப்பதால் அதனை உடனடியாக அடையாளம் காண முடியாதுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், யுத்த காலத்தின் போது காணாமல் போன, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமாக ஹெலிகொப்டரொன்றின் பாகங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நம்புவதாக அவர் கூறினார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், கடற்புலிகளின் முகாம் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்காக எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 17 ரக தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில், இன்று கடலிலிருந்து மீட்கப்பட்…
-
- 3 replies
- 705 views
-
-
ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது… ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி வேட்புமனுவை... மீளப் பெறத் தயார் – நிபந்தனைகளுடன் அனுர அறிவிப்பு! எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்புமனுவை மீளப் பெறத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்…
-
- 0 replies
- 198 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதற்கு முன்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு மாதங்களில் இலங்கை செல்லக் கூடும் என புது டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு இலங்கை சென்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் சுஷ்மா தலைமையிலான குழு சந்தித்தது. இந்நிலையில் பிர…
-
- 0 replies
- 794 views
-
-
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை 06 ஜூன் 2014 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடாது 13ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் ரத்து செய்ய வேண்டுமென அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கி வரும் அழுத்தங்களுக்கு 13ம் திருத்தச் சட்டமே முக்கிய ஏதுவெனத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது னஎ அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை முறைமையினால் பணம் விரயமாவதனைத் தவிர வேறும் எந்த நன்மைகளும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா…
-
- 2 replies
- 676 views
-
-
இறுதி மோதல்களின் போது தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்றால் அல்லது மோதல்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஏதும் இல்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பயப்பிடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு, சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனால் நாட்டு மக்களே கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகாரத்தைப் பரவலாக்கி நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்தி…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் கேசாப் இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் அரச, எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்…
-
- 0 replies
- 475 views
-
-
ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிக்கு சந்தியா எக்னலிகொட பகிரங்க சவால் இராணுவத்தினருக்கும், கொலையாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துவரும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சவால் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்ற நிலையில் அதற்கான முழுப்பொறுப்பையும் இராணுவ புலனாய்வுப் பிரிவே ஏற்கவேண்டும் என்றும் சந்தியா எக்னலிகொட வலியுறுத்தினார். கே…
-
- 1 reply
- 431 views
-
-
By VISHNU 08 AUG, 2022 | 09:16 PM (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்தது. கோட்டை நீதிவான் திலின கமகே, ஜோஸப் ஸ்டாலினை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்து இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இவ்வழக்கு தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய பிணைக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன் …
-
- 0 replies
- 137 views
-
-
தென்மராட்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்கியிருந்தவேளை காணாமல் போன எட்டு இளைஞர்களும் சடலங்களாக வடமராட்சியின் கப்பத்து வெளிப்பகுதியில் மீட் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பத்து பகுதிக்கு அண்மையாகவுள்ள கொம்பிமுனைக் காட்டுப் பகுதியிலேயே இ ந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் பெருமளவு சிங்களப் படையினர் குவிக்கப்பட்டு எவரும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று கொடிகாமம் நெல்லியடி வீதிää சாவகச்சேரி பருத்தித்துறை வீதி உள்ளிட்ட கப்பத்துப் பகுதிக்கு வரும் சாலைகள் அனைத்து படையினரால் மூடப்பட்டு பெருமளவான படையினர் …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது – முதலமைச்சர் ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி: மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்றார். இந்நிலையில் வடமாகாணத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைச் சவால்கள் எவை? பதில்: முன்னர் நிலவிய சூழல் தற்போதில்லை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. பரந்துபட்டளவில் நோக்கில் ஜனநாயகம் ம…
-
- 0 replies
- 195 views
-
-
கொழும்பு, முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா இரதோற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை 5.00 மணிமுதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் காலை 7.30 மணியளவில் உற்சவ மூர்த்தியின் வெளிவீதி உலா ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்கள் இந்த இரத பவனியில் கலந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_3934.html
-
- 0 replies
- 643 views
-
-
கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம். - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07 மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப…
-
- 6 replies
- 2k views
-
-
நீதியரசராக இருந்த நீங்கள் ஏன் நீதிமன்றை நாடவில்ல? – விக்கியிடம் தென்னாபிரிக்கக்குழு (படங்கள்) மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் தென்னாபிரிக்கக் குழுவினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இடம்பெற்றுவரும…
-
- 2 replies
- 884 views
-
-
“அரசியல் கள்வர்களை கருவறுக்கும் நடவடிக்கை ஆரம்பம் : மூவினத்தவரையும் ஒரே குடும்பமாக காண்பதே எனது கனவு” அரசியல் கள்வர்களை கருவறுக்கும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன். கள்வர்களற்ற மூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளில் நேற்று புதன்கிழைமை இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாவதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்கள…
-
- 0 replies
- 138 views
-
-
தமிழ் மக்களின் அவலங்களுக்கு நானும் பொறுப்பு! அமைச்சர் தேவா பகிரங்கமாக குற்ற ஒப்புதல் ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 18:18 ஆயுதப் போராட்டத்தில் முன்பு ஈடுபட்டவன் என்கிற வகையில் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு நானும் பொறுப்பாளி ஆவேன் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மாவட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அவர் பேசாலைக் கிராமத்தில் பனை,தென்னை அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தை இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்கிற பழமொழிக்கு அமைவாக ஆயுதப் போராட்டத்தில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழில் இருந்து வெளியாகும் அரச சார்பு பத்திரிகையில் வெளியான அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் :- எமது மக்களை அரசாங்கம் அடக்குகிறது, இராணுவம் அடக்குகிறது இன்னமும் ஈ.பி.டி.பியினர் அடக்க வேண்டுமென நினைத்தால் அக்கட்சியினர் படுதோல்வியை மட்டுமல்லாது பல ஆப…
-
- 0 replies
- 411 views
-
-
08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது. இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது. நிதி தொடர…
-
- 0 replies
- 643 views
-
-
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், எனது கணவருமான விமல் மாஸ்ரர் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் படையினரிடம் சரண் அடைய சென்றபோது இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு கால் இல்லாதவர். அவரை நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும்.” இவ்வாறு தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்கியபோது கோரி உள்ளார் விமல் மாஸ்ரரின் மனைவி கமலேஸ்வரி. அவர் இச்சாட்சியத்தில் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ”கால் இல்லாத எனது கணவரால் தனித்து எவ்வேலையும் செய்ய முடியாது. நான் இன்று 2 பிள்ளைகளுடன் கணவரது சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றேன். அவரை கண்டு பிடித்துத் தாருங்கள்.” http://www.tharavu.com/2010/11/blog-p…
-
- 0 replies
- 1.1k views
-