Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்பு தாமதமாகும் காரணத்தினால் அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என முன்னர் குதெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று திடீரென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil

  2. பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 55 இலங்கையர்கள் சற்று முன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரவிக்கின்றார். 48 ஆண்கள் உட்பட 7 பெண்கள் வந்தடைந்துள்ளனர். இவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை, வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்தவர்கள் என்பதுடன் இவர்கள் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வரவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil

  3. முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்? என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழ…

  4. வானத்திலுள்ள கோள்களின் ஆராய்வு பற்றிச் சில சிந்தனைத்துளிகள் அன்று சித்தர்களும் ஞானிகளும் மனக்கண்கால் பார்த்து வானியல் பற்றி எழுதி வைத்ததைத்தான் ஆராய்ந்து இன்றைய விஞ்ஞானிகள் உண்மை என்று சொன்னாலும் இன்னும் ஏகப்பட்ட விடயங்கள் சித்தர்களாலும் ஞானிகளாலும் சொல்லப்பட்டவை விஞ்ஞானத்தால் நிருபிக்கப்படவில்லை. முயலுகின்றனர். சித்தர்கள் நீர்க்கிரகம், நெருப்புக்கிரகம், வாயுக்கிரகம் என்றும் சொல்லி வைத்தார்கள். வானில் ஒரு கிரகம் திண்மமும் திரவமும் இல்லாமல் இருக்கமுடியாது. வாயு இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் திரவப்பெருள் இல்லையெனில் அக்கிரகம் பாதிப்புக்கு உள்ளாகிவிடும். எனவே எல்லாக்கிரகத்திலும் எதோ ஒரு திரவம் இருந்தாக வேண்டும். இன்று விஞ்ஞானிகள் தண்ணீர் இருக்கு இல்லை என்று அடிக்கட…

  5. தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் எனக்கோரி இன்று (15-12-2011) சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோரை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! இன்று பிரித்தானியாவில் இருந்து 50 இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக கீத்துறூ விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த வேளையிலேயே ACT NOW அமைப்பினரால் அச்சிறைச்சாலையின் முன் திடீர் வீதிமறிப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. 9 பேர் மட்டும் துணிச்சலாக மேற்கொண்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி கைத்தொலைபேசி ஊடாக குறும் தகவல் செய்திகள் அனுப்பப்பட்ட போதும் போதிய மக்கள் அவ்விடத்திற்க்கு செல்லாத காரணத்தால் மக்கள் பலமின்றிய போராட்டத்தை இலகுவாக பிரித்தா…

  6. சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு! - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படாத தீர்வுத்திட்டமானது முழுமையானதொரு தீர்வுப் பொதியாக அமையாது." இவ்வாறு நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், தெஹிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "உதயனு"க்கு வழங்கிய விசே…

  7. 13 டிசம்பர் 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்: 1. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு தொடர்பிலானது: அ) பல சுற்றுத் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்ட போதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எமுத்து வடிவில் விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் …

  8. யாழ். மாநகரசபை மற்றும் யாழ். காவற்றுறையினர் இணைந்து இன்று காலை யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் அமைந்திருந்த நடைபாதை வியாபார நிலையங்களுள் சிலவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதுவித முன்னறிவிப்பும் வழங்காமல் இவ்வாறு கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகர சபையினர் மற்றும் காவற்றுறையினரின் செயலால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் மாநகர சபைக்கு சொந்தமற்ற தனியாருக்கு சொந்தமான உறுதிக்காணியில் அமைந்திருந்த நடைபாதைக் கடைகளே இவ்வாறு அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அடாவடித் தனத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூபா பத்தாயிரம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ம…

  9. யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் …

  10. யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை விடுவிக்குமாறு கூறுவதைவிட தன்னால் வேறு என்ன சொல்ல முடியும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ள லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் கூறப்பட்டதை கேட்டிருக்கிறேன். காணாமல் போயுள்ளமை தொடர்பில் எனக்குத் தெரியாது. கடத்தப்பட்டிருந்தால் விடுவ…

  11. மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைக் கொண்டு செல்வதற்கு பிளாஸ்ரிக் கூடைகளை பயன்படுத்துவதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் விடுக்கப்பட்டுள்ளதே தவிர அந்த சட்டத்தில் கொள்கை ரீதியில் எதுவித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் இன்று அறிவித்தது. மேற்படி சட்டம் நாட்டுக்கு உகந்த வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. மாறாக இதனை நடைமுறைப்படுத்துவதிலேயே அரசாங்கம் சிற்சில பிரச்சினைகளையும் தோல்விகளையும் எதிர்நோக்கியது. இவற்றை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதியினால் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் வர்த்தகர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்…

  12. யாழ். நகரில் நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரபல வர்த்தகரின் மகன் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். அத்தியடியைச் சேர்ந்த, பாக்கியராசா தனுஜன் என்ற 18 வயது மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட…

  13. போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானது, நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாகவும், எமது மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டும். இரா.சம்பந்தன் அறிவுபூர்வமாக பேசவில்லை. உணர்வுபூர்வமா…

  14. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தாம் ஈடுபட்டதாக பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் நெருங்கிய நண்பரான அடெம் வெரிட்டி தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாகஅமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு லியாம் பொக்ஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயங்களில் தனது நண்பரை சட்டவிரோதமான முறையில் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் காரணமாக, லியாம் பொக்ஸ் அண்மையில் தனது பதவியை துறக்க நேரிட்டது. அடெம் வெரிட்டி, லியாம் பொகஸூடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடெம் வெரிட்டி மிக நீண்ட மௌனத்தின் பின்னர் முதல் தடவையாக, லியாம் பொக்ஸூட…

  15. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமானwww.naathamnews.com இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார். நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது. இந்த அமர்வின் போதே நாதம் செய்திகள் இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார். நாதம் செய்தித்தளத்தில் நா.த.அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்திகள் மற்றும் அறிக்கைகளை அனைவரும் பார்வையிடலாம். இதேவேளை தமிழர் நலனை முன்னிறுத்திய பிற செய்திகளும் இத்தளத்தில் இணைக்கப்படும் என தகவல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகத்தின் செயற்த்திட்டங்களின் விரிவாக்கத்தின் ஒரு கட்டம…

    • 2 replies
    • 2.2k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்படுவதாகவும் பாரதூரமான குற்றம் இழைத்தோருக்கு நீதிமன்றங்களில் விசாரணை நடாத்தப்பட்டு உரிய தீர்ப்பு வழங்கப்படுமென்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நீதியமைச்சின் தற்போதைய நட வடிக்கைகள் பற்றியும், அடுத்தாண்டுக்கான புதிய செயற்றிட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிப்பதற்காக நேற்று நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். இதன்போது கருத்து தெரிவிதத்த நீதியமைச்சர், சம்பந்தப்பட்ட தமிழ் கைதிகள்…

  17. யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கண்டு அஞ்சப் போவதில்லை என சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அந்த சவாலை எதிர்நோக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அதனைக் கண்டு அஞ்சப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக ஆதிக்கம் கைநழுவிப் போகும் சில சக்திகளினால் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சர…

  18. இன்று பிரித்தானியாவில் இருந்து சுமார் 50 இலங்கை அகதிகள் நாடுகடத்தபப்டவிருக்கின்றனர். எந்த விமான நிலையத்தின் மூலம் இந்த அகதிகள் நாடு கடத்தபப்டுவர் என்பதனை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் மறைத்துள்ளனர். ஆனால் விசேட விமானம் மூலம் இவர்கள் இன்று மாலை நாடு கடத்தபப்டவுள்ளனர். கடந்த யூன் மாதம் லூட்டன் விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாடு கடத்தபப்ட்டமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இவர்கலை நாடு கடத்துவது ஆபத்தானது என மனித உரிமை ஆர்வலர்கள் வாதாடி வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil

  19. எதிரணியில் அருகருகே அமர்ந்திருக்கும் தமிழ் உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் சபையில் கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவரையொருவர் வசைபாடி திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர். இதனை அவையில் இருந்த இரு தரப்பினரும் வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வெகுஜன ஊடக தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீரங்கா எம்.பி.க்கும் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரனுக்கும் இடையிலேயே வாய்ச்சண்டை ஏற்பட்டது. ஸ்ரீ ரங்கா எம்.பி. தனதுரையில்: http://youtu.be/jBjsdTNO394 ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன் இணையத்தளங்கள் தடை குறித்தும் எடுத்திய…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (14) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நிறைவடைந்துள்ளது. இன்றைய சந்திப்பில் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு காணி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் மாத்திரம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். காணி அதிகாரம் குறித்த முழுமையான பேச்சுவார்த்தை இன்று நிறைவு பெறாத நிலையில் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.eeladhesa...ndex.php?option

  21. 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது. தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

  22. அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ச, நாளையதினம் வியாழக்கிழமை சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். அவர், மேல் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், நாளை காலை 250 பேருக்கு இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது. வெகுவிரைவில் நமாலை நீதிபதியாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் எனவும் ஆருடம் கூறப்படுகிறது. அவரது தந்தையார் ஜனாதிபதியாகவுள்ளநிலையில் தம்பிமார்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துதல், ஏனைய குடும்ப உறுப்பினர்கள் சிலர் இராணுவத்தில் உயா …

  23. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தமிழர் விவகாரங்களுக்கான அரசியல் நிபுணர் தேவை! Published on December 14, 2011-7:20 am · No Comments கொழும்பில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் தமிழர் விவகாரங்களில் அரசியல் நிபுணராக பணிபுரிவதற்கு ஒருவரை நியமிக்க இருக்கின்றது. அது தொடர்பாக இன்று கொழும்பிலிருந்து வெளிவரும் நாளிதழில்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழர் விவகாரங்களுக்கான தகவல் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், அறிக்கை எழுதுதல், ஆகியவற்றிற்கான தொடர்பு வலையமைப்பு ஒன்றை விருத்தி செய்து பயன்படுத்த கூடிய ஒருவரை தாம் அரசியல் நிபுணராக நியமிக்க உள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் எழுத பேசத்தெரிந்தவராகவும்,…

  24. சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பாராளுமன்றில் இன்று (14) உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளே இலங்கை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. எனவே சர்வதேசத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. இதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க ம…

  25. போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச குழு விசாரணை நடத்தியே தீரவேண்டும்- சம்பந்தன்! Published on December 14, 2011-7:02 pm · சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளே இலங்கை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. எனவே சர்வதேசத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என சம்பந்தன் தெரிவித்தார். இதனை இலங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.