ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
மன்னார் மாவட்ட அரசஅதிபர் என்.வேத நாயகன் மற்றும் முல்லைத்தீவு அரசஅதிபர் ஏ.பத்திநாதன் ஆகியோர் நேற்றுப் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகை யில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு அரசஅதிபர் ஏ.பத்திநாதன் மொனராகலைக்கு இடமாற்றப்பட்டதை அடுத்து என்.வேதநாயகன் அந்த இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்துக்கு புதிய அரசஅதிபராக சரத்ரவீந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் கடும் விமர்சனத்தைக் கிளப்பி உள்ளன. மன்னார் அரசஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்துக்குப் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது தமக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக அரச அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தச் செயல் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு எதிரானது …
-
- 0 replies
- 824 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு விஜயமானது இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அந்த விஜயமானது பேச்சுக்களுக்கு தடையாக அமையாது. கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதாவது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் இலங்கை மக்கள் என…
-
- 0 replies
- 579 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய பிரதமர் கெமரூனைச்சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரித்தானிய பிரதமரைச் சந்திப்பதற்கு அதிக விருப்பம் கொண்டிருந்த போதும் அதற்கான நேரத்தை பிரதமர் அலுவலகம் ஒதுக்காமை காரணமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமரைச் சந்திப்பது தொடர்பான கூட்டமைப்பின் வேண்டுகோள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு நேர காலத்துடன் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டடிருந்த போதும் அதற்கான நேரத்தை ஒதுக்குவதில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அசிரத்தையுடன் செயற்பட்டது என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது…
-
- 5 replies
- 1k views
-
-
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். குருநகரிலுள்ள அவரது சிலைக்கு இன்று செவ்வாய்க்க்கிழமை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்போடு அரசியல் நடத்திய மாமேதை பொன்னம்பலம் தமிழர்களின் இதயங்களிலிருந்து என்றும் நிங்காதவர். தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு உயிரோட்டமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 13 replies
- 1.5k views
-
-
திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும் நேற்று இலங்கை வர ஏற்பாடாகியிருந்தது.ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்த நிலையில் இறுதிநேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது எனத் தெரிகிறது. ஒப்பந்தம் கைச்சாத்திடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக வெளிவரவில்லை. ஆனால் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் பிறந்த நாளில் வேல்முருகன் புதிய கட்சி தொடங்குகிறார் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேலுமுருகன் புதிய கட்சி துவங்கவிருக்கிறார். பாமகவில் இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வேல்முருகன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் பா.ம.க. நிறுவனர் ராமதாசையும், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனையும் தரக்குறைவாக பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டவர்களை சுற்றுப்பயணம் செய்து சந்தித்து ஆதரவு திரட்டப்போவதாக அறிவித்தார். பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத…
-
- 1 reply
- 829 views
-
-
தற்கால சூழ்நிலையில் யாழ்ப்பாணம் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் விட முன்னிலை பெற்றுச் செல்கின்றது. அதாவது சிறுவர் துஷ்பிரயோகம், இளவயதுக் கருத்தரிப்பு, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சட்டவிரோதமான குழந்தைப் பேறு, குழந்தைகளைப் பெற்று விட்டு வீதியில் வீசுவது என அனைத்துக் கீழ்த்தரமான செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. யுத்த காலத்திற்கு முன், யுத்த காலத்திற்குப் பின் என்ற காலப் பகுதியை நோக்கும் போது, தற்காலத்தில் அதிகளவான கலாசாரச் சீரழிவுகள் யாழில் முளைவிடத் தொடங்கியுள்ளன. அத்துடன் கஞ்சா விற்பனை, சட்டவிரோத மதுபான விற்பனை என யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து அங்குள்ள இளையோர்களைச் சீரழித்து வருகின்றது. இது இவ்வாறிருக்க தற்போது முளைவிடத் தொடங்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிட்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிட்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறிக்கப்படாது, சிங்கள சிறிலங்கா அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதை தடுக்க முடியும். மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நட…
-
- 14 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கு மாகணங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினால் காணிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த காணிப்பதிவினை சிங்கள அரசாங்கம் சுற்று நிருபம் ஒன்றினை பிறப்பித்ததன் மூலம் அமுல்படுத்தி வந்தமை தெரிந்ததே. இந்த சுற்று நிருபமும், காணிப்பதிவும் அரசியல் யாப்பிற்கு முரணானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்குத்தக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இச்சுற்றுநிருபத்தின் பகிரங்க அறிவிப்பை அமுல்படுத்துவதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவொன்றை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் டபிள்யூ.எல்.ஆர். சில்வா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வடக்கு கிழக்கில் காணி…
-
- 1 reply
- 916 views
-
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்- மத்திய வெளியுறவு செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்ட பிறகும் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டதால் மத்திய வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு செயலர் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், மத்திய கேபினட் செயலாளர் அஜித்குமார் சேத், பாதுகாப்புத் துறை செயலாளர் சசிகான்சர்மா, வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன்மதாஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், இந்திய கடலோர காவல்படை இணை இயக்குனர் வி.எஸ்.ஆ…
-
- 0 replies
- 679 views
-
-
இலண்டனில் இருந்து தனது விடுமுறையினை களிப்பதற்காக சிறிலங்கா சென்ற கரவெட்டிவாசி விபத்தில் பலியானார். இலண்டனிலிருந்து வருகை தந்த இவர் உறவினர்களுடன் தனி வான் ஒன்றில் யாழ் நோக்கி பயணமானார். இதன்போது புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் இவர்கள் பயணித்த வான் பிரிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இலண்டனில் இருந்து வந்த யாழ். கரவெட்டியைச் சேர்ந்த தியாகராஜா செல்வரூபன் என்ற 34 வயது நபர் உயிரிழந்ததோடு படுகாயமடைந்த சிறுமி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மேலும் ஐவர் புத்தளம் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். ----------- மூலம்
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பிய மறுநாளே மீண்டும் நேற்று சிறிலங்கா கடற்படையினர், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவுக்கு அருகில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்று, சிறிலங்காக் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் இத் தாக்குதல் சம்பவத்தில் கடற்றொழிலாளர்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் பதின்மூன்று படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகக் கடற்றொழிலாளர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்களைத் தாக்கியதுடன், அவர்களின் ப…
-
- 0 replies
- 490 views
-
-
தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் சோழ மாமன்னன் இராசஇராசன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. முள்ளி வாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. இராசஇராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
17 வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மாலைத்தீவை சென்றடைந்துள்ளார். மாலைத்தீவு நேரப்படி இன்று காலை 8.45 மணியளிவல் ஜனாதிபதி மாலைத்தீவு விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை மாலைதீவு ஜனாதிபதி மொகமட் நஜுட், அவரது பாரியார் லயிலா அலி அப்துல் மற்றும் மாலைதீவின் அரச பிரமுகர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளனர். இதன்போது ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. இம்முறை அந்நியோன்ய உறவுகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளில் 17 வது சார்க் மாநாடு நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://youtu.be/XzEwbE54Fzs http://www.vanakkamn...om…
-
- 1 reply
- 1.1k views
-
-
செயற்திறனற்ற நிறுவனங்கள் மற்றும் செயற்திறனற்ற சொத்துக்களை வழமை நிலைமை கொண்டு வரும் சட்டமூலம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள பறிமுதல் சட்டமூலம், ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட தேவைக்காக காணிகளை கொள்ளையிடும் சட்டமூலம் என கொண்டு வந்திருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதி நேரத்தில் சட்டமூலத்தின் பெயரை அமைச்சரவை மாற்றினாலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியான பாதிப்புள்ள சட்டமூலம் என்ற போதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை ப…
-
- 0 replies
- 542 views
-
-
செயற்திறனற்ற நிறுவனங்கள் மற்றும் செயற்திறனற்ற சொத்துக்களை வழமை நிலைமை கொண்டு வரும் சட்டமூலம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள பறிமுதல் சட்டமூலம், ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட தேவைக்காக காணிகளை கொள்ளையிடும் சட்டமூலம் என கொண்டு வந்திருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதி நேரத்தில் சட்டமூலத்தின் பெயரை அமைச்சரவை மாற்றினாலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியான பாதிப்புள்ள சட்டமூலம் என்ற போதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை ப…
-
- 0 replies
- 313 views
-
-
மக்கள் நலனைக் கருத்திற் கொண்டே சொத்துக்கள் தேசிய மயப்படுத்தப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹில்டன் ஹோட்டலுக்கு சொந்தமான கட்டடம் உள்ளிட்ட 37 நிறுவனங்களை அரசாங்கம் தேசிய மயப்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்கள் வினைத் திறனான முறையில் நிர்வாகம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்படும் போது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி அமைச்சர் மற்றும் திணைக்களம் ஒன்றின் தலைவரது சொத்தும் இவ்வாறு தேசிய மயப்படுத்தப்பட உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் பாரபட்சமின்றி மக்களின் நலனுக்காக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட…
-
- 0 replies
- 735 views
-
-
முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடம் மாற்ற உத்தரவுக்கான கடிதங்கள் அமைச்சினால் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் உடனடியாக மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகிய நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணியாற்றிய சரத் ரவீந்திர அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச அதிபராக அ.பத்திநாதன் கடந்த சுமார் 9 மாதங்களாகக் கடமையாற்றி வந்துள்ளார். இந்த மாவட்டத…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கையின் நிதி உதவியுடன் மாலைத்தீவில வீதி நிர்மாணம் ஜீவா சதாசிவம்/வீரகேசரி இணையம் 11/9/2011 6:58:50 PM மாலைத்தீவு அட்டு நகரில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 17ஆவது சார்க் மாநாட்டில் பங்குகொள் வதற்காக மாலைத்தீவிற்கு இன்று முற்பகல் சென்றடைந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ இலங்கையின் நிதி உதவியுடன் மாலைத்தீவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதிக்கான அடிக் கல்லையும் நாட்டி வைத்துள்ளார். மாலைத்தீவின் மரோதா பகுதியில் அமைக்கப்படவுள்ள இவ்வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அப்பகுதியிலுள்ள மக்களும் கலந்து கொண்டனர். இதன்போது, இலங்கை அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க ஆகியோருடன், வெளிநாட்டுப் பிரதிகளும் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/news/head_view.…
-
- 2 replies
- 977 views
-
-
தடை செய்யப்பட்ட இணையங்கள் இலங்கையில் தொடர்ந்து முடக்கப்படும் ஊடக சுதந்திரம். தற்போது 5 இணையங்களுக்கு தடை - லங்கா சீறி ஆசிரியர் பெனட் ரூப சிங்கே பொய் வழக்கில் கைது! தடை செய்யப்பட்ட இணையங்கள் : www.lankaenews.com www.srilankamirror.c om www.srilankaguardian .com www.paparacigossip9. com www.lankawaynews.com www.lankaenews.com - LEN http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2011/11/08/Videos-related-the-blockage-of-restrictions-on-media.aspx
-
- 3 replies
- 1.4k views
-
-
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த என். வேதநாயகன் இன்று முதல் முல்லைத்தீவு அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த ஏ.பத்திநாதன் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார். மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த சரத் ரவீந்திர நியமிக்கப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் அரசியல் தலைமைகளின் அடுத்த வியூகம் என்ன? இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டதற்கு அமை வாக தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்திராத வெற்றியைப் பெறும் அளவிற்கு தமிழ் மக்கள் உத்வேகத்தோடு வாக்களித்தனர். கடந்த காலத் தேர்தல்களை விட, உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் ஐம்பது வீதத்தை எட்டிப் பிடித்தது எனில் அது மகத்தான சாதனை எனலாம். இச் சாதனையின் பின்னணியில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை இருந்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலின் போது அரச தரப்பு வெற்றி பெற்றால் ச…
-
- 0 replies
- 890 views
-
-
சிறிலங்காவில் பல்வேறு குப்பை பத்திரிகைகளும் இணையங்களும் வெளிவருகின்றன. அவற்றுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என கூறியுள்ளார் மஹிந்த. மாலைதீவுக்கு செல்ல முன்பு நேற்று அலரிமாளிகையில் வைத்து பட்டம் முடித்த தாதியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியம் என்றும் கூறினார் மஹிந்த. அதுசரி, ஆனால் பயம் இல்லாவிட்டால் ஏன் அவற்றையெல்லாம் தடை செய்யவேண்டும்? ஏன் ஊடகவியலாளர்களை கடத்திக்கொல்லவேண்டும்? நேற்றைய சந்திப்பில் இன்னும் ஒரு சுவாரசியமான கருத்தை கூறினார் மஹிந்த அதாவது இந்த நாட்டில் ஊழல் இல்லா சேவை என்றால் அது தாதியர் சேவைதான் எனக்கூறினார் மஹிந்த.…
-
- 0 replies
- 818 views
-
-
கொழும்பு மாநகர சபையை நடத்த மனோ கணேசனின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவிற்கு ஏற்பட்டது. அதனால் ரணில் மனோவின் காலில் வீழ்ந்தார். விடுவாரா மனோ தனக்கு ஐக்கிய தேசியக்கட்சி தரவேண்டிய பாக்கியை இப்போ அறவிட தீர்மானித்துள்ளார் மனோ.. அதாவது கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தபோது தமக்கு நியமன உறுப்பினர் ஒன்று தரவேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் ரணில் தேர்தல் முடிந்தவுடன் காலைவாரிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனோ ரணிலுடனான ஒப்பந்தத்தினை ரத்துச்செதார்.. ஆனால் தற்போது ரணில் மீண்டும் காலில் விழுந்துள்ளதால் மனோ கணேசனுக்கு நியமன எம்பி பதவியை கொடுக்கவுள்ளார் ரணில். இதே வேளை மனோ கணேசனுக்கு பாராளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் த…
-
- 0 replies
- 970 views
-