Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விளக்க மறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒரு தொகுதியினர் நேற்று மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோரும் இரண்டொரு தினங்களில் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படவுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு விளக்கமறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 240 பேரிலேயே 100 பேர் நேற்று மெகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் தற்போது மெகஸின் சிறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 138 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சிங்களக் கைதிகளால் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்தே பாதுகாப்பின் நிமித்தமாக இவர்கள்…

  2. தென்பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் சி4 ரக வெடிமருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொனராகலையிலிருந்து சென்ற குறித்த பேரூந்தில் சீ4 ரக வெடிகுண்டு காணப்பட்டதை அடுத்து பஸ்சின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். . மொனராகலை சோதனைச் சாவடியில் பஸ் சோதனை செய்யப்பட்ட போது சாரதியின் ஆசனத்துக்கு அருகேயிருந்து 615 கிராம் எடை கொண்ட சீ4 ரக வெடி பொருள் மீட்கப்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். . கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இரு சிங்களவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன் நிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூலம்

  3. ஐ.நா. வின் தலைவர்களிற்கான அமர்வு நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் போது கனடியப் பிரதமரான ஸ்டீபன் ஹாப்பரைச் சந்திக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர நடைமுறைகளினூடாக முயன்று வருவதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பாக ஐ.நா. அமர்வின் போது இடம்பெறவுள்ள நாடுகளின் தலைவர்களின் இராப்போசன விருந்துபசாரம் அல்லது ஒன்றுகூடல் சந்திப்பின் போது கனடியப் பிரதமரைச் சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ள போதும் அது சாத்தியப்படாது என்றே தெரிய வருகிறது. இது போன்றதொரு விருப்பம் கடந்த முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா. சபை அமர்வு நிகழ்விலும் இலங்கை தரப்பால் கனடாவிற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை கனட…

  4. மே...மே...மேர்வின்...மே மே...மேர்வின்...மே...மே [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-09-20 10:10:11| யாழ்ப்பாணம்] தமிழ் மொழியின் சிறப்பும் சுவையும் மிகவும் அருமையானவை.மிருகங்கள், பறவைகளின் ஒலிகளுக்குக் கூடப் பெயர் சூட்டி அவற்றின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்த மொழி உலகில் தமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும். சிங்கம் கர்ச்சிக்கும், யானை பிளிறும், மயில் அகவும், குயில் கூவும், ஆடு கத்தும், மாடு கதறும் இப்படி மிருகங்கள், பறவைகளின் ஒலிக்குப் பெயர் சூட்டிய தமிழ்மொழி; ஆறறிவு படைத்த மனிதனின் ஒலி குறித்து வெவ்வேறு சொற்பதங்களை சூட்டி மனித உணர்வுகளை சொல்லூடாக வெளிப்படுத்தியது. புன்சிரிப்பு, எக்காளம், அழுகை, குளறல், கத்தல், கதறல், விம்மல், வெதும்பல் இப்படி ஒலிக்கு மட்டுமன்றி உ…

  5. செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:17 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று நியுயோர்க் சென்றடைந்துள்ளார். அவரை நியுயோர்க் விமான நிலையத்தில் வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணமாக அவர் செல்லாததால், அமெரிக்க அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவை வரவேற்கச் செல்லவில்லை. சிறிலங்கன் விமானசேவை அதிகாரிகளும், நியுயோர்க்கில் உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரிகளுமே சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்…

  6. [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:56 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நேற்று தமிழர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிட வேண்டும் என்று கோரி சுமார் 1000 வரையிலான தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் போராட்டம் நடத்தியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்ததாக ஏஎவ்பி தகவல் வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச்சாட்…

  7. கொக்கிளாயில் 45 சிங்களக் குடும்பங்கள் நாளை குடியேற்றம்! Published on September 20, 2011-9:48 am முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் இன்று ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்படவுள்ளன என்று கரைதுறைப்பற்று உதவி அரச அதிபர் எஸ்.தயானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1960 காலப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருதொகுதி மக்கள் (37 குடும்பங்கள்) அண்மையில் முகத்துவாரம் பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இப்போது மற்றுமொரு தொகுதி மக்கள் மீளக்குடியேற்றப்படவுள்ளனர். இதில் 45 குடும்பங்கள் நாளைய தினம் (இன்று) புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படவுள்ளன. ஏற்கனவே வெலிஓ…

  8. [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 00:17 GMT ] [ தா.அருணாசலம் ] வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் முப்பதாண்டு கால வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்திடம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த பிரதிநிதிகளை சந்தித்த ஐ.நாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுமே இவ்வாறு கூறியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, போரின் இறுதிகட்டம் குறித்தே மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கவலைப்படுவதாக குறிப்பிட்டுள்ள மேஜர் ஜெ…

  9. செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 00:28 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு ஒன்பதாவது கட்ட நிதியை வழங்குவதை அனைத்துலக நாணய நிதியம் பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பதாவது கட்ட நிதியான 2.9 பில்லியன் டொலரை அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்காவுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் நிதியை வழங்க முன்னர், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஒன்பதாவது கட்ட நிதியை விடுவிப்பதற்கு முந்திய பொருளாதார நிலை குறித்த மீளாய்வை அனைத்துலக நாணய நிதியம் இன்னமும் மேற்கொள்ளவில்லை. டிசம்பர் மாதம் வரை இந்த மீளாய்வை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெர…

  10. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற கூட்டமைப்பு முயற்சி! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!! சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் மகாநாடு நேற்று முன்தினம் (17-09-2011) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, அக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 16ஆம் திகதி மீண்டு…

  11. [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 02:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அநுராதபுரத்தில் பௌத்தபிக்குகள் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டு மையமான தர்காவை புனரமைத்து தருவதாக தான் வாக்குறுதி அளிக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே தவிர, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தர ஏற்பாடு செய்ய முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றினால் தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை, சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள், இடிக்கப்பட்ட தர…

  12. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 19 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை 16 சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் லாவுறா டியுபுனிலரோவிடம் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன. 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதியன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் வெளியிட்ட அறிக்கையில், சர…

  13. தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்பற்றாளருமான திருமதி ஏரம்பு சின்னம்மா காலமானார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார். சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வலிகளை சுமந்த தாயே! தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக

  14. "எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது. பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள். http://youtu.be/rCK8QACghpw http://youtu.be/7MMmaMMP8PQ ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது. ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது. 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது. கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிக…

  15. தலைப்புச் செய்தியாக மாறி அதிரவைத்துள்ள கேர்டன் வைசின் புத்தகம்! இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளராகக் கடமையாற்றி பின்னர் இலங்கையை விட்டு வெளியேறிய கோர்டன் வைஸ் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்து வருவது என்பது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அல்ஜசீரா பி.பி.சி மற்றும் சனல் 4 போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு அவர் இலங்கையில் நடைபெற்ற பல விடையங்களை தெரிவித்து ஒரு சாட்சியாகவே மாறியிருந்தார். அவர் தொடர்ந்தும் இலங்கையில் ஈழத் தமிழர் படும் இன்னல் தொடர்பாக குரல்கொடுத்துவந்தார். இலங்கையில் தாம் கண்டதையும் தனது அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். த கேஜ் என்று அழைக்…

  16. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கு சந்தித்துப் பேசவுள்ளார் என புதுடில்லி தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது ஈழத்தமிழர் பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடுவார் எனத் தெரிவித்துள்ள புதுடில்லி, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் திட்டம் எதுவும் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்றும் கூறியது. http://www.eeladhesa...ndex.php?option

  17. தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர்கள் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க முனைகிறது இலங்கை இராணுவம். போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கி இங்கே தென்பகுதிச் சிங்களவர்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்துகின்றது அரசு என்று சாடுகின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராசா. நேற்று முன்தினம் நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய மாவை சேனாதிராசா மேலும் கூறியதாவது; கிறீஸ்பூதம் என்று ஒன்று கிடையாது. இந்த இராணுவத்தினர் தான் கிறீஸ் பூதங்களாக நடமாடுகின்றனர். இவர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் மீதே குறிவைத்து சேட்டைகளில் ஈடு…

  18. [Monday, 2011-09-19 23:18:09] பிரிட்டனில் உள்ள முன்னணி சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் மீது ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை லண்டனில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். லண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான பகலஹம சோமரட்ண தேரோ என்பவர் மீது செப்டம்பர் 12 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணின் மீதான இந்த பாலியல் வல்லுறவும், மேலும் மூன்று பாலியல் ரீதியான தாக்குதல்களும் லண்டனில் செல்வந்தர்கள் வாழும் புறநகர் பகுதியான சிஸ்விக் பகுதியில், 1977 ஆம் ஆண்டுக்கும் 1978 ஆம் ஆண்டுக்கும் இடைப்ப…

  19. ஜெனிவா களத்தில் யாருக்கு வெற்றி? நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அதிரடித் தாக்குதலை ஜெனிவாவில் சந்தித்துள்ளது இலங்கை அரசாங்கம். இப்படியொரு தாக்குதலை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் போகிறார் என்ற தகவல் கூட இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. எல்லாமே தயாராகி விட்ட பின்னர் தான் தகவல் சொல்லப்பட்டது. அது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என்றே அரசாங்கம் நம்பியிரு…

  20. [Monday, 2011-09-19 21:07:15] நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவரும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சா அவர்களின் நியூயோர்க் வருகையை முன்னிட்டு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 23ம் திகதி 2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .. நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் குறிப்பாக கனடிய தமிழ் இளையோர்களை கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை தொடர்ந்து செய்து வரும் சிறீலங்கா அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ந…

  21. யுத்தத்தால் பாதிப்புற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தொழில் முயற்சிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவ்வகையில் வவுணதீவு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் என அழைக்கப்படும் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அரிசியாலை அமைப்பதற்கான ஏற்பாடொன்றினை மேற்கொள்கிறோம். யுத்தத்தால் பாதிப்புற்ற குடும்பங்கள் சிலவற்றைத் தெரிவு செய்து முதல்கட்டம் 4குடும்பங்களை உள்வாங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேற்படிபிரதேசத்தில்அரிசியாலைஅமைவதனால்ஒப்பீட்டளவில்அதிகபலனைப்பெறமுடியும். (அ) இந்த ஆலை அமையும் பிரதேசத்தில் அரவ…

  22. இராணுவ முகாம்கள், விகாரை, இராணுவ நடமாட்டம், கட்சி அலுவலகங்கள் புடைசூழ்ந்த யாழ் நகரக் கடைகளில் கொள்ளை 19 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவ முகாம்கள், விகாரை, இராணுவ நடமாட்டம், கட்சி அலுவலகங்கள்; என பலவும் அமைந்துள்ள யாழ் நகரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டு உள்ளது. நேற்றிரவு வழமையாக தமது வர்த்தக நிலையங்களை பூட்டிவிட்டு மறுநாள் திங்கட்கிழமை வழமை போன்று வர்த்தக நிலையங்களைத் திறக்க வந்தபோது வர்த்தக நிலையங்களின் பிரதான வாசற் கதவுகளில் பொருத்தப்பட்ட பூட்டுக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அங்கிருந்த நாணயத் தாள்கள் மற்றும் காசோலைகள் கொள்ளையர்…

  23. யாழ் நீதிமன்றில் பிணையில் விடுதலையான தமிழ் இளைஞர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மீண்டும் கைது 19 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண நீதிமன்றில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி பலாத்காரமாக கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சிறு குற்றச்செயல் ஒன்று தொடர்பினில் கைது செய்யப்பட்டிருந்த இவ்விளைஞன் இன்று நீதிமன்றில் கோப்பாய் பொலிஸாரால் ஆஜர் படுத்தபட்டிருந்தார்.எனினும் அவ்விளைஞனை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்திருந்தார். அவ்வேளையில் வெளியே சிவில் உடையினில் பதுங்கியிருந்த பொலிஸார் மீண்டும் அவ்விளைஞனை நீதிமன்ற வளாகத்தினுள் கைது செய்ய முற்பட்டனர்.இந்நிலையில் அடைக்கலம் கோரி அவ்விளைஞன் நீதிபதி அறையினுள் செல்ல…

  24. ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பமாகிய பொங்குதமிழ் உரிமை முழக்க பேரணி கடும் மழையின் மத்தியிலும் தொடர்ந்தவண்ணமுள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஈழதேசத்தின் சிறப்பு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் பொங்குதமிழ் உரிமைமுழக்க பேரணி ஜெனிவாவில் உள்ள முருகதாசன் திடலை சென்றடைந்துவிடும் என்று மேலும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார். பேரணியில் நாற்புறங்களும் அதிரும் வண்ணம் பறை முழங்க ஆங்கிலத்திலும் சுவிஸ் மொழியிலும் கோஷங்கள் முழங்க பேரணி தொடர்வதாகவும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதியின் போது புலத்தில் உணரப்பட்ட அதி உச்ச உணர்வலைகள் உணரப்படுவதோடு இதை பார்க்கும் போது தமிழீழ தனிநாட்டை மீட்டெடுப்பதற்கான வீச்சு இன்னும் பலம…

  25. போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. யாழ். டச்சுக் கோட்டையில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வாசஸ்தல நிர்மாணப் பணிகளுக்கு 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இந்த நிதியில் 60 சத வீதத்தை நெதர்லாந்து அரசு வழங்கவுள்ளதுடன் 40 வீதத்தை இலங்கை அரசு செலவிடவுள்ளது. எனத் தெரிய வருகிறது. இந்த வாசஸ்தல நிர்மாணப் பணிகளை இலங்கைக் கட்டடக் கூட்டுத்தாபனம் மேற்கொள்ளவுள்ளது. உல்லாசப் பயண அபிவிருத்தி என்ற பெயரிலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எந்த வகையான திட்டமாக இருந்தாலும் சிங்களத்தின் இருப்பிடமாக மாறும் அந்த திட்டத்திற்கு நெதர்லாந்து நிதி உதவி அளிப்பதா? இன்று ஜனாதிபதியின் வாசஸ்தலம் என்பார்கள் நாளை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.