ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
இந்திய எம்.பிகள் குழு இலங்கை வருகிறது இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நிலையை பார்வையிடுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். புதுடில்லிக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரை சென்னையில் சந்தித்தபோது, இலங்கை ஜனாதிபதியின் அழைப்பு குறித்து தெரிவித்தார். அவர் நாடாளுமன்றக் குழுவொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் என கிருஷ்ணா கூறினார். இலங்கைக்கு நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்றை அனுப்ப வேண்டுமென பாரதிய ஜனதா கட்சித் தலைவர…
-
- 6 replies
- 751 views
-
-
கடந்த 3 தசாப்த காலங்களாக நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அத்துடன், அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான பிரேரணை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்றும் நாட்டில் முழுமையாக ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முழு காரணமாக இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் அதன்போது, அர்ப்பணிப்பை மேற்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். …
-
- 2 replies
- 354 views
-
-
தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம். (முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. செட்டிகுளம் ஆனந்தகு…
-
- 23 replies
- 1.8k views
-
-
யாழ்.கோண்டாவில் கிழக்கில் மர்ம மனிதர்களின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் காயம் அடைந்த சம்பவம் இன்று பகல் வேளை இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ரி.தர்மலிங்கம் (வயது 54) என்ற நபர் தனது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கைக் கடன் கழிப்பதற்காகச் சென்றிருக்கின்றார். அங்கு மறைந்திருந்த மர்ம மனிதர்கள் மூவர் தர்மலிங்கத்தினைப் பிடித்து அவரது கைகளையும் கண்களையும் கட்டிவிட்டு கைகளில் பொருத்தப்பட்டிருந்த கூரிய கம்பிகளால் கிறீயிருக்கின்றனர். இதனை அடுத்து அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காயம் அடைந்த தர்மலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்க…
-
- 1 reply
- 531 views
-
-
பிரசுரித்தவர்: admin August 26, 2011 அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தும் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதைப் போன்று நீண்ட காலமாக உள்ள இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதற்கான பேச்சுகளை அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார். அவசரகாலச்சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: நீண்டகாலமாக அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவசரகாலச்சட்டத்த…
-
- 1 reply
- 717 views
-
-
-
- 0 replies
- 918 views
-
-
சிறிலங்காவின் இனப்படுகொலை புரிந்த முப்படைகளும் சேர்ந்து திருமலையில் பாரிய போர் ஒத்திகை ஒன்றை செய்து வருகின்றனர்.சுமார் 2,500 சிங்களப்படையினர் பங்குபற்றும் விசேட பயிற்சி ஒத்திகையொன்று கடந்த மூன்று நாட்களாக நடக்கின்றது. புதன்கிழமை ஆரம்பமான இப்பயிற்சியில் இலங்கை சிங்கள இராணுவத்தின் கொமான்டோ மற்றும் விசேட படைப்பிரிவினர் 1,600 பேரும் பங்குபற்றுகின்றனர். இதற்கு ஒபரேசன் நீர்க்காகம் என பெயரிடப்பட்டுள்ளதாம். இது தற்போதைய இராணுவத்தளபதியின் கண்டு பிடிப்பு எனவும் தென் இலங்கை பத்திரிகை கூறியுள்ளது. . ஆனால் இந்த ஈருடக தாக்குதல் முறை பல தேசங்களில் நடந்ததொன்று மட்டுமன்றி விடுதலைப்புலிகளினால் குடாரப்பில் வெற்றிகரமாக செய்யப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். மேலும் 1991 இல் சிங்கள இராணுவம…
-
- 0 replies
- 661 views
-
-
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 26, 2011 சிறிலங்கா அதிபர் மஹிந்த இராஜபக்ஷ அவசரகால சட்டத்தினை நீக்கியது, இந்திய அரசாங்கம் ராஜிவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை தேதி விதிக்கப்பட்டமை, இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஆகியன எல்லாமே இந்திய - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட காய் நகர்த்தல்களே. இந்த காய் நகர்த்தல்களிற்கு முதற்காரணியாக இருப்பது அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் நடக்கவிருக்கும் இலங்கை பற்றிய விவகாரமே. இந்த கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் அல்லது அமெரிக்கா இந்த…
-
- 1 reply
- 919 views
-
-
முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான மத்திய அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதம் நேற்று வேலூர் சிறைத்துறை அதிகாரிக்கு கிடைத்ததை அடுத்து தூக்கில் இடும் நாள் உறுதியாகியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூவரின் தூக்குத் தண்டனையினை ரத்துச் செய்யுமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்து மூன்று பெண் வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னை நீதிமன்றத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண் வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாகத்திலேயே தமது உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருவதாக அறியமுடிகிறது. http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 858 views
-
-
நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது. இலங்கையில் காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும் வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/
-
- 8 replies
- 1.4k views
-
-
நல்லூர்ப் பெருந் திருவிழாவின் 22ம் நாள் மாலை நேர உற்சவத்தில் மாலை 5.45 மணிக்கு வெளி வீதியுலா வந்த கந்தன் வள்ளி தெய்வானையுடன் 7 குதிரைகளில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து மாலை 6.45 மணிக்கு வெளி வீதியுலாவை நிறைவு செய்தார் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது
-
- 1 reply
- 632 views
-
-
ஜக் லெய்டனின் மறைவு தமிழர்களுக்குப் பெரும் இழப்பு தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை உலகமே இம்சை செய்து தகாத குண்டுகளும், இரசாயனக்குண்டுகளும் போட்டு தமிழர்களைத் துவம்சம் செய்தபோது புலம்பெயர் தமிழர்கள் எல்லாம் கொட்டும் பனியிலும் மழையிலும், கடும் குளிரிலும் நின்று போராடியபோது ஏனென்று கேட்பதற்கே எந்தவொரு அரசியலாளர்களும் வீதிக்கு வராதபோது, தமிழர்களையும் மனிதர்கள் தான் என்று மதித்து சட்டங்களை எல்லாம் புறம்தள்ளி தமிழர்களுக்கு ஆறுதல் வார்ததை கூறவந்த ஒரே ஒரு மனிதாபிமானமுள்ள அரசியலாளன் தான் இன்று மரணத்தைத் தழுவியுள்ளார். இத்துடன் நின்றுவிடாது தமிழர்களுக்கு உரிமைக்குரலைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருந்தவரும் அவர்தான். கனடியப்பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொடுத்…
-
- 1 reply
- 551 views
-
-
ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறத…
-
- 3 replies
- 1.5k views
-
-
கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார். மேற்கண்டவாறு தினக்குரல்; பத்திரிகை நிறுவனத்திற்க்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில். நேற்று(புதன்கிழமை) காலை 8மணிதொடக்கம் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளிற்க்குள் நுழைந்த படையினர் கிறீஸ் மனிதன் வந்தால் அது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குத் தெரியப்படுத்துங்கள், நீங்களாக அவர்களைப் பிடித்து அ…
-
- 1 reply
- 607 views
-
-
மர்ம மனிதர்கள் யார்? எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் அதில் கிறீஸ் பேய், கிறீஸ் பூதம், மர்மமனிதர் பற்றிய செய்தி தான். பத்திரிகைகளில் மட்டும் என்றில்லை, வானொலி, தொலைக்காட்சி, இணையங்களிலும் அதே செய்தி தான். நாளாந்தம் காலையில் எழுந்ததும் இன்று எங்கே..? என்று கிறீஸ் பேய்களையோ மர்மமனிதர்களையோ தேடுகின்ற அளவுக்கு மனோநிலை மாறிக் கொண்டிருக்கிறது. முன்னர் போர் நடந்த காலங்களில் கிரிக்கெட் ஸ்கோர் போன்று இழப்புக் கணக்குகளை கேட்டுப் பழகியிருந்தது போல இப்போது கிறீஸ்பேய் பற்றிய செய்திகள் மாற்றமடைந்து வருகின்றன. கிறீஸ் பேய் என்பது உண்மையில்லை அது வெறும் புரளி தான் என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும், அதையெல்லாம் பலர் காதில் வாங்கிக் கொள்ள தயாராக இல்லை. முன்ன…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கில் சுமார் 140,000 பேர் நிரந்தர வதிவிடம் இன்றி வாழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இதேசூழல் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பரவி வருவதுடன் அங்கிருக்கும் மக்கள் கூடாரங்களில் வசித்துவருவதாக குறித்த சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் இலங்கை வடக்கு மக்களின் நிலை குறிந்து மறந்துவிட்டதாகவும் குறித்த மக்களுக்கு வீடு வழங்கும் செயற்திட்டத்தினை தனியே அரசினால் முன்னெடுக்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சர்வதேச அமைப்புகள் கைகொடுக்கும் பொழுது அது சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilthai.com/?p=25022
-
- 1 reply
- 444 views
-
-
காணிகளை தமக்கு எழுதித்தருமாறு சிங்களப்படையினர் வடமராட்சி கிழக்கு கரையோர கிராமங்களில் வதியும் பொதுமக்களை வற்புறுத்தி வருகின்றனர்.இவ்வாறு வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம்; வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தாம் ஆராய்ந்ததாக வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். சட்டரீதியாக காணிகளை பெற்றபின் தென்னிலங்கையிலிருந்து சிங்கள மீனவர்களை கொண்டு வந்து குடியேற்றுவதற்கும் இராணுவம் முற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். செம்பியன்பற்றிலிருந்து சுண்டிக்குளம் வரைக்குமான கரையோர காணிகளை இராணுவம் பொதுமக்களிடமிருந்து வா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூவருக்கும் தூத்குத்தண்டனை தீர்ப்பு வழங்கியது கோர்ட். தண்டனை பெற்ற இவர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிப்பு பற்றிய குடியரசுத்தலைவரின் முடிவு பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசு மூலம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் நா…
-
- 0 replies
- 1k views
-
-
ரத்தம் உறையும் இலங்கை தமிழினப் படுகொலைக்கு நியாயம் கேட்டு நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் இளைஞர் - மாணவர்களை திரட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி 2011 ஆகஸ்ட் 26ல் டெல்லியில் நடைபெறுகிறது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.சந்தோஷ்குமார் இந்தப்பேரணிக்கு தலைமை வகிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் இந்தப்பேரணியில் கலந்துகொள்கின்றனர். இந்தப்பேரணியில் பங்கேற்க இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி…
-
- 0 replies
- 438 views
-
-
நல்லூர்ப் பெருந் திருவிழாவின் 22ம் நாள் மாலை நேர உற்சவத்தில் மாலை 5.45 மணிக்கு வெளி வீதியுலா வந்த கந்தன் வள்ளி தெய்வானையுடன் 7 குதிரைகளில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து மாலை 6.45 மணிக்கு வெளி வீதியுலாவை நிறைவு செய்தார் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது அதன் காட்சிகள் மேலதிக புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்
-
- 0 replies
- 726 views
-
-
மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது இன்று 22ம் நாள் அதிகாலை 7 மணியில் இருந்து 7.45 மணி வரை நல்லூரில் நடைபெற்றது. அதன் காட்சிகள் மேலதிக புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்
-
- 1 reply
- 511 views
-
-
நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 21ம் நாள் வேல்விமானத் திருவிழா என அழைக்கப்படும் தங்க ரதத் திருவிழா மிகவும் சிறப்பாக இன்று இடம் பெற்றது. குழந்தைகள் ரதத்தை இழுத்துவர முருகன் வள்ளி தெய்வயானையுடன் வெளி வீதி உலா வந்து பத்தர்களுக்கு அருளாசி வழங்கினார் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது மேலும் புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்
-
- 1 reply
- 565 views
-
-
புதன்கிழமை, ஆகஸ்ட் 24, 2011 நாவாந்துறையில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்காக யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் 24 பேர் களத்தில் இறங்கினர். பொதுமக்கள் இராணுவத்தினரால் கண்மூடித் தாக்கப்பட்ட போதும், படையினரைத் தாக்கினர் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்ன சிங்கம் தலைமையில் 24 சட்டத்தரணிகளும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து நின்று சந்தேகநபர்களுக்காக ஆஜராவதாக மாவட்ட நீதிபதியிடம் நேற்று அறிவித்தனர். . அதேவேளை, அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டதுடன், அவர்களது உடமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சட்டதரணிகள், படையினரின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தென்சூடான் சுதந்திர விழாவில் அமைச்சர் விதாரணவுக்கு அருகில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதி அமர்ந்திருந்தாரா ரவி கருணாநாயக்க கேள்வி; அரசு மறுப்பு தென்சூடான் தனிநாடாக சுதந்திரமடைந்ததை முன்னிட்டு இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட இலங்கைப் பிரதிநிதியான அமைச்சர் திஸ்ஸ விதாரணவுக்கு அருகில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி அமர்ந்திருக்கவில்லையென அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அரச தரப்பு பிரதம கொறடா இந்த மறுப்பைத் தெரிவித்தார். ஐ.நா.அமைதி காக்கும் பணிக்குச் சென்ற இலங்கைப் படையினர் தொடர்பிலான கேள்வியை எழுப்பிய ரவி கருணாநாயக…
-
- 0 replies
- 912 views
-
-
நாவாந்துறையில் கடந்த திங்கள் இரவு படை யினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற் பட்ட மோதலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்மைக் கைது செய்த படையினர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிவிட்டு, கதறக் கதறத் தாக்கினர் என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்கள். தமது கணவன்மாரை விடுவிக்குமாறு கேட்டுச் சென்ற பெண்கள் சிலரை இராணுவத்தினர் பாலியல்ரீதியில் துன்புறுத்தி மானபங்கப்படுத்தினர் என்றும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கக் கை, கால் வளங்காமல் பாரிசவாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர், மாலைக் கண் நோயுள்ளவர், முள்ளந்தண்டு வழங்காதவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று எவரையும் வ…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-