Jump to content

நிர்வாணமாக்கிவிட்டுக் கதறக் கதறத் தாக்கினர் நாவாந்துறையில் காயப்பட்டோர் பரபரப்புச் சாட்சி; பக்கவாத நோயாளி, முள்ளந்தண்டு வழங்காதவர், மனஅழுத்தக்காரர் கூடத் தப்பவில்லை


Recommended Posts

நாவாந்துறையில் கடந்த திங்கள் இரவு படை யினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற் பட்ட மோதலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்மைக் கைது செய்த படையினர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிவிட்டு, கதறக் கதறத் தாக்கினர் என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்கள். தமது கணவன்மாரை விடுவிக்குமாறு கேட்டுச் சென்ற பெண்கள் சிலரை இராணுவத்தினர் பாலியல்ரீதியில் துன்புறுத்தி மானபங்கப்படுத்தினர் என்றும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கக் கை, கால் வளங்காமல் பாரிசவாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர், மாலைக் கண் நோயுள்ளவர், முள்ளந்தண்டு வழங்காதவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று எவரையும் விட்டு வைக்காது காட்டுமிராண்டித்தனமாக இராணுவத்தினர் தாக்கியுள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ சோதனைகள் மற்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இரவு நவாந்துறையில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் அடி தடியாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று ஆண்களை அடித்து இழுத்துச் சென்றனர். அதிகாலை ஒரு மணி முதல் இரண்டு மணி வரை கைது செய்யப்பட்ட தாம் சென் நீக்கலஸ் மைதானத்தில் வைத்து காலை மூன்று மணிவரை சரமாரியாகத் தாக்கப்பட்டனர் என்ற காயமடைந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். "பெண் பொலிஸார் தமது சப்பாத்துக்களைக் கழற்றி எம்மை அடித்தார்கள்'' என்று இருவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவின்பேரில் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 102 பேருரிடமும் நேற்று சட்ட மருத்துவ அதிகாரியால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

"வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அனைவக்கும் இன்னும் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக முடிவடையவில்லை. நேற்றிரவு நடந்த சோதனைகளில் இருந்து 22 பேருக்கு கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலானோருக்கு கண்டல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மண்டை உடைந்த நிலையிலும் சிலர் இருக்கிÙர்கள்'' என்று உதனுக்குத் தெரிவித்தார் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன்.

"துப்பாக்கியின் பின்பக்கப் பிடியினாலும், சப்பாத்துக் கால்களாலும் உதைக்கப்பட்டதாலும், வயர்கள் மற்றும் இரும்புப் பொல்லுகளால் தாக்கப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்களை இவர்களது உடல்களில் காணமுடிகிறது. முழுமையான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செபமாலை அன்ரனி குயின் (வயது33), மரிஷ் ரொட் ஆகிய இருவரும் பெண் பொலிஸாரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். "அவர்களது சப்பாத்துக்களைக் கழற்றி எம்மை அடித்தனர்'' என்றனர் அவர்கள்.ரீ.அன்ரனி (வயது23), ஏ.ஆர்.சூசை, பாலதுரை சகாயராஜா (வயது33) ஆகிய மூவரையும் இராணுவத்தினர் நிர்வாணமாக்கிவிட்டு தாக்கியுள்ளனர். "கட்டியிருந்த சாறத்தினைக் கழற்றி எமது கைகளை கட்டிவிட்டு அடித்தனர்" என்றனர் அவர்கள். இவர்களில் பாலதுரை சகாயராஜா அவரது பெற்ற தாயின் முன்பாகவே நிர்வாணமாகத் தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற அவரது தாயாரையும் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.பாரிசவாத நோயினால் வலது கை, வலது கால் இயங்காத அல்பிரட் யூலின் (வயது 28) என்ற இளைஞரையும் இராணுவத்தினர் விட்டுவைக்கவில்லை. ஈவுஇரக்கமின்றித் தாக்கியுள்ளனர். அத்துடன் இரவில் கண் தெரியாத மாலைக்கண் நோய் உள்ள குணராசா ராசகுமாரும் கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். மகனது நிலையைத் தடுக்க வந்த அவரது தாயாரையும் இராணுவத்தினர் தாக்கி உள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், முள்ளந்தண்டு வழங்காத ஜேசுகுமார் மரியதாஸ் என்பவரும்கூடக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, கைது செய்து கொண்டு செல்லப்பட்ட தமது கணவன்மாரை விடுவிக்குமாறு கேட்டச் சென்ற பெண்களை பாலியல்ரீதியில் துன்புறுத்தியதுடன் இராணுவத்தினர் மானபங்கப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட இரு பெண்கள் நேற்றைய தினம் சிகிச்சை பெறுவதற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்துள்ளனர். விடுதியில் தங்கியிருந்தே சிகிச்சை பெறவேண்டும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். "வீட்டில் கணவன்மாரும் இல்லை. நாங்களும் இங்கே வந்து விட்டால் பிள்ளைகள் தனித்து விடுவார்கள்'' என்று கூறிவிட்டு அவர்கள் திரும்பி விட்டதாக அறிய முடிந்தது.

இராணுவத்தினர் தமது ஆடையைக் கிழித்து தகாத முறையில் நடந்து கொண்டனர் என்றும் அதனால் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள் "இதற்கு மேல் சொல்ல முடியாது'' என்று கூறிவிட்டுச் சென்று விட்டனர் என்றும் அறியக் கிடைத்தது.

http://onlineuthayan...739513425206376

EXPOSED – THE TOP SECRET BEHIND “GREASE YAKAS”

news.jpg

(August 25, Colombo, Sri Lanka Guardian) The Lanka News Web is able to exclusively reveal today the real truth behind so called Grease Yakas, a myth created by Secretary to the Ministry of Defence, Gotabhaya Rajapaksa to create fear psychosis in the North and East. It shows that full military control of these two provinces has started and others will also come under soon.

Gotabhaya has deployed secretly over 5,000 military intelligence operatives to military camps in the North and East. Their main job is to closely watch and build up profiles of Muslims and Tamils living in the area in collaboration with military leaders in the provinces. They have been ordered to closely watch and report whether these community members are becoming strong economically and if so to take some form of action. Some military officers have taken the orders very seriously and told their men not to tolerate actions of Tamils and Muslims. Their harassment by these personnel wearing civilian clothes came to be identified as Grease Yakas in the North and the East. Before this, weeks earlier, some sex crazy persons who applied grease on their bodies and peeped at women in their homes at night were arrested. That was only two to three cases in the south.

There was an incident in Kinniya. Army Commander of the East, General Boniface Perera, wanted to break up Muslim protestors. He went with his visitors but thousands surrounded him and government agent, Ranjit de Silva for four hours. Later, an Air Force helicopter was sent from Hingurakgoda to bring him. General Perera is now being tactfully removed and General Lal Perera is being sent there. This is particularly after General Perera has been spreading communal hatred.

In Mannar, Muslim villagers placed tree trunks to seal off roads at night to prevent Grease Yakas coming to their village. They took poles and walked with the women who went for night prayers for Ramadan. One night, an Army truck came and found the logs on the road. Muslim villagers were woken up and brutally assaulted. A young officer was mad that villagers had blocked the road.

In Kalpitiya, Puttalam, an innocent Police constable was killed. This was after infuriated public were protesting against grease yakas. They were said to be from the military.

In Jaffna, fears of a Grease Yaka walking around the village woke up residents on Monday night. They gathered in numbers. Though wrong, they stoned a police patrol. That earned them the wrath of the Police and the Army.

The sequel that resulted would shock anyone with a conscience. Sri Lanka’s one of ventriloquist journalists, Mr. Shamindra Ferdinando reported in Thursday’s Island newspaper that a Pongu Thamil attack on Navanthurai Army camp was thwarted. He says the attackers were demanding the release of the Grease Yakas. The truth is different. The villagers protested outside the GA’s office and the Human Rights Commission office. They alleged that the Grease Yakas who were military officers and escaped to the camp.

Ferdinando is very well known in Sri Lanka as the man who is doing all the bidding for Gotabhaya Rajapaksa. He is a well known lackey. If the latter yawns, he is so capable of making a front page headline story. Some say he is given a monthly stipend by President Rajapaksa. President Rajapaksa is also considering giving him a Kalasuri award when national awards are given next year. Elder Rajapaksa is also taking to New York for the UN sessions, Ferdinando’s Editor, Mr. Prabath Sahabandu, a known journalist farmer who sows seeds of hatred among communities. The Upali group owner, Mr. Nimal Welgama, has been made Chairman of Sri Lanka Telecom by Rajapaksa. He has also given the group US $ 300 million to buy new printing machinery. Ferdinando’s friends in the island call him “sources said Ferdinando.”

Can anyone imagine any civilian or groups of civilians attacking an Army camp in Jaffna? This is after the defeat of the LTTE. Why is Ferdinando fabricating stories like this and making Sri Lankan people believe? That is the power of Gotabhaya. Do diplomats in Colombo believe in this kind of fabricated rubbish to create more racial discord? Who suffers s the Jaffna people who already complain they are second class citizens. Some even say Gotabhaya plants stories in the Island through Ferdinando so his unsuspecting President brother could read them.

On Tuesday, Gothabaya summoned Muslim priests from mosques in the East to the Ministry of Defence. He gave them a stern warning that if Muslims try to attack any camps, what happened to the LTTE would happened to them. What he did not say was that they would be smoked out through artillery shells and gunfire. Therefore, in the North, if Gotabhaya is to be believed, there was an attempted attack on the Army camp by Tamil. In the East, it was the Muslims who wanted to attack the camps. Is he laying the foundation for another ethnic cleansing? There is none who are as blind as those who refuse to see.

http://www.srilankag...ease-yakas.html

Link to comment
Share on other sites

போராடினால் தான் வாழ்க்கை என்ற நிலை அங்கே. வெறும் கைகளாலேயே இராணுவத்தை தாக்கும் அளவுக்கு மக்கள் வாழ்வா சாவா என்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதை நாம் ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இப்ப அவசர காலச்சட்டத்தை நீக்கினார்கள் அடுத்து அவர்களாகவே பிரித்து கொடுக்கும் காலம் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் தான் தமிழருக்கு பிரச்சினை என்று கூறித் திரிந்த ஒட்டுக் குழுக்கள் அந்த மக்களை காப்பாற்றலாமே.அல்லது அவர்களும், ராணுவத்துடன் சேர்ந்து தமிழர்களை தாக்குகின்றார்களா.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 32     வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும்.   இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.   உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முன்னைய வரலாற்று துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.   உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market].   எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.   கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக்கொண்டனர்.   அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது.   அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது.    அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன் ?   இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 33 தொடரும்       
    • நன்றிகள் எல்லோருக்கும்
    • நன்றிகள் எல்லோருக்கும்  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.