Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டு மோகம் : யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாமென யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த கோரியுள்ளார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி போலி முகவர் நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான போலி முகவர்களுள் பலர் கொழும்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார். போலி முகவர்கள் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ் மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலி முகவர்கள் பணம் பெ…

  2. 23 FEB, 2024 | 10:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தேசிய அடையாளம் மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி ஆகிய இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சின் கீழ் இருந்துவரும் தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற மாவட்ட சகவாழ்வு சங்கம் அமைக்கும் செயற்பாடுகளின் மூன்றாவது கட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இற்றைக்கு…

  3. தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் மட்டுவில் அண்ணமார் கோவிலில் பெளர்ணமி தினப் பொங்கல் Published By: VISHNU 24 FEB, 2024 | 07:21 AM மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர் மதம் மாறியதால் தனது வீட்டு வேலியோடு இருக்கும் அண்ணமார் ஆலயத்தினை அகற்றக்கோரி பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து கோவிலில் வழிபாட்டுக்கு தடைவிதிப்பதாக பிரதேச சபையால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரார் நேரடியாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனின் வீட்டிற்கு சென்று தமது மரபுசார் வழிபாட்டை மீட்டுத்தரும்படி வைத்த கோரிக்கைய…

  4. ஈ – சிகரட்டுக்கள் என்ற இலத்திரனியல் புகையிலை பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் ஈ – சிகரட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் அந்த சபை கோரியுள்ளது. இதேவேளை, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஈ – சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர், மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீனரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட ஈ – சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன…

  5. வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன் Published By: VISHNU 23 FEB, 2024 | 07:40 PM ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. குறித்த குழுவின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ்நிர்மலநாதன், வைத்தியர்.ப.சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆகியோர் நி…

    • 3 replies
    • 395 views
  6. 23 FEB, 2024 | 06:12 PM புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து வட…

  7. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக இந்த சட்டமூலம் குறித்து விவாதம் நடத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களை இந்த ஆணைக்குழு உள்ளடக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்…

  8. வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்! Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 03:54 PM வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் …

  9. யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் கொடூரத் தாக்குதல்! 23 FEB, 2024 | 03:37 PM யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவனை விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் அழைக்க, மாணவன் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர், உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனை தடியால் அடித்துள்ளார். ஆசிரியர் முரட்டுத்தனமாக தாக்கியதில் சிறுவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்…

  10. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 01:10 PM சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, குறித்த பஸ்ஸின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பஸ்ஸிலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்டபோது சாரதி அவசரமாக பஸ்ஸை நகர்த்திமையால், அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் சாரதி …

  11. 23 FEB, 2024 | 12:36 PM தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறு…

  12. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 12:45 PM நடளாவிய ரீதியில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்திய உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை வைத்திய சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர் வைத்தியர் போன்று அடையாளப்படுத்தி அவர்கள் இருக்கும் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டுள்ள…

  13. பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார் அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை - தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை இன்று (23) தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் த…

  14. 34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு! adminFebruary 23, 2024 வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, 290 பக்தர்கள் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து பக்தர்கள் இராணுவத்தின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்…

    • 1 reply
    • 302 views
  15. Published By: VISHNU 23 FEB, 2024 | 12:51 AM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, கொழும்பில் (India House) புதன்கிழமை (21) சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை …

  16. இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 பிப்ரவரி 2024, 10:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும். தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட…

  17. வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் - யாழில் சம்பவம் 22 FEB, 2024 | 11:58 AM வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்…

  18. 22 FEB, 2024 | 11:58 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. htt…

  19. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார். விலகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது. இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்து…

    • 6 replies
    • 794 views
  20. ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல் - இது காழ்ப்புணர்ச்சி - வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் PrashahiniFebruary 22, 2024 ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இது…

  21. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று! ஆதவன்) முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மனிதப்புதைகுழியின் அகழ்வு நட வடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய வழக்கில் ஆராயப்படவுள்ளது. அகழ்வு நடவடிக்கைகளுக்காக 5.7 மில் லியன் ரூபா நிதியமைச்சால் ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அதன் ஒருபகுதி முன்னைய அகழ்வு நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகழ்வுக்காக 13.7 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது.…

  22. 21 FEB, 2024 | 05:15 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) சட்டமூலம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் புதிய திருத்த யோசனைகளை முன்வைப்பது சட்ட உருவாக்க வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டது,ஆகவே இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சட்டமொன்று இயற்றப்படும் போது அதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட வர…

  23. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யவேண்டுமெனில் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். ஆளுநர் நியமனம் நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய விடயம் இதுவாகும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே எதனையும் செய்துவிட முடியாது. ஜனாத…

  24. ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை! ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1370800

  25. நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன. பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரீம் வகைகள் பெண்களின் தோலைப் பளபளக்க வைப்பதாகக் கூறி புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை எனவும், இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.