Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழருடன் அதிகாரப் பகிர்வுக்கு அரசாங்கம் இணக்கம்! அடுத்த சுற்றில் ஆராய்ந்து இறுதி முடிவு [ பிரசுரித்த திகதி : 2011-04-30 08:09:22 AM GMT ] அரசாங்கம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

  2. ஐ.நா. செயலாளருக்கு விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது: ருத்ரகுமாரன் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சப…

  3. உலக ஏகாதிபத்தியங்களின் பிடியில் இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது? தமிழர்களின் இனப்பிரச்சனையை வைத்து இலங்கை அரசைத்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா ஈழவிடுதலைக்கு உரமிட்டு வளர்த்து வந்த வேளை இந்தியாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட விடுதலைப்புலிகள், இந்தியா தமிழர்களுக்குச் சுதந்திரம் பெற்றுகொடுப்பதற்கு மாறாக தமிழர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பாதுகாப்பிற்காக இலங்கை அரசை அடிபணிய வைத்தல் என்ற உள்நோக்கத்தில் செயற்படுவதை ஆழமாகப்புரிந்து கொண்டு தங்கள் போராட்டத்தை சுதந்திர இறைமை கொண்ட போராட்டமாக மாற்றி அமைத்தார்கள். இப்படி மாற்றப்பட்ட வேளை மற்றைய விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் அடிமையாகச் செயற்பட்டு போராட்டம் திசைமாறுவதைக்கண்டு புலிகள் ஒரு திடகாத்திரமான முடிவை எட…

    • 1 reply
    • 1.5k views
  4. Syrian ambassador is told you're NOT invited: Despot's envoy told he's off wedding guest list after hundreds slaughtered in uprising Read more: http://www.dailymail.co.uk/news/article-1381353/Royal-Wedding-guest-list-Syrian-ambassador-Sami-Khiyamis-invitation-withdrawn.html#ixzz1KqdqKHDq நாளை நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய ராஜ குடும்பம் ரத்துச்செய்துள்ளது. சிரியா நாட்டில் அரச அதிபருக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கே மனித உரிமை மீறப்பட்டு…

    • 13 replies
    • 2.2k views
  5. தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்! சனி, 30 ஏப்ரல் 2011 17:00 .இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தி…

  6. வவுனியாவில் வீடு வீடாக சிங்கள புலனாய்வு கூலிப்படைகளும், ஒட்டுக்குழுக்களும் இணைந்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன. கிராமம் கிராமமாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் களில் செல்லும் சிங்கள கூலிப்படைகளும் ஒட்டுக்குழுக்களும் மக்களிடம் படிவத்தை கொடுத்து கையெழுத்து வாங்குகின்றனர். ஒரு படிவம் நிரப்பினால் 50 ரூபாவும் பெற்றோலும் கொடுத்து சில பொது மக்களையும் வாடகைக்கு அமர்த்தபப்ட்டுள்ளனர். கையெழுத்து வைக்க மறுப்பவர்களை பெயர் விபரங்களுடன் படையினர்க்கு கொடுப்போம் எனவும் கையெழுத்து வாங்க செல்பவர்கள் மிரட்டி வருகின்றனர். வவுனியாவில் 12 000 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இதனைவிட முன் நாள் போராளிகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்டு வருகின்…

  7. தமிழ் மக்களுக்கு எதிரான ஊடகங்களான ரூபவாகினி தினகரன், வீரகேசரி ஆகியவற்றின் மட்டக்களப்பு செய்தியாளராக இருக்கும் ஜப்பர்ஹான் என்பவர் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று மடடக்களப்பு ; சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எ…

    • 2 replies
    • 1.2k views
  8. BEIJING, April 30 (Xinhua) -- China said Saturday that it believes the Sri Lankan government and people will handle properly problems conerning its civil war and urged the international community not to complicate the issue. Foreign Ministry spokesman Hong Lei made the remarks when asked to comment on a panel report on armed conflicts in Sri Lanka published by the United Nations on Monday. Hong said in a statement that China has already noticed the publication of the report. He said Sri Lanka has already set up its own institutes to investigate relevant issues. "The Chinese side is confident that the Sri Lankan government and people are able to properly add…

    • 1 reply
    • 1.3k views
  9. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசிய சந்திப்பு ! சனி, 30 ஏப்ரல் 2011 09:55 ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இச்சந்திப்பு இடம்பெற்றது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை. அத்துடன் அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதனால்…

  10. தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்! பொங்கித் தீர்த்த வைகோ சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்துஇ வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​ கண்ணியை மீட்டதற்காகஇ உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவைஇ கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன்இ இராம.சிவசங்கர்இ காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்குஇ கட்சிகளைக் கடந்து 2இ000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ்இ ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டு…

  11. எமது விடுதலைப் போராட்டத்தினை கூண்டோடு அழிக்க சர்வதேச ஒத்துழைப்போடு முதன்மையாக செயற்பட்ட எரிக் சொல்கைம்.. நேற்று என் ஆர் கே செய்தி ஊடகத்திற்கு வழங்கி உள்ள செவ்வியில்.. சிறீலங்கா தானே ஐநா போர் குற்ற அறிக்கை தொடர்பில் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவே நியாயமானது என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளதோடு அவர்களும் போர் குற்றம் புரிந்துள்ள போதும் அவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இறந்துவிட்டதால் சிறீலங்கா அரசே அதன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்வதேசம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளை சரணடையச் சொல்லி போர் முடிய முன் 5 மா…

  12. உண்ணாவிரதமிருந்துவரும் என் மகனை விடுதலை செய்யுங்கள்: தமிழ்த் தாயின் வேண்டுகோள் Saturday, April 30, 2011, 13:45 புதிய மகசின் சிறைச்சாலையில் கடந்த நான்கு நாட்களாக உண்ணா விரதமிருந்துவரும் திரு.அஞ்சலோ என்பவரின் தாயார் திருமதி லில்லி மரியதாஸ் என்பவர் தனது மகனை விடுதலை செய்யக்கோரி நீதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தின் முழு வடிவம் வருமாறு. மரியதாஸ் லில்லி இல : 490 குட்செட் வீதி தோணிக்கல் வவுனியா 29.04.2011 கௌரவ நீதி அமைச்சர் அவர்கட்கு நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு கொழும்பு ஐயா ஓர் அபலத் தமிழ்த் தாயின் வேண்டுகோள் எனது மகனான அன்ரனி மரியதாஸ் அஞ்சலோ என்பவர் கடந்த 23.02.2009…

  13. மே மாதம் வருகிறது.மனதில் வேதனைகளையும் மாறாத ரணங்களையும் விதைத்த மாதமாகவும் இருக்கிறது.1958இல் ஆரம்பித்த தமிழினப் படுகொலையானது குமுதினிப்படகுப் படுகொலை, நூலக எரித்தழிப்பு, எனத்தொடர்ந்து 2009 மே முழுமையாக எமது காவலரண்கள் தகர்கப்பட்ட மாதமாகவும் இருக்கிறது.இன்றும் தினந்தோறும் ஏதோ தனினபர் விரோதக் கொலைகளாகக் காட்டியவாறு இரகசிய இன அழிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் துயரங்கள் தமிழரது வரலாற்றுத் தடத்திலே என்றும் அழிக்க முடியாதவை. இந்த நாட்களில் புலத்திலே வாழும் நாம் இன்றைய உலக நகர்வோடு இணைந்து பயணித்து சாதுரியமாக எமது வேணவாவை வெளிப்படுத்த உலகத்தொழிலாளர்களோடு ஒன்றிணைந்து குரல் கொடுக்க அரிய வாய்ப்பாக நாம் இந்த மேதினத்தைப் பயன்படுத்தவது அவசியாமானது. எனவே ஒன்றுகூடுவோம்! …

    • 1 reply
    • 998 views
  14. வடக்கு – கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண! ஏகாதிபத்தியசக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முழு அளவில் உதவினர். தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினை எழுந்ததாலேயே ஐ.நா. இலங்கை விவகாரத்தில் தலையிட முழுக்காரணமாக இருந்தது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாய…

    • 3 replies
    • 1.3k views
  15. பிபிசி சிங்கள சேவை தனது நேயர்களுக்கு இலவச போன்( கருத்துக்களை பதிவு செய்ய) வசதி செய்து கொடுத்திருக்கு. அத்துடன் தனது ஸ்கைப் ஐடி இனையும் பகிரங்கமாக போட்டிருக்கு இதில் நேயர்கள் கருத்துக்களை பதிவு செய்து கொடுத்திருக்கு. ஆனால் தமிழ் பிரிவில் ஒன்றையும் காணோமே.. இதற்கும் ஊடக தர்மம், நடு நிலை என்று ஏதேனும் சொல்லபோறாங்களா? Record your comment Listeners can record a one minute voice message using Skype The BBC Sinhala service, Sandeshaya, invites its listeners/ readers to leave an audio comment. The listeners are invited to call a telephone number in London : +44 20 8133 3195 and record a voice message of upto 60 seconds. The BBC will not charge you but t…

    • 0 replies
    • 1k views
  16. மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காண பட்டுள்ளார் . Friday, April 29, 2011, 11:29 உலகம், சிறீலங்கா, தமிழீழம் .வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார் .சில தினங்களிற்…

  17. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச் சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6…

  18. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளிக்கவில்லையென்பதனால் அங்கத்துவ நாடுகளிடம் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கொண்ட நாடுகளை நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அதி தீவிர கவனம் எடுக்குமாறு பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அங்கத்துவ நாடுகளின் பதில் தமக்கு தேவை என்றும் பான் கி மூன் கூறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் நேர்ஸ்கி கூறியுள்ளார். Eelanatham.Net

    • 0 replies
    • 1.6k views
  19. அனைவரும் கையொப்பம் இடுக.. Muthamizh Vendhan to anbudan, bey UN must make an immediate action on Sri Lankan's war crime http://www.change.org/petitions/un-must-make-an-immediate-action-on-sri-lankans-war-crime Muthamizh Chennai டிஸ்கி: தோழர் அகூதா இல்லாமையால் நானே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டியதாக உள்ளது

    • 3 replies
    • 1.8k views
  20. புதிய இடத்தில் யாழ் சிறைச்சாலை: திருகோணமலைச் சிறைச்சாலையையும் வேறிடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை [saturday, 2011-04-30 04:23:05] நகரப் பகுதிகளில் உள்ள சிறைச் சாலைகளை நகரத்துக்கு வெளியில் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். இதற்குத் தேவையான இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்பப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ். சிறைச்சாலை அமைக்க காணி அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த வருட முடிவுக்குள் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். திருகோணமலை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலி…

  21. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை …

  22. போதுமான ஆதாரங்கள் அறிக்கையில் உண்டு இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ் Saturday, April 30, 2011, 5:23 உலகம், சிறீலங்கா, தமிழீழம் அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங் களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது என்ன நியாயமென கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ். நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கை யினை நிபுணர்கள் குழு உருவாக் கியுள்ளது. அனைத்துலக குற்ற வியல் நீத…

    • 1 reply
    • 1.1k views
  23. இலங்கை மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா – ரஷ்யா தடுக்கக் கூடாது – ம.உ.கண்காணிப்பகம்! Posted by admin On April 30th, 2011 at 11:47 am இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுக்கக்கூடாது என வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை மேற்கொண் டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந் துள்ள நிலையிலும், அதில் மேற்கொள்ளப் பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அரசு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அற…

  24. இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – விஜயதாச ராஜபக்ஷ 30 ஏப்ரல் 2011 இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – விஜயதாச ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவையானவர்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையை ஆதாரம் காட்டி இவ்வாறு பிடிவிராந்துகளை பெற்றுக்கொள்ள …

  25. குடாநாட்டு நிலைமைகள் குறித்து துருவித் துருவி கேட்டறிந்தனர் நேபாள நாடாளுமன்றக் குழுவினர்;முகமாலை பகுதி இன்னும் பயங்கர சூனியப் பிரதேசமாக இருப்பது ஏன்? முகமாலை தற்போதும் கூட சூனியப் பிரதேசமாக பார்ப்பதற்கே பயங்கரமான இடமாக வெறிச்சோடிய நிலையில் காட்சியளிக்கிறது. ஏன் இந்த நிலை? இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகைதந்த நேபாள நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. யாழ்.மாவட்டத்துக்கு 11 பேரடங்கிய நோபாள நாடாளுமன்றக் குழு நேற்று விஜயம் செய்தது. இவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினிவரதலிங்கத்தை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். இந்தக் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.