ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
புதன்கிழமை, டிசம்பர் 1, 2010 சர்வதேச பொலிஸாரால் விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சே மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 274 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த இராஜதந்திர இரகசியங்கள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. அவற்றுள் 220 ஆவணங்களை இவ்விணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர இரகசியங்கள் அடங்கிய 3325 ஆவணங்கள் கூட விக்கிலீக்ஸின் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகள் இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்துள்ளனர். Eelanatham
-
- 2 replies
- 1.4k views
-
-
ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு! திகதி: 29.11.2010 மகிந்த பிரித்தானிய வருகையை ஒட்டி விமானநிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது. இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் - 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் கால…
-
- 23 replies
- 2.8k views
-
-
கடந்த சில நாட்களாக காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஆவேசமாக கருத்துக்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ்தான் துரோகம் செய்தது என்று எதிர்வரும் காலங்களில் அவர் பேசக்கூடும் என்பதை நன்கு கணித்துள்ளனர் சிதம்பரம் ஆதரவாளர்கள்.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாள் விழாவை இதற்காக பயன்படுத்திக் கொண்டனர். அவரது பிறந்தநாள் அன்று இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகளைக் கொடுத்து தாங்களும் இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் தான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியவர் ப.சிதம்பரம்தான் என்றும் அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ய…
-
- 2 replies
- 1.1k views
-
-
புதன்கிழமை, டிசம்பர் 1, 2010 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை சசிசந்திரன் என்ற நபரே தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். Eelanatham
-
- 0 replies
- 665 views
-
-
SRI LANKA AND TAMIL CONFLICT Ms VIRGINIA JUDGE (Strathfield—Minister for Fair Trading, Minister for the Arts) [1.39 p.m.]: I speak in support of a small but prominent group of residents who live in my electorate but whose representation by number belies their contribution to my community in the electorate of Strathfield in Sydney, New South Wales, Australia. The Tamils of Strathfield are solid citizens, noted for their commitment to education, a strong work ethic and devotion to family life, as well as to the greater community in which they live. I have observed that the Tamil community in my electorate applies these principles to their business and professional prac…
-
- 0 replies
- 731 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்ய முற்படாமல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக தமிழ் மிரருக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காக இதில் கலந்துகொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவும்…
-
- 3 replies
- 748 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அழைப்பு விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த எஸ். எம்.கிருஷ்ணா நாடு திரும்பும் தருணத்தில் அவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா தாம் அவசரமாக நாடு திரும்ப வேண்டியிருப்பதால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதபடி…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவை இந்தியாவில் தேடப்படும் கொலை குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா சந்தித்து தன்மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார். இலங்கைக்கு சென்ற கிருஷ்ணா நாடு திரும்பும் வேளையில் மகிந்த ராசபக்சவின் ஏற்பாட்டில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து டக்ளஸ் தேவானந்தா அவரை சந்தித்ததாக ஊர்ஜிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் சிறுவர்களை கடத்தி கப்பம் பெற்றமை போன்ற குற்றங்களுக்காக டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை அந்த நாட்டு வெ…
-
- 1 reply
- 654 views
-
-
இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.…
-
- 0 replies
- 860 views
-
-
http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆட்சி அதிகாரம், இராணுவம் மற்றும் படைப்பலம் அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள அரசு, சிறுபான்மையினரைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். வரவு - செலவுத் திட்ட உரையின் மீதான ஆறாவது நாள் இறுதி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் குடியேற்றப்பட்டு பலஸ்தீனர்கள் அவர்களுடைய சொந்த மண்ணிலேயே கொன்று அழிக்கப்பட்டனர். அவர்களின் நிலம் அபரிக்கப்பட்டது. இப்படியான ஒரு நிலைமை எமக்கும் ஏற்படக்கூடாது என்ற அச்சமும் பீதியும் சிறுபான்மையினரான எங்களுக்கு ஏற்பட்டுள்ளன. யுத்தம் முடிவுற்ற நிலையில், வெற்றிக்குசிய…
-
- 0 replies
- 626 views
-
-
தமிழ் மக்கள் நம்பும் அளவிற்கு இடதுசாரிகள் எந்த காலத்திலும் நடந்து கொள்ளவில்லை இரா.துரைரத்தினம் கடந்த வாரம் தமிழ்வின் இணையத்தளத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் தமிழர்களுக்காக குரல் கொடுப்போரை குறை கூறுவது ஏற்புடையதா? என்ற தலைப்பில் என்.யோகேந்திரலிங்கம் என்பவர் எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. எனது கட்டுரைகளுக்கு அநாமதேய இணையத்தளங்களில் புனைபெயர்களில் யாராவது பதிலளித்தால் நான் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அநாமதேயங்கள் பற்றி யாரும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வீரகேசரி பத்திரிகையில் யோகேந்திரலிங்கம் என்பவர் தனது சொந்த பெயரில் எழுதியிருப்பதால் அதற்கு பதில் கூற வ…
-
- 0 replies
- 553 views
-
-
http://www.yarl.com/files/101130_baskarans-interview.mp3
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/101130_colombo-reporter.mp3
-
- 0 replies
- 774 views
-
-
http://www.yarl.com/files/101130_btf_skanda-deva.mp3
-
- 0 replies
- 679 views
-
-
http://www.yarl.com/files/101130_nalliah-kumarakuruparan.mp3
-
- 0 replies
- 429 views
-
-
http://www.yarl.com/files/101130_thiraviyam-jaffna.mp3
-
- 0 replies
- 518 views
-
-
http://www.yarl.com/files/101130_uni-student-interview.mp3
-
- 0 replies
- 499 views
-
-
கிளிநொச்சி இரத்தினபுரத்திலிருந்து மக்களை வெளியேற உத்தரவு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-30 07:31:50| யாழ்ப்பாணம்] கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியிருந்த மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள தால் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இரத்தினபுரம் சிங்களப் பாடசாலைக்குப் பின்புறமாகவுள்ள நிலத்தில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியிருந்துள்ளனர். அரசாங்கத்தினால் குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அந் நிலத்தில் பயன்தரு மரங்களை நாட்டி யும் வீடுகளை அமைத்தும் மக்கள் வாழ்ந்து வந்தனர்.தற்போது இடப்பெயர்வின் பின் மீள்குடியமர்ந்து வரும் இந்நிலையிலேயே மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இரா ணுவம…
-
- 0 replies
- 414 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றின் போது விழுப்புண்ணடைந்து 30.11.1991 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தளபதி லெப்.கேணல் ஜோய் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரிட்டனில் கைது செய்யப்படாதிருக்க உதவுமாறு மகாராணிக்கு மஹிந்தர் இரகசிய கடிதம்: [Tuesday, 2010-11-30 12:48:26] தான் பிரிட்டனில் கைது செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சும் வகையில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத் மகாராணியாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து உறுதி செய்யப்படுகின்றது. அக்கடிதம் ஜனாதிபதியின் இரண்டாம் பதவிப் பிரமாணத்துக்கு முன் மகாராணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிக உருக்கமான முறையில் கடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பிரிட்டன் சுற்றுப் பிரயாணத்தின் போது தான் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் மற்றும் தன்னை கைது செய்ய மேற்…
-
- 0 replies
- 375 views
-
-
யாழ்ப்பாணத்தில் சீன அரசு தனது அபிவிருத்தி நடவடிக்கைகளில் சீன பணியாளர்களை தரையிறக்க தயாராகின்றது ‐ ஜீரிஎன் செய்தியாளர்‐ 30 November 10 05:20 pm (BST) யாழ்ப்பாணத்தில் சீன அரசு தனது அபிவிருத்தி நடவடிக்கைகளில் சீன பணியாளர்களை தரையிறக்க தயாராகின்றது. ஏற்கனவே குடாநாட்டிலுள்ள பிரதான வீதிகளை அமைப்பதற்கென 3 சீன நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவைகளின் பொறியியலாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் என பெரும்பிரிவினர் சென்றடைந்திருப்பதாக ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே வீதி விஸ்தரிப்பிற்கான பணிகளில் சீனத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகள் அவசர அவசரமாக கைதடிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென தனியார் காணிகள…
-
- 0 replies
- 309 views
-
-
யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்களை காலம் அள்ளிக்கொண்டு போயிற்று. குண்டுச் சத்தங்கள் ஓய்ந்து போயிற்று. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்த வடுக்கள் நிறைந்து போயிருக்கிறது நிலம். அழுகையும் பசியும் வலிகளுமாய் அன்றாடப் பொழுதுகள் அவலங்களின் பதிவுகளாய் அன்றாடம் வருகின்ற கண்ணீர் நிறைந்த கடிதங்களும் காப்பாற்ற வேண்டிய குரல்களும் நீண்டு கொண்டே போகிறது.வாழ்வதற்கு ஏதாவதொரு சிறு உதவியை வேண்டிய குரல்களே இப்போது எமது தொலைபேசியில் நிறைகிறது. இந்தக் குரலுக்குரிய 32வயது இளைஞன் 22வயதில் களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து சுழல்கதிரைக்குள் 10 வருடங்களாக வாழ்கிறான். படுக்கைப்புண்ணோடு நிமிர்ந்து படுக்க ஒரு கட்டில் வசதிகூட இல்லாது இருக்கின்றான். கிளிநொச்சி மாவட்டத்தின் ஓர் ஒதுக…
-
- 7 replies
- 1.2k views
-
-
புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று மகிந்த அரசு அறிவித்த பின்னர் முன்னையதை விட சிங்களப் புலனாய்வு படையினரும் அன்னிய நாட்டு புலனாய்வு அமைப்புக்களும் மேலும் மேலும் எப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நன்கு திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இந்தத் திட்டங்களுக்கு இரையாகுவோர் புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் உள்நாடு, அயல் நாடுகளில் இருக்கும் அப்பாவியான ஆதரவாளர்களும் கூடத்தான். பல்வேறு வழிமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழர்களின் பணத்திலும் , இரத்தத்திலும், சதையிலும் - ஏன் உணர்வுகளிலும் விளையாடுவது சிங்கள புலனாய்வு குழுக்களுக்கும். அயல்நாட்டுப் புலனாய்வு அமைப்புக்களுக்கும் ஒரு பொழுதுபோக்காகவும் கூடவே நீண்டகால அடிப்படையிலான நாசகாரத் திட்டமாகவும் இருந்து வருகின்றது. …
-
- 0 replies
- 755 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஏனைய உயரதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தன. பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசெம்பர் 2 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ளார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12144-2010-11-30-13-35-01.html
-
- 2 replies
- 797 views
-