ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தில் குருநாகல் சந்திப் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவந்த பல தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. புனித பிரதேச சட்டவிரோத கட்டங்களை அகற்றுதல் என்ற திட்டத்தின் பெயரிலேயே இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளன. குருநாகல் சந்தியில் நீண்டகாலமாக சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்த 52 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த விதம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றன
-
- 0 replies
- 1.1k views
-
-
அநுராதபுரத்தில் இம் முறை இடம்பெறவுள்ள இலங்கையின் 64வது சுதந்திர கொண்டாட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் 4ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர தினத்திற்கான பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள சுதந்திரதின பிரதான நிகழ்வை நேரில் கண்டுகளிக்கவென ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பொலிஸாருடன் முப்ப…
-
- 0 replies
- 529 views
-
-
அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் கினளமோர் குண்டுவெடிப்பு இன்று ஞாயிறு 06.04.2008 காலை 08.45 மணியளவில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரும் சிங்கள ஊர்காவல்படையினரும் பயணித்த வாகனம் ஒன்று கினளமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் உள்ள கல்மிலவீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு ஊர்காவல்படையினர் மட்டுமே காயப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளின் தாக்கத்தினால் அண்மையில் கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படையினரை இப்பகுதிக் சிறிலங்கா நகர்த்தியிருந்தது. புதுவருட தினத்தன்று ஆரம்பித்துள்ள இத்தாக்குதல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
அநுராதபுரம் இராணுவ முகாம் ஆயுதங்கள் மாயம் அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த முகாமின் கட்டளையதிகாரின் ஆணைப் பிரகாரம், முகாமைவிட்டு எந்தவொரு வீரரோ அல்லது அதிகாரியோ வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமின் ஆயுதக் க…
-
- 0 replies
- 444 views
-
-
அநுராதபுரம் கொண்டு சென்ற கஞ்சா பரந்தனில் சிக்கியது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 2050 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது, ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி விமானப்படையினரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் நபர் ஒருவர் அனுராதபுரம் நோக்கி எடுத்துச் சென்ற பொதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட தையடுத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக கிளிநொச்சி விமானப்படையினர் தெரி…
-
- 2 replies
- 356 views
-
-
அநுராதபுரம் சந்தை பகுதியில் நேரம் கணித்து வெடிக்கவைக்கும் குண்டு மீட்பு அநுராதபுரம் சந்தைப்பகுதியில் நேரம் கணித்து வெடிக்கும் குண்டு ஒன்று மீட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தையிலேயே இவ்வாறக நேரம் கணித்து வெடிக்கும் குண்டினை மீட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 7 replies
- 1.9k views
-
-
அநுராதபுரம் சிறை அரசியல் தமிழ் கைதிகள் காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர். இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையி…
-
- 0 replies
- 422 views
-
-
அநுராதபுரம் சிறை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்! [ பிரசுரித்த திகதி : 2011-02-05 06:48:47 AM GMT ] அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதிகள் அனைவரும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலை நீரிழ் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்தார். இதன்படி போகம்பர வாரியபொல கொழும்பு புதிய மகசின் வெலிக்கடை மற்றும் பல்லேகலை ஆகிய சிறைச்சாலைகளுக்கு 1200 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். tamilulakam.com
-
- 0 replies
- 853 views
-
-
-செ.கீதாஞ்சன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அநுராரபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்ஈ கடந்த 12ஆம் திகதியன்று சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்டு பின்னர் அவர் பதவிவிலகியுள்ள நிலையில், இந்த செயற்பாடு தொடர்பில் பலர் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றார்கள். இந்நிலையில் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக சென்றவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 'கொரோ…
-
- 0 replies
- 200 views
-
-
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு, அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்கு வைத்து அதிகாரிகளினால் மிகக்கடுமையான வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, சக அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு என அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைது ஒருவர் மீண்டும் வவுனியாவிற்கு அழைத்து வரப்படாது, அநுராதபுரத்தில் தடுத்து வைத்து வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். குறித்த இந்தக் கைதியை மீண்டும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு தெரிவித்து, வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 28 பேர் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதன் ஒரு கட்டமாக வவுனியா சிறை அதிகாரிகள் மூவரை நேற்று பணயக் கைதிகளாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடியுள்ளனர்: [saturday, 2011-01-29 04:41:04] அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடியுள்ளனர் எனச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலையில் சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை எண்ணி, பரிசோதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதே இரு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளது. படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.இவர்களைக் கண்டு பிடிக்கும் பொருட்டு அநுராதபுரம் பொலிஸார் விசேட குழுவை நியமித்துள்ளனர். seithy.com
-
- 0 replies
- 598 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் கைது வீரகேசரி இணையம் 1/18/2009 9:21:50 AM - அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து நேற்று அதிகாலை தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இந் நபர்கள் மூவரும் அனுராதபுரம் - யாழ்ப்பாணம் சந்தியில் மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகாமையில் மறைந்திருந்த வேளை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கணேசமூரத்த
-
- 0 replies
- 817 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில் 21 முதல் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் …
-
- 0 replies
- 429 views
-
-
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 82 பேர் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று பிற்பகல் தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதான விசாரணைகளை உடனடியாக தொடங்க வேண்டும் அல்லது தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியே இந்த 82 கைதிகளும் உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று திங்கட்கிழமை தொடங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளும் இன்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுகின்ற இந்த வேள…
-
- 0 replies
- 377 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில்... CCTV காட்சிகளை, அழிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு! அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள இராஜாங்க அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 8 பேரை முழந்தாளிடவைத்து மிரட்டியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கை நீதிமன்ற தீர்ப்பையும…
-
- 0 replies
- 378 views
-
-
அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தமது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்…
-
- 0 replies
- 475 views
-
-
அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பம்! [Monday 2016-02-22 07:00] அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதேவேளை, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதேவேளை, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரதப் போர…
-
- 0 replies
- 345 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 04:08 PM அநுராதபுர வரலாற்று சிறப்பு மிக்க ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு புதிய சீருடை இன்று திங்கட்கிழமை (25) அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை புதிய சீருடையில் கடமைகளை பொறுப்பேற்ற அதிகாரிகள் மகாசங்கத்தினரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரினால் தர்மோபதேச பிரித் ஓதப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரிடம் அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க புதிய சீருடை…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
அநுராதபுரம் நீதிமன்றம் அதிகாலை தீப்பற்றிக் கொண்டது * Monday, January 24, 2011, 3:01 அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது . மேலும், தீப்பற்றிக் கொண்டதால் நீதிமன்ற ஆவணங்களுடன் சேர்ந்து மூன்று நீதிமன்ற கட்டுடத் தொகுதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .
-
- 1 reply
- 467 views
-
-
அநுராதபுரம் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் By Nirshan Ramanujam 2013-01-09 10:42:52 அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல், இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர் அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2459
-
- 3 replies
- 457 views
-
-
28 Nov, 2025 | 01:05 PM யாழ். காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் நகரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை சிக்கியயுள்ள நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சிக்கியுள்ள சுமார் 400 பேர்! | Virak…
-
- 0 replies
- 190 views
-
-
அநுராதபுரம் மருத்துவமனையில் அநாதரவாக இறந்த தமிழ்ப் பெண்- தவிக்கும் பச்சிளம் குழந்தை [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா என்ற பெண் மகப்பேற்றுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மகப்பேற்றின் பின் இறந்துள்ளார். அவரது சடலம் உறவினர் எவருமே இல்லாத நிலையில் அந்த மருத்துவமனையில் இருக்கின்றது. அவருக்குப் பிறந்த பெண் குழந்தை மருத்துவமனையின் பராமரிப்பில் உள்ளது. பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா (வயது 21) கிளிநொச்சி பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 12 ஆம் நாள் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டு …
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள அநுராதபுர மாநகர சபையின் வருடாந்த வரவு, செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் வாக்களித்ததால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 3 உறுப்பினர்களும் மற்றுமொரு அரசாங்க மாநகரசபை உறுப்பினரும் இந்த வரவு, செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13842-2010-12-28-13-29-44.html ================================================= தொடர்புபட்ட செய்தி மகரகம நகரசபை வரவு செலவு திடம் தோல்வி: மஹிந்த அணியினர் எதிரணிக்கு த…
-
- 1 reply
- 538 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 02:50 PM அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜெய்கா (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176443
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
சிறிலங்கா வான்படையின் அனுராதபுரம் வானூர்த்தித் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அந்தத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படும் சந்தேக நபர் இணங்கியுள்ளார் என கண்டி மத்திய காவல்துறையின் புலனாய்வுத்துறை அனுராதபுரம் நீதவானுக்கு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-