ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
நார்வேயின் மற்றொரு முகம்? ஒவ்வொரு மனிதனுக்கு இரண்டு முகங்கள் உண்டு, அதில் ஒன்றைத்தான் சமூகத்திற்குக் காட்டுகின்றான், மற்றொரு முகத்தை மறைக்கின்றான். அதற்காக அவன் படும்பாடு கூட ஒரு போராட்டமாகிறது” என்று ‘அள்ளித் தந்த வானம்’ எனும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அதனை அந்தப் படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பேசுவார். சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தப் பிறகு நார்வே அந்த நாட்டின் அயல் உறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்ஹீம் ஈழத் தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை அந்த வசனத்தைத்தான் நினைவிற்குக் கொண்டு வந்தது. ஐ.நா.அவை இந்த புத்தாயிரமாண்டு பிறப்பின்போது வறுமையை ஒழிக்க நிர்ணயித்த புத்தாயிரமாண்டின் மேம்பாட்டு இலக்குகள் (Millennium Development Goals _ MDG) எந்…
-
- 4 replies
- 1k views
-
-
பெளத்த நெறிமுறைகளை பின்பற்றி சமூகத்தை கட்டியயழுப்ப வேண்டும் - நியூயோர்க்கில் ஜனாதிபதி உரை [ வலம்புரி ] - [ Sep 23, 2010 04:00 GMT ] பெளத்த நெறிமுறைகளைப் பின்பற்றி சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நாவின் புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பொருளாதார சமூகக் கொள்கைகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் வளமான சமூகத்தை கட்டியயழுப்ப முடியும். ஆரம்ப நிலைக் கல்வி, இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி ஆகிய வற்றில் இலங்கையில் பால்நிலை சமத்துவம் உச்ச…
-
- 1 reply
- 623 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலர் வீதியில் உள்ள ’நமது ஈழநாடு’ அச்சகம் மற்றும் பணியகமே காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரான பொன்னுத்துரை குருதேவ் சிறப்புக் காவல்துறைக் குழுவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சட்டவிரோத பிரசுரங்களை அச்சிட்டதாகக் கூறியே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 2002ம் ஆண்டு ஒக்ரோபர் 01ம் திகதி தொடக்கம் ’நமது ஈழநாடு’ நாளிதழ் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டு வந்தது. 2006 ஓகஸ்ட் 20ம் திகதி…
-
- 0 replies
- 724 views
-
-
” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக் கொள்ளுங்கள்.” இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு ஆலோசனை கூறி உள்ளார் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவரும், இந்நாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை- அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக 1997 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே செயற்பட்டது. பின் மத்தியஸ்தர் பணியில் இருந்து விலகிக் கொண்டது. இவற்றின் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் உறவை மீண்டும் புதுப்பிக்க நோர்வே பேரார்வம் வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் நோர்வே பிரதமர் Jens Stoltenberg இற்கும் …
-
- 11 replies
- 2k views
-
-
எழிலன் படுகொலைசெய்யப்பட்டார்? செப் 23, 2010 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்கள் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சரணடைந்த சகல விடுதலைப் புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எழிலன் உள்ளிட்ட குழுவினர் அரசாங்கப் படையினரிடம் சரணடையவில்லை எனவும், இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரகசியமான தடுப்பு முகாம்களை பேணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எழிலன் உள்ளிட்ட பல தலைவர்கள் படையினரிடம் சரணடைந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவிடம் மக்…
-
- 1 reply
- 1.6k views
-
-
எம்.வி.சன்.சி தமிழரில் சுமார் 150 பேருக்கு கனடாவில் சொந்தக்காரர்கள் இல்லை! செப் 23, 2010 எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் 150 பேர் வரையானோருக்கு நண்பர்களோ, உறவினர்களோ கனடாவில் இல்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்கள் காசுப் பிணையில் விடுவிக்கப்படுகின்றமையில் நிதிச் சிக்கல்கள் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே அங்குள்ள புலம்பெயர் தமிழ் சமூகம்தான் இவர்கள் காசுப் பிணையில் வெளியே வருகின்றமைக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கனேடிய தமிழர் பேரவை கோரி உள்ளது. 1000$ முதல் 5000$ வரை ஒவ்வொருவருக்கும் காசுப் பிணையாக தேவைப்படலாம் என்று கனே…
-
- 0 replies
- 654 views
-
-
மட்டக்களப்பு குண்டு வெடிப்பு – வீதி அபிவிருத்தி பணிகளில் இருந்து சீனா விலகல் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்திக் கொள்வதாக சீனா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கரடியனாறு பகுதியில் கடந்த 17 ஆம் நாள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சீனர்கள் உட்பட பெருமளவானர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 60 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், நூறுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும்போதும் சிறீலங்கா அரசு தனது இழப்புக்களை குறைத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி நடடிக்கைகளை இடைநிறுத…
-
- 0 replies
- 792 views
-
-
நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லை: ஆயர் சுவாம்பிள்ளை வீரகேசரி இணையம் 9/22/2010 7:06:44 PM 3 நமது நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்வி சுவாம்பிள்ளை தெரிவித்தார். உலக சமாதான தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார். எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யுத்தம் முடிவடைந்த போதிலும் உண்மையான சமாதானம் நமது நாட்டில் ஏற்படவில்லை. சமாதானம் என்பது மிக முக்கியமானது …
-
- 0 replies
- 433 views
-
-
ராஜபக்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் 27 பத்திரிகை தெரிவித்திருக்கிறது."ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ஜனாதிபதியின் இரு தடவை பதவிக்கால வரையறையை அகற்றும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈட்டியிர…
-
- 6 replies
- 1.2k views
-
-
கடந்த ஆண்டு நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிப்புற்ற வவுனியா வடக்கு வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இப்பாடசாலையின் நிலையை நேரில் கண்டறிந்த வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இப்பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து, கழுத்துப்பட்டி (ரை) மற்றும் சமையல் பாத்திரங்கள் என்பன அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தினரால் (ATBC )அவர்களது நேயர்களின் நன்கொடைகளினூடாக 21.09.2010 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவற்றை சிவசக்தி ஆனந்தன் கொள்வனவு செய்து பாடசாலை அதிபரிடம் கையளித்தார். நிகழ்ச்சிக்கு பாடசாலையின் அதிபர…
-
- 3 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அரசைவிட தமிழ் இனத்திற்கே அதிகம் உண்டு எனலாம். ஏனெனில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தட்டிக் கழிப்பதே அதன் உள்நோக்கமாக இருக்கிறது. இனப்பிரச்சினைத் தீர்வில் அரசுக்கு முறுக் கேற்றும் உத்திகளை கையாளும் பொறுப்பை தமிழ்த் தரப்பினர் எடுக்காதவரை இன விவகாரம் தொடர்பில் எதுவுமே நடக்கமாட்டாது என்பது தெரிந்த உண்மை. அப்படியானால் இலங்கை அரசுக்கு வெளி நாட்டு அழுத்தம் தேவை என்பதை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும். குறிப்பாக இந்திய மத்திய அரசு இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணுமாறு அழுத்தம் கொடுக்கக்கூடிய களநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் எல்லைக்குள் சீனா வின் ஊடுருவ…
-
- 1 reply
- 699 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்தா தற்போது மாநாட்டில் உரையாற்றிக்கொண்டிருக்கிறார். உலகில் சமாதானத்தை நிலைபெறச்செய்வதில் ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ள பொறுப்பை எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என கூறிய மஹிந்த இலங்கையில் துன்பத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் இனி அபிவிருத்தி சகாப்தம் எனவும் உரையாற்றினார். அத்துடன் பாலஸ்தீனத்திற்கான சுதந்திரத்திற்கு தாம் தொடர்ந்தும் போராடப்போவதாகவும் தனதுரையில் கூறியுள்ளார் மஹிந்தா ஈழ நாதம்
-
- 1 reply
- 570 views
-
-
"தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வடக்கு, கிழக்கிலிருந்து 18 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகினர்." இவ்வாறு ஈரோஸ் கட்சித் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன்(ஈரோஸ் பிரபா) குறிப்பிட்டார்.மட்டக்களப்பு ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று (22.09.2010) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இக்கருத்தை முன்வைத்தார். இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர்,"எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது …
-
- 3 replies
- 1.1k views
-
-
நமது நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்வி சுவாம்பிள்ளை தெரிவித்தார். உலக சமாதான தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார். எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யுத்தம் முடிவடைந்த போதிலும் உண்மையான சமாதானம் நமது நாட்டில் ஏற்படவில்லை. சமாதானம் என்பது மிக முக்கியமானது இன்று உலக நாடுகளில் பல் வேறு நாடுகளில் யுத்தத்தினால் மனித குலம் அழிந்து கொண்டே இருக்கின்றது. சமாதானம் அழிந்தால் ஒற்றுமை …
-
- 0 replies
- 476 views
-
-
தரம் 5 புலமைப்பரி சில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமாலை வெளியாகின.ஒகஸ்ட் 22ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடை பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பரீட்சை நடை பெற்று 30 நாள்களில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்கள அதி காரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் பெற்ற புள்ளிகளும், மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் நேற்று மாலை வெளியிடப்பட்ட வுடனேயே,அனைத்துப் பாடசாலைகளுக் கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன என்றும் எனினும் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை இன்று வியாழக்கிழமையே பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அநுரஎதிரிசிங்க தெரிவித்தார். இப்பெறுபேறுகளின் அடிப்படையில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொதுநலவாய நாடுகளின் அமர்வு இலங்கைக்குச் சாதகமான ஒன்றே – அமைச்சர் மஹிந்த சமரசிங்க பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வுகளில் இலங்கையைப் பற்றிய முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படவில்லையென்கிறார் என பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வுகளில் போருக்கு பின்னரான இலங்கை. அண்மைய அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய கண்டனம் வெளிடப்பட்டதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம்சாட்டியிருந்தார். அவரது கூற்று உண்மைக்கு புறம்hபனது என மஹிந்த சமரசிங்க தொவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஒரு குற்றவாளியெனவும் அவர் பற்றிய கருத்துற…
-
- 1 reply
- 645 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்து தமிழர்கள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர் நிலங்களெல்லாம் சூறையாடப்பட்டு கொண்டிருக்கின்றது .கிழக்கில் பசில் ராஜபக்சவும் வெளிநாட்டு நிறுவனங்களும் வளம் மிக்க பகுதிகள் பலவற்றை தம் வசமாக்கிவிட்டனர் .மாலை மரியாதைகளுடன் தற்போது கிழக்கை வலம் வரும் அதிகாரம் மிக்கவர்களுக்கு இவை பற்றி எவ்வித சிந்தனைகளும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் தமது கையறு நிலையை எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கின்ன்றனர் . 30 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றோதொரு சூழ்நிலையில் தமிழரின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி போராடப்புறப்பட்ட இளம் வீரன் இரா.பரமதேவா என்கிற மறத்தமிழன் வீரமரணமடைந்து இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன. என்றோ ஒரு நாள் இந்த வீரர்களின் கனவு …
-
- 4 replies
- 2.1k views
-
-
அமைச்சர் தேவா மீதான படுகொலை வழக்கின் விபரம் கோருகின்றது சென்னை மேல்நீதிமன்றம்! வியாழன், 23 செப்டம்பர் 2010 08:13 இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவுக்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று இருந்த படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் விபரங்களை சென்னை மேல்நீதிமன்றம் கோரி உள்ளது. திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞனை 1986 சென்னையில் டக்ளஸ் சுட்டுக் கொன்றார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அந்நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என 2003 ஆம் ஆண…
-
- 1 reply
- 964 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழக் கனவை தகர்ப்பதற்கு சர்தேச நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமானதென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பிலான விவாதத்தை பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈழக் கனவை நனவாக்கும் நோக்கில் நாட்டுக்கு வெளியே சில சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை அமைப்பதற்கு சிலர் முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் சகல பிரதேசங்களையும் பாதுகாக்கும் வகையில் கடற்படை முகாம்கள் உருவாக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.http://www.tha…
-
- 1 reply
- 700 views
-
-
] நேற்று நியுயோர்க் நகரில் நடந்த கவனயீர்பு நிகழ்வுக்கு கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் கிட்டத்தட்ட 250பேர் வரையில் கலந்து கொண்டார்கள்,இதில் சில தமிழ் நாட்டு உறவுகளும் அடங்கும் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வுக்கு ஒலிபெருக்கியோ,உரத்த கோஸம் எழுப்பும் நேரம் பி.ப 2.15க்குத்தான் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் மக்களோ இடைவிடாது கோசங்களை ஒலித்தவண்ணமே இருந்தனர்.இதை அறிந்த மகிந்தவின் பிரசார ஊடகங்கள்11.00மணிபோல அதிரடியாக எப்படியோ எங்கிருந்தோ வந்தார்கள். வந்தவர்கள் காட்சிகளை பதிவு செய்தார்கள் இதைவிட புகைப்படமும் எடுத்து கொண்டார்கள் இதில் ரூபவாகினியும் அடங்கும்.மறத்தமிழர்கள் எந்தவித அச்ச உணர்வுமின்றி படங்களுக்கு போஸ் கொடுத்தது மட்டுமின்றி எமக்கு பயமுமில்லை! எங்களுக்கு உறவுகளு…
-
- 0 replies
- 915 views
-
-
கொழும்பில் மாநாட்டை நடத்தி தமிழர்களின் பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கிறது இலங்கை அரசு என்ற குரல் உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளிடம் இருந்து எழுந்துள்ளது. இவ்வளவு எதிர்ப்புக்குக் காரணம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் முருகபூபதி என்பவர் கொழும்பு நகரில் ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது தான். ‘‘உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல. மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது.மாநாட்டை இலங்கையில் நடத்துவதைவிட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.பிரச்னைகளை சுதந்திரமாக விவாதிக் கலாம்’’என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி ஆலோசனை வழங்கியிருக்கிறார். ‘‘…
-
- 3 replies
- 2k views
-
-
ஆசிரியை மீது இளைஞன் துப்பாக்கி சூடு – அம்பாறையில் சம்பவம் அம்பாறையில் சியம்பலாண்டுவ சிங்கள மகாவித்தியாலய ஆசிரியை ஒருவர்இன்று காலையில் கடமைக்காக பாடசாலை சென்ற போது இளைஞன் ஒருவன் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அவ் ஆசிரியை மீது குறித்த பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் வேலை செய்த ஒருவரே துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆனால் ஆசிரியை காயங்களுடன் தப்பிவிட்டதாக தெரியவருகிறது. ஆசிரியை மீது துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகதெரியவருகிறது இந்த சூட்டுச் சம்பவத்தையடுத்து சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று மூடப்பட்டுள்ளது காதலே இந்த சம்பவத்தின் பின்னனியென ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 819 views
-
-
வடபகுதியில் சிங்களவர்களின் வருகை யாழ்.மக்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணம் – கண்டி வீயை அரசு திறந்தது. இந்த ஏ-9 வீதியை திறத்ததன் மூலமாக தென்பகுதியில் வாழும் சிங்களவர்கள் அதிகளவில் வடபகுதிக்கு விஜயம் செய்வார்கள் அதன் மூலமாக தமது யுத்த வெற்றிகளை அவர்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என சிறிலங்கா அரசு எதிர்பார்த்தது. அந்த ஆசை எதிர்பார்த்ததனைவிடவும் அதிகமாகவே நிறைவேறி வருகின்றது எனலாம். கடந்த 90ம்; ஆண்டு காலத்திற்கு பிந்திய காலத்தில் வவுனியாவுக்கு அப்பால் சிற்களவர்கள் செல்வதற்கு அவசியம் இருக்கவில்லை. அவர்கள் வடபகுதிக்கு செல்வதனை தவிர…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசு தீவிரம். சிறிலங்கா அரசாங்கம் அனைத்து ஆபாச இணையத்தளங்களையும் தடைசெய்யவும், நாட்டில் உள்ள சிறுவர் மற்றும் இளைஞர் யுவதிகள் செல்லிடப்பேசிகள் மூலம் அவ்வாறான இணையத்தளங்களை பார்ப்பதனை குறைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தவுமென நீதிமன்ற உதவியினை நாடியுள்ளது. செல்லிடப்பேசிகள் மூலமாக பார்க்கக்கூடியதென இனங்காணப்பட்ட இன்னும் நூறு இணையத்தளங்கள் பற்றியவிபரங்களை அரசாங்கம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறுவருக்கான நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. இத்தைய 160ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களை பாவித்து சிறுவர்களை அபாசத்தில் ஈடுபடுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கவே இதுரையில் 188 வயது வந்தோர…
-
- 0 replies
- 750 views
-
-
இந்திய யானையைச் சுற்றி வளைக்கும் சீன "டிராகன்" By: பழ. நெடுமாறன் தினமணி - புரட்டாதி 22, 2010 இந்தியாவைவிட சுமார் 70 மடங்கு சிறிய நாடு இலங்கை. ஆனால், சின்னஞ்சிறிய சிங்கள ராஜதந்திரம் மிகப்பெரிய இந்தியாவின் ராஜதந்திரத்தை மிக எளிதாகத் தோற்கடித்துள்ளது. சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், சிறிலங்கா சுதந்திரா கட்சியாக இருந்தாலும், இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத்தான் உலக அரங்கில் மேற்கொண்டன. மற்றொரு சிங்களத் தீவிரவாதக் கட்சியான ஜே.வி.பி. கட்சி மேற்கண்ட இருகட்சிகளையும்விட அதிதீவிரமான இந்திய எதிர்ப்புவாதம் கொண்ட கட்சியாகும். இந்த மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் இந்திய எதிர்ப்புவாதத்தையும் அதன்வழி, ஈழ…
-
- 3 replies
- 1.1k views
-