Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.yarl.com/files/100907_mano_ganesan.mp3 நன்றி: ATBC

  2. வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவில் இன்று பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டார்கள். காலை 7.00 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேதராக முருகப் பெருமான் புறப்பட்டு வந்தார். தேரில் ஏறி அமர்ந்த பெருமான் 7.30 மணிக்கு வெளி வீதியுலா வலம் வரத் தொடங்கினார். தேரின் பின்னால் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சை செய்தும், அடியடித்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் சென்றார்கள். அடியவர்களின் அரோகரா ஒலி வானைப் பிளந்தது. ஆயிரக்கணக்கான அடியவர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றார்கள். குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்தும் வந்திருந்த அடியவர்கள் ஏ…

  3. இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது. இவர் Bern நகரில் உள்ள Flora Park இல் வைத்து 52 வயதுடைய ஆண் ஒருவரை கத்தியால் குத்தி 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்திருக்கின்றார். படுகொலை செய்யப்பட்டவரும் இலங்கையர் ஆவார். இவர் இந்த இந்நபரை வீதியில் சந்தித்துக் கூடவே பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். பின் அந்நபருடன் பாலியல் தொடர்பு கொண்ட பின் கத்தியால் குத்திப் படுகொலை செய்திருக்கின்றார். குத்து வாங்கியவரின் குழறல் சத்தத்தைக் கேட்டு பொதுமக்களும், பொலிஸாரும் அந்த இடத்தில் குவிந்து விட்டனர். திட்டமிட்டு படுகொலை செய்தார் என்று இளம்யுவதி குற்றவாளியாகக் காணப்படலாம். ஆனால் இவர் ஒரு…

  4. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7, 2010 ஈழ நாதம் புதிய அரசியல் சீர்திருத்தம் நூற்றுக்கு நூறு ஒர் சர்வாதிகார தன்மைக்கு இட்டு செல்கின்றது சட்டத்திருத்தம் பதவியில் உள்ள ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்க வகை செய்து சர்வாதிகாரத்துக்கு வழி கோலுகிறது . நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட அலகுகளில் அரசியல் செல்வாக்குக்குவகை செய்யும் பகுதிகளை உள்ளடக்கியதால் ஜனநாயக ஆட்சி முறைக்குக் குந்தகம் ஏற்படுத்துகின்றது. 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நற்பலன்களையும் ஊறுபடுத்துகின்றது. இதனால் கூட்டமைப்பு இந்த சீர்திருத்தத்தினை எதிர்க்கின்றது என கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாள…

  5. சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று பத்தாவது நாளாகத் தொடர்கின்றது. இந்நடைப் பயணிகளில் ஒருவர் வயோதிபர். வயது 62. பெயர் ஜெகன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் திருமணமான பெண். வயது 36. பெயர் தேவகி குமார். சுவிற்சலாந்தைச் சேர்ந்தவர் . முன்றாமவருக்கு வயது 46. பெயர் விநோத். பிரான்ஸைச் சேர்ந்தவர். இவர்கள் நேற்று மாலை பிரான்ஸ்-சுவிஸ் நாடுகளின் எல்லையை சென்றடைந்தனர். சுவிஸ் வாழ் தமிழர்கள் இவர்களை வழி அனுப்பி வைத்தனர். பிரான்ஸ் வாழ் தமிழர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். இவர்கள் இன்று St. Louis என்கிற எல்லைப் பிரதேசத்தில் இருந்த…

  6. முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் பத்திரமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த C4 Explosive களை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளார்கள். அரச படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் புலிகளின் மிகப் பெரிய C4 Explosive கள் இவையே ஆகும் என்று நம்பப்படுகின்றது. தனித் தனியாக 48 பெட்டிகளில் உள்ள இவை ஒவ்வொன்றும் தலா 14 கிலோ எடை உடையன. ஒட்டுமொத்த எடை 672 கிலோ. அத்துடன் கடல் புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த High Speed Inboard Boat Engine கள் நான்கையும் அப்பகுதியில் இருந்து கைப்பற்றி உள்ளார்கள். அத்துடன் கணிசமான எண்ணிக்கையிலான anti-aircraft ammunition களையும் கைப்பற்றி உள்ளார்கள். மீட்…

  7. இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவி திட்டங்களை வழங்குவதுடன் நிற்காது அவர்களுக்கான அரசியல் தீர்விலும் விரைந்து செயற்படவேண்டியுள்ளதாக நிருபாமா ராவ் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு இலங்கை விஜயம் தொடர்பிலான விளக்கத்தின் போதே இவ்வாறு கூறியுள்ளார். மனிதாபிமான பணிகளில் இந்தியா முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் அதே வேளை அரசியல் தீர்வு ஒன்றை எட்டவும் இந்தியா வலியுறுத்தும் எனவும் கூறினார். அரசியல் தீர்வு தொடர்பில் மஹிந்த இராஜபக்‌ஷவுடன் பேசியுள்ளீர்களா என கேட்டபோது, தான் எதுவும் பேசவில்லையென்றும் ஆனால் மஹிந்த அரசியல் தீர்வு தொடர்பில் ஆர்வமாக உள்ளதனை தன்னால் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளார். Eelanatham.net

  8. வேடிக்கையாக இருக்கு ஒரு இந்த்திய அரசியல்வாதி வந்து ஒரு தமிழ் தரப்பிடம் சொல்லவேண்டியதை இந்த்திய இராணுவ கொமாண்டோ ஒருவர் இன்னொரு ---------சொல்வதில் இருக்கும் நடை முறை.எல்லாமே இராணுவ மஜம்.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தியா கூடிய கவனம் செலுத்தும் என்று இந்திய இராணுவத்தளபதி விஜயகுமார் சிங் பிரதமர் டீ.எம். ஜயரத்னாவிடம் உறுதியளித்தார். இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று காலை பிரதமர் டீ.எம். ஜயரத்னவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.அங்கு கருத்து தெரிவித்த…

    • 1 reply
    • 867 views
  9. இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் இந்தியா நிரந்தரமாகவே ஓர் விசேட பிரதி நிதியினை நியமிக்க தீர்மானித்துள்ளது. அக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேசுவார் என கூரப்படுகின்றது. இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் , டி.ஆர்.பாலு மற்றும் கலைஞர் ஆகியோர் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விசேட பிரதி நிதி இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தரமாக ஓர் அரசியல் தீர்வு காணும்வரை இருப்பார் என்றும் அதே வேளை வடக்கு கிழக்கில் நிவாரணப்பணிகளை நேரடியாக கண்காணிப்பார் என்றும் இந்திய செய்திகள் கூறுகின்றன. ஈழ நாதம்

    • 3 replies
    • 1.1k views
  10. செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஒருவரின் பாதுகாத்து உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை மாவட்டத்தின் வடுரெலிய பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளருடைய காது ஒன்றை இன்று கடித்து இருக்கின்றார். இப்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் சக ஊழியர் ஒருவரும் மதுபானம் அருந்தி விட்டு அப்பிரதேசத்தில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இப்பாதுகாப்பு உத்தியோகத்தர் கடை ஒன்றின் முன்னால் சென்று சிறுநீர் கழிக்க முற்பட்டிருக்கின்றார். இதனால் கடை உரிமையாளருக்கும் அவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது . கடை உரிமையாளரின் காதுகளில் ஒன்றை பாதுகாப்பு உத்தியோகத்தர் கடித்து விட்டார். பின் நன்றாகத் தாக்கியும் உள்ளார். இந்நிலையில் பிரதேசவாசிகள் ஒன்ற…

    • 3 replies
    • 829 views
  11. ஜேர்மனியில் Ehningen junction in the Böblingen District எனும் இடத்தில் வான் ஒன்று குடை சாய்ந்ததில் 12 தமிழர்கள் காயமுற்றுள்ளனர். மேசிடஸ் பென்ஸ் வானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் பேளினில் உள்ள தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவேளை லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் கூறியுள்ளனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈழ நாதம்

  12. யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு) இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப்பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் அகதி…

  13. இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் கொழும்பு சென்றடைந்தார். நாளை வவுனியா செல்லும் அவர் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்க உள்ளார். இலங்கை போருக்குப் பிறகு முகாம்களில் உள்ள தமிழர்கள் இதுவரை மறுகுடியேற்றம் செய்யப்படாதநிலை இருந்து வருகிறது. இதனையடுத்து இந்திய சிறப்பு பிரநிதியாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் 4 நாட்கள் பயணமாக அண்மையில் இலங்கை சென்று திரும்பினார். இதனையடுத்து இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் ஜெயரத்னே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேச உள்ளார். இதனிடையே, நாளை வவுனியா செல்லும் சிங், அங்கு போரினால் ப…

  14. 14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார். தொடர்ந்து வாசிக்க http://www.inparsiddy.com/page-060910-03.html

  15. சவூதி அரேபியாவில் வேலை பார்த்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி சுயமாகவே உடலில் ஆணிகளையும், ஊசிகளையும் அறைந்து கொண்டமைக்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்று இலங்கையின் மூத்த வைத்தியர்களில் ஒருவரும், பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரத் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். சவூதி எஜமானத் தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்கின்றமைக்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் Arab News பத்திரிகைக்கு கொழும்பில் இரு…

  16. இந்து சமுத்தியரப் பிராந்தியத்தில் சீனா காட்டும் அதீத அக்கறை தொடர்பாக இந்தியா உன்னிப்பாக அவதானிதது வருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக இலங்கையில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுக்குள்ள சந்தேகத்தையும் அவரது கருத்துக்கள் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. சீனா ஒரு தெற்காசிய நாடாக இல்லாது விட்டாலும் கூட, தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு மேலோங்கிவரும் பின்னணியிலேயே இந்தியாவின் சந்தேகங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்தப் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக் களமாக இலங்கை மாற்றமடைந்திருக்கும் நிலையில், புதிய பிரச்சினை ஒன்று உருவாகியி…

  17. திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 அண்மையில் மலையகப்பகுதியில் ஒரு போத்தல் சாராயத்தினை பொலிசாருக்கு இலஞ்சமாக கொடுத்து தன் உறவினரை பொலிசாரிடம் இருந்து மீட்டு வந்துள்ளார் மலையக தமிழர். கொலன்கண்ட முடுக்கெல என்ற பிரதேசத்தை சேர்ந்த ஜேசு அன்ரூ என்ற 28 வயது இளைஞரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இவர் திருமணம் முடித்தவர் மனைவி பிரவச நிலையில் உள்ளார். திரு யேசு என்பவரை பொலிசார் ஆடைகளை முற்றாக களைந்து விட்டு பொல்லுகளால் தாக்கியுள்ளனர். குனியவிட்டு பின்பக்கத்தில் தாக்கியுள்ளனர். பின்னர் மிழகாய் தூளை அவரது ஆண் உறுப்பில் விசிறியுள்ளனர். பின்னர் பொலிஸ் நிலைய சிறையில் தடுத்து வைத்துள்ளனர். இவையெல்லாம் ஒரு சாதாரண விடயத்திற்கே அதாவது இந்த இளைஞர் தொடர்பாக இவருடன்…

    • 0 replies
    • 1.2k views
  18. அரச அதிபர்களின் தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமான து. யாழ்ப்பாணத்தில் இம்மாநாடு நடத்தப்படுகின்றமை இதுவே முதல் தடவை ஆகும். காலை10.00 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் இம்மாநாடு தொடங்கியது. இம்மாநாட்டில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸநாயக்கா உள்ளிட்டவர்களும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட இலங்கையின் அரச அதிபர்களும் யாழ். மாவட்ட் பிரதேச செயலர்களும் கலந்து கொண்டனர். இதன் ஆரம்ப நிகழ்வில் செய்தி சேகரிக்கின்றமைக்கு சென்ற யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் எவருக்கும் உள்ளே பிரவேசிக்க அன…

  19. சூழலில் ஒலியை மாசுபடுத்தினார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் கொத்துரொட்டி தயாரிப்பாளர் ஒருவருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மாநகர சபையைச் சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகரான சுஜீவன் சமன் குமார இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். நாவல, கொஸ்வத்தைச் சந்தியில் அமைந்திருக்கும் சாப்பாட்டுக் கடையில் இருந்து கொத்துரொட்டி தயாரிக்கும்போது எழுகின்ற இரைச்சலால் அப்பிரதேசத்தில் இயல்பு நிலை கெடுகின்றது என்று சூழல் மாசடைகின்றது என்றும் அவர் மன்றுக்கு முறையிட்டுள்ளார். இவ்வழக்கு கொழும்பு கோட்டை மேலதிக நீதிவான் லால் ரணசிங்க முன்னிலையில் இடம்பெற்றது. ஆயினும் கொத்துரொட்டி தயாரிப்பாளர் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். நீதிமன…

  20. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஸ்தாபகருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனநாயகவாதியா? இல்லையா ? என்பது நாளை மறுதினம் தெரிந்து விடும் என்று ஒரு போடு போட்டிருக்கின்றார் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ் கட்சிகளின் அரங்க முக்கியஸ்தர்களில் ஒருவருமான கே.சிவாஜிலிங்கம். நாளை மறுதினம் அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளன. தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஸ்தாபகர் தேவா இச்சட்டமூலத்தை ஆதரித்து வாக்களிப்பார் போலும்? என்று சிவாஜிலிங்கத்திடம் தமிழ் சி.என்.என் வினவியது. அதற்க…

  21. வன்னி யுத்தத்தில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்து 3 இலட்சம் மக்களை வேரோடு பிடுங்கி எடுத்து முகாம்களில் அடைத்த மஹிந்த அரசு, அதனை செய்த தன்னுடைய ஏவல் பிசாசுகளான படைவீரர்களுக்கென 25 இலட்சம் ரூபா செலவில் வீடமைத்து கொண்டிருக்கின்றார் மஹிந்த! கொல்லப்பட்ட மக்களின் உறவுகளுக்கோ அல்லது வேரோடு விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கோ இன்னமும் நட்ட ஈடுகளையோ இழப்புக்களையோ கொடுக்கவில்லை. அவர்களை மரங்களின் கீழும் தரையிலும் விட்டுவிட்டு மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன்னுடைய ஏவல் பிசாசுகளுக்கு 25 இலட்சம் ரூபா செலவில் வீடமைத்து கொண்டிருக்கின்றார் மஹிந்த! பாதிப்பு அடிப்படையில் பார்த்தால் கூட அரசாங்கம் தான் தமிழர்களின் அளிவுகளுக்கு பொறுப்பெடுத்து மக்களிற்கு புனர்வாழ்விற்கான வசதிகளை செய்ய வேண்டும…

    • 0 replies
    • 795 views
  22. 16 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஏழாலையைச் சேர்ந்த அன்ரனி ஜயரட்ணம் என்கிற ஒரு தந்தை. ஆயினும் அவரின் மகனைக் கண்டுபிடிக்கின்றமையோ அல்லது அவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றமையோ இலேசுப்பட்ட காரியம் அல்ல. ஏனெனில் காணாமல் போன சம்பவம் போலந்து-ஜேர்மனிய நாடுகளின் எல்லையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற நாள் 27.08.1994 ஆக இருக்க வேண்டும் என்று அத்தந்தை நம்புகின்றார். நாட்டுச் சூழ்நிலை காரணமாகவும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கே உரித்தான வெளிநாட்டு மோகம் காரணமாகவும் மேலைத்தேய நாடு ஒன்றுக்கு இளம்வயதிலேயே புறப்பட்டவர்தான் அலோசியஸ் ஜெயசிங்கம். போலந்துக்…

  23. நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் இடம்பெற உள்ள அரசமைப்புத் திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை ஒன்றுகூடி இத்தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். இத்தகவலை கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சற்று நேரத்துக்கு முன்னர் தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இத்தீர்மானம் குறித்த பூரண அறிக்கை ஒன்றை கூட்டமைப்பு இன்றிரவு வெளியிட உள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9835:2010-09-06-14-46-48&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  24. சிட்னி : ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற பிரதமர் தேர்லில் 50 ஆண்டுகளில் இல்லாத கடும் போட்டி நிலவுகிறது. அதில் பிரதமர் ஜூலியா வெற்றி பெறுவார் என முதலை, ஆக்டோபஸ் ஜோசியங்கள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் தற்போதைய பெண் பிரதமர் ஜூலியா ஜிலார்ட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டோனி அபாட் களத்தில் உள்ளார். கடந்த சில மாதங்களாக பிரசாரம் அனல் பறந்தது. அவ்வப்போது வெளியான கருத்து கணிப்புகளில் இரண்டு பேருக்கும் இடையே கத்தி முனை இடைவெளியே இருப்பதாக கூறப்பட்டது. இன்றைய தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை உறுதியாக கூற முடியாத நிலையில் அரசியல் பார்வையாளர்கள் உள்ளனர். ஆனால், இப்போது பேஷனாகி விட்ட ஆக்டோ பஸ், முதலை ஜோசியர்களின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.