ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
06 OCT, 2023 | 02:47 PM மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், 'நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுவார். எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர்…
-
- 2 replies
- 529 views
- 1 follower
-
-
பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாராளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணிகளை மக்களிடம் கையளிக்குமாறும், மகாவலி என்ற பெயரில் காணி அபகரிப்புகளை நிறுத்துமாறும் வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சபைக்கு நடுவில் சபாபீடத்திற்கு முன்னால் வந்து இவர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். http://www.samakalam.com/பாராளுமன்றத்தில்-தமிழ்த/
-
- 3 replies
- 672 views
- 1 follower
-
-
மலேசியப் படுகொலை – கைதான இலங்கையர்களின் விளக்க மறியல் நீடிப்பு! adminOctober 1, 2023 மலேசியாவில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. கொலைச் சம்பவம் தொடர்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட மூவரில் தம்பதியரின் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்க…
-
- 2 replies
- 373 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 OCT, 2023 | 12:58 PM (எம்.மனோசித்ரா) முறிந்து விழும் அபாய நிலையிலுள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னகோன், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், சுற்றாடல் அதிகாரசபை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு, வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொது மக்களுக்கு அசச்சுறுத்தலாக உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். …
-
- 1 reply
- 437 views
- 1 follower
-
-
06 OCT, 2023 | 11:42 AM பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணை கடத்திச் சென்று அவரது தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூவர் குறித்த இதுவரை தகவல் இல்லை டினவும் அந்தப் பொலிஸ் அதிகாரி கூறினார். https://www.virakesari.lk/article/166231
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 OCT, 2023 | 03:49 PM கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் 03, 04 ஆம் திகதிகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகளும் சமூக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் கிண்ணியா நகர சபை முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த இடத்துக்கு சென்று இவ்வாறு தெரிவித்தார். இக்குழுவினர் புதையல் அகழ்வதற்காகவா அல்லது ஏதேனும் அடையாளங்களை புதைப்பதற்காகவா…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
யுத்தத்தை தொடர்ந்து வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 400க்கும் அதிகமான பௌத்த தொல்பொருள் சின்னங்களுள் அதிகளவானவை தற்போது அழிக்கப்பட்டுள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் நேற்றைய தினம் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவு குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள தொல்பெருள் சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்…
-
- 4 replies
- 740 views
-
-
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்பமயபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அ…
-
- 8 replies
- 817 views
- 1 follower
-
-
லிட்ரோ எரிவாயு விலை பாரியளவில் அதிகரிப்பு – புதிய விலைகள் இதோ! இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/275566
-
- 2 replies
- 563 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 12:48 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் கடந்த 5 வருடங்களில் மனித-யானை மோதலால் 618 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளளதுடன், 1,867 யானைகளும் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் கடந்த 2022 ஆம் வெளியிடப்பட்ட வருடாந்த தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித – யானை மோதலினை கட்டுப்படுத்த கடந்த இரண்டு வருடங்களில் (2021/ 2022) நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மின்சார வேலிகள் அமைப்பது மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக மாத்திரம் 228 கோடி ரூபா …
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய உயர்மட்ட அமைச்சரொருவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார். நாட்டில் தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல், தீவிரமடைந்துவரும் பௌத்த – சிங்கள மயமாக்கம் போன்ற பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. அந்தவகையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளின் சார்பின் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி, இலங்கையி…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்! நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த 48 மணிநேரத்தில் மணிநேரத்தில், மாத்திரம் 11 பேர் காணாமற்போயுள்ளனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யு.என்.டி.பி. தனது அறிக்கையொன்றில், இந்நாட்டில் 10 பேரில் 6 பேர், ஆபத்தான நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது 220 இலட்சம் மக்களில் 123 இலட்சம் மக்கள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர். ஆனால் இந்த அரசாங்…
-
- 0 replies
- 534 views
-
-
நாமலின் மின்கட்டணம் செலுத்தப்பட்டது கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகிய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில், சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின் 2.6 மில்லியன் மின்சாரக் கட்டணம் நேற்று (02) நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் செலுத்தப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு…
-
- 5 replies
- 685 views
-
-
நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்? கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்படும் சூழல் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் இன்றைய தினம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர், அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி இல்லை என நேற்றையதினம் (04) கூறியுள்ளார். இதனால் அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதோடு, உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாகக் கிடைக…
-
- 0 replies
- 409 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 10:28 AM (நா.தனுஜா) தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதற்கு ஆதாரவாகவே தாம் செயற்பட்டுவருவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இணையனுசரணை நாடுகளுக்குத் தாமே தலைமைதாங்குவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் நடை…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 10:22 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியால் இலங்கையின் கடன் சுமையில் ஒரு டொலரேனும் குறையவில்லை என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளை சட்டம் மீதான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், உலக வங்கியைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று கூறினாராம். அப்படியென்றால் அவர் மனநலம் பாதிக்ககப்பட்டவராக இருக்கலாம். நாட்டில் பண வீக்கம் 70 வீதமா…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சர்வதேசத்திடம் கையேந்தும்போது ஜனாதிபதிக்கு இரண்டாம் நிலை என்ற எண்ணம் தோன்றவில்லையா? உள்ளக விசாரணையில் நீதி கிடைக்காத காரணத்தால் தான் சர்வதேச விசாரணையை கோருகிறோம். வங்குரோத்துக்கு மத்தியிலும் இனவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டமா அதி…
-
- 1 reply
- 324 views
-
-
04 OCT, 2023 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை. அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 03 OCT, 2023 | 08:05 AM சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர்…
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
04 OCT, 2023 | 05:34 PM மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (04) கோட்டை ஸ்ரீ சம்புத்தலோக மகா விஹாரைக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். கேள்வி : ஜனாதிபதியின் உரை எப்படி இருந்தது? பதில் : சரி, அதுதான் கதை. கேள்வி : சர்வதேச விசாரணை வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறாரா? பதில் : ஆம், அது சரிதான். மக்கள் எதிர்பார்ப்பது இதைத்தான் இவ்வாறு பதில…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
01 OCT, 2023 | 11:52 AM முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?', 'சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு', 'கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, 'தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?', 'சின்னஞ்சிறு சிறார்களும் …
-
- 5 replies
- 376 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 SEP, 2023 | 07:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2023 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றம் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திக…
-
- 5 replies
- 452 views
- 1 follower
-
-
முல்லைதீவு வைத்தியசாலையின் அகநோக்கி (Endoscopy) இயந்திரம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது அனுராதபுர வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள அகநோக்கி (Endoscopy) உபகரணத்திற்கு பதிலீடாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அகநோக்கிக் கருவியினை கையளிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு கோரவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் பரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என டி முல்லைத்தீவு (மாஞ்சோலை) வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சண்முகராசா அவர்களைத் தொடர்புகொண்டு வினவியபோது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குழப்பமடையத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறவில…
-
- 0 replies
- 374 views
-
-
03 OCT, 2023 | 09:44 AM சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்குவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் கவலை தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான தீர்மானமிக்க விசேட கலந்துரையாடல் 02.10.2023 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்குகளை …
-
- 2 replies
- 685 views
- 1 follower
-
-
”சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ந்து 19வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும்,கால்நடை பண்ணையாளர்களின் நிலத்தை வ…
-
- 0 replies
- 278 views
-